தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை

Go down

அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை Empty அறிவு என்பது எறும்பு, வாழ்க்கை என்பது யானை

Post by இறையன் Sun Dec 30, 2012 2:39 pm

ஒருமுறை பகவத்கீதை பற்றிச் சொற்பொழிவாற்ற பரோடா சென்றிருந்தேன். அங்கே ஒரு பெண்மணி என்னைத்
தனிமையில் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள்.

என்னைச் சந்தித்த உடனேயே அவள் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். மனதிலே உள்ளதை வெளியே கொட்டினால் பாரம் குறையும் என்பதால், அவளை மேலும் பேசச் சொல்லித்
தூண்டினேன்.

உலகத்திலே என்னைப் போல யாரும் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கஷ்டத்தை நான்
அனுபவிக்கிறேன் என்று பீடிகையோடு அந்தப் பெண் தன் கதையைச் சொன்னாள்.


நான்சிறுமியாக இருக்கும் பருவத்திலிருந்தே மகள் என்றும் பாராமல் என் தந்தை என்னிடம் பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார்
அப்போது ஐய்யோ என்று மனதுக்குள் கதறினேனே தவிர, இதை எப்படித் தடுப்பது என்று தெரியவில்லை நான் வளர்ந்து பருவம் அடைந்த பின்பும் என் தந்தை மாறவில்லை என் துயரமும் குறையவில்லை ஒவ்வொரு நாளும்
இருட்டாகவே எனக்கு விடிந்தது. பிறகு எனக்குத் திருமணமும் ஆனது.

அன்பு மிகுந்த கணவர் கிடைத்தார். ஆனால், அந்தத் துயரம் மட்டும் மறையவில்லை என் திருமணத்துக்குப் பின்பும்கூட என் தந்தை மாறவில்லை இதைச் சகிக்க
முடியாத நான் இந்த நரக வேதனையிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்ற ஆசையில் எல்லாவற்றையும் என்
கணவர் முன்பு கொட்டி அழுதேன்.

விளைவு இப்போது என் கணவரும் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார் ஏன்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துன்பம்?

என்று கேட்டு அழுதாள் அந்தப் பெண்.

அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு இந்து மத தத்துவங்களின் அடிப்படையில், இது உன் பூர்வஜென்ம பலன் கர்மா
அதை நீ அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று நான் பதில் சொல்லி இருக்க முடியும்.

அல்லது மனோதத்துவ ரீதியாக, ஒருவேளை உன் தாய் உனது தந்தையைச் சரியாக திருப்திப்படுத்தியிருக்க மாட்டாள். அல்லது உன் தந்தைக்கு
ஏதோ மனவியாதி இருக்க வேண்டும் என்று மருத்துவத்தைத் துணைக்கு அழைத்திருக்கலாம் .

இந்தப் பெண்ணுக்கு ஏன் இப்படியொரு கொடுமை நடந்தது என்று யாராவது பதில் சொல்லமுடியும் என்றால்.
முசோலினி, ஹிட்லர் போன்ற கொடுமைக்காரர்கள் ஏன் பிறந்தார்கள் என்பதற்கும் காரணம் சொல்லிவிட முடியுமே மீண்டும் இப்படிப்பட்டவர்கள் பிறக்காமல் இருக்க வழியும் சொல்லிவிட முடியுமே
அந்தப் பெண்மணிக்குச் சொன்னேன்.

நமது அறிவு என்பது ஓர் எறும்பு என்றால், வாழ்க்கையும் இந்த உலகமும் யானை போன்றது யானையின் காலுக்கடியில் கிடக்கும் எறும்பால் யானையை என்றுமே முழுமையாகப் பார்த்துவிட முடியாது யானையின்
ஒரு பகுதியைத்தான் பார்க்க முடியும்.

எறும்பின் பார்வையைப் போல நமது அறிவு கூர்மையானதாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை புதிர்களுக்கும் நம்மால் விடை தேடிவிட முடியாது.

இப்படிச் சொல்வதால் யார் நம்மை மிதித்தாலும், உதைத்தாலும், மிதியடியைப் போல சும்மா இருக்க வேண்டும் என்று
அர்த்தம் அல்ல. ஆங்கிலத்தில் Assertive என்று ஒரு வார்த்தை உண்டு இல்லையா ?

இந்தக் குணம் உடையவர்கள் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். தனது அதிகாரத்துக்கும் உரிமைக்கும் உட்பட்ட பகுதிகளை
அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை ஏற்கமாட்டார்கள்.

நாம் இந்தக் குணத்தோடுதான் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் போராட்டத்தின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்று ஏற்றுக்கொள்கிற
பக்குவம் வந்துவிட்டால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? என்ற கேள்வி எழாது. சுயபச்சாதாபம் வராது.

துயரத்தின் வேதனை தாக்காது அந்த நிலையை அடைய இந்தப் பிரார்த்தனை உங்களுக்கு உதவலாம்.

'ஆண்டவா என்னால்எதையெல்லாம் மாற்ற முடியுமோ அதை மாற்றக்கூடிய வலிமையை எனக்குக் கொடு என்னால்
மாற்ற முடியாதவை எவை என்று கண்டுகொள்கிற அறிவை எனக்குக் கொடு, என்னால் மாற்ற முடிந்தது, மாற்ற முடியாதது
இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறிந்து புரிந்து கொள்கிற பக்குவத்தை எனக்குக் கொடு.'

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்"
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum