தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
பிரார்த்தனைகள் பலிக்கும்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


பிரார்த்தனைகள் பலிக்கும்

Go down

பிரார்த்தனைகள் பலிக்கும்  Empty பிரார்த்தனைகள் பலிக்கும்

Post by இறையன் Wed Feb 15, 2012 11:42 pm

முன்பொரு காலத்தில் உஜ்ஜயினி தேசத்தை விக்ரமாதித்த மகாராஜா ஆண்டுவந்தார். மக்கள் செழிப்புடனும் நலமுடனும் வாழ்ந்து வந்தார்கள். அருகில் உள்ள ஒரு கிராம த்தில் பெருமாள் கோயில் ஒன்று பிரமாண்டமாக கட்டப்பட்டு கிராம மக்களால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது.

காலை, மாலை இருவேளைகளிலும் வேத கோஷங்களும், பிரபந்தங்களும் ஓங்கி ஒலிக்கும். கோயிலின் வடகிழக்குப் பகுதியில் லக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்கு என்று சிறிய சன்னதியும் இருந்தது. பிரதான ஆலயத்தின் பூஜைகள் நன்கு நடைபெற்று வரும்போது, சிறிய சன்னதியில் கவனிப்பு குறைவாகவே இருந்தது. கருங்கல்லினால் ஆன அந்த சன்னதியின் மேல்புறத்தில் இருந்து சங்கிலியால் தூங்காவிளக்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

ஒருமுறை எண்ணெய் விட்டால் ஒரு மாதத்திற்கு அந்த விளக்கிற்கு எண்ணெய் தொடர்ந்து சொட்டு சொட்டாக விழும்படி அமைக்கப்பட்டு இருந்தது. (இன்றைக்கும் சில ஆலயங்களில் சொம்பை கவிழ்த்து வைத்தாற்போல் அமைந்த விளக்குகளை காணலாம். அந்த சொம்பில் எண்ணெய் நிரப்பிவிட்டால் கீழே சொட்டுச் சொட்டாக விழுந்து விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.)

அந்த சமயம் அதில் ஏதோ ஒரு துளையில் அடைப்பு ஏற்பட அந்த விளக்குக்கு எண்ணெய் வருவதில் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆலயத்தினுள் வசித்துவந்த எலி, நல்ல பாம்பு ஒன்றின் பார்வையில் பட்டது. நல்ல பாம்பு எலியைத் துரத்த அந்த எலி, லக்ஷ்மி நாராயண சன்னதியின் உள்ளே புகுந்து தப்பிக்க நினைத்து மேலேறி, அந்த அகண்ட தீபத்தின் சங்கிலியை பிடித்துக்கொண்டு அப்படியே நின்றது.

பாம்பிற்கோ, எலி இருந்த இடத்திற்குச் செல்ல இயலவில்லை. கீழே எப்போது எலி வரும் என்று காத்துக்கொண்டு படம் எடுத்துச் சீறியது. எலியோ மரண பயத்தில் பயந்து நடுங்கியவாறு அகண்ட தீபத்தின் சங்கிலியை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருந்தது.

விளக்கிற்கு எண்ணெய் வருவதில் தடை ஏற்பட்டு தீபம் அணைய இருந்த நேரத்தில் எலி அந்த சங்கிலியைப் பிடித்து உலுக்கிக்கொண்டே இருந்ததால் அடைபட்ட அடைப்பு நீங்கி எண்ணெய் சொட்டுச் சொட்டாக வர ஆரம்பித்தது.

ஓரிரு நாட்கள் கழித்து பாம்பும் சென்று விட்டது. எலியும் உயிர் பிழைத்து ஓடிவிட்டது. எலி, சுக்ல பக்ஷ பிரதமை அன்று விளக்கை அசைத்தது. அதிலிருந்து 30 நாட் களுக்கு தொடர்ந்து தீபம் எரிந்தது. அணைய இருந்த விளக்கை எரிய வைத்ததன் பயனாக எலி மறுஜென்மத்தில் உஜ்ஜயினி சக்கரவர்த்தியாகப் பிறந்து, பல ஆலயங்களுக்கு தீபம் ஏற்ற மானியங்கள் வழங்கி நல்லாட்சி செய்து இறைவன் அருள் பெற்றது.

எலி செய்தது போலவே வளர்பிறை பிரதமை அன்று இந்தப் பூஜையை ஆரம்பித்து கிருஷ்ணபக்ஷத்தில் தொடர்ந்து அமாவாசை வரை இந்தப் பூஜையை செய்யலாம். சாளக்கிராமத்தின் முன்போ, பெருமாள் விக்ரகத்தின் முன்போ, அல்லது விஷ்ணுபகவான் படம் வைத்தோ, தீபத்தை தொடர்ந்து அணையாமல் எரிய வைத்து அந்த தீபத் தில் லக்ஷ்மி நாராயணரை ஆவாஹனம் செய்து பூஜித்து வந்தால் நினைத்த காரியங்கள் சித்திக்கும். மனக் கவலைகள் மறையும்.

எந்த இடத்தில் இந்த தீபம் தொடர்ந்து 30 நாட்கள் ஒளி விடுகின்றதோ அந்த இல்லத்தில் மகாலக்ஷ்மி நித்யவாசம் செய்வாள். நீண்ட நாள் வியாதிகள் நீங்கும். அரசாங்க, அரசியல் வெற்றிகளை அடையலாம், மனசாந்தி கிடைக்கும்.

குத்துவிளக்கு வெண்கலம் அல்லது பித்தளை, வெள்ளியால் ஆனதாக இருக்கலாம். ஆவாஹனம் செய்த மஹாவிஷ்ணுவிற்கு பால், தேன், நெய், தயிர் இவற்றை நைவே த்யம் செய்யவேண்டும். ஆபரணம் அணிவித்து, சந்தனம், குங்குமம் போன்ற மங்களகரமான பொருட்களைச் சமர்ப்பித்து நாராயண அஷ்டோத்திரத்தையோ அல்லது ஸ்ரீவிஷ்ணு அஷ்டோத்திரத்தையோ சொல்லலாம்.

துளசி, நந்தியாவட்டை, வாசனைப்பூக்களால் அர்ச்சிப்பது விசேஷம். பூஜை ஆரம்பிக்கும் அன்று பால் பாயசம், அப்பம், வடை, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை படை த்து தேங்காய் வெற்றிலை பாக்கு, வாழைப் பழம் நைவேத்யம் செய்வது விசேஷம்.

சிலர் ஆவணி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் தீபமேற்றி, மங்கள கௌரி விரதம் அனுஷ்டிப்பது போல் அகண்ட தீபத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மியை பூஜிப்பார்கள். ஆடி மாதத்தில் இந்தப் பூஜை செய்யும் வழக்கம் இல்லை. மற்ற மாதங்களில் செய்யலாம். பூஜையை தினமும் செய்யவேண்டும். பூஜை ஆரம்பிக்கும் அன்றும், முடிக்கும் அன் றும் விசேஷ நைவேத்யங்கள் செய்யலாம்.

திருமணமாகாத பெண்கள் இந்தப் பூஜையை தொடர்ந்து செய்தால் கட்டாயம் திருமணம் கைகூடி வரும்.

தீபத்தில் பிரம்மா சரஸ்வதி, லக்ஷ்மி விஷ்ணு, பார்வதிபரமேஸ்வரன் வசிப்பதாக ஐதீகம். விளக்கின் மேல்பாகம் சிவ சொரூபமாகவும், மத்திம பாகம் விஷ்ணு சொரூபமாக வும், கீழ் பாகம் பிரம்ம சொரூபமாகவும் கருதப்படுகிறது.

புஷ்பத்தை குத்துவிளக்கிற்கு மேலாக நெருப்பு படும்படி வைக்கக்கூடாது. குத்துவிளக்கு மேல்வைத்து பூ கருகுவது தோஷமாகும். குத்துவிளக்கின் தண்டிலேயே பூவைச் சுற்ற வேண்டும்.

இந்த அகண்ட தீப பூஜையை வீட்டில், அல்லது பொது இடங்களில் கூட்டாகவோ, ஆலயங்களில் செய்யலாம். தீப ஒளியாக காட்சி தரும் மகாலக்ஷ்மி உடனடியாக அரு ள்புரிவாள்.

விளக்கேற்றக்கூடிய திரி, பஞ்சினால் ஆனதாகவோ, அல்லது தாமரைத்தண்டில் செய்ததாகவோ இருக்கலாம்.

கிழக்கு திசைநோக்கி விளக்கேற்றுபவர்களுக்கு வாழ்வில் ஏற்படும் துன்பம் விலகும். மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் கடன் தொல்லைகள், நவக்கிரக தோஷங்கள் விலகும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் கல்யாணத் தடை நீங்கும். எதிர்பார்த்த லாபங்கள் கைகூடும். தென்திசை நோக்கி விளக்கு ஏற்றுவதைத் தவிர்க்கவும்.

பொதுவாக, நல்லெண்ணெய், பசுநெய், இலுப்பை எண்ணெய் போன்றவைகளில் விளக்கேற்றுவது விசேஷமானது. தீப லக்ஷ்மி வழிபாடு செய்யும்போது ஐந்து முகம் ஏற்ற முடியாவிட்டால் கூட ஒரே முகமாக கிழக்கு நோக்கி ஏற்றலாம்!
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum