தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:50 pm

மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.



உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. --- குன்றிமணி

விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம்.

ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம். --- சுழற்காற்று.

குரு தேவை என்று வேண்டுபவன் செய்ய வேண்டிய முதல் வேலை குருவைத் தேடுவதல்ல, தனிமையில் இருப்பது. --- குரு.

எந்த இடத்தில உன் மனம் அமைதியாகிறதோ அதுவே க்ஷேத்திரம். எந்த இடத்தில உனக்கு நிம்மதி கிடைக்கிறதோ அதுவே கோவில். --- உத்தமன்.

உங்களைப் பற்றி சிந்திக்க சிந்திக்க உங்கள் பலமும் பலவீனமும் தெரியும். எப்போது இவை தெரிகிறதோ அப்போது உங்கள் பலத்தை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். உங்கள் உடல்பலம், மனோபலம், புத்திபலம் உயர உங்கள் வாழ்க்கை நிலையும் உயரும். --- கதை கதையாம் காரணமாம்.

"கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு, கோபத்தை தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும் நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை" -கடற் பாலம்..

ஞானம் எல்லோருக்கும் கிடைக்கும் எளிதான விஷயமில்லை. உள்ளே தன்னைப் பற்றி இடைவிடாது கவனித்துக்கொண்டிருப்பவருக்கே இது கைகூடும். --- உறவில் கலந்து உணர்வில் நனைந்து.

அமைதியே வலிமை. அன்பே அமைதியின் வெளிப்பாடு. அன்பின் வெளிப்பாடு அடக்கம். --- என்னுயிர்த் தோழி.

வாழ்க்கை என்கிற கரிய உயரமான வலுவுமிக்க யானையோடு வரும் யானைப்பாகனுக்கு குரு என்று பெயர். --- உறவில் கலந்து உணர்வில் நனைந்து.

எண்ணம் தூய்மையாக இருந்தால் செயலும் தூய்மையாக இருக்கும். தூய்மையான எண்ணத்தில் இறைவனுடைய இருப்பு நிச்சயமாக இருக்கும். --- மனக்கோவில்.

குருவினுடைய் அன்பு ஒரு தாயின் அன்பைக்காட்டிலும் பல மடங்கு பெரியது. ---தோழன்.

குருவினுடைய கருணை தெய்வத்தின் கருணையைக்காட்டிலும் பல ஆயிரம் மடங்கு வேகமாகப் பொங்கக் கூடியது. ---தோழன்.

மனிதன் என்பவன் உடம்பல்ல. அதுவொரு மகத்தான சக்தி. ஆத்ம சொரூபம். --- தோழன்.

சுவாசிப்பது சரியாக இருந்தால் எண்ணமும் சரியாக இருக்கும். சுவாசமும் எண்ணமும் ஒன்றுகொன்று பிண்ணிப் பிணைந்தவை. -- சிறுகதைகளும் கட்டுரைகளும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:50 pm

ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம்.வளர்ச்சிக்கு குரு காரணம்.- குரு வழி.

குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு. - குருவழி.

எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக்கனிவான அக்கறை ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சினையை அணுகவும் தெரிந்து விடுகிறது.- சூரியனோடு சில நாட்கள்.



பிறப்பும் இறப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றன. இவை எப்போது எங்கே நிகழும் என்று தெரியாத வேதனைதான் மனிதனை மதம் என்கிற ஊன்றுகோல் தேடவைக்கிறது. கடவுள் என்கிற கானல் நீர் நோக்கி போக வைக்கிறது.
-சுக ஜீவனம்

கோபத்தாலோ, வெறுப்பினாலோ, அன்பினாலோ காதலினாலோ நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.-பட்டாபிஷேகம்.

காமத்தால் உந்தப்பட்ட போது எல்லா அபத்தங்களும் ஞாயப்படுதப்படும். -பட்டாபிஷேகம்

காமம் மறைமுகமாய் பல்வேறு பொய்களோடு கலந்து வருவதால்தான், அதைக்கண்டு சாதுக்களும் ஞானிகளும் மிரண்டு ஒதுங்குகிறார்கள்.-பட்டாபிஷேகம்.

காமம் என்கிற உணர்வு புலி போல் மனிதர்கள் மீது பாய்ந்து அவர்களை உண்ண ஆரம்பித்து விடுகிறது.-பட்டாபிஷேகம்.

ஒருவர் பேசவும் எழுதவும் செய்கிறவரை அவருக்கு ஞானம் வரவில்லை என்பதே பொருள்.- பாலகுமாரன் பதில்கள்,பட்டாபிஷேகம்

அதிகாரம் கொடி கட்டிப் பறக்குமிடத்தில் அன்பான கெஞ்சல்கள் எடுபடாது. அங்கே அன்பு காட்டுதல் அவமரியாதை போல் ஆகிவிடுகிறது. -ஒன்றானவன்,சிறுகதை.

இறைவனுடைய எல்லா செயல்களும் விளையாட்டுத்தான்.விளையாட்டாய் உணர்த்தப்பட்ட வேதம்தான்.புரிந்துகொள்ளத்தான் பொறுமை வேண்டும்.-ஒன்றானவன்,சிறுகதை.

எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.-திருப்பூந்துருத்தி.

சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லா சலனங்களும் தவறுதான். சலனமற்றிருத்தலே உத்தமம்.- திருபூந்துருத்தி.

மரணத்தைக் கண்டு பயமில்லாது இருப்பவனே சந்தோஷமான மனிதன்.-திருப்பூந்துருத்தி.

கடவுளைத் தெரிந்தவருக்கு தன்னைத் தெரியும். தன்னைத் தெரிந்தவருக்குக் கடவுள் புரியும்.-திருப்பூந்துருத்தி.

"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
-பச்சை வயல் மனது
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:50 pm

மரணம் நிச்சயம். இதை மறுதலிக்க ரணம் அதிகமாகும்.
-குரு.

கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம். பணிவு அமைதியில் மட்டுமே வரும். அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்.
-குரு.

நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் ஆசைப்படும் விஷயங்களெல்லாம் சோதனை முயற்சியாகத்தான் இருக்கின்றன.
-குரு.



மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை.மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
-குரு.

எப்போது ஒரு விஷயத்தை மற்றவருக்காக நம்முள் திணித்துக் கொள்கிறோமோ அது நல்லதா கெட்டதா என்கிற பார்வையெல்லாம் இனி வரவே வராது.
-குரு.

தனிமையில் இருக்கத் தெரிவது மிகப்பெரிய வரம்.
-குரு.

குரு என்பவர் ஒவ்வொரு சீடனுக்கும் வழங்குகின்ற முதல் விஷயம் அன்புதான்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது அன்புதான்.
-குரு.

செயலில் கர்வம் ஏற்படுகிறபோதுதான், இதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், தடுமாற்றமும் கோபமும் ஏற்படுகின்றன.
-குரு.

காமம் என்பது மிகப்பெரிய தபஸ்விகளையும் கவிழ்த்துவிடும் வல்லமையுடையது.
-பட்டாபிஷேகம்.

நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.
-உத்தமன்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:51 pm

மலர்ச்சியாக உலகத்தில் தெரிகின்ற பெண்ணுக்கு அடிவேர் ஆண்தான்.அந்த அடிவேர் உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் பசுமையான செடி மிக முக்கியம்.மலர்கள் மிகமுக்கியம். இதுதான் வாழ்க்கை.
-உத்தமன்

ஆத்திரப்படுபவன் திறமை இருந்தாலும் அசிங்கப்படுவான்.
-உத்தமன்.



உண்மையான வீரன் என்பவன் தன்னை ஜெயித்தவன்.தன்னை ஜெயித்தவனை எவனும் ஜெயிக்க முடியாது. பரசுராமரிடம் ஜமதக்னி முனிவர்.
-உத்தமன்.

காமம் என்ற குதிரையைக் கடிவாளமிட்டு நெறிப்படுத்தியவன் வாழ்க்கையில் மலர்ந்திருப்பான்.
-காதல் ரேகை.

கட்டுப்பாடற்ற காமத்தையே உலகம் காதல் என்கிறது. காதல் என்பது விட்டுக்கொடுத்தல். உடனடியாக. எந்த எதிர்பார்ப்புமின்றி. இது வேத வாக்கியம்.
-காதல் ரேகை.

உண்மையான நேசம் மதுவைவிட போதையானது.
-காதல் ரேகை.

அருள் என்பது அன்பால் உண்டாவது. அன்பு உண்டாக கடவுள் அருள் வேண்டும். அருளும் அன்பும் உடையது காதல்.
-காதல் ரேகை.

இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்கு மனம் என்பது இல்லை.
-கருணை மழை.

உன்னை அறியாதவரை உன் உணர்வுகளையும் அறிய முடியாது.
-திருப்பூந்துருத்தி.

தியாகம் தொண்டு என்கிற வார்த்தைகள் அகந்தை விசயம். இந்த அகந்தை இன்னும் அகந்தையை வளர்க்கும். தொண்டு செய்ய செய்ய கர்வம் வரும். தியாகம் செய்ய செய்ய திமிர் வரும். இவையிரண்டும் தவறான விஷயங்கள் இல்லை. செயல்பாட்டில் கவனம் வேண்டும். தியாகம் செய்கிறோம் என்று யோசிப்பு வந்துவிட்ட நேரம் அது விஷமாகிறது. தொண்டு செய்கிறேன் என்று ஒருவன் உணர்ந்து நடக்கும் பொது எதிர்பார்ப்பு வந்து விடுகிறது.
-சிநேகமுள்ள சிங்கம்

இயல்பாய் இருத்தலே ஞானம்.அதுவே அமைதி.
-குரு.

நீ எங்கோ திருடினால் உன் பொருள் எங்கோ திருட்டுப் போகிறது. இது அமைதியான ஒரு விதி. கண்களுக்குப் புலப்படாத ஒரு சட்டம்.
-குரு.

உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். ஞானத்தின் அடித்தளம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும்.
-குரு.

சரணாகதி என்பது குருவைப் பூரணமாக நேசித்தல்.குருவைத் தன் உணர்வுகளோடும் கலக்கவிடுதல். சிலசமயம் உள்ளுக்குள் குருவாகவே மாறுதல்.
-குரு.

தன்னை ஆழ்ந்து பார்கிறவருக்கே, தன்னுள் யார் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி உள்ளவருக்கே குருவின் விலக்கலால் ஞானம் சித்திக்கும்.
-குரு.

நல்ல குரு அதிகம் பேசுவதில்லை. பிரசங்கிகளால், நல்ல குருவாக மாற முடிவதில்லை.
-குரு.

சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும்.
-குரு.

உணவு ருசி உடம்பை அடுத்த அகங்காரம். தன்னை உடம்பாகக் கொள்ளும்போது, உணவாட்டம் வெறியாய் போய்விடுகிறது.
-குரு.

"Life Is Relationship" பிறரோடு தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை.பிறரோடு உள்ள தொடர்புகளில் ஏற்படும் சிக்கல்தான் மொழி, இன, மத சண்டைகளுக்கெல்லாம் காரணம்.
-குரு.

மனம் பற்றி யோசிக்கிறவனுக்குத்தான் ஆன்மா புலப்படும். தன் மனம் தெரியாதவனுக்கு பிறர் மனம், உணர்வு எதுவும் தெரியாது.
-குரு.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:51 pm

நம்புவதால் ஏற்படுகிற பயமின்மையும், பயமின்மையால் ஏற்படும் சந்தோஷமும், சந்தோஷத்தால் ஏற்படும் உறுதியும் மனிதனுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் கம்பிரத்தைக் கொடுத்துவிடுகின்றன. அப்பட்டமான தோல்வியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்க வைத்துவிடுகின்றன.
-திருபூந்துருத்தி.

தோல்வி என்பது பெரிய விஷயமே அல்ல.தோல்வி வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி, அது வந்துவிட்டபோது ஏற்படும் மனத்துவளலே முக்கியமான விஷயம்.



நம்பிக்கை உள்ளவருக்கு மனத்துவளல் ஏற்படாது.துவளல் இல்லாத வாழ்க்கை சந்தோஷமானது.
-திருப்பூந்துருத்தி.

பலமுள்ளவர்கள் பலகீனர்களைப் பார்த்துக் கத்துவதே கோபம். பலம் உள்ளவன் பலம் குறைந்து பலகீனர்கள் அதிகரிக்கும்போது அந்தக் கோபதுக்குரிய மரியாதை கிடைத்துவிடுகிறது.
-திருப்பூந்துருத்தி.

ஆசை என்கின்ற மது அருந்தி அல்லாட்டம் போடும் மனிதர்களிடையில் ஆசையற்று இருப்பவன் தெளிவுள்ளவன்.
-திருப்பூந்துருத்தி.

எவனொருவன் தன்னுள் தன்னைக் காண்கிறானோ அவனுக்குப் பழம் நினைவுகள் வரும். எவனொருவனுக்குப் பழம் நினைவுகள் வருகின்றனவோ அவன் இன்னமும் உள்ளே போகமுடியும்.
-திருப்பூந்துருத்தி.

உபதேசிப்பது எளிது. உபதேசத்தைப் புரிந்துகொள்வதுதான் கடினம்.புரிந்து கொள்ளுதலையும் ஜென்ம ஜென்மமாய்ப் பழகவேண்டும். இப்போது ஆரம்பித்தால்தான் பின்வரும் காலங்களிலாவது பிறப்பு அறும்.
-திருப்பூந்துருத்தி.

ஆசையக் கிள்ளி எரிய வியாதியில்லை. காமத்தைக் கிள்ளி எறிய பிறவி இல்லை. இரண்டும் ஒன்றே.
-திருப்பூந்துருத்தி.

வயது என்பது அனுபவம்.அனுபவம் என்பது நடந்த நிகழ்வுகளிலிருந்து புத்திக்கு வரும் தெளிவு. தெளிவின் வெளிப்பாடு அமைதி.
-இனிது இனிது காதல் இனிது.
-----------------------------------------------
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:53 pm

வாழ்க்கை என்பது எளிதே அல்ல. அது நமது கற்பனைகளுக்கும். கணக்குகளுக்கும் அடங்காது. மிக நுண்ணிய சிக்கல்கள் கொண்டது. மேலோட்டமாய் நுனிப்புல் மேய்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாய் சரித்திரமில்லை. கற்பனையில் வாழ்ந்து தான் கற்ப்பனை செய்து கொண்டதே உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிற வாலிபர்களும். யுவதிகளும் அவஸ்தைப்படாமல் மீண்டதில்லை.
-மனசே மனசே கதவைத்திற.



இந்த உலகம் தந்திரமுள்ள உலகம். இதில் நல்லது கெட்டது, சரி தவறு என்று எதுவுமில்லை. தந்திரத்தோடு இருப்பது சில சமயம் வெற்றியிலும் கூட முடயும். ஒரு விஷயத்தின் முடிவு தந்திரத்தில் இல்லை. அது இறைவன் கையில் இருக்கிறது. நீ எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே இரு. எல்லோரும் மற்றவர் விருப்பத்தில் இருக்கிறார்கள். நீ என்ன படிக்க வேண்டும் என்னவாக மாறவேண்டும் என்று உன்னை கேட்டுக்கொள்.
-மனசே மனசே கதவைத்திற.

மனிதனுக்கு ஞாபக சக்தி இருக்கிறது என்பது பொய். முழுமையாய் ஒரு விஷயத்தை மனிதன் ஞாபகப்படுத்திக் கொள்வதே இல்லை. ஒரு விஷயத்தினால் ஏற்பட்ட தகிப்பை உணர்வுகளை நெஞ்சில் பதித்துக் கொள்வதே இல்லை. மறதி அதிகமிருக்கிற ஒரு பிராணியாகத்தான் மனிதன் உலா வருகிறான். தன் பாதிப்பை, துக்கத்தை எளிதில் மறந்துவிட்டு மறுபடியும் அதே விஷயத்தில் ஈடுபடுகிறான்.
-மனசே மனசே கதவைத்திற.

நம்ம மனசுதான் கோட்டை. நம்ம புத்திதான் காவல்.நம்ம தெளிவுதான் வெளிச்சம். நல்லா இருக்கணும்னு உண்மையா ஆசைப்படறவன் தப்பு பண்ணமாட்டான்.
-ராஜாமணி வத்சலாவிடம்,வில்வ மரம்.

கற்பனையில் இறங்குவது சுகம்தான். தானே தன் தத்துவங்களை அடுக்கிக் கொண்டு போவது இயல்புதான். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு இளைஞனும் யுவதியும் என்ன செய்ய வேண்டும்?
சட்டென்று ஒரு கட்டத்தில் தன் கற்பனைகளை கணக்குகளை நிறுத்தி தான் யோசிப்பது சரியா என்று கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நீ சரியாகச் சிந்திக்கிராய இல்லை உன் விருப்பத்திற்கேற்ப உன் யோசனைகளை வளர்க்கிறாயா. இதை எதிர்பதமாக யோசித்துபார். இந்த பெண்ணை என்னவென்று தெரியாமல் எப்படிப்பட்டவள் என்று தெரியாமல் இவள் வீட்டு பின்புலம் தெரியாமல் நாம் மனம் பரி கொடுத்தால் என்ன ஆவது. எனக்கு இப்போது யார் முக்கியம் இந்த பெண்ணா அல்லது என்னை இதுவரை போற்றி வளர்த்த வீடா என்று யோசிக்க வேண்டும்.
எவன் இவ்வாறு சிந்திப்பை திசை மாற்றுகிறானோ, எதிர்பக்கமும் போய் யோசிக்கிறானோ முழுமையாய் சிந்திக்கிறானோ, அவனுக்கு வெற்றி வாய்ப்பு அருகில் இருக்கிறது.
-மனசே மனசே கதவைத்திற.

தற்கொலை கோழைத்தனம். வாழ்தல் விவேகம். காதல் பொருட்டு தன்னை மாய்த்துக்கொள்ள நினைப்பவன் சுயநலம். எனக்கு எத்தனை துக்கம் பார் என்று காட்டுகிற தான் தோன்றி அலட்டல். பழி வாங்கும் ஊமைக் குசும்பு. மரணமும் அவனுக்கு விடுதலை தராது. காதலில் ஜெயிப்பது என்ன என்று புரிகிறதா? யோசியுங்கள் புர்யும். வயசு விவேகம் தரும். தரவேண்டும்.
-இனிது இனிது காதல் இனிது.
--------------------------
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:54 pm

எல்லா ஊர்களிலும் எல்லா மொழிகளிலும் வசவுகள் உடலுறவு சம்மந்தமாகவும், புணர்ச்சி சம்மந்தமாகவும் இருக்கின்றன. போகத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுபவையாகவே இருக்கின்றன. உடலுறவு மனித ஆங்காரத்தின் விஷயமாகப் போயிற்று. மன ஆங்காரத்தை வெளிப்படுத்த உடல் ஆங்காரத்தின் விஷயம் முக்கியமாயிற்று.

ஒருவனை கடன்காரன் என்றோ, கொலைகாரன் என்றோ திருடன் என்றோ பொய்யன் என்றோ சொல்லுவதால் ஏற்ப்படும் கோபத்தை விட, அவனை இயலாதவன் என்று சுட்டிக்காட்டுகிறபோது கோபம் ரௌத்திரமாக மாறுகிறது. புணர்ச்சி முக்கியமாக இருந்தது. அதே சமயத்தில் இழிவாகவும் கருதப்பட்டது. முக்கிய மனதை இழிவுபடுத்த மூர்க்கம் பிறந்தது. ஜனங்கள் புணர்ச்சி கலந்த வசவைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களைப் போனார்கள். -கனவுகள் விற்பவன் 2.



ஒரு வினையின் தொடர்ச்சி இன்னொரு வினையை ஏற்படுத்தாமல் முடிவதில்லை.வினை தொடராமல் இருக்க இறைவழிபாடு மட்டுமே உதவி செய்யும். -கோச்செங்கண்ணனார்,கதை கதையாம் காரணமாம்.

எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது இறை நினைப்பாக இருப்பதே மிக உயர்வு. எதிரியென்று யாரும் இல்லை என்று இருப்பதே மனித வாழ்க்கையின் சிறப்பு. இந்த மனவிசாரம்தான் இடையறாத சந்தோஷம்.கடவுளைத் தெரிந்ததன் அடையாளம். இறை தெரிந்து இறையாகி நிற்கும் மாண்பு. -அம்பரீஷன், கதை கதையாம் காரணமாம்.

உலகத்தில் எல்லா முயற்சியும் யுத்தம்தான். வெற்றியில் விருப்பமெனில் வலி தாங்கு.புழுங்கிச்சாவதை விட போரிட்டு மடிவது உத்தமம்.வெறும் கனவுப் படுக்கையில் நோயுற்றுச் சாவதைவிட யுத்த நினைவுகளான அம்புப்படுக்கையில் பீஷ்மநென மடிவது மேல். இவ்விதி புரிந்தவருக்கு போர் எளிது. வாழ்க்கையும் ருசிக்கும். -இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

வைராக்கியம் என்பது கூரிய கத்தி.உறுதியான ஆயுதம். ஒரு போர்வீரன் அதை இடுப்பில் வைத்திருக்க வேண்டும்.போர்வீரனுக்கு தன் கத்தியின் மீதுள்ள மரியாதையும், பெண்ணுக்கு தன் கற்பின் மீதுள்ள மரியாதையும், வணிகனுக்கு தன் செல்வத்தின் மீதுள்ள மரியாதையும் போல நல்லோருக்கு வைராக்கியத்தின் மீது மரியாதை வரவேண்டும். இதை இழக்க முடியாது என்று இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். -அஜாமிளன், கதை கதையாம் காரணமாம்.

நாம் கர்வப்படாதது மட்டுமல்லாமல் கர்விகளின் தொடர்பும் இல்லாமல் இருப்பது உத்தமம். -கடலோரக்குருவிகள்.

நல்ல சகவாசத்தால் நல்ல குணங்கள் உறுதிபடுகின்றன. நல்ல குணங்கள் உறுதிபட்டால் ஆசையில் இருந்து விலகி வர முடிகிறது. ஆசைகள் விலக மனது மிகுந்த அமைதி உடையதாகிறது.மிகுந்த அமைதியே வீடுபேறு. வீடுபேறு என்கிற உயர்வான எண்ணமே எல்லா மனிதனுடைய ஆசை.அடிமனதில் இருக்கும் ஆசை. -கடலோரக்குருவிகள்.

தன் வெற்றிக்கு தானே காரணம் என்று நினைப்பவன் கர்வி. தன்னுள் பொங்கிப் பூத்திருப்பது கடவுள் என்கிற மனோசக்தி என்று நினைப்பவன் ஞானி. -கடலோரக்குருவிகள்.

நன்கு ஒருமைய்ப்பட்டவருக்குக் கோபமோ, ஆத்திரமோ, பொறாமையோ இருக்காது. மாறாய் அம்மாதிரி உணர்ச்சிகள் எழும்போது அவற்றை மெல்லப் பிரித்து ஒதுக்கிவிட்டு, எதனால் இவை ஏற்படுகின்றன என்று ஆராயும் மனப்பக்குவமும் வந்து, அது ஏற்படாதிருக்க என்ன செய்யவேண்டும் என்ற யோசனையும் ஏற்பட்டு, அதைச் செயல்படுத்தக்கூடிய திறமையும் அவர்களுக்கு வந்துவிடும். -விரத மகிமை,எனது ஆன்மீக அனுபவங்கள்.

அன்பு செய்வதால் மலர்ந்த பெண்ணுக்கு அன்பு காட்ட மட்டுமே தெரியும்.அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி.கலப்பே இல்லாத சக்தி.உலகத்தின் மனித ஜனத்தொகை தொடர இந்த அன்பே காரணம். அன்பு அழியும்போது, இந்த மனிதனும் அழிவான். -என்னுயிர்த்தோழி.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:54 pm

எதனால் மனிதருக்கு வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடிவதில்லை. வெற்றிக்கோ முன்னேற்றத்திற்கோ சந்தர்ப்பங்கள் எவருக்கும் ஏற்படாமல் இராது. அவை ஏற்படும்போது இது வெற்றிக்கான விஷயம் என்று தெரிவதே இல்லை.நல்ல வாய்ப்பு என்று ஒரு வேலையின் ஆரம்பம் காட்டுவதே இல்லை. -கடலோரக்குருவிகள்.



வாழ்க்கை என்பது பிறர் பேசுவதைக் கேட்டு,நடப்பதைப் பார்த்து தன் அனுபவத்தை ஒப்பிட்டு தானாய் புரிந்து கொள்வது. எல்லாம் தெரிந்து இங்கு பிறந்தவன் எவருமில்லை. அப்படிப் பிறப்பவனை கடவுள் என்று உலகம் கொண்டாடுகின்றது. அவன் யுகத்துக்கு யுகம் அவதரிப்பான் என்று உறுதி கூறுகிறது. மற்றபடி, மனிதர்கள் அறிவுரை கேட்டு அதை அனுபவத்தில் தோய்த்து மேற் கொண்டு நடப்பவர்கள். அறிவுரையை கேட்கமாட்டேன் என்று சொல்பவன் நிர்மூடன்.சொல்லமாட்டேன் என்பவன் அகம்பாவி. இங்கே நீ கற்றதனைத்தும் பிறர் எச்சம்.பிறர் வாழ்ந்து அனுபவித்ததின் மிச்சம். -கடலோரக்குருவிகள்.

சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரமமில்லை.ஆனால் சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சொல்லிக் கொடுப்பவன் மீது முழு கவனமாக கற்றுக்கொள்பவன் இருக்கவேண்டியிருக்கிறது.அப்படி ஒரு கவனம் வர ஆர்வம் தேவையாய் இருக்கிறது.இந்த ஆர்வத்திற்கு அப்பால், சொல்லிக் கொடுப்பவனுக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை, கற்றுக்கொள்பவனுக்கு தேவைப்படுகிறது.கற்றுக்கொள்ள ஒரு நல்ல சுழ்நிலை தேவையாய் இருக்கிறது.கற்றுக்கொள்ள நல்ல நேரம் தேவைப்படுகிறது. -கடலோரக்குருவிகள்.

உண்மையை உண்மையாகவே சொல்ல முடியாது.உண்மையை உவமையாகத்தான் சொல்ல முடியும். ஏனெனில் சத்தியத்தை விளக்குவது கடினமானது. -அகல்விளக்கு.

ஞானம் மிக மிக முக்கியம்.நல்ல குடும்ப வாழ்க்கைக்கு நிதானம்தான் ஆணிவேர்.நிதானம் இல்லாத தன்மையால்தான் பலபேர் குடும்ப வாழ்க்கை சீரழிகின்றன.ஒருவர் மீது ஒருவருக்கு காழ்ப்பு ஏற்படுகின்றது. காழ்ப்புதான் மிகப்பெரிய மனவேதனை. தெளிவுதான் மிகப்பெரிய சந்தோசம். -அகல்விளக்கு.

உதவி செய்தல்தான் உறவின் துவக்கம்.அங்கே உண்மையிருப்பின் பலப்படும். -இனிது இனிது காதல் இனிது.

வெறுப்பில் பெண்ணுக்கு மனவலிவு மிகும்.பொங்கும் காதலில் லேசாகும். வேதனை வந்தால் ஆணுக்குத் தொய்வு வரும். சோதனைஎனில் தாங்கும் வெறி எழும். பிரிவில் பெண் பின்னமாவாள். ஆண் ஒன்றாவன். ஒருமுகப்படுவான். -இனிது இனிது காதல் இனிது.

திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படி தொடர்பாயிற்று.சடங்கு புனிதமா. சந்தித்தது புனிதமா.சம்மதம் புனிதமா. யோசித்துப் பார்க்கையில் சந்தித்து, சம்மதமாகி, சம்மதத்தை சடங்காக்கியதே திருமணம்.சந்தித்தும், சடங்கும் செயல்கள். சம்மதம் என்பது எண்ணம்., ஓர் உணர்வு. சம்மதம் எதற்கு, எதன் பொருட்டு. வாழ்வதற்கு.திருமணச் சம்மதம் என்பது ஆணும் பெண்ணும் ஒரு கூரைக்குக் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. எந்த உணர்வுகளை. காதல்,காமம், தாபம்,சோகம், மகிழ்வு, நல்லது, கேட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது. -இனிது இனிது காதல் இனிது.

ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள மூன்று வருட காலம் மிக முக்கியமான காலம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த வயதில் தான் தீர்மானிக்க படுகிறது. அந்த வயதில் நேசத்தோடும், நெறியோடும் வளர்ந்த குழந்தைக்கள் வாழ்நாளில் மிக உயர்ந்த நிலைக்கு எளிதில் வருவார்கள். உலக விசயங்களில் தெளிவாகவும், திடமாகவும் இருப்பார்கள். அங்கே தகப்பனாலும், தாயாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வறுமையால் வாடிய குழந்தைகள், அன்புக்கு ஏங்கிய குழந்தைகள் ஜெய்ப்பது மிக கடினம். -தங்க கை.

என் முயற்சி ஒரு அளவிற்கே என்னை உயர்த்தும். கடவுள் என்கிற விஷயத்தின் கீழ் யார் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களது முயற்சி மட்டுமல்லாமல், அவர்களது முயற்சி தொடர்ந்து வளர அந்த கடவுள் சக்தி காப்பாற்றும். -கௌசிகர் ராமனிடம், பட்டாபிஷேகம்.

சிலருக்கு சில நேரம் மிக நல்ல வழிகாட்டி கிடைத்துவிடும்.எந்த முயற்சியும் செய்யாமல் எந்த தேடலும் நடத்தாமல் தானாய் எதிரே உதவி செய்ய ஆள் கிடைத்துவிடும்.அப்படி கிடைத்த உதவியை இழிவாக்காமல் தக்க வைத்துக்கொள்ள சாமர்த்தியம் வேண்டும். உதவியா இது என்று சந்தேகம் கொள்ளாமல் உவப்பாய் உறவாடவேண்டும். -கடலோரக்குருவிகள்.

உலகின் மிகச்சிறந்த மொழி மௌனம்தான்.அந்த மொழி பேசுபவர்களுக்குத்தான் அந்த மொழியின் இலக்கணங்கள் தெரிந்தவர்குத்தான் அந்த மொழியின் வளமை மிக்கவர்களுக்குத்தான் கடவுளோடு பேசமுடியும்.கடவுளோடு பேச மௌனம் ஒரு மொழி. அதுவொரு வழி. -தோழன்.

எல்லாப் பிரிவும் அபத்தமானது. அற்பத்தனமானது. இங்குள்ள மனிதர்களின் கோபமும், குரோதமும் வேர் இல்லாதவை. வெறுமே மேல்புத்தியில் தளும்பி நிற்பவை. அண்ட பேரண்டத்தின் பிரமாண்டத்தை உணரும் பொழுது, இங்குள்ள மனிதர்கள் புழுக்களாக, புழுக்களின் புழுக்களாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கு கர்வம் இருப்பதும், காதல் இருப்பதும், காமம் இருப்பதும் சிரிப்பாய் இருக்கின்றன. அந்த நிலை தெரிய வந்தால் எந்தப்பிரிவும் நிலையற்றது என்று தெரியும். கற்பிதமானது என்று புரியும். அப்படிப்புரிய மறுபடி மறுபடி பிறக்கவேண்டும். -கர்ணனின் கதை.

காதல் என்பது ஆண் பெண் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. ஒருவரிடமிருந்து சகலரிடமும் பரவ வேண்டிய உன்னத உணர்வு. அதில் ஆணுக்குப் பெண் ஓர் ஆரம்பம். ஈர்ப்பதில் ஈடுபட்டு மலர, ஈர்க்காத இடத்திலும் மலரின் வாசம் பரவும். சகலமும் நேசிக்கத் தகுந்தவையே என்பது புரியும். -இனிது இனிது காதல் இனிது - 2.

மனதில் அமைதி இல்லாத ஆணுக்குள் அன்பு இருக்காது.அகந்தை மட்டுமே இருக்கும்.அன்பு செய்யப்படாத, செய்யாத பெண்ணுக்குள்ளும் அவஸ்தைகள் வந்து விடும். தனிமை அவளைப் பித்தாககும். பயம் தரும். அது அடிப்படை விதி. இயற்கை விதி. -இனிது இனிது காதல் இனிது -2.

நமது துக்கத்தை பிறரிடம் சொல்வதில் அர்த்தம் இல்லை. பாதி பேருக்கு அதில் சந்தோஷம். மீதி பேருக்கு அக்கறை இல்லை. சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி. சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம். சூழ்நிலை தாக்கும்போதே யோசிப்பது யுத்தம். யார் கோப பட்டாலும் அதை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது சந்தோசம் தான். கோபம் மிருகத்தனமானது. ஒரு மனிதனிலிருந்து கோபம் வெளிப்படுகிறபோது, அவனிடமிருந்து பீறிடும் மிருகத்தனமான பார்வையும், சொல்லும், செயலும் வியப்புக்குரியன. மனிதர்களின் கோபத்தை விலகி பார்க்க வியப்பு தரும். -திருப்பூந்துருத்தி.

நல்ல நண்பன் மனைவியைப் போல.யாரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் நெருக்கமானவர்கள். உலகில் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவேண்டிய முதல் இடம் மனைவி,அடுத்த இடம் நண்பன்.நண்பனும் மனைவியும் மெல்லிய கோட்டில்தான் பிரிவுபடுகிறார்கள். -கண்ணன் குசேலரிடம்- குசேலர்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:55 pm

அகம்பாவம் தான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை காரணம். அகம்பாவம் தான் மிகப் பெரிய அறியாமை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஒட்டாமல் செய்கிறது. புரிந்தவர் மீது பொறாமை வருகிறது. புரியாத போது ஆத்திரம் வருகிறது. மனிதனை, மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம். உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.

ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.



மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.

"உலகி்லேயே அதிசயமான விஷயம் எது?" என தர்மதேவன் கேட்க, பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் சொன்னார். "தினம் தினம் மரணத்தை பற்றி நேரே கேட்டும், சில சமயம் நெருக்கமாய் அனுபவித்தும் இந்த மனிதன் தான் மட்டும் நெடுநாள் உயிரோடு இருக்கப் போவதாய் எப்போதும் எண்ணும் நிலை அதிசயம்".

கோழைக்கும் , அடிமை மனசுகாரனுக்கும் ,பொய்யனுக்கும் ,புத்தி மாறாட்டம் உள்ளவனுக்கும் இந்த உலகில் எந்த சுகமும் இல்லை. -மனு நீதி.

எந்த சமூகம் ஒரு பெண்ணை கொடுமை படுத்துகிறதோ, கண்ணீர் விடச் செய்கிறதோ அந்த சமூகம் நிர்மூலமாகும்.

மண்மேல பாசம் வைச்சவன் , மண்ணை விட்டுப் போகக்கூடாது .போறவன் , பாசம் வைக்கப்படாது. மரண பயத்தை புறக்கனித்தவனுக்குத்தான் நாத்திகம் ஞானமார்க்கம். மரண பயத்தை ஏற்றுகொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரணபயத்தோடே வாழ்கிறான்.

மனைவியை நேசிக்கத் தெரியாதவன் வாழ்க்கையை நேசிக்க தெரியதவனகிறான். புருஷனை புரிந்து கொள்ளாதவள் எதையும் புரிந்து கொள்ளமுடியாதவள் ஆகிறாள்.

"தருமபுத்திரா, மனிதரில் வெற்றி பெற்றவர் யார்?" "எல்லா நேரத்திலும் நிதானமாக இருப்பவனே மனிதரில் வெற்றி பெற்றவன்".

நவீனம் என்ற வார்த்தையை நம்மில் பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். "எல்லா விதையும் மண்ணில்தான் முளைக்க வேண்டும். நீரும், வெளிச்சமும் மிக அவசியம். காற்றில் விதை முளைக்காது. இருட்டில் பூ மலராது நவீனம் என்பது இயற்கையிலிருந்து மாறுவது அல்ல."

("இறைவனை அடைய ஏதாவது உபதேசிக்கக் கூடாதா?"-வாதவூரார் குரு(இறைவன்):"ஆதி குருவான தக்ஷிணாமூர்த்தி, எல்லா குருவிற்கும் குருவான தக்ஷிணாமூர்த்தி மௌனமே உபதேசமாகத் தருகையில், மற்றவர் உபதேசிப்பத்தையே ஒரு வழியாகக் கொண்டால்,அந்த மூடத் தனத்தை என்ன சொல்வது?" "மௌனம்தான் உபதேசம். ஏனெனில் இது சொல்லி புரிகின்ற விஷயமே அல்ல. இது உணர்வது ." "இது பரிமாறிக்கொள்ளும் விஷயமே அல்ல. இது தானாய் தனக்குள் தோன்றுவது" "உன்னுடைய இறைவனை நீதான் தேடிக்காண வேண்டும். வேறு எவரும் கைப்பிடித்து அழைத்துப் போக மாட்டார்." "அது முயற்சியில் கிடைப்பதல்ல. உன் எல்லா முயற்சியும் கைவிட்டுவிட உனக்குள் இறையருள் வந்து தங்கும்.")

"உலகத்துல எல்லா மனுஷாளுக்கும் உள்ள வேதனை இதான்... தன்னையும் நம்பறதில்லை... தனக்கு மேல இருக்கற சக்தியையும் நம்பறதில்லை.." கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும். -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்-2.

பொறாமையினுடைய வெளிப்பாடு என்ன? இன்னா சொல். பொறாமை வந்த உடனே வார்த்தைகள் துவேஷமுள்ளவயாய் மாறிவிடும்.கெட்ட வார்த்தைகள் நிறைந்து வெளிப்படும். எந்த பொறாமையும் இனிமையாய் வெளிப்பட்டதில்லை. -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்-2.

பொறாமைப்பட்ட மனம் புலம்பலாகத்தான் இருக்கும். தூக்கமற்றுத் தவிக்கும். புலம்பலும் தூக்கமற்ற நிலையும் வேலை செய்வதிலுள்ள மும்முரத்தை குறைக்கும். கையிலிருக்கிற வேலை அல்லது உங்கள் தொழில் இதில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும். பொறாமைப்படுதலே தொழிலாக மாறிவிடும். -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்-2.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:55 pm

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.- பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில்-2.

உழைக்கத் தெரிந்தவர்கள் மற்றவரை ஒருபோதும் புறந்தள்ளமாட்டார்கள். பொறாமைப்படமாட்டார்கள். பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில்-2.



வன்முறைக்கு முன் ஒரு அமைதி வேண்டியிருக்கிறது . அந்த அமைதியிலிருந்து தான் ஒரு வன்முறை தோன்றுகிறது. -கிருஷ்ண அர்ஜுன்.

"சும்மா இரு " என்பது உடம்பையோ,புத்தியையோ சொன்ன விஷயமில்லை.சும்மா இருக்கச் சொன்னது மனசை.வெற்றியிலும் தோல்வியிலும் மனசை விலகி இருக்கச் சொன்ன வார்த்தையிது. -அப்பா.

வலிமையானவர்களும் மெளனமாக இருப்பதற்கு பழக வேண்டும்.இல்லையெனில், வாழ்க்கை துயரம் சூழ்ந்ததாக ஆகிவிடும். -கதை கதையாம் காரணமாம்.

நண்பர்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதபோது அல்லது நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது மிக மோசமான எதிரியாக மாறிவிடுகிறார்கள். -வெற்றி வேண்டுமெனில்-2.

தினம் தினம் செய்யும் காரியங்களில் நேர்த்தி வேண்டுமெனில் தியானம் செய்தல் அவசியம். இப்போது சொன்னது மிகப்பெரிய வாக்கியம். அனுபவித்தாலொழிய இதன் கனம் புரியாது. -வெற்றி வேண்டுமெனில்-2.

மூச்சை சீராக்கினால் மனம் அமைதியாகிறது. மூச்சை சீராக்குவதற்கு ஹடயோகம் உதவி செய்கிறது. அமைதியான மனதை உள்பக்கம் திருப்பினால் எதனால் மனம், புத்தி, உடம்பு இயங்குகிறது என்று உற்றுக் கவனித்தால் வேறு ஒரு விஷயம் புலப்படும். -வெற்றி வேண்டுமெனில்-2.

வலிமையான ஞாபக சக்தி, தெளிவான சிந்தனை, அமைதியான போக்கு இவை தியானத்தால் ஏற்படும். தியானம் செய்ய செய்ய பொறாமை அறவே போய்விடும் . மனதில் இருந்து பொறாமை போனால் போதும். அதைவிட உற்சாகமான ஒரு வாழ்க்கை எதுவுமில்லை. இது மிகப்பெரிய வரப்ரசாதம். அமிர்த குடம். -வெற்றி வேண்டுமெனில்-2.

ஒரு ஞானியின் அருகே அமர்ந்தால் பதட்டம் முற்றிலும் நீங்குவதை உணர முடியும்.மனம் உள்ளுக்குள் பார்க்கத் தொடங்கும். மெல்ல அடங்கத் தொடங்கும். -வெற்றி வேண்டுமெனில்-2.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:56 pm

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -வெற்றி வேண்டுமெனில்-2.

மனிதனின் நாகரீகம் மொழி. மொழியின் நாகரீகம் கவிதை. கவிதை வளம் மிக்க தமிழ் மொழியை புத்தகப்படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம்.காலம் காலமாய் வளர்ந்து வந்த ஒரு நாகரீகத்தைக் கண்மூடித்தனமாய் சிதைத்து வருகிறோம். -வெற்றி வேண்டுமெனில் -2.



நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை, ஒரு புத்தகமாக, ஒரு வாக்கியமாக, ஒரு கவிதையாக நம்மிடையே பரிமாறிக் கொள்கிறபோது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன.. -வெற்றி வேண்டுமெனில்-2.

படிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு பேச்சுத் தெளிவு குறைவாகத்தான் இருக்கும். கூறியது கூறலும், கூச்சலாகப் பேசுதலும் அதிகமாக ஏற்படுகின்றன. -வெற்றி வேண்டுமெனில்-2.

புத்தகம் படிப்போர் மொழி அறிவு உடையவராகவும், அந்த மொழி அறிவால் சிந்தனைத் திறன் மிக்கவராகவும், சிந்தித்ததை வெளியே சொல்லத் தெரிந்த வலிவு உடையவராகவும் இருக்கிறார். இதனால் அவருக்குப் பேச்சு வலிமை மேம்படுத்துகிறது. -வெற்றி வேண்டுமெனில்-2.

எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி. -வெற்றி வேண்டுமெனில்-2.

கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது. கொடுமை இருப்பதால்தான் உதவிகள் உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது. -வெற்றி வேண்டுமெனில் 2.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:56 pm

ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.

நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை. -கற்பூர வசந்தம்.



அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான் உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும். மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும். -கற்பூர வசந்தம்.

தன்னோடு பேசப் பேச விசாரம் விரிவடைகிறது. இது நெஞ்சோடு புலத்தல். விசாரம் இருக்கிற மனிதனுக்கே விசாரணை வரும்.விவரணை உள்ளவனே இறைத்தன்மை உள்ளவன். -கற்பூர வசந்தம்.

நிகழ்வில் மட்டும் ஒட்டியவருக்கு இறந்தகாலம் எதிர்காலம் இல்லை. இன்று பூஜை செய்தால் நாளை பெரும் செல்வம் எதிர்பார்கிறவருக்குத் தவறா சரியா என்கிற பயம் உண்டு. பூஜையே பெரும் செல்வம் என்று அமர்ந்தவருக்குச் செய்யும் நினைவு செய்கிறோம் என்கிற நினைவு கூட வராது. -கற்பூர வசந்தம்.

தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்.தனக்குள் தான் நிலையாகாதவன்தான் பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான். -கற்பூர வசந்தம்.

தன்னைப் பற்றிய முடிச்சைப் பரிசுத்தமுள்ள உள்ளங்களால் மட்டுமே அவிழ்க்க முடியும். -கற்பூர வசந்தம்.

நெருப்பு சிவம். குங்கிலியப் பொடி மக்கள். எப்போதெல்லாம் குங்கிலியப் பொடி நெருப்பில் படுகிறதோ உடனே புகையாகிறது. உருமாறுகிறது. எல்லா இடத்திற்கும் பரவுகிறது. பொடியாய் இருக்கும் வரை மூட்டையிலோ பெட்டியிலோ இருக்கும் வஸ்து, கடவுள் தன்மை பட்டவுடன் புகையாய் பரவுகிறது.புகையை எதில் பிடித்து வைப்பது? யார் என்னுடையது என்று இறுக்கி வைத்துக்கொள்வது? -கற்பூர வசந்தம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:57 pm

எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும். -கற்பூர வசந்தம்.

பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். -கற்பூர வசந்தம்.

கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு. -கற்பூர வசந்தம்.

தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது. -கற்பூர வசந்தம்.



யோகம் பயில்வதும், ஆகம அனுபூதியும் தராத முக்தியை ஆறு நாளின் அன்பு தரும். தன்னுள் முழுமையான அன்பு ஒன்றே தரும். -கற்பூர வசந்தம்.

ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான். -கற்பூர வசந்தம்.

கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது. -கற்பூர வசந்தம்.

வழிபடல் என்றால் ஒரு பாதையாய் நடத்தல். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தலே வழிபடல். அப்போது மனசு விசாலமடைகிறது. மனசு விசாலமானால் போதும், அதன் விளைவு சொல்ல முடியாது. அது இல்லாமல் நீ என்ன பாய்ச்சல் பாய்ந்தாலும் வளர முடியாது. துவங்கின இடத்தில் நீ நிற்பாய். -கற்பூர வசந்தம்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:57 pm

மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.

மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.

அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும். அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும், அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.



நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்.உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள். -என்னுயிர்த்தோழி.

எதிரே எவரோ ஒருவர் உட்கார்ந்து சொல்லித் தருவதும் அப்படி சொல்லித்தருபவர் எதிரே உட்கார்ந்து கற்றுக்கொள்வதும் எளிதான விஷயங்கள். ஆனால் வாழ்க்கை கடினமானது. கற்றுக்கொண்டதெல்லாம் மறந்துபோகின்ற சந்தர்ப்பங்களை வாழ்க்கை அடிக்கடி ஏற்படுத்தித் தரும். -கடலோரக்குருவிகள்.

அன்போடு அன்புமயமாக இருக்கிற விதத்தில் ஆவேசமில்லை.ஆவேசமில்லாதபோது துக்கமுமில்லை. -கடலோரக்குருவிகள்.

நன்மை இது என்று தெரிந்திருந்தும், மிகச் சரியாய் தீதான விஷயத்தை சுவீகரித்து கொள்ளும்.மனசு மிகத் தெளிவாய் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மிக மக்குத்தனமாய் ஒரு முடிவு எடுக்கும். கற்றுக் கொள்வதற்கு ஒரு திறமை வருவது போல, கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் அப்பியாசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டியிருக்கிறது. அதாவது எந்த நேரமும் கற்றுக் கொண்ட பாடத்தோடேயே இருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் பூதாகரமான பிரச்சினைகள் முளைக்கிறபோது எதிர்கொள்ள முடிகிறது. -கடலோரக்குருவிகள்.

அக்கறை என்பது வீட்டில் மனைவியிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் சிறப்பு. அதுதான் நியாயம். பிறகுதான் குழந்தைகள் மீது படரவேண்டும்.குழந்தைகள் மீது படர்ந்த அக்கறையைப் போல உலகத்தார் மீதும் படரவேண்டும்.இவர்கள் அனைவரும் என்குழந்தைகள் என்கிற எண்ணம் வரவேண்டும். -சங்கரர் ராணியிடம் - கூடு.

அனவரதமும் என்னையே எவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ, அவன் தினசரி யோகஷேமத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் என்பது வார்த்தைகளாகவே இருக்கும். இதை உள்வாங்கி யோசிக்க யோசிக்க உண்மை புரியும்.வார்த்தைகள் அர்த்தமாவதற்கு அனுபவம் தேவை. அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை கிரகித்துக்கொள்ளும் நடுநிலைமையான புத்தி தேவை. -கடலோரக்குருவிகள்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:58 pm

மரணம் பயம்.தனிமை தரும் பயம்.தனிமை என்பது மரண பயம்.
-இனிது இனிது காதல் இனிது - 1.

திருமணம் என்பது நம்பிக்கை.பரஸ்பர நம்பிக்கை.அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல்,ஆரவாரமற்ற அன்பு முக்கியம்.நேசம் உண்மையெனில் ஆடாது, அதிராது, ஆவேசப்படாது.
-இனிது இனிது காதல் இனிது - 1.

மனிதன் உடலால் ஆனவன்.மனசால் வாழ்பவன்.இவை இரண்டும் பிரிக்க முடியாதவை.புறக்கணிக்க முடியாதவை. புறக்கணிக்க பிரிக்க விபரீதம் நிகழும்.
-இனிது இனிது காதல் இனிது - 1.


ஏன் மிருகம் என்று மனிதனின் சில உணர்வுகளுக்கு பெயர் தரப்படுகிறது. மிருகமாகுதல் மட்டம் என்கிற விதமாய் பேசப்படுகிறது. ஆசைப்பட்ட பொருளை அடைவதுதான் மிருகத்தின் நோக்கமே ஒழிய, செய்முறைகள் பற்றி அதற்க்கு யோசனையே இல்லை. எதிர் கருத்து அறயும் சிந்தனை இல்லை.

தன்மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு பிறர் மீதும் நம்பிக்கை இல்லை. நீ காதலிக்கப்பட வேண்டுமெனில் காதலிக்க வேண்டும். காதல் என்ன என்பது அறிய வேண்டும். காதல் என்பது மதித்தல், விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம், எந்த எதிர்பார்ப்புமின்றி தான் விரும்பிய வண்ணமே தன் சந்தொஷத்திர்கென்றே பிறர் வளைவர்கள் என்று எதிர்பார்ப்பதில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏமாற்றம் சினம் தரும், சினம் வஞ்சனை உருவாக்கும், வஞ்சனை பொய் சொல்லும், வன்முறை காட்டும், வன்முறை வன்முறையால் சந்திக்கப்படும். பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்.

தன்னை அகௌவ்ரவப்படுத்திக்கொள்வது காதலல்ல. தன்னைத்தானே ஹிம்சித்துக்கொள்வது நேசமல்ல.
-இனிது இனிது காதல் இனிது -2.

தொடல் ஒரு பாஷை. தொடல் ஒரு மொழி.மிக அற்புதமான மொழி. தொடவும் தொடலைப் புரிந்து கொள்ளவும் சற்று நிதானம் தேவை. நிதானம் இல்லாமல் தொடும்போதுதான் பிரச்சினை வந்துவிடுகிறது.
-பாலகுமாரன் பதில்கள், ராஜ கோபுரம்.

கர்வமற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.அஹங்காரப்படுவதால் மற்றவிஷயங்களைப் பார்ப்பது,மற்ற மனிதர்களை அறிவது குறை பாடாய்ப் போய்விடும்.அறியவேண்டியதை அறியாமல் தவறாய்ப் புரிந்து கொள்ள நேரிடும்.
-கடலோரக் குருவிகள்.

இன்னொரு விஷயம் முக்கியம்,கர்வமற்று இருத்தலை போலியாக செய்துவிடுதல் ஆகாது. இதைவிட கர்வப்பட்டு கிடப்பது உத்தமம்.
-கடலோரக் குருவிகள்.

தன் முயற்சிகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற, தன் நெஞ்சின் அடி ஆழத்தில் இருக்கின்ற, ஒரு மகோன்னத சக்தியை உணர்ந்து நிற்றலே கடவுள் நம்பிக்கை.
-கடலோரக் குருவிகள்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:58 pm

ஒரு சக்தி வாய்ந்த குரு, உடம்புக்கப்பால் நம்மை அழைத்துப் போய்விடுகிறார். அவருடைய மனோசக்தியினால், நம் மனோசக்தியை அதிகரிக்கிறார். உலுக்கி எழ வைக்கிறார்.
-குரு.

அன்பைச் சொல்ல வேண்டாம. செயலாக்க முயற்சிக்க வேண்டாம். அன்பாகவே மாறிவிடுதல் அன்பை எளிதில் உணர்த்திவிடும்.இன்னும் திடமாய் உணர்த்திவிடும்.
-குரு.

வாழ்வு விட்டுக்கொடல். விட்டுக்கொடல் புரிதலின் முதல் செயல்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


வியப்பாக வாழ்கையைப் பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

இடைவிடாமல் கற்றுகொள்பவருக்குத்தான் வாழ்க்கை வியப்பாக இருக்கும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

உலகத்தில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி தங்களுக்குத் தெரியவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களால் தான் கற்றுக்கொள்ள முடியும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

சொல்லிக்கொடுப்பவனை விட கற்றுக்கொள்பவனுக்குதான் ஞானம் வேண்டும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

ஆசை நிற்க கற்றல் நிற்கும்.கற்றல் நிற்பதே அமைதியான நிலை.இந்த அமைதியே உத்தமம். இதுவே நிறைவு.ஆனால் கற்றல் எப்போது நிற்கும்? கற்றபிறகே. ஆசை எப்போது அடங்கும்? அனுபவித்த பிறகே.

யார் சுயமான சிந்தனையோடு எந்நேரமும் விழிப்போடு இருக்கிறார்களோ அவர்களே தலைமையேற்க முடியும். இந்த உணர்வு இருந்தால் தான் நாம் கடவுளை அறிதலோ, கருணையோடு இருத்தலோ, நல்லது செய்தலோ,செய்யாதிருத்தலோ முடியும். இதுவே நம் முதல் குணமாக இருத்தல் வேண்டும்.
-காசும் பிறப்பும் - 2.

மனிதர் மனிதரை நம்புவதும், மனிதர் கடவுளை நம்புவதும் நம்புவதும் ஒன்றே. எதை நம்புகிறோம் என்பது முக்கியமில்லை.நம்பிக்கை என்பதே இங்கு முக்கியம்.
-திருபூந்துருத்தி.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by இறையன் Sat Feb 11, 2012 8:58 pm

தவம் என்பது ஒருமுகப்பட்ட சிந்தனை.--கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.

உங்கள் மனதையும், உங்கள் புத்தியையும் தனித்தனியே உற்றுப்பார்க்க கற்றுக்கொண்டால் இதனுடைய வலிமைகளும் அட்டகாசங்களும் உண்மைகளும் உங்களுக்குப் புரிய வரும். -ப்ரகலாதன்,கதை கதையாம் காரணமாம்.


ஒருமைப்படுதலும் தூக்கமும் அருகருகே உள்ள விஷயங்கள் - கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.

கர்வமுள்ளவர்களால் சாதரண மக்களைக்கூட புரிந்து கொள்ள இயலாது.-கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்

இளமை நேரத்தில் 'முதுமை என்றால் என்ன' என்று யோசிப்பது எல்லோருக்கும் கிடைக்காது. கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.-யயாதி,கதை கதையாம் காரணமாம்

துன்பம் நேரும்போது இறைநினைப்பை பலபபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். இதற்க்கு பக்திதான் எளியவழி.பக்தி என்பது பாசாங்கற்ற எளிமை.-அம்பரீஷன், கதை கதையாம் காரணமாம்.

மனம் முழுவதும் இறையில் ஒன்றிக்கிடப்பவனுடைய தினசரி வாழ்க்கை இறைவனால் நடத்தப்படும்.-அம்பரீஷன்,கதை கதையாம் காரணமாம்.

தன்னை அறிந்தவன் மரணத்தைக் கண்டு அஞ்சுவதே இல்லை.அவனால் மரணத்தை தள்ளி வைக்கவும் கூடும். - சக்கரவாஹம்.

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.--என் கண்மணித்தாமரை.

காமம் அமிர்தம். அமிர்தம் என்பது ஒருவகை மருந்து. அளவு மிஞ்சக்கூடாது. அடிக்கடி உண்ணக்கூடாது.- என் கண்மணித்தாமரை.

மனம் ஒரு மோசமான மிருகம். அது மயங்கி இருக்கும்போதே ஒரு கடிவாளம் போட்டு விட வேண்டும்.-என் கண்மணித்தாமரை

இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீது தான் - என் கண்மணித்தாமரை.

தியானத்திற்கு அடிப்படை பக்தி, பக்திக்கு அடிப்படை பணிவு. பணிவுக்கு ஆதாரம் சத்சங்கம். நன்மக்கள் கூட்டம் - என் கண்மணித்தாமரை

கடவுள் அறியாதவன்தான் கடவுளை இழிவு படுத்துவான். தன் மதத்தை அறியாதவன்தான் பிறர் மதத்தை கேலி செய்வான்.- என் கண்மணித்தாமரை.

குரு என்பதும் கடவுள் என்பதும் வெவ்வேறல்ல.கடவுளின் நேரடியான ரூபம் குரு.-குரு வழி.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி Empty Re: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum