தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்

Go down

பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் Empty பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்

Post by இறையன் Tue Feb 28, 2012 9:43 pm

நீரில் மிதந்த நிலவை
இரவெல்லாம் துவளாது
கரையேற்றிய அலைகளுக்கு
பரிதியை பரிசாய் தந்தது
விடியல்

*

பேருந்துப் பயணத்தில்
சாளரக்கண்ணாடி
இடையிலிருந்தும்
எதிர்வரும் முட்செடிக்கு
முகத்தை விலக்கும்
பழகிய மூளை
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் Empty Re: பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்

Post by இறையன் Tue Feb 28, 2012 9:43 pm

பணிப்பெண்
புரண்டெழும் பேச்சை
உள்வாங்கிய ஒலிகளை
திறவுகோல் இழந்த
மெளன அடுக்கில்
இட்டிருப்பாள்
அழுக்காடைகள்
அலம்பாத வீடு
இத்தியாதிகளை
இலங்கச்செய்து
குழப்பங்கள் பரிமளிக்கா முகத்தோடு
எதிர்வீட்டு எஜமானியை
எதிர்கொள்ளப் படியேறுவாள்
பெட்டிப் பொறியில் சிக்கிய
எலி குறித்த தர்க்கங்களிடை புகுந்து
தண்டவாள கல்சரளைக்கப்பால்
அடர்ந்த முட்புதரில்
பாய்ந்தோட விடுகையில்
எலிப்பாஷாணம் அருந்தி
செவிட்டூமையாய் மீண்டவளின்
கழிவிரக்கம் காணக்கிடைக்கும்

******

காட்டை அழித்ததை
காகிதங்களில் எழுதுகிறேன்

*
ஆளற்றபோதும்
பார்வை சென்று படியும்
பெண்கள் படித்துறை

*
குளிர்கால இரவொன்றில்
நிழல்கள் பனிசுமந்த வீதியில்
எதேச்சையாய் எதிர்ப்பட்டோம்
அவரவர்க்கான கவலைகளோடு கடக்கையில்
உலர்ந்த உதடுகள் உதிர்த்த
பரஸ்பர சிரிப்பு
இன்னல்களையெங்கோ
இடம்பெயரச் செய்தது சற்றுநேரம்

*
நீர்கலைத்து
நிலவை நிரப்பிக்கொள்கிறது
குடம்

*
காலை பொழுதை கையகப்படுத்தாவிடில்
மறுநாளுக்குள் நழுவிக்கொள்கிறது
நாள்

*
கலைஞன் லாவகத்தோடு
வாத்தியத்தில் இயங்க
வேசியின் தாராளத்தோடு
விரிகிறது இசை

source keetru.com
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum