தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.

Go down

சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.  Empty சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.

Post by இறையன் Sat Dec 17, 2011 10:39 pm

சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.  Images%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8Dஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

வாடிவாடி வாடிவாடி மாணுபோன மாந்தர்கள்

கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே ‘’


( சிவ வாக்கியரின் புகழ் பெற்ற பாடல். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல்கோயிலில் தேடியலைந்து, இறுதியில் எங்கும் காண இயலாமற் அறியாமையால் மாண்டுபோனார்கள். அவ்வாறு மாண்டு போவனர் எண்ணிக்கை எத்தனை என்று அறிவுறுத்தியவர் சிவவாக்கியர்.மூடப்பழக்க வழக்கங்கள்,தீண்டாமை,போலி சாமியார்கள்,அகத்தில் அழுக்குடன் திரியும் மானிடரைக் கண்டிக்கிறார் )


சிவ வாக்கியர் யோக சித்தரில் சிவயோகியாவர். தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கும் கணிப்பு.இவர் இயற்றிய பாடல்கள் ’சிவ வாக்கியம்’ என இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. சிவ வாக்கியம் 1012 மொத்தம் பாடல்களாகும். இதில் இராமனை புகழ்ந்து பாடியுள்ளார். அந்தப் பாடல்கள்தான் இவர் முதலில் வைணராயிருந்து பின்னர் சைவராகமாறியமைக்குச் சான்று என்று கூறப்படுகிறது.


கார கார கார கார காவலூழி காவலன்

போர போர போர போர போரினின்ற புண்ணியன்

மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ

ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே


( கரா கரா என்னும் அடுக்குச் சத்தத்துடன் போர்களத்தில் கைகளில் ஆயுதம் ஏந்தி நின்றபுண்ணிய மூர்த்தியும், போரில் அர்ச்சுனனுக்கு வெற்றி தேடித்தர தேரோட்டியாய்அமர்ந்தவனும், மராமரங்களாகிய ஏழு விருட்சங்களை துளைத்து சுக்கிரீவனுக்கு வெற்றிகொடுத்த விஷ்ணுவின் ஸ்ரீராம ராம என்னும் நாமமே.)


வாலியை கொல்ல இராமன் ஏழு மாமரங்களின் பின்னால் ஒளிந்திருந்து அம்பெய்தார்.இதனையே மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ என்னும் வரி குறிக்கிறது


உருவ வழிபாட்டை இவர் சாடியதுண்டு. பிரமம் எனப்பரம் பொருளையும் பேசுவார். இவர் சில சமயங்களில்வெறுப்பில்லாத சைவர். சிவனே பரம்பொருள் என்பார். கடவுளின் உயிரின் வேறாக உளது என்பார். ஆனாலும் கடவுள் இல்லாமல் உயிரில்லை என்பார்.கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாகநிலவுகிறார்


“திருவுமாய் சிவனுமாய்த் தெளிந்துள்ளோர்கள் சிந்தையால்

மருவி எழுந்து வீசும் வாசனையதாகுவேன்”


எனத் தெளிந்த ஞான நிட்டையுடையயோர் திருவுள்ளத்தில் மலரின் மணம்போல் தோன்றுவான இறைவன்என்பார்.. “ உற்றவாக்கையின்று பொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப்பரம்பொருள் ” என்னும் திருவாசகத்தோடு ஒத்துள்ளதை காணலாம்.


இவர் வேதியர் குலத்தில் தை மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆணும் பெண்ணும் இருவரும் ஏகமனத்தோடு புணர்ந்து விரும்பி செய்கின்றன போகமாகிய இன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிப்\பொருந்துகிறது. உயிர்கள் உடம்போடு தோன்றுவதும் அவ்வுடல் அழிவதும் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகியதால் யாரும் எதுவும் சாவதில்லை; பிறப்பதும் இல்லை என்ற கருத்துடையவர்.ஆனாலும் அவரும் இவ்வாறே பிறந்தார் என்பதுவும் உண்மை. இளம்வயதிலேயே கால தத்துவதை நன்றாக உணர்ந்தவர்.


‘அபிதான சிந்தாமணி’ எனும் நூலில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.காசிக்குப் போக வேண்டும் என்ற முடிவெடுத்து தேச சஞ்சாரம் செய்து காசியை அடைந்தார். மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் பிராணாயாம வித்தை அறிந்து ஒரு செருப்பு தைப்பதை தொழிலாக கொண்ட ஞானியிடம் சீடராக சேர்ந்தார். இருவரிடமும் ஈர்ப்பு சக்தி ஏற்பட்டு நெருங்கிய நண்பர்கள் போல் கலந்தனர்.சிவ வாக்கியர் தனது மனக்குறையை கூறி தன்னை ஆதரிக்கும்படி வேண்டினார். சிவ வாக்கியரைச் சோதிக்க “ சிவ வாக்கியா! என்னிடம் செருப்பு தைத்த கூலிக்குக் கிடைத்த காசு என்னிடம்இருக்கிறது. இதனை எடுத்துப்போய் என்னுடைய தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விட்டு வா…..,அத்துடன் இந்த பேய்ச் சுரைக்காய் ஒரே கசப்பாகக் கசக்கிறது. இதன் கசப்பையும் கழுவிக் கொண்டு வா!’என்றார். சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.  Images%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8Dகாசையும் பேய்ச்சுரைக்காயையும் பெற்றுக்கொண்ட சிவ வாக்கியர் நேராக கங்கை நதிக்கரை வந்தார்.கொடுத்த காசைச் சுழன்றோடும் ஆற்று நீரின் மேல் வைக்க நீருக்குள்ளிருந்து இரு வளைக்கரம் வெளியே நீண்டு அந்தக் காசைப் பெற்றுக்கொண்டது. மறு நிமிடம் மறைந்தது. எவ்வித வியப்பும் கொள்ளாது, தன்னிடமிருந்த பேய்ச் சுரைக்காயை எடுத்து நீரில் அலம்பிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார். ‘சிவ வாக்கியா, வந்துவிட்டாயா! நான் அவசரப்பட்டு விட்டேன். நீ கங்காதேவியிடம் கொடுத்த காசு எனக்குத் திரும்பவும் வேண்டுமே…, இதோ இந்தத் தோல்பையில் தண்ணீர் இருக்கிறது. அங்கே கொடுத்த காசை இந்தத் தண்ணீரிடம் கேள்’ என்றார். சிவ வாக்கியர் எவ்வித சலனமும் இன்றிக் கேட்டார். தண்ணீருக்கு உள்ளிருந்து ஒரு வளைகரம் நீண்டது. அதன் கரத்தில் காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்தக் காசை சித்தரிடம் கொடுத்தார்.


சித்தர் இதனை கண்டு மகிழ்ச்சியடைந்தார். ‘ எனக்கேற்ற மாணவனாக நீ பரி பக்குவம் பெற்றுள்ளாய் ’என்று ஆசீர்வதித்தார். அந்த பேய்ச் சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் கொடுத்து, ‘முக்தி நிலை சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் எந்தப் பெண் உனக்குச் சமைத்துகொடுக்கிறாளோ அவளை நீ மணந்து இல்லறம் நடத்துவாயாக’ என்று ஆசீர்வதித்தார். இத்தனை காலம் அவருக்கு இருந்த மனக்குறை அதுதான். ஐம்பத்தொரு வயது வரை திருமணமின்றி இருந்த தனக்குள் இல்லற நாட்டம் ஏற்பட்டிருந்ததை இவர் எவ்வாறு அறிந்தார் என்று வியந்தார்.குருவின் பாதம் தொட்டு வணங்கி அவரிடம் சித்த உபதேசம் பலவும் கேட்டறிந்து, பின் பிரிந்தார் ஒருவருக்கு பெரிய அனுபவமும் அவனுக்கு நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும், - உள்ள சூட்சமங்களை அறிந்து, மக்களுக்கு உபதேசிப்பது அறிவுதான். செல்லும் வழியில் பல அனுபவங்களால் அவர் தவஞானம் அறிவைப் பெற்றார். ஆன்மாவால் பெறுகின்ற அற்புதமான சுகத்தை அளப்பரிய நிலையான இன்பத்தை ஓரே ஒருவரால் மட்டுமே இந்த உலகத்திற்கு தரமுடியும். அவரே ஞானகுரு ஆவார்.வித்தை கற்றுக் கொடுப்பவர் வித்யாகுரு. வினைகளை தீர்க்க வந்தவன் ஞானகுரு.


உடம்பால் மனிதன் பெறுகின்ற இன்பம் சரீர சந்துஷ்டி ஆகும். ஆன்மாவினால் பெறுகிற இன்பம் ஆத்ம சந்துஷ்டி. இதுவே பேரின்பம் எனப்படுகிறது. கல்வி நெறியை வரையறை செய்வது யோக சாஸ்திரம்.சிவ வாக்கியர் ஆதம் தத்துவத்தை அற்புதமான பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது பாடல் திருவிளக்கமாகத் தோன்றிவர். பாடல்கள் பெரும்பாலும் திருமந்திர நடையை ஒத்திருக்கும்.கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாக நிலவுகிறார்.எதிர்ப்பட்ட பெண்களிடமெல்லாம் “ இந்தப் பேய்ச்சுரைக்காயையும் மணலையும் பிசைந்து அமுது படைக்கும் பெண் உங்களில் யார்?” என்று கேட்டார். இளமையும் அழகும் நிரம்பிய சிவ வாக்கியரை நெருங்கிய பெண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஓடி ஒளிந்தனர். சிலர் இவரை பித்தர் என்றனர்.சிலர் புத்தி பேதலித்து விட்டது ஓடி ஒளிந்தனர்.


இதனால் மிகவும் சலித்துப்போன சிவவாக்கியர் கடைசியாக சிற்றூரில் குறவர்கள் வசிக்கும்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குடிசையின் வாயிலில் கன்னிப் பெண் ஒருத்தி உட்காரந்திருந்தாள்.சிவ வாக்கியரை கண்டதும் ஏதோ ஒரு உள்ளூணர்வு தூண்ட அவரை எழுந்து வணங்கி ஒதுங்கி நின்றாள்.குடிலின் வாசலில் மூங்கில்கள் பிளக்கப்பட்டு கட்டுகட்டாகக் கிடந்தது.

” வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா அம்மா? ” என்று சிவ வாக்கியர் கேட்டார்.


”அய்யா, தாங்கள் யாரென்று தெரியவில்லை. என்னுடைய பெற்றோர்கள் கூடை முடைய மூங்கில் வெட்டப்போயிருக்கிறார்கள்.”


“ பெண்ணே! நான் சாப்பிட்டுப் பலநாள் ஆகிவிட்டது.எனக்குப் பசி அதிகமாக இருக்கிறது. என்னிடம் பேய்ச் சுரைக்காயும் மணலும் இருக்கிறது. இவற்றைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா ?" என்று சிவ வாக்கியர் கேட்டபோது பதிலேதும் கூறாது அவரிடமிருந்து அதனைப்பெற்றுக்கொண்டு உள்ளே சென்றாள். ஏளனமாக ஏதும் கேள்வி கேட்காமல் பரிபக்குவ நிலையில் பேய்ச்சுரைக்காயையும் மணலையும் பிசைந்து எவ்விதக் குறைபாடும் இல்லாமல் சமைத்து வைத்து அவரைச் சாப்பிட அழைத்தாள்.குருநாதர் அடையாளம் காட்டிய பெண் இவள்தான் என்று தெரிந்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர்கள் வீட்டிற்குள் சிவ வாக்கியர் உடகார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு திகைத்தபோது, அந்த பெண் நடந்ததைக் கூறினாள். பேய்ச்சுரைக்காயும் மணலும் உணவாக்கப்பட்டததை அறிந்த அவர் ஒரு சித்தராக இருக்க வேண்டும் என்று கருதினார்.


”அய்யா, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் பெண் நான் கொடுத்த பேய்ச்சுரைக்காயும் மணலை அற்புதமான உணவு படைத்தாள்.எதிர்வாதம் செய்வதை அறியாத ஒரு பொறுமையான பெண் இவள் என்பதை அறிந்தேன்.நான் தவம் செய்வதற்கு துணையாக இவள் இருப்பாள் என நிரூபித்துவிட்டாள்..இவளை நான் மணம் செய்யவிரும்புகிறேன்” என்றார்.
சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.  Index%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D


Last edited by Admin on Sat Dec 17, 2011 10:41 pm; edited 1 time in total
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.  Empty Re: சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.

Post by இறையன் Sat Dec 17, 2011 10:39 pm

“சுவாமி, நாங்கள் செய்த புண்ணியம் அது, ஆயினும் எங்கள் குல வழக்கப்படி திருமணத்திற்குப் பின்பும் தாங்கள் எங்களுடன் தங்கி இருக்கவேண்டும்” – என்றனர். சிவ வாக்கியர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார். வெண்கலத்தைத் தட்டி ஓசை எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தி வைத்தார்கள்.குடும்பவாழ்க்கையை மேற்கொண்ட போதும் ஆசைகள் அற்ற, நிலையில்தான் இருந்தார்.


குறவர் குலத்தோடு ஐக்கியமான பின் அவர்களுக்குரிய வேலைகளான,பாசி பவளமணி சேகரித்தல், காடுகளுக்குச் சென்று மூங்கில் வெட்டி முறம் செய்தல் போன்ற வேலைகளை சிவ வாக்கியர் அவர்களோடு சேர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் மூங்கில் வெட்டுவதற்குக் காட்டினுள் சென்ற போது, அங்கிருந்த ஒரு பருத்த மூங்கில் மரத்தினை கண்டு அதனை வெட்டினார். அப்படி வெட்டியபோது வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிபொடியாகத் தங்க துகள்கள் உதிர்வதைக் கண்டு திடுக்கிட்டு போனார் சிவவாக்கியர்.

{ வேறு சில குறிப்புகளில், சிவ வாக்கியர் ஒரு புற்றின் மீது சிறுநீர் கழித்த போது அந்த புற்றின் மண் பொன்னாக மாறியது… என்றுமிருக்கிறது. சித்தர்களின் சிறுநீருக்கு இரசவாத தன்மை இருக்கிறது . சில ஆண்டுகளுக்கு முன் வேலூரை அடுத்திருக்கும் ஒரு சிறிய கிராமத்திற்கு ( குடியார்த்தம் என்று எண்ணுகிறேன்) ஒரு சித்தரைக் காணச் சென்றிருந்தேன். அவருக்குப் பெரிய வீடு இருந்த போதும் தோட்டத்தில் ஒரு சிறு குடிசையில்தான் இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது தான் படுத்திருந்த கட்டிலின் கீழிருந்து ஒரு பாத்திரை எடுத்தார். அதனுள் சிறிது செப்பு தகடும், தண்ணீரும் இருந்தது.


என்னிடம் கொடுத்து முகர்ந்துப் பார்க்க சொன்னார். முகர்ந்து பார்த்த போது எனக்கு இளநீரின் வாசம் அடித்தது. அவரிடம் இளநீர் வாசம் வருகிறது. அப்படியா என்று வாங்கி வைத்துவிட்டு, சில நிமிடங்கள்என்னை உற்று நோக்கினார். பிறகு மெல்ல’….,“ அது இளநீர் தண்ணீரில்லை …, எனது சிறு நீர். உள்ளீருக்கும் செப்பத் தகடு சில காலத்தில் மெல்லப் பொன்னாக மாறும்…, என்றார். முன்னமே இம்மாதிரி விழயங்கள் அறிந்திருப்பதால் அது குறித்து கேட்காமல்…,நல்லது சாமி, - இது 24 கேரட் தங்கமா அல்லது 22 கேரட் தங்கமாக என்றேன்.இல்லை அதனை விட சற்று குறைவான கேரட் தங்கம் - என்றார் ]


”சிவபெருமானே! ஆட்டைக் கொண்டு வந்து காட்டி வேங்கைப் புலியைப் பிடிப்பது போல் தங்கத்தைக்காட்டி என்னைக் கட்டிப் போட எண்ணுகிறாயா? இது ஆட்கொல்லி அல்லவா, நான் வேண்டுவது முக்தி! அதனை விடுத்து புத்தியைத் தடுமாறச் செய்யும் இந்த யுத்தி வேண்டாம்” என சிவ வாக்கியர் தூரமாய் போய் நின்றார்.


ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்

மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ

கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா

வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.


இதனை அருகில் நின்ற நான்கு இளைஞர்கள்,‘அய்யா, மூங்கில் காட்டுக்குள் எதனைக்கண்டு இப்படி அச்சத்துடன் ஓடி நின்கிறீர்கள்?’’

என்று கேட்டனர்.‘’ நான் ஒரு மூங்கிலை வெட்டியபோது அதற்குள்ளிருந்து ஆட்கொல்லி பூதம் வந்தது.அதனைக் கண்டுதான் பயந்து ஓடிவந்தேன்” என்று தங்கமிருந்த இடத்தினைக் காட்டினார். ’சரியான பைத்தியக்காரன் போலும் இவன். தங்கத்தின் மதிப்பறியாதவன்” என்று எண்ணி‘’ஆமாம் ! இது ஆட்கொல்லிதான்.உன்னையும் கொன்றுவிடும். உடனே இங்கிருந்து நில்லாதுஓடி விடவும்” என்றனர். சிவ வாக்கியர் வீடு திரும்பிவிட்டார்.


சிவ வாக்கியர் சென்றதைப் பார்த்த அந்த நான்கு இளைஞர்களும் தங்கத்தை மூட்டைக் கட்டினாரகள். அதற்குள் இருட்டி விட்டது. இரவு வந்த பின் தங்கத்தை ஊருக்குள் கொண்டு போகலாம் என்று திட்டமிட்டனர். இருவர் பக்கத்து ஊருக்குப்போய் பசிக்கு ஏதாவது உணவு வாங்கி வருவதென்றும், மற்ற இருவர் தங்கத்துக்கு காவல் இருப்பதென முடிவாகியது. பக்கத்து ஊருக்கு சென்றவர்கள் மொத்த தங்கத்தை தாங்கள் இருவரும் பிரித்துக்கொள்ள எண்ணினர்.வாங்கி வரும் உணவில் விஷத்தைக் கலந்து காட்டிலிருக்கும் இருவரையும் கொன்றுவிட தீர்மானித்தனர். காட்டில் காவலிருப்பவர்கள் அந்த தங்கத்தை தாங்கள் இருவரும் பங்கிட்டுக்கொள்ள எண்ணம் கொண்டு, அவர்கள் வந்தவுடன் மறைந்திருந்து தாக்கிக் கொல்ல முடிவு செய்தனர்.எண்ணியபடி உணவு வாங்கி வந்த நண்பர்களை மறைந்திருந்து தாக்கிக் கொன்றனர். பிறகு அவர்கள் கொண்டு வந்த விஷம் கலந்த உணவினை உண்டு பிணமானார்கள்.காலையில் மூங்கில் வெட்டவந்த சிவ வாக்கியர் அந்த நான்கு பிணங்களையும் பார்த்து அந்தஆட்கொல்லி நான்கு பேரையும் கொன்றுவிட்டதே என்று வருந்தியபடி அங்கிருந்து அகன்றார்.


முற்றிலும் ஆசை அறுத்த ஞானியாக சிவ வாக்கியர் இருந்தார். சித்தர்கள் ஞான நிலை எய்தும்போது இந்த பிரபஞ்ச இரகசியம் அனைத்தும் திரை அகன்று விடுகிறது.அகக்கண் விழிக்கும்போது புறக்கண்ணுக்குப் புலனாகதது எல்லாம் புலப்படுகிறது. பொய்யான ஆச்சாரங்களையும்,போலியான அனுஷ்டங்களை சிவ வாக்கியர் வெறுத்தார். கடவுள் உன்னுள் இருக்கிறார் வெளியில் தேடி திரியாதே என்று பாடியுள்ளார்.


ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்

தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்

காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை

நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

சிவவாக்கியர் ஒருநாள் கீரையைப் பிடுங்கும் போது ஆகாய வீதிவழியே கொங்கணவச் சித்தர் ககன மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தார். சிவ வாக்கியரின் தவ ஒளியால் கவரப்பட்ட கொங்கணவ சித்தர் அந்தக்காட்டில் கீழே இறங்க இருவரும் மகிழ்ந்து உரையாடினார். சிவ வாக்கியரின் மகா சித்துக்களை நன்கறிந்த கொங்கணவச் சித்தர்.அதன்பின் அங்கே இறங்கி சிவ வாக்கியரிடம் உரையாடிச் செல்வார். சிவ வாக்கியர் தினம் மூங்கில் பிளப்பதும், முறம், கூடைகள் செய்வதும் பார்த்து ஆச்சரிப்பட்டார் கொங்கண சித்தர்.அவருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினார். ஒருநாள் சிவ வாக்கியர் குடிசையில் இல்லாத நேரத்தில் கொங்கணவ சித்தர் சென்றார். குடிசையில் சிவ வாக்கியர் மனைவி மட்டுமே இருந்தார்.


’’வீட்டில் ஏதாவது உபயோகமில்லா இரும்புத்துண்டு இருந்தால் கொண்டு வா அம்மா’’ என்று கேட்டதும் சிவ வாக்கியாரின் மனைவி வீட்டில் கிடந்த சில இரும்புத் துண்டுகளைக் கொண்டுவந்து கொடுத்தார். கொங்கணவர் அந்த இரும்புத்துண்டுகளை எல்லாம் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.சிவ வாக்கியர் வீடு திரும்பி வந்தபோது அவரது மனைவி கொங்கணவர் வந்து போனதை கூறியபடிதங்கக் கட்டிகளைக் கொண்டு வந்து முன்னால் கொட்டினாள். சிவ வாக்கியர் அதனைக் கண்டு திடுக்கிட்டு,கொங்கணவச் சித்தர் தன்னை சோதிக்கிறாரா அல்லது அன்பின் மேலீட்டால் இப்படி செய்தாரா என்று திகைத்தார். ”” இந்த ஆட்கொல்லியை ஒரு நிமிடம் கூட இந்த குடிசைக்குள் வைத்திருக்காதே, ஏதாவது பாழும் கிணற்றில் போட்டுவிடு. ஆட்கொல்லி…, ஆட்கொல்லி”” என்றார் சிவ வாக்கியர்.அதைக் கேட்ட அவருடைய மனைவி மறுபேச்சு எதுவும் பேசாது தங்கத்தைக் கொண்டு போய் கிணற்றில் போட்டாள்.


பின்னொரு நாளில் நடுப்பகலில் சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பாறையின் மீது சிறுநீர் கழித்து விட்டு தன்னுடைய மனைவி அழைத்து, ‘’இந்த பாறையின் மீது தண்ணீரைக் கொட்டு” என்றார். அவளும் தண்ணீரை அந்த பாறையின் மீது ஊற்றிய போது குப்பென்று புகை கிளம்பி மறைந்தது. அந்த பாறை தங்கமாக மாறியது. சிவ வாக்கியர் சித்தரின் சிறுநீர் இரசவாத தனமை பெற்றதால் அந்த மாயம் நிகழ்ந்தது. சிவ வாக்கியர் தன் மனைவியைப் பார்த்து ”கொங்கணவர் கொடுத்தது சிறிய தங்கத்துண்டு. இதோ வேண்டிய அளவு தங்கத்தை வெட்டி எடுத்துக்கொள் “ என்றார்.


“சுவாமி, உங்களுக்கு நான் மனைவியாகிய பின்பு தங்கம் எனக்கு எப்படி உயர்ந்த பொருளாகும்.என்னைப் பொருத்தமட்டில் இது ஆட்கொல்லிதான். எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.


ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சிவ வாக்கியரை சுற்றி புதிய சீடர்கள் நாளும் தேடி வந்த வண்ணமிருந்தனர்.தேடி வந்த சீடர்கள் எல்லாம ஞானம் பெறுவதை விட தங்கம் தேடியதே அதிகம். திரும்ப திரும்ப இரசவாத வித்தை அறியவே விரும்பினர். இதனால் அவர் மிகவும் மனம் வருந்தினார்.“உங்களுடைய ஆவல் எல்லாம் எனக்கு புரிகிறது. இரசவாத வேதியல் இரகசியங்களைப் பற்றிஅறியவே விரும்புகிறீர்கள். கடும் தவத்தாலும் யோகத்தாலும்தான் இது சித்திக்கும்” என்றார்.”அப்படி என்றால் குருநாதரே! எங்களுக்கு அந்த இரசவாதம் கைக்கூடும் சாத்தியம் உண்டா?


“தங்கத்தின் மீது பற்றற்றவருக்கே தங்கத்தை உருவாக்கும் இரசவாதம் சித்தியாகும்.சித்தர்கள் பலருமே இரசவாத வித்தையில் தேர்ந்தவர்கள்தான். தாங்கள் அறிந்த அனுபவங்களை எல்லாம் இந்த பிரபஞ்சத்துக்குக் காணிக்கையாக அளித்துள்ளார்கள். யோக நெறியில் நின்று இரசவாதம் அறிந்தவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.தவவலிமையும், யோக நெறியும் உடைய சித்தர்களுக்குதான் இது சித்திக்கும்”.

”பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தினால் என்ன பயன் சுவாமி” என்று மனம் நொந்த போன நிலையில்ஒரு சீடன் கேட்டான்.”தங்களது கடும் தவத்தாலும், யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தும் பலவீன மாந்தருக்காகவே அர்ப்பணம் செய்துள்ளனர். சித்தரைப் போல மேன்மை நிலை அடைய நீ விரும்புகிறாயா? அல்லது பலவீனமான மாந்தர் நிலையே போதும் என்று கூறுகிறாயா?” “இரசவாதம் அறியும் சித்தர் போன்ற உயர்நிலை அடைவதற்கே தங்களிடம் சீடராக வந்துள்ளேன்” என்றான்.


“அப்படியா! நல்லது. ரஸம் என்பது சிவபெருமானின் விந்து. உன்னிடம் விந்து இருக்கும் போது சிவன் விந்துவை ஏன் தேடுகிறாய்? உனக்குள்ளே இருக்கும் விந்தை மணியாக்கிக் கொண்டால் அற்புதமான ஆற்றல்களைப் பெறலாம். யோக சாஸ்திரத்தின் இறுதி நிலை சாமதி. ஒருமுறை இந்த பிரம்மானந்தத்தைச்சுகித்து விட்டால் போதும். அவன் இந்தப் பிரம்மானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்தவனுக்கு லெளகீக சுகங்கள் துச்சமாகிவிடும். இந்தச் சாதகன் விரும்பும் போது அவனுக்கு முக்தி எனும் ஆன்ம விடுதலை கிடைக்கும். சரி இப்போது நீ எதனை விரும்புகிறாய்? என்று சிவ வாக்கியர் கேட்டபோது சீடனின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.


“எனக்கு ரஸமும் வேண்டாம்; தங்கமும் வேண்டாம்,எனக்குச் சமாதி நிலை சித்திக்க அருள் புரியுங்கள்”


“ மூச்சைக் கட்ட முதலில் பழகு,“ நடு கால் நிறுத்து.“’’சகஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ்த் தாமரையில் மூச்சை நிறுத்தி “ அதுவே யோகம்’’, -என்று பயிலும் சாதனையினை சிவ வாக்கியரிடம் கற்றபோது சீடர்களுக்கு மனமொடுங்கியது.


“மனம் பழுத்தால் பிறவி தங்கம் –

மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் –

தங்கத்தை எண்ணிப் பங்கம் போகாதே

தங்க இடம் பாரப்பா …..”


(நன்றி, உதவி நூற்குறிப்பு:- இறவா வரம் பெற்றவர்,-சித்தர் பூமி,- பதினெட்டு சித்தர்கள் பாடல்கள்)


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum