தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நடராஜரின் நடனம்

Go down

நடராஜரின் நடனம்  Empty நடராஜரின் நடனம்

Post by இறையன் Sat Dec 29, 2012 11:24 pm

பலர் சிகரெட் பிடிக்கிறார்கள் ! வேறு பலர் மது அருந்துகிறார்கள் !

இவர்களிடம் போய் ஏன் சிகரெட் பிடிக்கிறீர்கள் ? ஏன் மது அருந்துகிறீர்கள் ? என்று கேட்டுப் பாருங்கள்.

போரடிக்கிறது.. . சிகரெட் பிடிக்கிறேன். சோகத்தை மறக்க மது குடிக்கிறேன் அல்லது ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளத்தான் இந்தப் பழக்கம் என்று காரணங்களைச் சொல்லுவார்கள். இவர்களின் மனநிலையும் உடல்நிலையும் சோர்ந்து போகும்போது அல்லது டென்ஷனாக இருக்கும்போது அந்த நிலையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள் ! இதைச் செய்வதற்கு அவர்களுக்குத் தெரிந்த வழிகள் இதெல்லாம்தான்.

Mind Rhythm அல்லது Body Rhythm இவை இரண்டும் நீண்ட நேரத்துக்கு ஒரே மாதிரியாக ஒரே அலைவரிசையில் இருந்தால் நிச்சயம் போரடிக்கத்தான் செய்யும். சோம்பல் வரத்தான் செய்யும். ஏன் அர்த்தமில்லாத ஒரு சோகம்கூட வந்து குவிந்துகொள்ளும். இந்த மாதிரி நிலை யாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. அதனால் Mind Rhythm-மும் Body Rhythm-மும் ஏதாவது ஒரு மாற்றம் கிடைத்தால் உற்சாகம் பிறக்கும், மகிழ்ச்சி துளிர்க்கும் என்று சிலர் சிகரெட்டிடமும் மதுவிடமும் போய்ச் சரணடைகிறார்கள் !

சிகரெட்டும் மதுவும் Body Rhythm-ஐ மாற்றுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இவை இரண்டும் கூடவே பல தீயவிளைவுகளையும் ஏற்படுத்துகின்றன அல்லவா ? சரி, அப்படியென்றால் தீயவிளைவுகளே இல்லாத, அதே சமயம் Body Rhythm-ஐ மாற்றி உற்சாகம் தரக்கூடியது உலகில் ஏதாவது உண்டா ?

உண்டு... உண்டு... உண்டு !

அதில் முக்கியமான ஒன்று நடனம் !

என்னது? டான்ஸா ? என்று முகம் சுளிக்காதீர்கள்.

டான்ஸ் நமது கலாசாரத்துக்கு சரிவராது என்று சொல்லி ஒதுங்காதீர்கள் ! உண்மையில் பார்க்கப்போனால், நமது கலாசாரமும் நடனமும் பின்னிப் பிணைந்த ஒன்று ! பரதம், குச்சுப்பிடி, ஒடிஸி, மோகினி ஆட்டம் என்று பல நடன வகைகள் வேர்விட்டது நமது பாரத பூமியில் தான் !

இந்து என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு.

அதில் முக்கியமானது - நம்மை உற்சாகம் இழக்கச் செய்வது எதுவோ அதை அழிப்பது ! என்பதாகும். நமது உற்சாகத்தை, உத்வேகத்தை - தன்னம்பிக்கையை நம்மிடமிருந்து பறிக்கும் சக்தி எது ? சோம்பல், சுயபச்சாதாபம் முதலியவை தானே ! நாம் முதலில் இவற்றை அழிக்க வேண்டும்.

நமது நடராஜரின் சிலை உணர்த்துவதும் இதைத்தான் !

நடராஜரின் காலடியில் கிடக்கும் அரக்கன்தான் உற்சாகத்தை நம்மிடமிருந்து பறிக்கும் சக்தி !

நடனமாடும் நடராஜரின் கையில் தீஜுவாலை இருக்கிறதே, அது என்ன ? புரிந்துகொள்ளும் அறிவைத்தான் நமது வேதங்கள் தீ என்று சிம்பாலிக்காகக் கூறுகின்றன. துறவிகள் நெருப்பின் வண்ணத்தில் இருக்கும் காவி உடையை அணிவதும் இதே காரணத்துக்காகத்தான் ! நடராஜரின் இன்னொரு கையில் இருக்கும் உடுக்கை ஞானத்தைக் குறிக்கும்.

மூன்றாவது கையின் மூலம் நடராஜர் காட்டும் அபயமுத்திராவுக்குப் பயமின்றி வாழ் என்று பொருள். நம்மைத் தாழ்மைப்படுத்தும் அரக்கன் என்ற சக்தியை அழித்தால் துள்ளித் துள்ளி நடனமாடும் அளவுக்கு நமக்கு உற்சாகம் பிறக்கும் ! உற்சாகம் பிறந்தால் மகிழ்ச்சி பிறக்கும் ! இந்த நேரத்தில் நர்ஸரிப் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் ஒரு பாடல் என் நினைவுக்கு வருகிறது.

What is the time now ? என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் அர்த்தம் என்ன தெரியுமா ?


இது என்ன நேரம் ?
இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம் !
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கணம் எது ?
இதோ இந்த கணம் தான் !
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இடம் எது ?
இதோ இந்த இடம்தான் !

சுஃபி நடனம் என்று தனிவகையான ஒரு நடனம் உண்டு !

இந்த நடனத்தின் ஸ்டெப்ஸே நம்மிடமிருக்கும் பிரச்னைகளை எல்லாம் தூக்கித் தூர எறிவது போலத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நடனத்தின் இறுதிக் கட்டத்தில், நம் உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலை மாதிரி.. . மகிழ்ச்சியே உருவான சாண்டாகிளாஸ் மாதிரி. .. எல்லோருக்கும் கொடுப்பது போல் ஸ்டெப்ஸ் இருக்கும்.

சுவாமிஜி ! டான்ஸ் ஆடினால் Body Rhythm மாறும், உற்சாகம் பீறிடும் என்று சொல்கிறீர்களே ? அப்படியென்றால் டிஸ்கொதேக்களில் ஆடும் நடனத்துக்கும் நடராஜரின் நடனத்துக்கும் என்னதான் வித்தியாசம் ? என்று நீங்கள் கேட்கலாம் !

நடராஜர் மாதிரி தன்னைத்தானே புரிந்துகொண்டு, முழுஞானத்தோடு நம்மைத் தாழ்மைப்படுத்தும் சக்திகளை வீழ்த்தி அதன் மேலே ஏறி நின்று நாம் நடனமாடினால், நடனமாடுபவர் கண்ணுக்குத் தெரியமாட்டார் ! நடனம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் !

சரி.. . அப்படியெனில் எப்படி நடனம் ஆட வேண்டும் ?

சந்தோஷத்துக்காக நடனம் ஆடினால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது ! ஆகவே, நீங்கள் ஆட ஆரம்பிக்கும்போதே சந்தோஷத்தோடு நடனமாடுங்கள் !

ஆங்கிலத்தில் சொல்வதென்றால் -

Don’t dance for happiness !
Dance out of happiness !மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum