தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா

Go down

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா Empty இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா

Post by இறையன் Sun Dec 30, 2012 2:37 pm

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன்
எழுப்புகிற கேள்வி - "ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?"

இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான்
அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று ஓர் அலறல்.

ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப்பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்று என்று கண்ணீர்விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்...

சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.

பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க...

அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் -

முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

அதற்குப் பறவைகள்,

எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான்

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை
என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான்.

இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது.

சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹும்

சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.

பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே

உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே.
என்று நினைவுபடுத்த...

முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஓடிவிடு
என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.

முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது.

வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது -

புரிந்ததா... இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர...

அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி
ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..

சிறுவன் பெருமூச்சு விடுகிறான்.

"இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை"

என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது என்று இந்து மத ரிஷிகள்
சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

பரோடாவில் என்னைச் சந்தித்து கதறிய பெண்ணொருத்தியின் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம்..

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum