தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன்

Go down

குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் Empty குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன்

Post by இறையன் Sat Dec 17, 2011 4:26 pm

கன்னட நாட்டில், திருப்பருப்பதம் அல்லது மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் சிவனது திருவருளைப் பெற்றுச் சிறப்புற்றிருந்த அன்பர் ஒருவர் இருந்தார். அந்த அடியவரிடம் அண்ணாமலையார் தோன்றி திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு ஞானகுருவாக எழுந்தருளி இருக்குமாறு கட்டளையிட்டார். அந்த அடியவர் பெயர் நமச்சிவாயர். உடனே நமச்சிவாயர் தென்திசை நோக்கிப் புறபட்டார். புறப்பட்டு வரும் வழியிலே உடன் வந்த அடியாருடன் ஓரூரை அடைந்தார்.அவ்வூரில் ஒரு திருமணம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. அவ்வழியில், வந்த அடியாரை திருமண வீட்டிற்குரிய தலைவன், மாலை அணிவித்து வரவேற்று திருமண வீட்டிற்கு அழைத்துச் சென்றான். திருமண வீட்டாரும் அங்கு வந்திருந்தவரும், திருநீறு பெற்றுக் கொண்ட பின்,வீடு தீப்பற்றிக் கொண்டது. தீருநீறு அத்தகைய சக்தியும், அனலும் கொண்டது. இவ்வடியார் கொடுத்த திருநீற்றினால்தான் வீடு எரிந்து போயிற்று என்றனர்.


அவர்கள் உரைத்தவற்றைக் கேட்ட அடியவர் சிந்தை நொந்து சிவபிரானை நினைந்து மீண்டும், எரிந்தவற்றை எல்லாம் படைத்தருளினார்.வெந்து போன்வெல்லாம் மீண்டும் உண்டான அருஞ்செயலைக் கண்டவர்கள், இந்த சிவனேயாவர் என்று போற்றினர். அங்கிருந்தவர் அனைவரும் அகம் மகிழ, நான் இனி ஒருவர் மனையிடத்தும் செல்லேன் என்னும் ஒரு விரதத்தினை மேற்கொண்டு அவ்விடம் விட்டுப் புறப்பட்டார்.புறப்பட்ட நமச்சிவாயர் மாணவரோடும், அடியவரோடும் காலையில் பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தார். அவர்கள் அனைவரும் சிவபூசை செய்யும் பண்பினர். ஆதலால், ஊரின் உள்ள தோட்டங்கள் எங்கும் உள்ள மலர்களை பறித்தனர்.அம்மலர்கள் அங்குள்ள கோயில் வழிபாட்டிற்குரிய மலர்கள். செய்தி அரசுக்கு எட்டியது. ஆகவே, அவ்வூர் அரசு அலுவர்கள் நமச்சிவாயரை அழைத்து,உரியவைக் கேளாமல் தோட்டங்களில் புகுந்து கோயில் பூசைக்கும் மலரில்லாமல் பூக்களைப் பறித்தது குற்றமாகும்.. இதற்கு என்ன சொல்கிறீர்? என்றனர்.


அப்போது நமச்சிவாயர், தங்கள் மேல் குற்றம் சுமத்துவோரை நோக்கி, நாங்கள் பறித்த பூக்கள் எல்லாம் நீங்கள் சொல்லும் கோயிலில் உறையும் இறைவனுக்கே சார்த்தப் பெற்றன..அம்மலர்கள் வீணாக்கப் படவில்லை என்றார். அதற்கு அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரான விடை சொல்லாமல் உயர்ந்த தத்துவம் பேசுகின்றீர்; உங்கள் சொந்தப் பூசையில் உங்கள் வழிபடு தெய்வத்திற்கு அணியப்பெற்ற பூக்களை இவ்வூர்க் கோயிலில் உறையும் இறைவன் ஏற்றுக்கொண்டான் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இவ்வூர்க் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு அணியப்பெற்றுள்ள மாலையானது அனைவரும் காணும்படி, உம் கழுத்திடம்வருதல் வேண்டும்என்றார். அதற்கு நமச்சிவாய மூர்த்தி உடன்பட்டு சிவபிரானுடைய திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சிவபிரான் கோயிலில் உள்ள அருச்சகர்கள் இறைவனுக்குச் சார்த்தியுள்ள மாலையின் பின்புறத்தில் ஒரு கயிற்றினைக் கட்டி, ஒரு சிறுவனைச் சிவலிங்கத்தின் பின் புறமாக அமரச்செய்து, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்குமாறு செய்தனர். நமச்சிவாயர் நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டு இறைவன் முன்பாக நின்று கொண்டிருந்தார்.


அப்போது அனைவரும் காணச் சிறுவன் பிடித்திருந்த கயிறு அறுந்து மாலையானது நமச்சிவாயரின் கழுத்தில் மிளிர்ந்தது. கண்டவர் அனைவரும் வியப்புற்று நமச்சிவாயரைப் பெரிய ஞானியாராக ஏற்றுப் பாராட்டினர்.இந்நிலையில், அந்தப்பகுதியில் ஆட்சிசெய்த புறமதத்து அரசன், நமச்சிவாயாரையும் அவர் மாணவர்களையும் ஆழமாகச் சோதனை செய்து பார்க்க விரும்பினான். நமச்சிவாயரைப் பார்த்து, உங்கள் சைவ சமயம் உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட சமயம்,எல்லா வகையிலும் உயர்ந்து விளங்கும் சமயம் என்று உம் போன்றவர்கள் பேசப்படுவது உண்மையானால், நான் சொல்கின்றவாறு மெய்ப்பித்துக் காட்ட இயலுமா? என்று கேட்டான்.இறைவன் திருவருளைத் துணையாகக் கொண்டு உம் விருப்பம் போல் மெய்பிக்காட்ட இயலும் என்றார். அரசன் நமச்சிவாயரை பழுக்கக் காய்ச்சிய இரும்பினை கையில் பற்றிக்கொண்டு, சைவ சமயமே சிறந்த; அச்சமயத்திற்குரிய தெய்வம் சிவபிரானே! என்று சொல்ல வேண்டும், அவ்வாறு செய்ய உம்மால் இயலுமா?என்று கேட்டான். அப்போது நமச்சிவாய தேவர், பரம்பொருளாகிய சிவபிரானை உள்ளத்தே நினைந்துருகிச் சிவாபிரான் திருவருளைத் துணையாக கொண்டு அவ்வாறு செய்யக்கூடும்என்று சொல்லித் தம் மாணவராகிய விரூபாட்தித் தேவரை நோக்கினார்.மாணவர் புரிந்துக்கொண்டார். புறமதத்தைச் சார்ந்த அரசன் விதித்த நிபந்தனைகட்கு உட்பட்டு இணங்கினார். உடனே அரசன் கட்டளைப்படி இரும்புத் துண்டம் ஒன்று நெருப்பிலிட்டு காய்ச்சப் பெற்றது.இரும்பு துண்டு சூடேறியதை விரூபாட்சித் தேவரிடம் தெரிவித்தனர். குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன் Images%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%AE
அப்போது விரூபாட்சித்தேவர், அந்த இரும்பு இப்போதுதான் பூத்திருக்கிறது; மேலும் பக்குவம் அடைய வேண்டும் என்றார்.கொவ்வைக்கனியினும் மேலாக சிவந்தவுடன் விரூபாட்சித்தேவரிடம் தெரிவித்தார்கள்.தீவண்ணராகிய சிவபெருமானை உள்ளத்தே நினைத்துக்கொண்டு, கையில் அனல் ஏந்தி விளையாடும் ஐயா போற்றி," செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்றுசிவபிரானைச் சிந்தனை செய்து, பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பார்த்துகொண்டே, 'சைவ சமயமே சமயம், அச்சமயம் சார்ந்த சிவனே பரம்பொருள்என்று உரைத்தருளினார். பிறகு, அரியும், அயனும், அமரும் அஞ்சியோடுதற்குக் காரண்மாயிருந்த ஆலகால நஞ்சினை,அமுத திரள் எனக்கருதியுண்டு,அனைவருக்கும் அடைக்கலம் தந்து, நீலகண்டத்துடன் நிமிர்ந்து நின்ற சிவபிரானுக்கு அடியவராகிய எமக்குப் பழுக்கக் காய்ச்சிய இவ்விரும்பும் பழுத்ததொரு கனியேயாம் என்று சொல்லிக்கொண்டே உட்கொண்டுவிட்டார். இந்நிகழ்ச்சிகளையும் நேரில் பார்த்துகொண்டிருந்த புறச்சமயத்தைச் சார்ந்த அரசனும்,அமைச்சரும்,மக்களும் வியப்படைந்து விதிர்விதிர்த்து நின்றனர்.பிறகு,வேற்று மதத்தினை சார்ந்த அம்மன்னன் நமச்சிவாயருக்கும் அவர் மாணவராகிய விரூபாட்சித் தேவர்க்கும், அவருடன் வந்த முன்னூறு அடியவர்க்கும் வேண்டிய சிறப்புகளை எல்லாம் செய்து பாராட்டினான்.


பிறகு, அங்கிருந்து புறப்பட்டு அடியவர்கள் சூழ்ந்து திருவண்ணாமலை சென்று சேர்ந்தார்.திருக்கோயிலுக்குச் சென்ற போது, அண்ணாமலையாரைக் கைகூப்பி வணங்காமல். நீர் நலமாக இருக்கின்றீரோ? என்று கையால் சைகையால் செய்து வந்தார்.நமச்சிவாய சுவாமிகள் செருக்கினால் அவ்வாறு செய்தார் அல்லர்; அவர்கள் பின்பற்றும் வீராகமம்,அடியவர் சூழ குருமூர்த்தியாக வந்த சிவபிரான் கோலத்தையன்றிப் பிறரைக் கைகூப்பி வணங்குதல் கூடாது எனக் கூறுவதனால் அவர் வணங்காமல் இருந்தார். குரு லிங்க சங்கமம் எனும் முப்பொருளையன்றிப்பிறரை வணங்குதல் கூடாது என்னும் மரபினை ஒட்டி அவ்வாறு நடந்தார்.இலிங்கம் என்பது தம் மார்பகத்தே எழுந்தளியிருக்கும் சிவபெருமானே என்பது அவர்தம் கோட்பாடு'; அண்ணாமலையார் கட்டளைப்படியே தாம் அவ்வூர்க்கு வந்திருப்பதனை உணர்ந்தாரில்லை; என்றாலும் செந்தமிழ் மொழியில் அவர்க்குண்டான மேம்பட்ட தெளிவினால் அண்ணாமலையாரை சிறப்பித்து வெண்பாவினைப் பாடத்தொடங்கினார்.கன்னட மொழியை அன்றி வேறு மொழியினை அறியாத நமசிவாயர் மேலான தமிழ்ப்புலவர்களும் பாராட்டத்தக்க வகையால் வெண்பாக்களைப்பாட அருள்செய்தார் சிவபிரான்.


'நமச்சிவாயர் சிவபிரானிடம் சிறிதும் அன்பில்லாதவர் என்றும் மற்றவர்கள் கருதக்கூடிய வகையில் கைக்காட்டி வந்ததனை அறிந்த சிவாக்கிரயோகி என்பார், உடல் பெரிதும் வருந்துமாறு நமச்சிவாயரைப் பிரம்பினால் அடித்தார். நல்ல சற்குருவாக வந்து இறைவன் என்னை மோதியது கொல்வதற்காக அன்று; என்பாலுள்ள தீக்குணங்களைப் போக்குதற்கேயாம் என்ற கருத்தமைய ஒரு வெண்பாவினை இயற்றினார், நமச்சிவாயர். நமச்சிவாயருடையஉயர்ந்த மனநிலையை உணர்ந்த சிவாக்கிரயோகியார் தாம் பிரம்பாலடித்தது பற்றி வருந்தினார்.நமச்சிவாயர் அவ்விடத்தை விட்டு அகன்று, கோயிலுள் சென்று இறைவனை வணங்குதல் சிறந்தது. என்று எண்ணினார்.அப்போது அவர்க்கு அருகிலே, முன்னொரு நாளில் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்திய சற்குருவானவர் கல்லாடையுடுத்த தொண்டர்கள் சூழ்தர முன்னே தோன்றினார்; தோன்றியவர் உரிமையுடன் இவரோடு சில பேசி அடியார் குழாத்துடன் கோயிலுக்குள் சென்றார். அதனைக் கண்ணுற்ற நமச்சிவாயர், குருமூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடம் இதுதான் போலும் என்று கருதினார். அடியாருடன் சென்ற குருநாதர் தம்முடன் வந்த மாணவர்களோடு அண்ணாமலையார் அடிக்கமலங்களில் வீழ்ந்து பணிந்து எழுந்தார். அப்போது குருமூர்த்தியையும் உடன் வந்த அடியவரையும் கண்டிலர்


நமச்சிவாயர்.உடனே நமச்சிவாய மூர்த்தி இச்செயல் சிவபிரானுடைய அருட்செயலேவம்பான சொற்களைக் கூறி வலக்கை தூக்கிச் சைகை செய்து வந்த நாம், சிவபிரானை உளமாரக் கைகூப்பி வணங்கவேண்டும் எனப்தற்காகவே சற்குரு நம்மை அடித்தார் என்று உணர்ந்து கொண்டார்.. நமச்சிவாயரைப் பிரம்பால் அடித்த யோகியும் நமச்சிவாயரும் சிவஞானம் கைகூடப் பெற்றமையால் ஒருவரை ஒருவர் காணும் இடங்களில் எல்லாம் அன்புற வணங்கி அளவளாவினர். உண்மை அடியாருடைய பண்பு இதுவென்று பிறர்க்கும் உணர்த்தினர். பழைய வழக்கத்தினை மாற்றிக்கொண்டு ஆலயத்துட் புகுந்து அண்ணாமலையாரை கைகூப்பி வணங்கும் வழக்கத்தினை மேற்கொண்ட நமச்சிவாரும், சிவாகமங்ககளை தெளிவாகக் கற்றுணர்ந்த சிவாக்கிரமயோகியும் அடியார்க்குரிய அனைத்துப் பண்புகளும் நிறைய பெற்று,முன்பிருந்த குறைகள் நீங்கப் பெற்று வழிபாடாற்றி வந்தனர். குறைகள் நீங்கப் பெற்று வழிபாடாற்றி வந்தனர். பின்பு அந்தச் சிவாக்கிரயோகி சென்ற இடம் தெரியவில்லை. நமச்சிவாய மூர்த்தி அண்ணாமலையிலேயே தங்கினார். அண்ணாமலையாரும் திருவுளம் மகிழ்ந்து நமச்சிவாயர் தம் உண்மை அடியார் என்பதனைப் பலவகையாக உலகிற்கு உணர்த்தியருளினார்.


ஊரினிடத்தும் நாட்டின் கண்ணும் உலாவிக் கொண்டிருந்த நமச்சிவாயரைப் பெரிய மலையிடத்தே வசிக்குமாறு இறைவன் அருள் புரிந்தமையால் குகை நமச்சிவாயன் என்ற பெயர் எங்கும் பரவிற்று. குகை நமச்சிவாயருக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் யாரவது வாயிலாக கிடைக்கும்படி அண்ணாமலையார் அருள் புரிந்தார்.இந்தக் குகை நமச்சிவாயருக்குத் தகுதி நிறைந்த சீடர் ஒருவர் இருந்தார். அந்த சீடர் ஒருநாள் குகைநமச்சிவாயர் தன் திருவடிகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஆடையை அச்சத்துடன் பிடித்துக் கசக்கினர். அதனைக் கண்ட குகை நமச்சிவாயர் ஏன் இவ்வாறு செய்தனை? என்று கேட்டார். அதற்கு அந்த சீடர், தில்லை மாநகரிலே திருச்சிற்றம்பலத்திலே தொங்கவிடப்பட்டிருந்த திரைச் சீலையிலே தீப்பற்றியது. அத் தீயை அகற்றக் கசக்கினேன். என்றார். அப்போது குகை நமச்சிவாயர் தம் அருகிலிருந்த சீடனைக் கட்டித்தழுவி எனக்குக் குருவாகக் கூடிய பெருமையை பெற்றார்! என்று பாராட்டினார்.அன்று முதல் அவருக்குக் குரு நமச்சிவாய மூர்த்தி என்ற பெயரே வழங்குவதாயிற்று.ஒருநாள் குகை நமச்சிவாய சுவாமிகள் சீடராகிய குரு நமச்சிவாயரை பார்த்து, நாம் இருவரும் ஓர் ஊரில் இருப்பது ஒரு மரத்தில் இரண்டு யானையைக் கட்டி வைத்திருப்பது போன்றதாகும்; ஆகவே நீ தில்லை மாநகருக்குச் செல்க! என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பினார்.


மல்லிகார்ச்சுனத்திலிருந்து இவருடன் வந்து, பூவிருந்தவல்லியில் குருவின் கட்டளைப்படி அருஞ்செயல் புரிந்த விரூபாட்சித்தேவர்,குருவின் குகைக்கு மேலே குகை அமைத்துக் கொண்டு,ஆசிரியர்க்குப் பல பணிகளையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அன்பர் பலருடன் தம் குகையில் அமர்ந்திருந்தபோது, அவருடைய திருமேனி மறைந்தது. அங்கு, விபூதிலிங்கம் தோன்றியது. அந்த லிங்கம் இன்றுவரை இருந்து வருகிறது.ஒருநாள், ஓரிடையன் இறந்த சினையாட்டினைத் தாங்கி நின்று இந்த ஆட்டின் வயிற்றில் இரண்டு குட்டிகள் உள்ளன்;விருப்பம் உடையவர் விலைகொடுத்துப் பெற்றுக் கொள்க என்று பலரும் அறிய உரைத்து நின்றான். அங்கு வந்தவருள் ஒரு தீயவன் இடையனை நோக்கி,இந்த மலையின்கண் உள்ள குகையிலே ஊன் அருந்துவதில் மிகுந்த இச்சையுடைவன் ஒருவன் இருக்கிறான்,அவனிடம் கொண்டுபோ; நல்ல விலைக்கு வாங்குவான் என்றான். அவன் உரைத்தவற்றை மெய் என்று கருதிய இடையன் குகை நமச்சிவாய மூர்த்தியிடம் சென்று நிகழ்ந்தவற்றைக் கூறினான்.குகை நமச்சிவாய சுவாமிகள் சினங்கொள்ளாமல், ஆட்டின் விலை எவ்வளவு என்று கேட்டறிந்து விலைப் பொருளை நாளைத் தருகிறோம் சென்று வருக!என்று அனுப்பிவிட்டார்.கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை நினைந்து பெருமானே இன்று ஏன் இறந்து போன ஆட்டினை என்னிடம் அனுப்பினீர்? என்று ஒரு இனிய பாடலை பாடி, திருநீற்றில் ஒரு துளியினை எடுத்து ஆட்டின் மேலிட்டார். உடனே ஆடு உயிர் பெற்றெழுத்து இரண்டு குட்டிகளை ஈன்றது.


இறைவன் திருவருளை நினைத்து மனம் உருகி நின்ற குகைநமச்சிவாயதேவர் புதர்களில் இருந்த தழைகளைக் கொய்து ஆட்டிற்குக் கொடுத்து மகிழ்ந்தார்.மறுநாள் அந்த இடையன் அவ்விடத்திற்கு வந்து,ஆடு குட்டியுடன் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்; பெருமகிழ்ச்சி கொண்டு குகை நமச்சிவாய சுவாமிகளிடம் சென்றான்.குகை நமச்சிவாய சுவாமிகளுடைய கட்டளைப்படி இடையன் பெருமகிழ்ச்சியுடன் ஆட்டினையும்

குட்டிகளையும் கொண்டு சென்றான். இரண்டு குட்டிகளையும் இரண்டு தோள்களில் சுமந்து கொண்டு செல்லும்போது முன்னால் உயிரிழந்து இடையனால் சுமந்துசெல்லப்பட்ட ஆடானது இன்று கூவிக்கொண்டே பின்னே செல்லத்தன் மனையைச் சார்ந்தான்.முன்நாள் இடையனைக் குகை நமச்சிவாயரிடம் அனுப்பிய வீணர்கள் இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டு, சுவாமிகளை இழிவுபடுத்துவதற்காக, உயிருள்ள ஒரு இளைஞனைப் பாடையில் வைத்துக் கட்டி, முனிவர் எழுப்பினாலும் எழாதே!என்று பாடையில் வைக்கப் பெற்றவனிடம் சொல்லி வைத்து அவனைத் தூக்கிக்கொண்டு முனிவரிடம் சென்று, சுவாமி,நல்ல இளைஞன் ஒருவன் இறந்து போனான்; அவனை எழுப்பித்தந்தருளுக! என்று வேண்டினர். வீணர்களுடைய பொய்ச்செயல்களைக் கண்ட குகை நமச்சிவாயமூர்த்தி, போனவன் போனவனே இனி அவன் எழான் என்று சொல்லினார். உடனே பொய்யாகப் பிணம்போல் பாடையில் படுத்திருந்த இளைஞன் உயிர் பிரிந்து எமபுரம் சென்றது.வீணர்கள் மனம் உடைந்து பெருந் துன்பத்திற்கு ஆளாயினர். இந்தஊரானது குறும்பர்கள் வாழும் ஊர்; கொன்றாலும் ஏன் என்று கேளாத ஊர்? மிகக் கொடிய காளைகள் கதறும் ஊர்; பழியைச் சுமக்கும் ஊர்? தேளுக்கு ஒப்பான பாதகர்கள் வாழும் ஊர்என்று சொல்லிய பின் என் சொல்லால் அழியப் போகிற ஊர்; என்று சொல்ல எண்ணினார்; அவ்வாறு சொல்லுதற்கு முன்னே தடங்கருணைப் பெருங்கடலாகிய அண்ணாமலைப் பெருமான் தோன்றி, அடே நான் ஒருவன் இந்த ஊரில் இருக்கின்றேனடா என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே குகை நமச்சிவாயமூர்த்தி சினந்தணிந்து, கருத்தை மாற்றி. அழியாவூர் அண்ணாமலை என்று வெண்பாவை முடித்தருளினார்.


கோளர் இருக்குமூர்,கொன்றாலும் கேளாவூர்

காளையரே நின்று கதறுமூர் - நாளும்

பழியே சுமக்குமூர், பாதகரே வாழுமூர்

அழியாவூ ரண்ணா மலை

என்பது அவ்வெண்பா.


குகை நமச்சிவாயருக்குத் தொல்லை கொடுத்தவர்களைச் சார்ந்தவர் பலர் பல்வேறு இன்னல்களுக்கும் நோய்களுக்கும் உள்ளாகிப் பல்வேறிடங்களுக்கும் குடியேறிச் சென்றுவிட்டனர். சிலர் மட்டும், வாழ்ந்த ஊர் என்ற பாசத்தினால் அருணையிலேயே தங்கினார்கள்.ஒருநாள் ஓரிடையன் நூறு பசுக்களோடு மலைச்சாரலையடைந்தபோது, ஒரு பசுவை வேங்கை பற்றிக் கொண்டு ஓடிற்று.அந்த இடையன் விரைந்தோடிச்சென்று குகை நமச்சிவாயரிடம் சொல்லினான்.உடனே சுவாமிகள் அண்ணாமலை அண்ணலை நோக்கி ஒரு வெண்பாவைப் பாடினார்.அப்போது வேங்கை, தான் கவர்ந்து சென்ற பசுவைக் கொணர்ந்து வைத்துச்சென்றது.இந்த அருஞ்செயலைக் கண்ட இடையன் வியப்படைந்து எல்லோரிடமும் இதனை எடுத்துரைத்தான். கேட்டோர் அனைவரும் அண்ணாமலைப் பெருமான் அடியவர்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்று பேசிக்கொண்டனர்.பின்னர் ஒருநாள், ஒரு வைணவ குரு காஞ்சி மாநகரிலிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிசென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணப்பன் கண்ணைப் பறித்து சிவபிரான் அருளைப் பெற்ற திருக்காளத்திமலை தோன்றியது. அதனையுணர்ந்த வைணவ குரு உடன் இருந்தவரை நோக்கி, இம்மலை என் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பீராக! என்றார்.


அவர்களும் திரையிட்டு மறைத்தார்கள். இந்த நிகழ்ச்சி பல காத தூரத்தில் நடைபெற்றதென்றாலும்,அண்ணாமலையில் குகைக்குள் இருந்த நமச்சிவாயர் ஞானநோக்கால் அறிந்து திடீரென நகைத்துக் கனல் பிழம்பு போன்ற கவியொன்றை இயற்றினார் .உடனே அந்த வைணவ குருவின் கண்கள் ஒளியிழந்தன். அந்த வைண குரு சில திங்கள் வரை அல்லலுற்று,பின்னர் அண்ணாமலையில் அமர்ந்திருக்கும் மாபெரு ஞானியாகிய குகை நமச்சிவாய தேவர் வாயிலாகத் தனக்குக் கிடைத்த தண்டனை என்று அறிந்ததும் அண்ணாமலைக்கு வந்து குகை நமச்சிவாயரிடம் அடைக்கலம் புகுந்தார். அப்போது குகை நமச்சிவாய தேவர் அந்த வைணவ குருவை நோக்கி, நீர் எந்த மலையைக் கண்ணாலும் பார்க்கக் கூடாதென்று திரையிட்டு மறைக்கக் கட்டளையிட்டீரோ அந்த மலைக்கே சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்தி இறைவனை வணங்குவீரானால் மீண்டும் கண் ஒளியைப் பெறுவீர்! என்றார்.அவரும் அவ்வாறே சென்று வணங்கி கண் ஒளியைப் பெற்றார்.இவ்வாறாகவே, பல அருட்பெருஞ்செயல்களை செயல்களைச் செய்து அண்ணாமலையில்வாழ்ந்து வரும் நாளில், அண்ணாமலையாரிடம் தம்மிடம் ஈடுபாடுடைய மன்னன் ஒருவனைக் கொண்டு குகை நமச்சிவாயர்க்கு பொன்னும் மணியும் அணியும் பல்லாக்கும் அளித்துத்தனக்கு முன்னே செல்லுமாறு பணித்தருளினார்.


இந்த நிலையில் குகை நமச்சிவாயருக்கு வயது நூறு ஆயிற்று. விதிக்கப்பெற்ற ஆயுள் முடிந்த பின்னரும் இங்கிருந்தல் பிழையாகும் என்று சொல்லி முறைப்படி முன்பாகவே அமைக்கப் பெற்றிருந்த சமாதிக் குழியில் தாமே இறங்கினார். பரம்பொருளாகிய சிவபெருமான வானத்தில் இருந்து அசரீரியாக அங்கு வந்திருந்த பலரும் கேட்டுமாறு, அன்பனே! நீ இவ்வுலகில் மேற்கொண்டு நூறாண்டுகள் வாழ்வாயாக என்றுரைத்தருளினார். இறைவன் திருவுளப் பாங்கினையுணர்ந்த குகை நமச்சிவாயர், அப்பெருமானைப் பாடி மகிழ்தார்.அவர் காலத்தில் வேற்று மதத்தினரால் சைவ சமயத்திற்கு வந்துற்ற இடையூறுகளை எல்லாம் நீக்கி சைவத்தின் சிறப்பினை நிலைநாட்டினார்

எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum