தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
சிந்தனைக் கதவுகளை மூடாதீர் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

Go down

சிந்தனைக் கதவுகளை மூடாதீர் Empty சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

Post by இறையன் Sat Dec 29, 2012 11:30 pm

மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க "நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன்" என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம்., ஆனால் இந்தபாஸிட்டிவ் திங்கிங் அதிக நாளைக்கு உதவாது.

தீய எண்ணங்கள் எழும்போது ராமா... ராமா... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் என்று ஒரு சிலர் யோசனை சொல்வார்கள். பாஸிட்டிவ் திங்கிங் என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான்.

மனதில் சபலம் வரும்போது, அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும், ஆனால், அதே தீ எண்ணம் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே... ? அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா... ?

வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது. அது எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை. ஆனால், துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும். ஆனால், வத்தி எரிந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுங்கத் துவங்கிவிடும்.

பாஸிட்டிவ் திங்கிங்கும் இது மாதிரி தான்.

சரி... பாஸிட்டிவ் திங்கிங்குக்கு மாற்று இருக்கிறதா... ? இருக்கிறது. அதற்குப் பெயர்தான் Authentic thinking.

நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

"ஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே... என்று வெறுப்படைந்து, இல்லை, நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்" என்று பாஸிட்டிவ் திங்கிங் என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும், அதற்குப் பதிலாக, உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுங்கள்.

இது கெட்ட சிந்தனை , இது நல்ல சிந்தனை என்பது மாதிரி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல், உங்களின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுங்கள். துக்கமான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ... அதை நீங்களே விலகி நின்று பார்க்கும் போது, உங்களுக்குள்ளே புரிந்து கொள்ளுதல் நடக்கும் இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான்.

மகிழ்ச்சி எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே.

ஆனால், மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும்

அவர் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர், அவருக்கு ஆறு பெண்கள் எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவர்கள்.

ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது? என்று கவலைப்பட்டுக் கவலைபட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது.

அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அந்த நேரம் பார்த்து, அவர் வாங்கி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால், அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ?...... என்று பயந்த மனைவி, டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள்.

டாக்டர் மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறார்.

உங்களுக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு விழுந்தால் என்ன செய்வீர்கள்.....?

நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்....

சரி, இரண்டு லட்சம் விழுந்தால்.. ?

இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்.

சரி... பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்

எனக்கெல்லாம் எங்கே டாக்டர் பத்து லட்சம் விழும் ? அப்படி ஒரு வேளை விழுந்தால், சத்தியமாக உங்களுக்கு இரண்டு லட்சம் தந்து விடுவேன்.

எதிர் பாராத இந்த இன்ப அதிர்ச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்.

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதே மாதிரி துயரமும் ஒரு சுவை.

இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம் நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்.

அப்போது, கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறார் என்று எனக்கு ஒரே குழப்பம்.

ஆனால், மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ, அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

சிறுபிள்ளையாக இருக்கும் போது, இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை, என்று நமக்கு நாமே முடிவெடுத்துக் கொண்டு சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ அதே மாதிரிதான் இந்த விஷயமும்.

மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணர்ச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி, வாழ்க்கையில் நாம் அநேக உணர்ச்சிகளுக்குக் கதவைத் திறப்பதில்லை.

இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது, மனது தானாகவே அமைதி அடையும், திரைகள் விலகும், உண்மைகள் புரியும், வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக, மென்மையாக விரியும்.



மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum