தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழர் கலாச்சாரத்தில் தாலி-கௌசி

Go down

தமிழர் கலாச்சாரத்தில் தாலி-கௌசி    Empty தமிழர் கலாச்சாரத்தில் தாலி-கௌசி

Post by இறையன் Sat Jan 28, 2012 1:16 pm

தாலி என்பது திருமணத்தின் போது மணவாளன் தன் உரிமைப் பெண்ணாக ஒரு பெண்ணை அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு சாதனமாகிய மாங்கல்யம் ஆகும். அதாவது தாலி என்பது ஒரு அடையாளச் சின்னமே. திருமணத்தின்போது ஒரு ஆண் பெண்ணுக்குக் கழுத்தில் அணிவிக்கும் ஒரு அணிகலனாகும். தலைநிமிர்ந்து வரும் ஒரு ஆடவன் தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது இவள் திருமணமான ஒரு பெண் என்று தன்னை விலத்திக் கொள்வான். இந்த வகையிலேயே மெட்டி என்னும் ஒரு அணிகலன் ஆண்கள் கால்களில் அணியப்பட்டது. தலைகுனிந்து வரும் பெண்கள் வரும் பெண்கள், மெட்டி அணிந்த ஆண்களைக் கண்டு விலகிச் செல்வார்கள். ஆனால், அதில் இன்னுமொரு உண்மைக் காரணமும் உண்டு. மெட்டியிலுள்ள உலோகம் விஷத்தை நீக்கக்கூடியது தன்மையுள்ளது. காடுகளில் திரிகின்றபோது விஷ ஜந்துக்களின் தாக்கத்தில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க இம்மெட்டி அணியப்பட்டது. ஆனால், திருமணமான ஆண்களே விஷ ஜந்துகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்களா? என்பது கேள்வி. இதன் மறுமுனியில் சிந்தித்தால், அக்காலத்தில் சிறுபிராயத்திலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்பதும் உண்மையே. சிறுவயதிலேயே குடும்பத்திற்காக உழைப்புத் தேடவேண்டிய பொறுப்பு ஆண்மகனுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த மெட்டி, ஐரோப்பிய மண்ணுக்கு பொருத்தமில்லாதது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதே. பாதணி அணியாத பாதத்துடன் விஷ ஜந்துக்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இங்கு ஏற்படப் போவதில்லை. ஐம்பொன் நகைகள் அணியப்படுவதும். செம்பு பயன்படுத்தவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இதைவிட இம்மெட்டியானது தற்பொழுது திருமணநாளன்னு பெண்களுக்கே அணியப்படுகின்றது. மெட்டி அணியப்படும் விரலுக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே தொடர்பு இருப்பதனால், இம்மெட்டியானது கர்ப்பப்பைக்கு வலிமையைக் கொடுக்கின்றது என்றுஅறியப்பட்டிருக்கின்றது. இம்மெட்டி விடயம் இவ்வாறிருக்க தாலிக்குத் திரும்புவோம்.

ஆரம்ப காலத்தில் தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்மகன் அன்பளிப்பாக மலரைக் கொடுத்தே பெண்ணை ஆண்மகன் ஆண்டு கொண்டான். இம்முறை குரங்குகளிடமும் இருக்கிறதாம். பிற்காலத்தில் பூமாலை அணிவித்தார்கள். இது ஒரு அன்பளிப்புப் பொருளாகவே கருதப்பட்டது. பின் மஞ்சள்கயிற்றில் அணிவிக்கப்பட்டது. மஞ்சளானது தோலுக்கு மென்மையையும், அழகையும் கொடுக்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. இதனால், மஞ்சள் கயிற்றில் தாலி அணிவிக்கப்பட்டது. முற்காலத்தில் வேட்டையாடி புலியைக் கொன்ற ஆடவன், அதன் பல்லை எடுத்துக் கழுத்தில் மாலையாக அணிவது வழக்கமாக இருந்தது. பின் திருமணத்தில் அதனைத் தன் மனைவிக்கு அணிவித்தான் என்றும் அறியப்படுகின்றது. அதனாலேயே மஞ்சளில் தாலி கட்டும்போது மஞ்சள் புலிப்பல் வடிவிலே எடுக்கப்படுகின்றது. தற்பொழுது அது பொற்தாலி என்னும் வடிவத்திற்குத் தாவிச் செல்வப்பெருமையை வெளிக்காட்டும் ஒரு சாதனமாக அணியப்படுகின்றது. இப்போது 25,30 பவுண்களிலும் பெண்ணின் எடைக்கு ஏற்பவும் அணியப்படுகின்றது. தாலியைத் தாங்க முடியாத கழுத்துக்குனிய விழாக்களுக்கு மட்டும் அணியப்பட்டு மறுவேளை வீட்டு அலுமாரியில் அடைந்து கிடக்கின்றது.

திருமணநாளன்று சுபமுகூர்த்த நேரத்தில் கூறைச்சீலை உடுத்து மணமகனின் வலது பக்கத்திலே கிழக்கு நோக்கி மணமகள் அமர மணமகன் எழுந்து மணமகளின் வலதுபக்கம் வந்து வடக்குத் திசையை நோக்கி நின்று குருக்கள் மற்றும் பெரியோர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்து, மாங்கல்யம் தந்துநாநே நமஜீவன ஹேதுநா கண்டே பத்தாமி ஸுபுகே சஞ்ஜிவசரதசம்' என்ற மந்திரத்தைக் குருக்கள் உச்சரிக்க, கெட்டிமேளம் முழங்க (அபசகுன வார்த்தைகள் எதுவும் காதில் கேட்காவண்ணம்) பெரியோர்கள் அர்ச்சதை, மலர்கள் தூவ மணமகன் மேற்குத் திசை திரும்பி நின்று மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவான்.

கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு இத்தாலி அணியப்பட்ட நிலைமை மாறி இப்போது அழகுசாதனமாக்கப்பட்டு விட்டது. தமிழர் கலாசார சின்னத்துள் ஒன்றாகக் கருதப்படும். இத்தாலிக்கு ஒரு மகத்துவமும் உண்டு. மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் தொழிற்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும். கலாசார விழுமியங்கள் காரணம் இல்லாமல் தோன்றவில்லை. அது கால சூழலுக்கேற்ப கட்டிக் காக்க வேண்டியதும் அவசியமே.

http://kowsy2010.blogspot.com

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum