தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பழமொழிகள்

Go down

பழமொழிகள்  Empty பழமொழிகள்

Post by இறையன் Sat Dec 17, 2011 10:59 pmஅடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமுதமும்.
அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
அந்திப் மழை அழுதாலும் விடாது
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை, பொருளில்லாக்கு இவ்வுலகமில்லை.ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்
ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அதிர்ஷ்ட்டம் இருக்கிறது கழுதை மேய்க்க.
ஆசை வெட்கம் அறியாது.
ஆடமாட்டாவள் கூடம் கோணல் என்றாளாம்.
ஆடிக்காற்றிலே அம்மி பறக்க இலவம் பஞ்சுக்கு எங்கே கதி?
ஆடி காலும் பாடிய நாவும் சும்மா இரா.
ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
ஆடு கொழுக்கிறதெல்லாம் இடையனுக்கு இலாபம்.
ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
ஆபத்துக்குப் பாவமில்லை.
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துக்கு சவுக்கு.
ஆராய்ந்து பாராதான் காரியம் துயரம் தரும்
ஆடியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச் சக்கரை.
ஆள இல்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
ஆறு போவது போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இஞ்சி இலாபம் மஞ்சலில்
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இருந்த கால் மூதேவி, நடந்த கால் சீதேவி.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
இளங்கன்று பயமறியாது.
இளமையிற் சோம்பல் முதுமையில் இன்மை
இல்லற மல்லது நல்லற மன்று.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இறுகினால் களி, இளகினால் கூழ்
இறைத்த கிணறு ஊறும், ஈயப் பெருகும் செல்வம்.
இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடே.
இன்று இருப்பார் நாளை இல்லார்.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக் குலை அறுப்பான்ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்
ஈட்டி எட்டும் மட்டும், பணம் பாதாளம் மட்டு.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.


உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை
உடையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை
உட்கார்ந்து அல்லவா படுக்க வேண்டும்.
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத நிலத்தில் நெல்லு.
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய் போகும்.
உப்பிட்ட வரை உள்ளவும் நினை
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
உடலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்?
உள்ளது போகாது இல்லது வராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய.
உள்ளூரிலே விலைப்படாத மாடா அயலூரிலே விலைப்படும்?
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க் கலைவானேன்?உடைகள்

1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,

பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது

2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்

பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்

3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை

பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு

பொருள்:-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது


உறவுகள் பற்றியது,


1) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்,

பொருள்:-தாயார் ஒரு வேலை செய்வதை விட அவர் மகன்/மகள்
இரண்டு மடங்கு செய்வார்கள்,


2) கிட்டிப் போனால் முட்டிப்பகை

பொருள்:-உறவினர்களுக்கு மிகஅருகாமையில அடிக்கடி போனால்
சீக்கிரம் பகைமை வந்து விடுமென்பதைக் குறிக்கும்


3 ) தூரத்துப்பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

பொருள்:-தள்ளி இருந்து உதவி செய்வது உத்தமம்,
எப்போ வருவார்கள் என நம்மை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்


4) கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை

பொருள்:-நாம் ஒருவருக்குக் கடனாகப் பணம் கொடுத்து விட்டு அதனைத் திருப்பித் தரக் கேட்டால் உடனே நம்மிடம் வாங்கியவர் செய்த உதவியை மறந்து விட்டுப் பகைமையே நினைத்து, உறவினை முறித்துக் கொள்வர்


5) மருமகளுக்குப் போட்ட சோறும் மாங்காய்க்குப் போட்ட உப்பும் வீண் போகாது

பொருள்:-மாங்காய் புளிப்புச்சுவை உடையது அதனால் உப்புப் போட்டால் நீண்ட நாட்கள்
இருக்கும்,அதேபோல் மருமகளும் மாமியார் போட்ட சோற்றுக்குச் செக்காக உழைப்பாள்
(அந்தக்கால மருமகள்கள் இந்தக் காலம் reverse!


சிங்கை கிருஷ்ணன்


ஏ.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்கு தலைச்சுமை.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
ஏழை என்றால் எவருக்கும் எளிது.
ஏழை பேச்சு அம்பலம் ஏறாது.
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.


ஐயமான காரியத்தைச் செய்தால் ஆகாது.
ஐயர் வருகிற வரையில் அமாவாசை நிற்குமா?
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
ஒதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒருநாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று.


ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடுகிறவனை கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓர் ஊருக்கு ஒன்பது வழி.

ஒள
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
கா.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காடு காத்தவன் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காடு வா என்கிறது வீடு போ என்கிறது.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காணி ஆசை கோடி கேடு.
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரியம் தெரிதோ வீரியம் பெரிதோ?
காலையில் கல்லு மாலைப் புல்லு
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.
கி
கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
கீ
கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.


இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பழமொழிகள்  Empty Re: பழமொழிகள்

Post by இறையன் Sat Dec 17, 2011 11:02 pm

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?*


//*அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்*

//*அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.*

//*அற்ப ஆசை கோடி தவற்றைக் கெடுக்கும்.*

//*அன்பு இருந்தால் ஆகாத்தும் ஆகும்.*

இவற்றின் பொருள் குறித்து விளக்கம் அளிப்பீர்களா?
நன்றி!
பாபு கோதண்டராமன்>
> *அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது*
>
> *அலை எப்போது ஓயும், தலை எப்போது முழுகுகிறது.*
>
> *அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.*
>
> *அவனின்றி ஓர் அணுவும் அசையாது.*
>
> *அழகிருந்தென்ன, அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.*
>
> *அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்.*
>
> * *
>
> *அளக்கிற நாழி அகவிலை அறியுமா?*
>
> *அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.*
>
> *அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்*
>
> *அறத்தால் வருவதே இன்பம்.*
>
> *அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்*
>
> *அறிய அறிய கெடுவார் உண்டா?*
>
> **
>
> *அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.*
>
> *அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.*
>
> *அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.*
>
> *அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்.*
>
> *அற்ப ஆசை கோடி தவற்றைக் கெடுக்கும்.*
>
> *
> *
>
> *அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரி குடைபிடிப்பான்.*
>
> *அற்றது பற்றெனில் உற்றது வீடு.*
>
> *அன்பான நண்பனை ஆபத்தில் அறி.*
>
> *அன்பு இருந்தால் ஆகாத்தும் ஆகும்.*
>
> *அன்னமிட்ட வீட்டில் கன்னம் இடலாமா?*
கு
குங்குமம் சுமந்த கழுதை மண, அறியுமா?
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
குடிக்கிறது கூழ், கொப்பளிப்பது பன்னீர்.
குடி வைத்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா?
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையாலே குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்ற குருவில்லை.
குணம் இல்லாத வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரிதன்று.
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவால்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்புற வீழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குரங்கின் கையில் பூ மாலை.
குரங்குப் புத்தி சொல்லி தூக்கணாங்குருவி கண்டு இழந்தது
குரு இல்லா வித்தை பாழ்
குரு மொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
குரைக்கிற நாய் வேட்டையாடுமா?
குரைக்கிற நாய் கடிக்குமா? [இப்போது குரைக்கிற நாயெல்லம் கடிக்கிறது]
குணம் குப்பையிலே, பணம் பந்தையிலே
குல் வித்தை கற்றது பாதி, கல்லாமற் பாதி.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


கொ
கொடிக்குக் காய் கனமா?
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
கோ
கோட் சொல்பவனைக் கொடுந் தேள் என நினை.
கோத்திரமறிந்து பெண்ணைக்க் கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபமுள்ள இடத்தில் குணமும் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லிக் குடுபிடுவானேன்?

ச.
சண்டிக் குதிரைக்கு நொண்டிச் சாரதி.
சத்தியம் வெல்லும், அசத்தியமே கொல்லும்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைத்து ஆவது என்ன?
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சவதியில் [சேற்றில்] கல் எறிந்தால் முகத்தில். தெறிக்கும்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum