தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
தியானங்கள் பலவிதம் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


தியானங்கள் பலவிதம்

Go down

தியானங்கள் பலவிதம் Empty தியானங்கள் பலவிதம்

Post by இறையன் Thu Mar 15, 2012 8:36 pm

சிகிச்சைகளில் சிறந்த சிகிச்சை யோகாவும் அதன் உள்ளடங்கிய ஹதயோகமும், பிராணாயாமமும், தியானமும் ஆகும். ஹதயோகத்தால் உடலுக்கும், பிராணாயாமத்தால், சுவாசத்திற்கும் தியானத்தால் மனதிற்கும் சிகிச்சை தரப்படுகிறது.
நவீன ஆராய்ச்சிகள் தியானத்தால், குறிப்பாக ஆழ்நிலை தியானத்தால் ஏற்படும் பயன்களை நிரூபிக்கின்றன. அரை மணி நேர தியானம் 6 மணி நேர தூக்கத்தால் கிடைக்கும் ஒய்வுக்கு சமானம்.
தியானம் தரும் நன்மைகள்
1. மனம் அமைதியடைந்து மகிழ்வுறுகிறது.
2. பிராண வாயுவின் தேவை குறைவதால் வளர்சிதை மாற்றம் (விமீtணீதீஷீறீவீsனீ) நிதானமாகிறது.
3. மனம் ஒரு நிலைப்படுகிறது. தேர்ந்தெடுத்த ஒரே விஷயத்தைப்பற்றி சிந்திக்கும் திறனை அடைகிறது.
4. உடல் முழுவதும் “ரிலாக்ஸ்” (ஸிமீறீணீஜ்) ஆகிறது!
ராஜயோகத்தில் வரும் அஷ்டாங்க யோகத்தில், பகிரங்க யோகமாக ஐந்து
நிலைகளும் அந்தரங்க யோகமாக மூன்று நிலைகளும் சொல்லப்படுகின்றன. இதில் அந்தரங்க யோகத்தின் மூன்று நிலைகள்.
1. தாரணை
2. தியானம்
3. சமாதி
இந்த மூன்று யோகங்களின் மூலம் பதஞ்சலி முனிவர் தியானத்தை
விளக்குகிறார். ஆனால் இவற்றை அறிய, அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாவது படியான “பிரத்யாஹாரம்”, தியானத்துள் நுழைய உதவும் வாசல் எனலாம். இதைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பிரத்யாஹாரம் என்பது புலன்களுக்கு மாற்று “உணவை” குறிக்கிறது. புலன்கள் ஐந்தாக சொல்லப்படுகின்றன. காண்பது (கண்கள்), கேட்பது (காதுகள்), நுகர்வது (நாசி), சுவைப்பது (நாக்கு), தொட்டறிவது (சருமம்) இவை ஐம்புலன்கள். சுருக்கமாக சொன்னால் பிரத்யாஹாரம் என்றால் புலனடக்கம்.
திருக்குறளில் மூன்றாவது அதிகாரமான ‘நீத்தார் பெருமையில்’ திருவள்ளுவர் கூறுகிறார்:- “உரனென்னும் தோட்டியன் ஓரைந்தும் காப்பான்’
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” என்கிறார்.
(அறிவு எனும் கருவியால் ஐம்புலன்களையும் பொறிகள் வழியே செல்லாமல் ஒடுக்கிக் காத்த வல்லவனே, சிறந்தது என்று போற்றப்படும் மேல் உலகத்திற்கு சிறந்த விதை ஆவான்).
திருவள்ளுவர் மேலும் இன்னொரு குறளில் – சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களின் தன்மையின்மைத் தன் அறிவின் துணை கொண்டு கண்டறிவான் மாட்டே உலகம் உள்ளது.
புலன்களை அடக்கி மனதை ஒருநிலைப்படுத்துவது கடினமான செயல். விடாமுயற்சியாலும், தொடர்ந்த பயிற்சியினாலும் பிரதியாஹாராவை தொடர வேண்டும். முதலில் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருட்களை ஒதுக்கி விடுவது ஒரு வழி. உதாரணமாக இனிப்பு பிடிக்கும் என்றால் அதை கண்களுக்கு படாமல் தூர, தெரியாத இடத்தில் வைப்பது. முன்னேறிய நிலையில் அருகாமையிலேயே இனிப்பு இருந்தாலும் அதை தொடாமல், உண்ணாமல் இருப்பது. ஆமை தன் உறுப்புக்களை தன் ஒட்டுக்குள் இழுத்து விடுவது போல் ஐம்புலன்களை அடக்கி இழுத்துக் கொள்பவன் ஏழு பிறவிகளெடுத்தாலும் துன்பமின்றி வாழ்வான் என்கிறார் திருவள்ளுவர் பெருமான்.
அடுத்தபடி தாரணை. அலை பாயும் எண்ணங்களுடைய மனதை குவித்து ஒரு முகப்படுத்துவது. அதாவது சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ. உடலில் உள்ள “மூலச் சக்கரங்களைப் பற்றி பட்டியலிட்டு மனதை ஒரு முகப்படுத்தலாம். இல்லை ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதன் ஒளியை நோக்கி மனதை ஒரு முகப்படுத்தலாம். பல உயிரில்லாத ஜடப்பொருட்களை உருவகப்படுத்திக் கொண்டு அதன் பல ரூபங்களை நினைக்கலாம். உதாரணமாக பூக்களை நினைக்கலாம்.
இப்பொழுது தியானத்தை நாம் தொடரலாம். தராணையால் ஒரு முகப்படுத்த மனதை மேலும் ஒரு புள்ளிக்கு ஒரு முகப்படுத்துவது தியானம். ஒரு பொருள் (அ) ஒரு தொடர்ச்சியாக 15 நிமிடமாவது தியானிக்கப்பட வேண்டும். இந்த எண்ணம் (அ) பொருள் குரு சொல்லிக் கொடுத்த மந்திரமாக இருக்கலாம். ஜபிக்க, ஜபிக்க, மனம் ஒருமுகப்படும். ஜபிப்பது மானசீலமாக இருக்க வேண்டும். உரக்க கத்தி ஜபிக்க வேண்டாம். முழுமனதும் ஒரு பொருளின் மீது அசைவின்றி 12 விநாடிகள் நின்றால் அது ஒரு தாரணை ஆகும் என்கிறார். பதஞ்சலி முனிவர், அந்த தாரணை தொடர்ந்தால் அது தியானம். 12 தாரணைகள் ஒரு தியானம் என்கின்றனர். யோகாசன நிபுணர்கள்.
பிரத்யாஹாரா, தாரணை, தியானம் – இந்த மூன்று நிலைகள் உங்களை ‘சமாதி’ நிலைக்கு கொண்டு செல்லும். சமாதி நிலைதான் யோகாவின் இலட்சியம். யோகாவின் உயர்ந்த, உன்னத நிலை. தொடர்ந்த, நீண்ட தியானத்தால் மனம் தேடும் பொருளுடன் ஐக்கியமாவது சமாதி நிலை. நாம் நமது உலகியல் கலவைகளை மறந்து, பரவச நிலையை அடைவதே சமாதி நிலையில் குறிக்கோள். சமாதி நிலையில் சீரான மனநிலை உண்டாகும். கோபதாபங்கள் நம்மை பாதிக்காது.
எனவே தியான முறைகளை நல்ல ஆசானிடம் கற்றுக் கொண்டு பயில்வது வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகுக்கும்.
தியானத்தின் வகைகள்
1. எளிமையான தியானம்
2. சித்த தியானம்
3. பாக்ய கும்பக தியானம்
4. சப்த தியானம்
5. விபாதசன தியானம்
6. சோகம் தியானம்
7. ஜென் தியானம்
8. த்ராட்கா தியானம்
9. ஆழ்நிலை தியானம்
10. கிறிஸ்துவ தியானம்
11. யோக சக்கர தியானம்
12. ஞானயோக தியானம்

source:http://tamil.ayurvedham.com
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum