தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம்

Go down

சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம் Empty சூழ் நிலைகளின் மீது எண்ணங்களின் தாக்கம்

Post by இறையன் Tue Apr 24, 2012 9:22 pm

ஒரு மனிதனின் மனதினை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம்.

அத்தோட்டத்தை செப்பனிட்டு பயிரிடவும் முடியும். அல்லது தரிசாக விட்டு வைக்கவும் இயலும்.

ஆனால் பயிரிடப்படுகிறதோ இல்லையோ, தரிசு நிலத்தில் ஏதாவது முளைக்கும்!

உழுது நல்ல விதைகளை ஊன்றாவிட்டாலும், பயனற்ற களைகளின் விதைகள் தாமாகவே விழுந்து, எண்ணற்ற களைச் செடிகள் மண்டிக் கிடக்கும்!

ஒரு நல்ல தோட்டக்காரன் எப்படி தன் தோட்டத்தை உழுது பலன் தரும் மலர்களையும் அவன் விரும்பும் கனிகளையும் விளைவித்து, களைகள் முளைக்காமல் காக்கின்றானோ, அதைப் போலவே ஒவ்வொரு மனிதனும் தன் மனம் என்னும் தோட்டத்தில் வந்து விழும் பயனற்ற, தவறான எண்ணங்களை களையெடுத்து, பயனுடைய, சரியான, தூய்மையான எண்ணங்களை விதைத்து அவை தரும் பலன்களைச் சுவைக்க வேண்டும்!

எண்ணங்களை களையெடுத்து, எண்ணங்களை விதைக்கும் இப்பயிற்சியை ஒருவன் இடைவிடாமல் செய்து வரும்போதுதான் தன் வாழ்க்கையை அமைக்கும் படைப்பாளி, தன் குணத்தின் சிறந்த தோட்டக்காரன் தானே என அவன் உணர்ந்து கொள்வான்!

அப்போதுதான் தன் குண நலன்கள், சூழ்னிலைகள், தன் உன்னத வாழ்வு ஆகியவற்றை தன் மனமென்னும் கருவியால் தானே செம்மைப் படுத்த முடியும் என்ற எண்ணங்களின் விதியை மிகத் துல்லியமாக உணர்கிறான்!

எண்ணமும் குணமும் ஒன்றே. குணம் என்பது, சுற்றுப்புறம், சூழ் நிலை, வாய்ப்புகள் இவற்றின் மூலம் அறியப்படுவதால், எண்ணங்களே வெளிப்புற நிலையை நிர்ணயிக்கும் உள் நிலையாக விளங்குகிறது என அறியலாம்.

ஒரு சில சந்தர்ப சூழ் நிலைகள் மட்டுமே அவனுடைய உண்மையான முழுமையான குணத்தை பிரதிபலிக்காது என்று வைத்துக்கொண்டாலும், அந்த சில சூழ் நிலைகளும்கூட அவன் எண்ணத் துகள்களின் விளைவே. அவன் முன்னேற்றத்தோடு பின்னிப் பிணைந்தவையே ஆகும்.

ஒவ்வொரு மனிதனும் எங்கிருக்கிறானோ என்னவாக இருக்கிறானோ அது தற்செயலல்ல. இருத்தலுக்கான சட்ட திட்டங்களாலேயே.

குண நலனை நிர்ணயிக்கும் தன் எண்ணப் பயிற்சி, எண்ணங்களின் தொடர்ச்சியினாலேயே அவன் தன்னை அங்கு கொண்டு சேர்த்தான்.

வாழ்க்கை நெறிமுறைகளில் தற்செயல்களுக்கு இடமில்லை. என்றும் தவறிடாத எண்ணச் செயல் தத்துவ சட்டத்தின் விளைவே ஆகும்.

சூழ் நிலைக்குப் பொருந்தாமல் நெருடலுடன் வாழ்பவர்க்கும், சூழ் நிலையில் திருப்தி அடைந்தவர்க்கும் எண்ணச் செயல் விதி பொருந்தும்!
பரிணாம வளர்ச்சி யதார்த்தத்தின்படி, எங்கு வளர வாய்ப்புள்ளதோ அங்கு மனிதன் இருப்பான்.

ஆன்மீகப் பாடங்கள் தரும் சூழ் நிலைகள் தன்னை தேக்க நிலையில் வைக்கும் என்று அவன் உணர்வதால், அச்சூழ் நிலைகள் வழிவிட்டு, மற்ற சூழ் நிலைகள் உருவாகின்றன.

வெளிப்புற நிகழ்வுகளே தன்னை உருவாக்குகின்றன என அவன் கருதும் வரையிலும், சூழ் நிலைகள் அவனைப் பந்தாடுகின்றன!

ஆனால், தானே தன்னை ஆக்கும் சக்தி, தன்னால் மறைந்திருக்கும் வயலையும், தன்னை உருவாக்கும் விதைகளையும், அந்த எண்ண விதைகள் முளைப்பிக்கும் சூழ் நிலைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று அவன் உணறும்போது, அவனே அவனுடைய உண்மையான எஜமானன் ஆகிறான்!

ஒருவன் தன் எண்ணங்களிலிருந்தே செயல்கள் முளைத்தன என்று உணர்கிறான்!

சுய கட்டுப்பாட்டுடன் சுய சுத்தம் செய்துகொள்கிறான்!

இப்போது அவனுக்குத் தெளிவாக ஒன்று புரிகிறது. எந்த விகிதத்தில் தான் நல்ல எண்ணங்களை பிடிவாதமாக பயிற்சி செய்தோமோ, அந்த விகிதத்திலேயே நல்ல சூழ் நிலைகள் உருவானதென்று!

எந்த அளவுகோலில் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டானோ, அதே அளவுகளில் சூழ் நிலைகளும் மாறிப் போகிறது.

தன் குண நலன்களை செம்மைப்படுத்தும் முகமாக எவனொருவன் முழுமையாக தன்னை ஒப்புக் கொடுத்து, ஈடுபாட்டுடன், குறைகளை களைய முனைகின்றானோ, அந்த அளவிற்கு தொடர்ந்த வெற்றிகளும், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைவதே சத்தியம்!

ஆத்மா தான் ரகசியமாக விரும்பும் விஷயங்களை மட்டுமே ஈர்க்கிறது.

அது அன்பு செலுத்தும் நிலைகளையும் மற்றும் பயங்களையும் ஈர்க்கிறது.

செறிவூட்டப்பட்ட உயரிய விருப்பங்களுக்கு அது ஏறிச் செல்லுகிறது.

கேடுகெட்ட விருப்பங்களின் தாழ்ந்த நிலைக்கும் அது சென்று விழுகிறது.

ஆத்மா, சந்தர்ப சூழ் நிலைகளின் மூலமாக தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்கிறது.

ஒவ்வொரு எண்ண விதையும், மனம் எனும் தொட்டத்தில் விழ அனுமதிக்கப்படும்போது, வேர்விட்டு, தன்னை ஒத்த எண்ணங்களை முளைப்பித்து, செயல் பூக்களை மலரச் செய்து, சூழ் நிலைகள் வாய்ப்புகள் ஆகிய கனிகளை தாங்கி நிற்கிறது.

நல்லெண்ண விதைகள் சிறந்த கனிகளையும், கெட்டெண்ண விதைகள் கொடிய பழங்களையும் தரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

வெளி உலகச் சூழ் நிலைகளானவை உள் உலக எண்ணங்களைத் தழுவி, அவற்றுடன் ஒத்திருப்பவை.

இனிப்பான மற்றும் கசப்பான வெளிப்புற நிலைகள் தனிமனிதனின் தீர்கமான நன்மைகளை நிர்ணயிக்கின்றன.

அறுவடை செய்யும் விவசாயி என்ற வகையில் மகிழ்ச்சி மற்றும் வருத்தம் இரண்டையும் மனிதன் இனம் கண்டு கொள்கிறான், அனுபவத்திலே!

ஆழ்மன விருப்பங்கள், அடையும் விழைவுகள், எண்ணங்கள் இவற்றைத் தொடர்ந்து மனிதன் தன் ஆளுமையை இவற்றிடம் இழந்து, கடைசியாக வெளிப்புற வாழ்வியல் சூழல்கள் எனும் முழுமைக்கு வந்து சேர்கிறான்.

வளர்ச்சி, மாறுதல்கள் இவை குறித்த விதிகள் நிரூபணமாகின்றன!

ஒரு மனிதன், பிச்சைக்கார விடுதிக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ விதியின் வலிமையினாலோ அல்லது சந்தர்ப்ப சூழ் நிலையினாலோ வந்து சேர்வது இல்லை.

அடிப்படை விருப்பங்களாலும், கொடிய எண்ணங்களின் பாதையிலும் நடந்து வந்துதான் பிச்சையெடுக்கவோ, சிறைச்சாலைக்கோ வருகிறான்.

வெளிச் சக்திகளால் உந்தப்பட்டோ, மன அழுத்தத்தின் காரணமாகவோ, ஒரு தூய்மையான எண்ண ஓட்டம் கொண்ட மனிதன் திடீரென்று கொடிய செயல்களில் விழுந்துவிட மாட்டான்.

ரகசியமாக ஆழ்மனதில் ஒளிந்திருந்த கொடிய எண்ணங்கள் வெகு நாட்கள் காத்திருந்து, வாய்ப்புக் கிடைத்ததும் செயலாக வெளிப்பட்டன!

சூழ் நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை. சூழ் நிலைகள் அவனை அவனுக்கே அடையாளம் காட்டுகின்றன.

நரித்தனமான கெட்ட எண்ணங்களில்லாமல் கொடிய செயல்கள் பிறப்பதில்லை.

தொடர்ந்த, மேலான எண்ண விழைவுகளில்லாமல் மகிழ்ச்சியோ நற்பெயரோ பிறப்பதுவும் இல்லை.

எனவே, எண்ணங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற ஒரே காரணத்தினால், மனிதனே அவனுக்கு எஜமானன். தன்னையே உருவாக்கும் காரணகர்த்தா!

சூழ் நிலைகளை உருவாக்கும் பிரம்மா! தன்னையே தான் எழுதிக் கொண்ட எழுத்தாளன்!

பிறப்பிலேயே ஆத்மா, தனித்துவமும் நினைவும் பெற்று, வாழ்க்கையெனும் ஸ்தல யாத்திரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னை தனக்கே வெளிப்படுத்தும் சூழ் நிலைக் கலவைகளை தன்னகத்தே ஈர்த்து, முன்னேறுகிறது!

ஆத்மா தன் நினைவுகளால் ஈர்க்கும் சூழ் நிலைகள், ஆத்மாவின் தூய்மையையும், அல்லது சீர்கேட்டையும் பிரதிபலிக்கும்!

ஆத்மா, தன் எண்ணங்களால் ஆகர்ஷிக்கும் சூழ் நிலைகள், ஆத்மாவின் கம்பீரத்தை அல்லது கோழைத்தனத்தை பிரதிபலிக்கும்!

மனிதன், தான் விரும்புவனவற்றை ஈர்ப்பது இல்லை. தான் எதுவாக இருக்கிறானோ அதனையே ஈர்க்கின்றான்!

மனிதனின் பேராசைகள், அற்புத விருப்பங்கள், அடைதலின் குறிக்கோள்கள் அவன் ஏறும் ஒவ்வொரு படியிலும் சிதறு தேங்காயாக சிதறினாலும், அவன் ஆழ்மனதில் பழகி வந்த எண்ணங்களும், விருப்பங்களும், அவை நன்மையோம் தீமையோ, உணவைப்போல் அவனுள்ளே செல்கின்றன!

நம் வாழ்க்கையை செப்பனிட்டு வழி நடத்தும் திருத்தன்மை நமக்குள்ளேயே இருக்கிறது! அதுதான் உண்மையான * நாம்! *

எண்ணமும் செயலும், விதியை அறைக்குள் வைத்துப் பூட்டும் சிறைச் சாலைக் காவலர்கள்!

அதே எண்ணமும் செயலும், நன்மையை விடுதலை செய்யும் சுதந்திரப் பிரியைகளான தேவதைகள்!

தான் விரும்பியதையும், வேண்டிக்கொண்டவைகளையும் ஒருவன் பெறுவதில்லை! மாறாக அவனுக்கு நியாயமாக எது உரியதோ அதையே பெறுகிறான்!

அவனுடைய விருப்பங்களும், வேண்டுதல்களும், அவன் எண்ணங்களுடனும் செயல்களுடனும் ஒத்திசைந்து இயங்கும்போதுதான் நிறைவேறுகின்றன.

மேற்கண்ட உண்மையின் ஒளியிலிருந்து கீழ்கண்ட கேள்வியைப் பார்ப்போம்.

*சூழ் நிலையை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என்பதன் பொருள் என்ன?*

அதன் பொருள், ஒருவன் *செயலைத்* தூண்டும் எண்ணங்களை தன் மனதில் உரமிட்டு வளர்த்துக் கொண்டே, வெளி *விளைவு* களுடன் போராடுகிறான் என்பதே ஆகும்.

அந்த உள் மன எண்ணங்கள், உணரப்படும் வகையில் உருவெடுக்கலாம். அல்லது ஆழ் நிலையில் அவனை வலுவிழக்கச் செய்யலாம்.

இதில் எதுவாக இருப்பினும், இவ்வெண்ணம் கொண்ட மனிதனை அது அலைக்கழித்து, அவன் முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும்.

இதற்கு தீர்வும் மாறுதலும் அவசியமாகும்.

மனிதர்கள் சூழ் நிலைகளையும், வாய்ப்புகளையும் மாற்ற பரபரப்புடன் அலைகிறார்கள்.

ஆனால், தன்னை மாற்றிக் கொள்ள தயாராவதில்லை! எனவே அவர்களின் நிலையும் மாறுவதில்லை!

ஒரு மனிதன், சுய விமரிசனம் என்ற ஆணிகளைக்கொண்டு, எண்ணம் எனும் சிலுவையில் தன்னைத்தான் அறைந்து கொள்வானேயானால், அவன் இதயத்தை கவர்ந்த எந்த காரியத்திலும் தோல்வியடையமாட்டான்!

இவ்விதி, இம்மைக்கும் மறுமைக்கும் பொருந்தும்!

பெரும் செல்வம் அடைய வேண்டும் என்று ஆசைப்படுபவன் கூட அளப்பரிய தியாகங்களை செய்தாக வேண்டும்.

ஆயின், சிறந்த வாழ்க்கையும், புகழும், அமைதியும் வேண்டுமென்றால் எத்துனை தியாகங்கள் புரிய வேண்டும்!

இதோ ஒரு பரம ஏழை. அவன் தன் சுற்றுப்புற சூழலும், வீட்டுச் சூழலும், அடிப்படை தேவைகளும் முன்னேற்றமடைய வேண்டுமென்று துடிதுடிக்கிறான்.

ஆனால் எப்போதும் தன் வேலையில் சோம்பல் கொண்டு, குறைந்த கூலி கொடுத்த முதலாளிக்கு இது போதும் என்று எண்ணுகிறான்.

இப்படிப்பட்ட மனிதன், செல்வத்தை அடைவதன் விதிகளை அறியாமலிருக்கிறான். செயல் எண்ணத் தத்துவத்தின் அடிப்படை புரியாமலிருக்கிறான்.

இவன் பரம ஏழைத்தன்மையிலிருந்து வெளியேறத் தகுதியற்றவன்.

தன் எண்ணங்களால் இன்னமும் கொடிய ஏழ்மையை தன்பால் ஈர்த்து, மனிதத்தன்மையற்ற, தன்னைத் தோற்கடிக்கும் எண்ணங்களில் உழலுவான்.

இதோ ஒரு பணக்காரன். செல்வந்தனாயினும் அவனுக்கு தீராத, வலி மிகுந்த வியாதி ஒன்று இருந்தது.

தவறான பழக்க வழக்கங்களினாலும், விருப்பங்களாலும் அது அவனுக்கு வந்தது. பெரும் செல்வத்தை செலவு செய்து அவ்வியாதியைப் போக்க அவன் விழைகிறான்.

ஆனால் பழக்க வழக்கங்களையோ, உணவு முறைகளையோ மாற்றிக் கொள்ள மறுக்கிறான்.

தன் செல்வத்தை தன் விருப்பங்களுக்கேற்ப செலவிடும் வரமும் கேட்கிறான். கூடவே ஆரோக்கியமான உடல் நிலையையும் விரும்புகிறான்.

இம்மனிதனுக்கு ஆரொக்கியத்தை பெறும் அருகதையில்லை. ஏனெனில், உடல் நலம் பேணுவதற்கான அடிப்படை விதிகளை அவன் அறிந்திருக்கவில்லை.

இதோ ஒரு முதலாளி. தன்னிடம் பணிபுரியும் வேலையாட்களின் கூலியை குறைக்க குறுக்கு வழிகளில் யோசிப்பவன்.

ஆட்களின் கூலியைக் குறைத்தால்தான் செல்வந்தனக முடியும் என்ற அசையாத எண்ணமுடையவன்.

இம்மனிதனும் செல்வந்தனாகும் தகுதியற்றவன். உள்ள செல்வத்தையும் இழந்து, நற்பெயரையும் இழந்து தெருவில் நிற்கும்போது, சூழ் நிலையின் மீது புழுதி வாரித் தூற்றுகிறான்.

தன் நிலைக்குக் காரணம் தானே என்று அறியாமலேயே!

இங்கே அறிமுகப் படுத்தப்பட்ட மூன்று மனிதர்களிடமிருந்தும் நாம் கற்பது என்னவென்றால், அறிந்தொ அறியாமலோ சூழ் நிலைகளை நாமே உருவாக்குகிறோம்.

ஒரு முனையில் சிலவற்றிற்காக தொடர்ந்து முயன்றாலும், தன் எண்ணங்கள், செயல்கள், நோக்கங்களுடன் ஒத்துப் போகாமல் மறுமுனையில் அதிர்ச்சியடைகிறான்.

இது போன்ற அனேக உதாரணங்கள் கொடுக்க இயலுமென்றாலும் கூட, வாசகர்கள் தங்கள் எண்ணங்களையும், வாழ்க்கைச் சூழ் நிலைகளையும் பொருத்திப் பார்த்தால், இன்னமும் தெளிவு ஏற்படும்.

வாசகர்கள் இதைச் செய்யாதவரை, வெளி உதாரணங்களினால் பயன் அதிகமில்லை.

சூழ் நிலைகள் மிகவும் சிக்கலானவை. எண்ணங்கள் ஆழ வேறூன்றியவை.

மகிழ்ச்சிக்கான அளவுகோல்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுபவை.

ஒரு மனிதனின் ஆத்ம நிலை முழுமையாக அவனுக்கு மட்டுமே தெரியுமாதலால், வெளியிலிருந்து பார்க்கும் மற்றவனுக்கு அது முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை.

ஒரு மனிதன் நேர்மையானவனாக இருந்தும் சிரமத்தில் இருக்கலாம்.

மற்றவன் நேர்மையற்றவனாக இருந்தும் செல்வம் எய்தலாம்.

பொதுவாகப் பார்க்கும்போது *அந்த குறிப்பிட்ட நேர்மை நடத்தையாலேயே அவன் முன்னேற்றத்தை இழந்தான்* என்பதோ, அல்லது *அந்த குறிப்பிட்ட ஏமாற்று வேலையினாலேயே அவன் செல்வம் குவித்தான்* என்பதோ தவறான கற்பனையாகும்.

ஏனெனில், நேர்மையாளன் முழு நேர்மையாளனுமல்ல! நேர்மையற்றவன் முழுமையாய் மோசமானவனுமல்ல!

ஆழ்ந்த அறிவும் பரந்த அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது விளங்கும்.

மற்றவர்களிடம் இல்லாத சில அதீத நல்ல பண்புகள் அந்த நேர்மையற்ற மனிதனிடம் இருக்கலாம்!

மற்றவர்களிடம் இல்லாத சில குண கேடுகள் அந்த நேர்மையானவனிடத்திலிருக்கலாம்!

இருவரும் தங்கள் குண நலன்களுக்கு ஏற்ற விளைவுகளையும் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் அடைந்தார்கள்!

மனிதர்கள், நேர்மையாளர்கள் துன்பப்படுவதாக எண்ணி விடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் பிடிவாதமாக தம் எண்ணங்களை நெறிப்படுத்தி, பலகீனமான சிறு நினைவும் வராமல் தம் சிந்தனையைக் காத்து, அசுத்தக் கறைகளை தன் ஆத்மாவின் மீதிருந்து அழித்துவிடுவார்களேயாகில், *துன்பங்கள், நன்மை செய்ததால் விளைந்தது* என்று சொல்ல மாட்டார்கள்.

அப்படி ஒரு நெறியான, உன்னதமான நிலைக்கு வந்த பின்னர், தம் எண்ணங்களையும் தம் வாழ்க்கையையும் ஒப்பிட்டு, *மஹா சட்டம்* ஒன்று உள்ளது, அது என்றைக்கும் பொய்ப்பதில்லை என்று உணர்ந்து கொள்கிறார்கள்!

எண்ணங்களே செயல்களையும், சூழ் நிலைகளையும் உருவாக்க வல்லவை என்ற அந்த *மஹா சட்டம்* தீமைக்கு நன்மையோ, அல்லது நன்மைக்கு தீமையோ தருவதில்லை.

இந்த நல்லறிவை ஒருவன் எட்டும்போது, அவன் ஒன்றை தெரிந்துகொள்கிறான்.

தன் இறந்த காலத்தை, அதாவது பழைய வாழ்க்கையை அவன் திரும்பிப் பார்க்கும்போது, அறியாமையினாலும், குருட்டுத்தனத்தினாலும் அவ்வாறு இருந்தோம்.

தன் பழைய வாழ்க்கைத் துன்பங்கள் தனக்கு நேர்ந்தது நியாயமே. தன் பழைய அனுபவங்கள், அவை நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும், தன் எண்ணங்களின் பரிமாணத்திற்கு நிறை நேரானவையே என்று ஒப்புக்கொள்வான்!

நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும் கெட்ட பயன்களை விளைவிப்பதுமில்லை.

கெட்ட சிந்தனைகளும், கெட்ட செயல்களும் நல்ல பயன்களை விளைவிப்பதுமில்லை.

இதையே வினை விதைத்தவன் வினையையும், திணை விதைத்தவன் திணையையும் அறுப்பான் என்றார்கள்.

பொருள் உலகில், தாவர அறிவியலில் இந்த சட்டத்தை எல்லோறும் ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படி நடக்கிறார்கள்.

ஆனால் வெகு சிலரே மனதிற்கும் ஆன்மீகத்திற்கும் கூட இவ்விதி பொருந்தும் என புரிந்துகொள்கிறார்கள்!

விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்காது என்ற இவ்விதி, எண்ணங்களுக்கும் முற்றும் பொருந்தும்!

ஆனால், மனிதர்கள் இதனை ஒப்புக்கொள்ள மறுத்து, இவ்விதியுடன் ஒத்திசைய மறுக்கிறார்கள்!

துன்பங்கள் என்பது, ஏதோ ஒரு தவறான திசையில் சென்றுவிட்ட எண்ணத்தின் விளைவே ஆகும்!

துன்பம், ஒருவன் தன்னுடனேயே முரண்பட்டு நிற்கிறான் என்பதை உணர்த்தும் அடையாளமாகும்!

தன் இருத்தலின் விதியோடு இசைந்திருக்க மறுக்கிறான் என்பதுவே ஆகும்!

துன்பத்தின் ஒரே நன்மை என்ன தெரியுமா? அந்தத் துன்பத்தின் ஜ்வாலையைக் கொண்டு பயனற்ற குப்பைகளை பொசுக்கிவிட முடியும்!

பளிங்கு போன்ற எண்ணம் கொண்டவனை துன்பம் நெருங்குவதில்லை! ஞான ஒளி பெற்ற ஒரு நற் சிந்தனையாளன் துன்பப்படுவதில்லை!

ஏன் தெரியுமா?

கசடும் அழுக்கும் நீக்கப்பெற்ற சுத்தத் தங்கத்தை யாராவது மறுபடியும் தீயில் இடுவார்களா?

ஒருவன் எதிர்கொள்ளும் துன்பச் சூழ் நிலைகள் அவன் எண்ண முரண்பாடுகளின் விளைவே ஆகும்.

ஒருவன் எதிர்கொள்ளும் இன்பச் சூழ் நிலைகள் அவன் நல்லெண்ணங்களின் ஒத்திசைவே ஆகும்.

ஆசிர்வதிக்கப்பட்ட தன்மையே நல்லெண்ணத்தின் விளைவாகும். செல்வமல்ல!

சபிக்கப்பட்ட தன்மையே கெட்ட எண்ணத்தின் விளைவாகும். ஏழ்மையல்ல!

ஒருவன் சபிக்கப்பட்டவனாகவும், பணக்காரனாகவும் இருக்க முடியும்!

மற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும், ஏழையாகவும் இருக்க முடியும்!

செல்வமும், ஆசிர்வாதமும் எப்போது ஒன்று சேர்கிறது என்றால், செல்வத்தை நன்மைக்கு என்று பயன்படுத்தும்போதுதான்!

ஒரு சபிக்கப்பட்டவன் எப்போது ஏழையாகிறான் என்றால், ஏழ்மை தன்மீது அ நியாயமாக திணிக்கப்பட்டுவிட்டதென்று அவன் எண்ணும்போதுதான்.

ஒருவன் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, வளமையுடன் திகழும்வரையில், அவன் தன்னை சரியான வகையில் வளர்த்துக்கொண்டதாக ஆகாது.

மகிழ்ச்சி, ஆரோக்யம், வளமை இம் மூன்றும், ஒருவன் தன் உண்மைத் தன்மையுடன் வெளிச் சூழலை அணுகும்போதுதான் நிறைவேறும்.

ஒரு மனிதன் எப்போது உண்மையான மனிதன் ஆகிறான்?

அவன் ஓலமிடுவதையும், குற்றஞ்சொல்லுவதையும் விட்டுவிட்டு, ஒளிந்திருக்கும் நீதியை தனக்குள் விடாமுயற்சியுடன் தேடி, தன் வாழ்க்கையில் அந்த நீதியைப் பிறதியிடும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்!

இப்படி அவன் நெறிப்படுத்திக்கொள்ளூம் பணியில் ஈடுபடும்போது, அவன் நிலைக்கு மற்றவர்களை காரணம் காட்டுவதை விட்டுவிடுகிறான்!

நல்ல, வலிமையான எண்ணங்களால் தன்னைத்தானே கட்ட ஆரம்பிக்கிறான்!

சூழ் நிலைகளின் மேல் பழி போடுவதை நிறுத்துகிறான்!

மாறாக தன் அதி விரைவான வளர்ச்சிக்கு சூழ் நிலைகளைப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொள்கிறான்!

உள்ளூரப் பொதிந்து கிடக்கும் தன் ஆற்றலையும் வாய்ப்புகளையும் சூழ் நிலைகளால் கண்டுணர்கிறான்!

இப் பிரபஞ்ச்த்தின் பிரதான தத்துவம், சட்டம். குழப்பமல்ல.

வாழ்வின் நெறியென்பது, நீதி. அ நீதியல்ல.

உலகை வழி நடத்தும் ஆன்மீகம், நன்மையே. ஊழலல்ல!

நன்மையே உலகை தன் அச்சில் வார்த்து பெரும் ஆற்றலாய் விளங்குகிறது.

உலகம், நன்மையால், நன்மையுடன் நன்றாகவே நடக்கிறது என்றுணர அவன் முதலில் நல்லவனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தன்னை நல்லவனாக மாற்றிக் கொள்ளும் இம் முயற்சியில், தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளும்போது, காரியங்களும், மனிதர்களும் தனக்காக மாறுவதை துல்லியமாக உணர்ந்து கொள்கிறான்!

இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருப்பதால், முறைப்படியான உள் தேடுதல்களினாலும், உற்று கவனிப்பதாலும் கண்டுணர இயலும்.

ஒரு மனிதன் படிப்படியாக தன் எண்ணங்களை மாற்றிக் கொள்வானேயாகில், அவன் வாழ்வும் சூழலும் மாறும் வேகத்தைப் பார்த்து அசந்து போய் விடுவான்!

மனிதர்கள், எண்ணங்கள் ரகசியமானவை என்று எண்ணிவிடுகிறார்கள்! ஆனால் எண்ணங்களை ரகசியமாக வைத்திருக்க இயலாது!

மிக விரைவில் அவை பழக்கமாக மாறிவிடும்.

பழக்கம், சூழ் நிலையாக உருமாறும்!

போதை எண்ணங்கள் முதலில் குடிகாரத்தன்மை பழக்கமாகி,
அதுவே படிகமாகி,
நோய் மற்றும் தனிமைச் சூழ் நிலையாக இறுகிவிடும்.

சுத்தமற்ற எல்லா எண்ணங்களும்,
வெறுக்கத்தக்க,
குழப்பமான பழக்கங்களாக படிகமாகி,
எதிர்மறையான சூழ் நிலைகளாக இறுகிவிடும்.

பயம், சந்தேகம்,
முடிவு மறுக்கும் எண்ணங்கள்,
பலகீனமான,
ஆண்மையற்ற பழக்கங்களாக படிகமாகி,
தோல்வி,
அடிமைத்தனம்,
மற்றும் சார்ந்திருத்தலை விழையும் சூழ் நிலைகளாக இறுகிவிடும்.

சோம்பேறி எண்ணங்கள்,
சுத்தமற்ற,
நேர்மையற்ற பழக்கமாக உருமாறி,
தவறுகள்,
பிச்சைக்காரத்தனம் ஆகிய சூழ் நிலைகளாக இறுகிவிடும்.

வெறுப்பான,
சபிக்கும் எண்ணங்கள்,
குற்றஞ்சுமத்தும் வன்முறைப் பழக்கமாக உருமாறி,
காயம், தண்டனை ஆகிய சூழ் நிலைகளாக மாறிவிடுகின்றன.

சுய நல எண்ணங்கள்,
தன்னை முதன்மைப் படுத்தும் பழக்கமாக உருமாறி,
தன்னிரக்கச் சூழ் நிலையாக இறுகிவிடும்.

மாறாக..

அனைத்து அழகிய எண்ணங்களும்
பெருமையான,
கனிவுள்ள பழக்கங்களாக உருமாறி,
ஒளிமயமான சூழ் நிலைகளாக முகிழ்கின்றன!

உத்தமமான எண்ணங்கள்,
சுய அடக்க பழக்கமாக உருமாறி,
அமைதிச் சூழ் நிலைகளாக மணம் பரப்புகின்றன!

தைரியமான,
சுய சார்பான,
முடிவெடுக்கும் எண்ணங்கள்,
ஆண்மையுள்ள பழக்கங்களாக உருமாறி,
வெற்றி,
செழுமை,
சுதந்திரம் ஆகிய சூழ் நிலைகளாக இதழ் விரிக்கின்றன!

சக்தியுள்ள எண்ணங்கள்,
சுத்தம்,
நளினம் ஆகிய பழக்கங்களாக முதலில் உருவெடுத்து,
இனிய சூழ்னிலைகளாக கரம் கோர்த்துக் கொள்கின்றன!

மெல்லிய மன்னிக்கும் எண்ணங்கள்
அஹிம்சைப் பழக்கங்களாக உருமாறி,
தற்காத்துக் கொள்ளும்,
தன்னை நிலைப் படுத்தும் சூழ் நிலைகளாக உருமாறுகின்றன!

அன்பான சுயனலமற்ற எண்ணங்கள்,
மன்னிக்கும் பழக்கமாக உருமாறி,
நிச்சயமான வளமையாகவும்,
உண்மையான செல்வச் சூழ் நிலைகளாகவும் பரிணமிக்கின்றன!

ஒரு குறிப்பிட்ட தொடர் எண்ண ஓட்டம், அது நல்லதோ கெட்டதோ, அதை எண்ணிய மனிதனின் குணத்தின் மீதும், அவனுக்கு வாய்க்கின்ற சூழ் நிலைகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகாது!

ஒரு மனிதன் நேரடியாக தன் சூழ் நிலைகளை அமைக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.

ஆனால், அவனால் கண்டிப்பாக தன் எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும், அமைத்துக் கொள்ளவும் இயலும்.

எனவே, மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக அவனால் தன் சூழ் நிலைகளை உருக்கொடுத்து அமைத்துக் கொள்ள இயலும்!

இயற்கை ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் விரும்பும் எண்ணங்களை தொடர்ச்சியாக சங்கிலித் தொடர்போல் எண்ணிப் பார்க்க அன்போடு உதவி செய்கிறது!

இதன் மூலமாக, வாய்ப்புகளை, மிக விரைவாக, நல்ல மற்றும் தீய எண்ணங்களை மனதின் மேல் பரப்பிற்கு கொண்டுவர ஒத்துழைக்கிறது!

ஒருவன் தன் பாவ எண்ணங்களை விட்டு விடுவானாகில், உலகம் மிக மிருதுவாக மாறி அவனை மென்மையுடன் அணுகும்! அவனுக்கு உதவி செய்யத் தயாரகிவிடும்!

அவன் தன் பலகீனமான, நோய் வாய்ப்பட்ட எண்ணங்களை விட்டு விடுவானாகில், அடடா, இதோ அவன் சந்திக்கும் ஒவ்வொரு கரமும் அவன் உறுதியான லட்சியத்தை கைக்கொள்ள உதவும்!

அவன் அழகிய நல்ல எண்ணங்களை கைக்கொள்ளுவானேயாகில், எந்த விதியாலும் அவனை வறுமையிலும், அவமானத்திலும் தள்ள இயலாது!

உலகம் என்பது, ஒவ்வொருவர் கையிலும் உள்ள கலைடாஸ்கோப் என்ற கருவியைப் போன்றது!

அதில் மூன்று கண்ணாடிப் பக்கங்களும், உள்ளே வண்ண வண்ண வளையல் துண்டுகளும் இருக்கும்!

அதை எப்படியெல்லாம் திருப்புகிறோமோ அப்படியெல்லாம் வண்ணக் கூட்டுகள் மாறி நம்மை மகிழ்விக்கும்!

அதைப் போலவே, நம் எண்ணங்களை எப்படியெல்லாம் திருப்புகிறோமோ, அப்படியெல்லாம் நம் சூழ் நிலைகளும் மாறுவதை நம்மால் உணர முடியும்!



-ஜேம்ஸ் ஆலென்
(தமிழில் நந்தவேரன்)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum