தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி

Go down

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  Empty தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி

Post by இறையன் Wed Dec 21, 2011 12:59 pm

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  250px-Ravi_Varma-Dattatreyaமார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில் உடலும் மனமும் குளிர நீராடி மேற்கொள்ளும் இறைவழிபாடும் ரம்மியமானவை. இந்த மார்கழி மாதத்தில் திருமாலை ஆராதிக்கும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வணங்கும் திருவாதிரைத் திருநாளும் மஹா வ்யதீபாதமும் அதிக முக்யத்வம் வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் நாள் திருவாதிரைத் திருநாள் ஆகும்.

1.விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுஷ்மான் 4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம் 7. சுகர்கம் 8. த்ருதி 9. சூலம் 10. கண்டம் 11. விருத்தி 12. த்ருவம் 13. வியகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம் 16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான் 19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம் 22. சாத்யம் 23. சுபம் 24. சுப்ரம் 25. ப்ரம்மம் 26. ஜந்ரம் 27. வைத்ருதி எனும் இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று வியதீபாத யோகம்.

நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பது போல இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இந்த யோகங்களில் ஒன்றான வ்யதீபாதம் மார்கழி மாதத்தில் வரும்போது இதற்கு "மஹா வ்யதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.

மஹா வ்யதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு மூன்று கிலோமீட்டர்கள் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.

சந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமரான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான்.

அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவபிரானாவார். தவிர, இந்த மஹா வியதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்களும் அடங்கும். அதிலும் மஹா வியதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது நம் மரபின் நம்பிக்கை.

இனி தத்தாத்ரேயர் புராணம்.

அத்ரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் வ்ணங்கி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்தவர் அனசூயா தேவி.

"மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்” என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்னி கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்ரி- அனசூயா ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் வணங்கியதையும் அனசூயா தேவி சீதாதேவிக்கு பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதையும் இராமாயணம் குறிப்பிடுகிறது.

கலகம் உண்டாக்குவதில் கெட்டிக்காரரான நாரதர் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் சென்றார். "அத்ரி மகரிஷியின் மனைவி அனுசுயாதேவியின் கற்பைச் சோதிக்க மூவரும் தனித்தனியாக சென்று வாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

மும்மூர்த்திகளும் மாறுவேடத்தில் அனுசுயாதேவியின் குடிலுக்குள் நுழைந்தனர். அவர்களை வரவேற்று விருந்து படைத்தார் அனுசுயா. அதில் திருப்தியுறாத அவர்கள், அனுசுயா தேவியை ஆடை ஏதும் அணியாமல் உணவு பரிமாறும்படி கேட்டனர். அதற்கு உடன்படுவதாகத் தெரிவித்த அனுசுயா தேவி, தன் கணவரும் தவ ஸ்ரேஷ்டருமாகிய அத்ரி மகரிஷியை மனதுக்குள் வணங்கி அவர் கமண்டலத்திலிருந்த நீரை அவர்கள் மூவரின் மேலும் தெளித்து மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களை மடியில் கிடத்தித் தாய்ப்பாலும் அருந்தும்படி செய்தார்.

அப்போது குடிலுக்குத் திரும்பிய அத்ரி மகரிஷியும் தமது ப்ரார்த்தனையின் பலனே இம்மூவரும் என்று சொல்லியபடியே மூன்று குழந்தைகளையும் வாரி அணைக்க 3 தலைகளும் 2 கால்களும் 6 கைகளும் ஒரே உடலில் இணைய தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும்.

அத்ரியின் புதல்வர் என்பதும் மூவரின் அம்சங்களும் நிறைந்தவர் எனக்குறிக்க தத்த+ஆத்ரேயர் என்ற பெயர் கொண்டார்.இவரின் அவதாரம் மார்கழிப் பௌர்ணமியில் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் நிகழ்ந்தது.

ப்ரயாகையில் இவருக்குக் கோயில் இருக்கிறது. அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாயம் போன்றவை கிடையாது. உத்திரப் ப்ரதேசத்தில் குருமூர்த்தி என்றால் அது தத்தாத்ரேயரையே குறிக்கும். அதேபோல இவர் இமயத்தில் நெடுநாட்கள் ஆத்ரேய மலைப்பகுதியில் தவம் இயற்றிய குகைக்கு தத்தா குகை என்றே பெயர். ஸஹய மலையில் காவிரியின் உற்பத்தி ஸ்தானத்துக்கருகிலும் சித்ரதுர்கா மலைப்பகுதியிலும், குல்பர்கா அருகே கங்காபூரிலும் இவர் தவம் புரிந்த குகைகள் இருக்கின்றன.

தமிழகத்தில் சேர்ந்தமங்கலத்திலும், சேலம் ஸ்கந்தகிரியிலும், புதுக்கோட்டையிலும், சேங்காலிபுரத்திலும் தத்தருக்கு சிலைகளுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் அவதூதரான தத்தாத்ரேயர் தனக்கு ஞானத்தைக் கற்பித்தவர்கள் யார் என்று விளக்கமளிக்கும் உரையாடல் மிகவும் தத்வார்த்தமும் தெளிவும் நிறைந்ததாகும்.

முன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன் பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த ஒரு துறவியிடம்,

”உலகிலுள்ள எல்லோருமே காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்க நீங்களோ அவைகளால் தீண்டப்படாமல் -காடு தீப்பற்றி எரியும்போதும் கங்கையின் மடுவில் மூழ்கி விளையாடும் யானையைப் போல- இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீர்களே? இது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டான்.

”ஆன்மாவே எனக்கான குரு. என்றபோதும் நான் கண்ணால் கண்ட 24 குருமார்களின் உதவியால் பெற்ற ஞானத்தை நான் ஒரு போதனையாகக் கொள்கிறேன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேர்க்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தயாரிப்பவன், பாம்பு, வண்டு, கூட்டில் உள்ள புழு ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி  Empty Re: தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-சுந்தர்ஜி

Post by இறையன் Wed Dec 21, 2011 12:59 pm

1. இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியின் மீது எல்லா ஜீவராசிகளும் காலங்காலமாக வாழ்கின்றன. அதன் மீது பள்ளம் தோண்டினாலும் உழுதாலும் எரித்தாலும் பொறுமையோடு ஏற்பதுடன் எல்லா உயிர்களும் வாழத் தேவையான சூழ்நிலைக்கும் உதவியாய் இருக்கும் இந்த பூமியிடமிருந்து பொறுமை, அன்பு, எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்கு உதவும் அன்பு இவற்றைக் கற்றேன். அதன் மலைகளோடும் நதிகளோடும் இவற்றை எனக்குப் போதித்த பூமியே எனது முதல் குரு.

2. தூய்மையும் மணமும் அற்றது காற்று. மணம் நிறைந்த பொருட்களின் மீதும் துர்நாற்றம் வீசும் பொருட்களின் மீதும் எந்தப் பாரபட்சமும் இன்றி வீசிக் கடப்பதைப் போல இன்பம் துன்ப்ம் துவங்கி வாழ்க்கையின் எல்லா எதிரெதிர் நிலைகளையும் ஒரே மனதோடு எதிர்கொள்ளும் பக்குவத்தைக் காற்றிடம் கற்றேன். ஆக காற்றே என் இரண்டாவது குரு.

3. நிர்மலமான வானம் அல்லது வெளி- இதுவே என் மூன்றாவது குரு. வானத்தின் மீது தவழும் மேகங்கள் வெவ்வேறு காலங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறுகின்றன. அது போலவே நம்மைச் சூழும் உணர்ச்சிகளின் தன்மைக்கேற்ப நம் மனதை மாற்றிக்கொள்ளாதிருக்கும் இயல்பை நான் வான்வெளியிடம் கற்றேன்.

4. தெளிவானதும் இருக்கும் இடத்திற்கேற்ப வடிவம் கொள்வதும் எல்லாவற்றையும் தூய்மையாக்கும் நீரே என் நான்காவது குரு.

5.தன்னில் இடப்பட்ட எதையும் எரித்துச் சாம்பலாக்கி சுடரும் நெருப்பே என் ஐந்தாவது குரு.

6. தேய்வதும் பின் வளர்வதும் காட்டி இல்லாமையிலிருந்து இருப்பை உணர்த்தும் சந்திரனே என் ஆறாவது குரு.

7. சூரியன் ஒன்றாய் இருந்தாலும் பல குடங்களில் உள்ள நீரிலும் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்த்திய சூரியனே என் ஏழாவது குரு.

8. வேடன் ஒருவன் வலை விரித்து புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இவற்றைக் கண்ட ஆண் புறாவும் வலையில் சென்று சிக்கிகொண்டது. பாசமே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்த்திய புறாவே என் எட்டாவது குரு.

9. எங்கும் அலையாமல் பெரியதோ சிறியதோ தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போலக் கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். ஆக மலைப்பாம்பே என் ஒன்பதாவது குரு.

10. பல்லாயிரக் கணக்கான நதிகளை சலனமின்றி ஏற்றுக்கொள்ளும் கடல் போல எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தைக் கடலிடம் கற்றேன். கடலே என் பத்தாவது குரு.

11. அழிக்கக் கூடியது நெருப்பு என்று தெரிந்தும் அதில் அலைபாயும் மனதோடு வீழ்ந்து மாளும் விட்டில்பூச்சியிடமிருந்து பார்வையைச் சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதைக் கற்றேன். அது என் பதினொன்றாவது குரு.

12. எல்லா மலர்களிடமிருந்தும் சிறிது தேனை நுகரும் தேனீயே எல்லோரிடமும் சிறிதளவு உணவைப் பெற்று யர்ருக்கும் பாரமில்லாது வாழ போதித்தது. அது என் பனிரெண்டாவது குரு.

13. வேடன் அமைத்த குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன். யானை என் பதிமூன்றாவது குரு.

14. தேனீக்கள் பல நாட்களாகச் சேகரித்த தேனை கூட்டினைக் கலைத்து கவர்ந்து சென்ற வேடனே பொருட்களைச் சேகரித்து வைத்தும் மரணத்துக்குப் பின் அவை ந்ம்முடன் வரப்போவதில்லை என்ற ஞானம் பிறக்கக் காரணமானவன். அவனே என் பதினான்காம் குரு.

15. மானைப் பிடிப்பதற்கு முன்னால் அதைத் தூண்ட வலை விரிக்கும் வேடன் உருவாக்கும் இசைக்கு ஆபத்தையும் சூழ்நிலையையும் அறியாமல் கண்ணை மறைக்கும் ஆசையுடன் துள்ளிக்குதித்து வேடனிடம் சிக்கிக்கொண்டது மான். வரப்போவதை உணராது ஆபத்தில் சிக்கிய அப்பாவி மான் என் பதினைந்தாம் குரு.

16. தூண்டில் புழுவைச் சுவைக்க ஆசை கொண்டு மாட்டிக்கொண்ட மீனே வாயைக் கட்டுப்படுத்தும் உபாயத்தைக் கற்றுக்கொடுத்தது. அதுவே என் பதினாறாம் குரு.

17. பிங்களா என்ற தாசி ஏற்கனவே பலரிடம் வருமானம் பெற்றபின்னும், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால் கிடைத்தது போதும் என்று உறங்கிவிட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்துகொண்டேன். அவளே என் பதினேழாவது குரு.

18. தன் வாயில் அபூர்வமான ஒரு இறைச்சித் துண்டைக் கவ்விச்சென்ற ஒரு குர்ரப் பறவையை எல்லாப் பறவைகளும் துரத்தித் துன்புறுத்தின. காரணம் புரிந்து வாயிலிருந்து அத்துண்டை விடுவித்தவுட்ன் அதன் துன்பம் நீங்கியது. அவசியமில்லாதவற்றைச் சுமக்காதிருப்பதை குர்ரப் பறவை கற்றுக் கொடுத்து என் பதினெட்டாவது குருவானது.

19. தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் அருந்தும் மழலையிடம் கற்றேன். ஆக மழலையே என் பத்தொன்பதாம் குரு.

20. குமரிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின. இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும் ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். அவளே என் இருபதாம் குரு.

21. தன் பட்டறையைக் கடந்துபோன அரசனைக் கூட கவனியாது தன் இலக்கில் தீவிரமான கவனத்தைச் செலுத்தி அம்பு தயாரித்துக்கொண்டிருந்தவனே என் இருபத்தியொன்றாவது குரு.

22. தனக்கென்று இருப்பிடத்தைப் பாம்பு உருவாக்கிக் கொள்வதில்லை. துறவியும் அதே போல் வானமே குடிசையாய் வாழும் போதனையைக் கற்றுக் கொடுத்த பாம்பே என் இருபத்தியிரண்டாம் குரு.

23. சிலந்தி தன் வாயிலிருந்து உற்பத்தியாகும் இழையில் நெய்யப்பட்ட வலையிலே தங்கி தன் வாழ்வைக் கழிக்கிறது. அதே போல தன்னுடைய எண்ணங்களிலேயே சிக்கி வாழ்வை வீணடிக்காதிருக்கச் சொல்லிக்கொடுத்த சிலந்தியே என் இருபத்திமூன்றாவது குரு.

24. புழுவாய் இருந்து வளர்ந்து முதிர்ந்தபின் தன்னை உணரும் கூட்டுப்புழுவே என் இருபத்திநான்காம் குரு.

எத்தனை எத்தனை தெளிவான ஆழமான பார்வையும் போதனையும் தத்தரின் இந்த உரையாடலில்? உண்மையில் இது அவர் மூலம் நாம் பெற வேண்டிய போதனையாகும். உதிர்ந்துகொண்டிருக்கும் இறுதி நொடி வரை நாம் கற்க இருக்கிறோம் என்றுணராது கல்வியென்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் என்றும் நம்மை விட அடையாளத்திலும் தகுதியிலும் குறைந்தவர்களிடம் க்ற்க மறுக்கும் அகந்தையும் உள்ள நமக்காக உருவாக்கிக் கொடுத்த போதனைகள்தான் இவை.

தத்தாத்ரேயர் குறித்து அறிய ஏராளமான புத்தகங்களும் தகவல்களும் இருக்கின்றன. அவற்றில் முத்தாய்ப்பாக பண்டிட் ராஜ்மணி டிகுநைத் (Pandit Rajmani Tigunait) எழுதியுள்ள The Himalayan Masters என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

மேற்கத்திய சிந்தனையும் அறிவின்பாற் பட்டு சிந்திக்கும் வழக்கமும் பல சமயங்களில் நம் நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முரணாக இருந்திருக்கிறது.மேலை நாடுகளிலிருந்து பலதரப்பட்ட அறிஙர்கள் இங்கு வந்து நம் செல்வங்களையும் சிந்தனைகளின் ஆழத்தையும் பார்த்து வியந்து பாராட்டிக்கொண்டிருக்க நாம் நம் வேர்களை வெட்கமின்றி இழந்துகொண்டிருக்கிறோம்.

அந்தப் புத்தகத்திலிருந்து இரு பத்திகள்:

(The ashram of Sage Dattatreya’s parents, known as Ansuya in Chitrakut, is still nestled in the beautiful Vindhya Range of the central Indian mountains. A steep mountain towers over the back of the ashram and the serene streams of the Mandakini River issue from a nearby cave. In the air is a pervasive sense of tranquility.

The fish leap from the water to take puffed rice from the hands of pilgrims. Monkeys come from the forest, greet visitors, and share their food like old friends. Your intellect may insist that they do it out of habit or to get food. But listen to nature and you will hear a silent voice: “Do not pollute the spirit cultivated by sages with your cold intellectualism.”)

மத்திய இந்திய மலைப்ரதேசங்களில் அழகான விந்திய மலைச்சாரலில் சித்ரகூடத்தில் தத்த முனியின் பெற்றோர்கள் தங்கியிருந்த ஆஸ்ரமம் அனுசுயா என்ற பெயரில் இன்னமும் இருக்கிறது. அருகில் இருக்கும் குகையில் இருந்து பாயும் மந்தாகினி நதியின் அற்புதமான தீரத்தில் நெடிதுயர்ந்த மலைகளின் பின்னணியில் ஆஸ்ரமம அமைந்திருக்கிறது. வீசும் காற்றில் தான் எத்தனை ஏகாந்தமான ஒரு அமைதி?

யாத்ரிகர்களின் கையிலுள்ள பொரியை உண்ண நீரிலிருந்து எம்பிக் குதிக்கின்றன மீன்கள். காடுகளிலிருந்து வெளியே வந்து வரவேற்று ஏதோ அவர்களின் நீண்ட நாள் நண்பர்கள் போல உணவைப் பகிர்ந்துகொள்கின்றன குரங்குகள். உங்களின் அறிவு அவை பழக்கத்தாலோ உணவுக்காகவோ இப்படி நடந்துகொள்கின்றன என உங்களை வற்புறுத்தலாம். ஆனால் ஏகாந்தமான அந்த இயற்கையின் நிசப்தமான குரலை உற்றுக்கேட்டீர்களானால்

“யுகாந்திரங்களாய் முனிஸ்ரேஷ்டர்கள் நிர்மாணித்திருக்கும் வாழ்க்கையின் மேன்மைமிக்க அடிநாதத்தை உறைந்துபோன உங்களின் புத்திசாலித்தனத்தால் மாசு படுத்திவிடாதீர்கள்”

எனும் அதன் கோரிக்கை உங்கள் காதுகளைத் தொடக்கூடும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum