தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா-rajaraj

Go down

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா-rajaraj Empty மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா-rajaraj

Post by இறையன் Fri Jan 27, 2012 3:43 pm

ஓம் கங் கணபதி நம
ஓம் சக்தி ஓம்
ஓம் நமசிவாய*
*மந்திரம்;*
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான
மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக்
கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை அடக்கவும், சில பகையை வெல்லவும்
பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக
வெளியிட்டனர். ஆனால் பிற்காலத்தில் மனிதன் தனது சுய லாபத்திற்காக மனிதர்களைக்
கொல்லுவும். அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க கற்றுக் கொண்டான். இதனாலேயே
மாந்திரிகம் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும், அதன் மீது ஒரு வெறுப்பும்
ஏற்பட்டுள்ளது.

மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு
செயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற வைக்கும்
சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு
பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது
என்றே சொல்லலாம்.

மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா சக்திகளையும் விட வலிமையானது வேகமும்
அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிட விரைவானதும்
சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த சக்தியை
எளிதில் தோற்றுவிக்க உதவுதே மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிவது,
எண்ணங்களை ஈடேறச் செய்வது, ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற
அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும் அவற்றின் சக்தியுமேயாகும். இந்த மந்திரங்களை
பயன் படுத்தும் கருவியாக யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த வழிமுறைகள் தொன்று
தொட்டு நமது தேசத்தில் பயன்பட்டு வந்துள்து. மந்திர சாஸ்திரத்தை முறைப்படி
அறிந்தவர் மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது. இதனை தவறான வழியில் பயன்
படுத்தாமலும், தீய செயல்களிற்கு பிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே இதனை
முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு கற்றுத் தருவதில்லை.

மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம் முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே
கற்றுக் கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக் கொள்ளும் எதுவும் சிறப்பினைத்
தராது. மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி
அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை "வர்ணாத்ம
சப்தம்" என வழங்குவர். வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை
செயலாற்றச் செய்ய முடியும். இந்த வகை மந்திரங்களை "துவனியாத்ம சப்தம்" என
வழங்குவர்.

பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு
பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர
ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது
காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது.
மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும்.
மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர் எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த
ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை.

பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்;
அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவே இந்த பொருள் அதிரும் என்று
நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம்
ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை
உரிய அதிர்வுடன் ஜெபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும்
மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன
நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ அந்த செயலைச் செய்கிறது.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த
முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற
முடியும்.

இந்தக் கட்டுரை மேலும் தொடரும். அதனைத் தொடர்ந்து மனிதர்கள் வாழ்வில் அதாவது
இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாயிருக்க உதவக்கூடிய சில யந்திரங்களையும்,
அவற்றிற்குரிய பூசை முறைகளையும் எமது இணைய தளத்தில் வெளியிட உள்ளோம்.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து
முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற
முடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய
முடியும். அப்படிப்பட்ட செயல்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு.
சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி
எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ
போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன. அதே நெருப்பு ஒரு வீட்டினை
கொளுத்தும் போது எப்படி தீய செயலை செய்கிறதோ மந்திரங்களும் அதே போல் தீய
செயல்களையும் செய்ய வல்லன.

நெருப்பினைக் கொண்டு தீபத்தினை ஏற்றுவதா அல்லது வீட்டினைக் கொளுத்துவதா
என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான்
மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம் பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய
காரியத்திற்கு பயன்படுத்தினால் அது தீமையையும் தர வல்லது.
மாந்திரீக சக்தி மூலம் நாம் 1. வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5.
பேதனம் 6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.)
செயல்களையும் செய்யலாம். அஸ்டகர்மத்தில் உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள்,
பூசை முறைகள், அமரும் இருக்கை, பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மலர்கள்,
ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்), யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம்
போன்றன தனித்தனியே அமையும்.

யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான்
நிலைத்திருக்கும். இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள உச்சாடனத்தின் அளவு,
உருக் கொடுத்த முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம்
எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப்
பொறுத்து அமையும். கோயில்களில் இருக்கும் சக்தியானது மூலவரிற்கு கீழே
வைக்கப்படும் யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. இந்த தகடு யாகங்கள் மூலம் உரு
கொடுக்கப்படுகிறது. அத்துடன் நித்திய ப+சைகள் முறைப்படி செய்யப்படுகின்றன. இதன்
கால அளவு 13 வருடகாலங்கள். அதனாற்தான் 13 வருடத்திற்கு ஒரு முறை கும்பாவிசேகம்
செய்யப்பட்டு யந்திரத்தகடுகள் புதிப்பிக்கப்படுகின்றன.

மந்திரங்கள் அந்தந்த மந்திரங்களை ஜெபிப்பவனை காக்கும். ஒரு செயலை நினைத்து அந்த
செயலிற்குரிய மந்திரத்தை முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று முறைப்படி
ஜெபித்து வந்தால் அந்த காரியம் நினைத்தபடி சித்தியாகும். மந்திரம் என்பது …..
அதன் செய்முறைதான் மாந்திரீகமாகும். தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு முகமாக
தீட்சை பெற்று அதற்குரிய நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த தேவதைகள் நேரில்
பிரத்தியட்சமாகி மந்திர ஜெபம் செய்பவரிற்கு சகல சித்திகளையும் அருளும்.
மந்திரங்கள் ஏழு கோடி எனக் கூறுவர். அவை பீஜம், பிரணவம், கீலகம், ரஷ~p என பல
வகைப்படும். மகா மந்திரங்களை மந்திரமுணர்ந்த குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே
தெரிந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள்
பஞ்சாட்சரி, தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்ச பிரம்மம், மாலா,
சூடாமணி, சிந்தாமணி, திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு ஜெயம்,
தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு, ருத்திரன் போன்றன. மந்திரங்களை மந்திர
நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம், திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக
காவியம் மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக காணலாம்.

ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு, தவறான
ஒலி வியாதியைக் கொடுக்கும். தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும்.
ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளை நாசம்
செய்யும். முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல
நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.
உலகம் தோன்றுவதற்கு ஆதாரமாய் இருந்தவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
எனும் பஞ்ச ப+தங்களாகும். ஆகாயத்திலிருந்து ஒலியும், ஒளியும் தேன்றின.
அண்டமெல்லாம் வியாபித்திருக்கும் உயிர்க் காற்றினால் உயிரினங்கள் எல்லாம் உயிர்
வாழ்கின்றன. இந்தக் காற்றே மனித உடலில் தச (பத்து) வாயுக்களாகி சகல வித
தொழிலையும் செயகின்றன. இந்த தச வாயுக்களின் அசைவுதான் மனமாகும். மனம்
சலனமுள்ளது. நிலையற்று இயங்குவது. அப்படிப்பட்ட மனதை அசைவற்று, சலனமற்று இருக்க
என்ன செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடே மநதிரம் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி
ஒரு நிலைப்படுத்த மந்திரம் மிக மிக சிறப்பான வழியாகும்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)

மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம் என்பதனை அகத்தியர் இவ்வாறு
வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் மந்திரமாகும்.
ஒவ்வொரு பூதத்திற்கும் எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது ந – ம – சி – வ – ய
என்ற எழுத்துகளாகவும், வட்டம், ஐங்கோணம், அறுகோணம், சதுரம், முக்கோணம் போன்ற
வரிவடிவங்களாயும் உள்ளன. இவை அவற்றிற்குரிய உலோகங்களில் அவற்றிற்குரிய
இடத்தினைப் பெறும் போது பஞ்சாட்சர யந்திரம் ஆகிறது உலோகங்கள் பண்டைய கால
கருத்துப்படி இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், வங்கம், துறா, வெண்கலம், ஈயம்,
நாகம் என்ற 9 உம் ஆகும். இந்த உலோகங்களில் தகடுகள் செய்து அவற்றில் மந்திர
உயிர் எழுத்துக்களை, வடிவங்களை அவற்றிறகுரிய இடங்களில் எழுத வேண்டும.
குறிக்கப்பட்ட மந்திரங்களிற்கு குறிப்பிட்ட உலோக தகட்டினயே உபயோகப்படுத்த
வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி செய்தால்தான் மந்திரம் சரியான முறையில் வேலை
செய்யும்.

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து
முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற
முடியும்.

--
சர்வம் சிவமயம்
சிவாய நமக‌

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum