Latest topics
கடவுளுடன் ஒரு உரையாடல்
Page 1 of 1
கடவுளுடன் ஒரு உரையாடல்
கடவுள்: ஹலோ! யாருங்க அது என்னைக் கூப்பிட்டது?
நான்: நானா?... உங்களைக் கூப்பிடறதாவது?.. யார் பேசறது?
கடவுள்: ஹலோ! நான்தான் கடவுள் பேசறேன்! நீங்க என்னை கூப்பிட்டது காதிலே விழுந்தது. கூப்பிட்ட குரலுக்கு வரணுங்கறது என்னோட வழக்கம். அதான் உங்க கூட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்!
நான்: யாரது கடவுளா??!! ம்...ம்.. இருக்கலாம்! நான் பிரார்த்தனை பண்றது வழக்கம். அதிலே ஒரு நிம்மதி. ஆனா நான் இப்போ ரொம்ப “busy”! நான் வேற வேலையா இருக்கேன்!! அப்பறம் வாயேன்!!
கடவுள்: Busy!! எதனாலே “Busy”?
நான்: அது என்ன எழவோ தெரியலே! ஆனா எனக்கு இப்ப நேரமில்லே! வாழ்க்கையே ஒரு போராட்டமாயிடிச்சு! எப்பப் பார்த்தாலும் ஓட்டந்தான்! என்னாலே முடியலே!
கடவுள்: நல்ல இருக்குங்க! ஏதோ என்னைக் கூப்பிட்டீங்களே! உங்களுக்குக் கொஞ்சம் உதவலாம்னு நினைச்சேன்.. உங்களுக்கு நான் எதாவது உதவட்டுமா? இந்த “Computer” யுகத்திலே, உங்களுக்கு எது செளகர்யமோ அது வழியா பேசலாம்!! என்ன சொல்றீங்க!!
நான்: ம்... சரி எதோ உதவி பண்றதா சொல்றே!! காசு எதுவும் கேட்கக் கூடாது! சரியா!...... அப்படின்னா முதல்லே இதுக்குப் பதில் சொல்லு .... இப்பெல்லாம் வாழ்க்கை ஏன் ஒரு பெரிய சிக்கலா இருக்கு?
கடவுள்: வாழ்க்கையை அலசாதீங்க!! சும்மா வாழ்ந்து பாருங்க!! அலசி ஆராயறதுதான் அத சிக்கலா ஆக்குது.
நான்: அப்ப நாம ஏன் தொடர்ந்து சந்தோஷமில்லாம இருக்கோம்?
கடவுள்: நாளைக்கு என்ன ஆகுமோன்னு நேற்று நீங்க ரொம்பக் கவலைப்பட்ட நாள்தான் இன்னைக்கு உங்க முன்னாலே நிக்குது!! நீங்க அலசி ஆராயறதுனாலதான் கவலை உண்டாவுது. கவலப்படறதே உங்க பொழப்பாப் போச்சு!! அதனாலதான் உங்களாலே சந்தோஷமா இருக்க முடியலே!!
நான்: அட! அடுத்த நிமிஷம் என்ன ஆகும்னு தெரியாதிருக்கற போது எப்படிப்பா சந்தோஷமா இருக்க முடியும்?
கடவுள்: நிலையில்லாமை அப்படிங்கிறது தவிர்க்க முடியாத விஷயம்! அதுக்கெல்லாம் கவலைப்படனுமாங்கறது உங்க சொந்த விருப்பம்!!
நான்: அட! நீ ஒண்ணு! எது எப்படியாகுமோங்கறது தெரியாத போது ஒரே வேதனையா இருக்காதா என்ன?
கடவுள்: வேதனை இருக்குந்தான்! ஆனா அதுவும் உங்க சொந்த விருப்பந்தானே!!
நான்: அட என்னைய்யா இது! வேதனை நம்ம சொந்த விருப்பம்ன்னா, ஏன் நல்லவங்கலாம் எப்பவும் கஷ்டப்படறாங்க?
கடவுள்: வைரத்தப் “ பாலிஷ்” பண்ணனும்னா, உரசித்தானே ஆகணும்! தங்கம் சுத்தமாகணும்ன்னா, நெருப்பிலே போட்டுத்தானே ஆகணும்!! நல்லவவங்கலாம் நெறைய சோதனைக்காளாவாங்க! ஆனா கஷ்டப்படமாட்டாங்க!! அந்த அனுபவத்திலே அவங்க வாழ்க்கை நல்லதாத்தான் ஆகும்! கசப்பா இருக்காது!!
நான்: அப்பன்னா அந்த அனுபவம் வேணுங்கறே! உபயோகப்படுங்றே!!
கடவுள்: ஆமாம்!!.. இந்த அனுபவம் இருக்கே, அது கொஞ்சம் கஷடப்படுத்ற வாத்தியார்தான்! அவர் உங்களுக்கு சோதனையத்தான் முதல்ல கொடுப்பார்! அதுக்கப்பறம்தான் பாடம் கத்துக் கொடுப்பார்!!
நான்: ஆனா, இன்னும் எதுக்காக நாம அந்த சோதனைக்கெல்லாம் ஆளாகணும்? பிரச்சினை இல்லாத இருக்கக்கூடாதா?
கடவுள்: பிரச்சினைகள்தாங்க உங்களுக்குப் பயன் தரும் பாடத்தைச் சொல்லித்தர வேணுங்கறதுக்காக உண்டாக்கப்பட்டத் தடைக் கற்கள். அதனாலே உங்க மனவலிமை அதிகமாகும்; போராடவும், பொறுத்துக் கொள்ளவும் தெரிஞ்சா, உங்க உள் மனசோட பலம் அதிகமாகும். பிரச்சினை இல்லாமலிருந்தா இது நடக்காது.
நான்: அட என்னவோப்பா! உண்மையாச் சொல்லப்போனா, இத்தன பிரச்சினைக்கு நடுவுலே, சமயத்திலே, நாம எங்கே போறோம்னே தெரியல! ஒரே பயம்மா இருக்கு.
கடவுள்: நீங்க வெளிப்படையாப் பார்த்தீங்கன்னா, எங்கே போறோம்னு உங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் மனமொன்றி நினைச்சுப்பாருங்க! எங்கே போறீங்கன்னு தெரியும். வெளிப் பார்வைக்கு அது ஒரு கனவு போலத்தான் இருக்கும்! விழிப்பாயிருங்க! கண்ணாலே பார்க்கத்தான் முடியும். இதயத்தாலே மட்டும்தான் உள்ளுணர்வு என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்!!
நான்: சில சமயம் சீக்கிரமா ஜெயிக்க முடியலேங்கறது, சரியான வழிலே போலேங்கறத விட அதிகமா வலிக்குதே! என்ன செய்யறது?
கடவுள்: ஜெயிக்கிறதுங்கறது, மத்தவங்க உங்க செயலின் விளைவுகளை எடை போடறது! திருப்தியா இருக்குதா இல்லயா அப்படிங்கறது, நீங்க தீர்மானிக்கற விஷயம்! எங்கே போறோம்னு தெரிஞ்சுக்கறது இன்னும் போய்க்கிட்டே இருக்கோமே அப்படிங்கறதை விட சந்தோஷம் தர விஷயம் இல்லையா? நீங்க பாகைமானிய வச்சுக்கிட்டு நகருங்க! மத்தவங்க கடிகாரத்தை வைச்சுக்கிட்டு நகரட்டும்!!
நான்: அட என்னப்பா! ரொம்பக் கஷ்டத்திலே இருக்கறப்போ, எப்படி ஊக்கமா வேலை செய்ய முடியும்?
கடவுள்: எப்பவுமே, எவ்வளவு தூரம் தாண்டியிருக்கிறிங்கன்னு பாருங்க! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு பாக்காதீங்க! உங்களுக்குக் கிடைச்ச நல்லதப் பாருங்க! உங்க கைவிட்டுப் போனதப் பாக்காதீங்க!!
நான்: உனக்கு மனுஷங்களைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கா என்ன?
கடவுள்: ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது, என்னப் பார்த்து “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் அப்படின்னு கேட்கறவங்க, சுகப்படற போது, “எனக்கு எதனால இது கிடைச்கதுன்னு கேட்கறதேயில்ல!! இது எனக்குப் புரியலே!! எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!!
நான்: அட சில சமயம் நான் கூடத்தான், “நான் யாரு?” “ஏன் பொறந்தேன்?” இப்படின்னு கேட்கறேன்! இது வரைக்கும் பதிலே கிடைக்கலே!
கடவுள்: நீ யாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படாதே!! ஆனா, நீ யாரா இருக்கணும்னு, தீர்மானி!! இங்கே ஏன் பொறந்தேன்னு கண்டுபிடிக்கறத விடு! பொறந்ததுக்கான காரணத்தை ஆராய்ச்சி பண்றத நிறுத்து! காரணத்தை நீயே உருவாக்கு!! வாழ்க்கை, காணாமப் போனதைக் கண்டுபிடிக்கறது இல்லே! புதுசா உருவாக்கறதுதான்! புரிஞ்சுக்கோ!
நான்: இவ்வளவெல்லாம் சொல்றேயே, வாழ்க்கையைச் சிறப்பா வைச்சுக்கறது எப்படி?
கடவுள்: உங்களோட இறந்த காலத்தை வருத்தமில்லாம, எணணிப்பாருங்க!! நிகழ்காலத்தைப் பொறுப்பா, தன்னம்பிக்கையோட நடத்துங்க!! எதிர்காலத்தை அச்சமில்லாம எதிர்கொள்ளுங்க¡
நான்:கடைசியா ஒரு கேள்வி! சில சமயம் என் பிரார்த்தனைக்கெல்லாம் பதிலே இல்லைன்னு நினைக்கிறேன்? சரிதானா?
கடவுள்: இங்கே பதில் அளிக்கப்படாத பிராத்தனைகளே இல்லை! சில பிரார்த்தனைகளுக்கு பதிலே இல்லைங்கறதுதான் உண்மை!!
நான்: ரொம்ப நன்றி! ரொம்ப உபயோகமா இருந்தது. நான் இப்ப ரொம்பத் தெளிவா இருக்கேன்! ஒருவிதமான புத்துணர்ச்சியோட இந்த வருடத்தை ஆரம்பிக்கப் போறேன்! ஆமா நான் இத்தனை நேரம் உங்ககிட்ட மரியாதையாவே பேசலையே! உங்களுக்கு என் மேலே கோபம், வருத்தம் இது எதுவுமே இல்லையா? நான் ரொம்ப குழந்தைத்தனமா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கே!
கடவுள்: இது தெரிஞ்ச விஷயம்தானே! தப்பு செய்யறதும் உடனே வருந்துறதும் மனுஷங்களுக்கு இயல்பான ஒண்ணுதானே!. உங்களை எல்லாம் குழந்தைகள் அப்படின்னு சொன்னாதான் நான் கடவுள் என்றாகும். குழந்தைகள் செய்யற தப்பெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கறது இல்லே!
“ நம்பிக்கை வையுங்க! நல்லதே நடக்கும்!
அச்சத்தை விடுங்க! ஆக்கம் தானே வரும்!
உங்க சந்தேகத்தை எல்லாம் நம்பாதீங்க! உங்க நம்பிக்கை பேர்லே சந்தேகப்படாதீங்க!!
வாழ்க்கை ஒரு புதிர்தான்! விடுவிக்கலாம்! பிரச்சினை இல்லே; தீர்க்கறதுக்கு!!
என் பேர்லே நம்பிக்கை வையுங்க! என்னைக்கும் கூடவே இருப்பேன்!!
எப்படி வாழணும்னு தெரிஞ்சா, உங்க வாழ்க்கை ரொமப அற்புதமானது! தெருஞ்சுக்கறதுக்கு முயலுங்க! பெரிய சாதனை எல்லாம் வலிமையால சாதிக்கலே! விடாமுயற்சியாலதான் சாதிச்சிருக்காங்க! நீங்களும் சாதியுங்க! சந்தோஷமா இருங்க! ”
இப்போதைக்கு அவ்வளவுதான்; மறுபடியும் கூப்பிட்டா, அப்ப நான் வருவேன்
source:thedippaar

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
» பிரம்மராஜன் கவிதைகள்
» K Iniyavan
» K Iniyavan -karuththu