தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை

Go down

ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை Empty ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை

Post by இறையன் Thu Feb 02, 2012 10:47 pm

ஒரு ஊர்ல மூணு அண்ணன்மாருங்க இருந்தாங்களாம் அவ‌ங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தாளாம்.

அந்த அண்ணமாருங்கள்ல பெரிய அண்ணன் ரொம்ம்ம்ம்ப நல்லவனாம். அதனால அவன எல்லாரும் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க.

ஒரு நாள் ஒரு ராட்சஷன் அவ‌ங்கூட்டு வழியா போகும் போது தங்கச்சிக்காரிய பாத்து அவளைத் தூக்கீட்டு போயிட்டானாம். காட்டுக்கு போன அண்ணங்காரங்க திரும்பி ஊட்டுக்கு வந்து பாத்தா ஆத்தாகாரி அழுதுட்டு இருந்தாளாம், என்னான்னு கேட்டா கதைய சொன்னாளாம்.

சின்ன அண்ணனுக ரெண்டு பேரும் தங்கச்சிய காப்பாத்தா கெளம்புனானுகளாம் அப்ப பெரிய அண்ணனும் நானும் வரேன்னு அடம்புடுச்சானாம். ஆத்தாகாரி ஒடனே ஒரு யோசன பண்ணி, சின்ன அண்ணனுகளுக்கு கட்டி சோறும், பெரியண்ணணுக்கு கட்டிசோத்துக்கு பதிலா மாட்டு சாணியையும் கட்டிக் குடுத்துட்டாளாம், பாதிவழியில சோறு இல்லாம பெரிய அண்ணன் திரும்பி வந்துருவான்னு.

ஆனா இந்த சூதை பெரிய அண்ணன் எப்படியோ கண்டுபிடிச்சுட்டான். மூணு பேரும் கால்ந‌டையா (அதாவது நடந்தே) தங்கச்சியைத் தேடிப் போனாங்களாம். அப்ப மூணுபேருக்கும் பசி எடுத்துச்சு. சாப்புட போனப்ப பெரிய அண்ணன் கை கழுவிட்டு சாப்புட சொன்னான். தம்பிங்க கைகழுவ போனப்ப பெரிய அண்ணன் கட்டுசோத்துப் பொட்டலத்தை மாத்திட்டான். சாப்புட கட்டு சோத்தை பிரிச்சு பாத்த‌ப்ப சின்ன அண்ணங்க ரெண்டு பேரும் ஏமாந்து போயிட்டாங்க.

பெரிய அண்ணன் ஒடனே “சரி.. எஞ்சாப்பாட்ட எல்லாரும் சாப்புடலாம் ஆனா அதுக்கு அப்புறம் எம்பேச்சு தான் கேக்கோணும்”னு சொன்னானாம். தம்பிங்க ரெண்டு பேரும் வேற வழியில்லாம சரின்னு சொல்லிட்டு சாப்புட்டாங்களாம்.

பொறவு எல்லாரும் மறுபடியும் நடந்து போனாங்களாம். அப்ப ஒரு கழுதை எதுக்கால வந்துச்சாம். பெரிய அண்ணன் அந்தக் கழுதைய புடிக்கச் சொன்னானாம். சின்ன அண்ணங்க முடியாதுனு சொன்னகாட்டி அவங்க தின்ன சோத்தை கக்க சொன்னானாம். வேற வழியில்லாம கழுதைய புடுச்சுச்சுட்டு போகும் போது, வழியிலே பனை மரம் ஒண்ணு கெடந்துச்சாம். அதையும் எடுதுக்க சொன்னானாம் பெரியண்ணன். எடுக்கலைனா தின்ன சோத்த கக்க சொல்லுவானேன்னு அதையும் தூக்கிட்டு நடந்தாங்களாம் தம்பிங்க.

இப்படியே போற வழியிலிருந்த வண்ணாந்தாளியையும், ஒரு கருவண்டையும் புடுச்சுட்டு ராட்சஷன் ஊட்டுக்கு போயிட்டாங்களாம். அவங்க போன நேரம் ராட்சஷன் இரரை தேடப் போயிருந்தானாம். அப்ப தங்கச்சியைப் பாத்து பேசிட்டு இருக்குறப்ப ராட்சஷன் வர சத்தங்கேட்டுச்சு, தங்கச்சிக்காரி ஒடனே மூணு அண்ணங்களையும் அவங்க கொண்டாந்த கழுதை, தாளி, பனை மரம், வண்டு எல்லாத்தையும் அட்டாரில ஏத்தி உட்டுட்டாளாம்.

ராட்சஷன் வந்த ஒடனே மனுச வாசம் அடிக்குது யார் வந்ததுன்னு தங்கச்சியைப் பாத்து கேட்டானாம். உடனே அட்டாரிலேருந்து பெரியண்ணன் ” நான் தான்” அப்படீன்னானாம். யார் நீ உன் தலையைக் காட்டுன்னு சொன்னானாம் ராட்சஷன். பெரிய அண்ணன் வண்ணாந்தாளியைத் தூக்கி நீட்டுனானாம், அதைப் பாத்து இவ்ளோ பெரிய தலையான்னு ராட்சஷன் பயந்துட்டானாம்.

பொறவு எங்கால பாக்குரயானு பனமரத்தை எடுத்து நீட்டுனானாம். அதைக் கண்டு ரொம்ப பயந்துட்டான் ராட்சஷன்.

எஞ்சத்ததை கேளுன்னு கழுதை காதுல கருவண்ட உட்டுட்டானாம் பெரியண்ணன். அந்த சத்தத்தை கேட்டு நம்மளவிட பெரிய ராட்சஷன் வந்துருக்கான் டோய்ன்னு ஓடியே போயிட்டானான் ராட்சஷன். அப்புறம் என்ன அண்ணன், தங்கச்சி நாலுபேரும் கடைசி வரைக்கும் சந்தோசமா இருந்தாங்களாம்.

கதை முடிஞ்சிடுச்சு.. போய் அடுத்த சோலியைப் பாருங்கப்பு!

- கதை எழுதியவர் : சித்தார்த் முத்துசாமி

source katturai
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum