தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba

Go down

யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba Empty யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)-shakthi praba

Post by இறையன் Thu Dec 15, 2011 11:09 pm

கால நேரத்திற்கு அப்பாற்பட்டு ஊழல்கிறது பொய்மையும் கபடமும். இரட்டைகளான துக்கம் சுகம், புகழ்ச்சி, இகழ்வு என்பதைப் போல், சத்தியத்தின் இரட்டையான பொய்மையும் தன் பணியைத் தொடர்ந்தவண்ணமிருக்கிறது. பிறரை ஏமாற்றி தன் ஜீவனத்தை நடத்தும் இழி நிலைக்கு பாபச் சுமை அதிகம். அதிலும் புனிதனைப் போல் வேடமிட்டு ஏய்ப்பது மிகப் பெரிய பாபம். ஜடை முடி தரித்தலும், காவியுடையும் பெரும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவை. அவற்றை தவறாக பயன்படுத்துபவன் மூடன். அந்த பாபத்தின் வீர்யம் அறியாதவன். இவர்களைப் பற்றி ஆதிஷங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


" ஜடிலோ முண்டி லுஞ்சித கெஷ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹூதர நிமிதம் பஹுக்ருத வேஷ: "
-பஜகோவிந்தம்

சடை முடி வளர்ப்பதும், மொட்டையடிப்பதும், காவியுடை அணிவதுமாய் பல வித வேடம் அணிந்து மூடர்கள் வயிற்றை வளர்க்கிறார்கள். அவர்கள் கண் இருந்தும் குருடர்கள்.

வேடமணிந்த சிலரோ சித்து வேலைகள் செய்தும் பெருவாரியான மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்கின்றனர். சாமான்யர்களால் எப்படி சித்து வேலை செய்ய முடியும்? அப்படியெனில் அவர்கள் சித்தர்களின் பாதையில் பயணிப்பவர்களாகத் தான் இருக்க வேண்டும். "சித்தி" அடைந்தவுடன் மோக்ஷமோ, முக்தியோ கிடைப்பதில்லை. அவர்கள் முற்றும் துறந்த சன்யாசி, ஞானி ஆகிவிடுவது இல்லை. உண்மையான சித்தர்களும் யோகிகளும் சித்தி அடைவதை தன் இலக்காக கொள்ளுவதில்லை. அது ஒரு நிலை மட்டுமே. அதைத் தாண்டி தம் பயணத்தை தொடர்ந்த வண்ணமிருப்பர். அவர்கள் ஒழுக்கம் தவம் மூலம் பல ஷக்திகளைப் பெறுகின்றனர்.

சித்தி பெற்றதும் கூட அஹம் மட்டுப்படாமல் அந்த ஷக்திகளைக் கொண்டு ஏய்க்கும் வேலையில் ஈடுபட்டால் அவர்கள் தம் பாதையினின்று வழுவி விழுந்து விடுகின்றனர். அதைத் தாண்டி செல்பவனே உண்மையான யோகி. பெயர் பெற்ற பதிணென் சித்தர்களைத் தவிரவும் நிறைய சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அஷ்ட மஹா சித்திகள் எனும் எட்டு சித்திகள் கை வரப் பெறுபவன் சித்த நிலையில் இருப்பவனாக கருதப்படுகிறான். அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ரபத்தி, ப்ரகாமீயம், ஈசாத்வம், வசித்வம் என்பன அவை.

அணிமா: அணுவை விட சிறிய உருவம் எடுப்பது / ஆக்குவது
மஹிமா: மலையைக் காட்டிலும் பெரிய உருவம் கொள்வது / ஆக்குவது
லஹிமா: காற்றை விட மென்மை ஆகுவது / ஆக்குவது
கரிமா: மெல்லிய ஆனால் சுமக்க முடியாத கனமான உருவம் கொள்வது /ஆக்குவது
ப்ராப்தி: எண்ணிய பொருள் கையில் வரவழைப்பது
ப்ராகாமீயம்: எந்த வடிவமும் எடுப்பது
ஈசாத்வம்: தேவர்களும் வணங்கக் கூடிய தன்மையை பெறுவது.
வசித்வம்: கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவற்றை அடக்கும் ஷக்தி கைவரப் பெறுவது.

இவற்றையெல்லாம் அடைந்த ஒருவன் அகங்காரத்தை கட்டுப்படுத்தாமல், ஆசைகள் கொண்டு திரிந்தால் அவன் முயற்சி அனைத்தும் வீண். ஆசைகளை அடக்குவதே யோகத்தின் உயரிய நிலை. அஹத்தை மட்டுப்படுத்துதலே ஞானத்தின் முதல் கட்ட நிலை.

"அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆஷா பிண்டம்"
-பஜகோவிந்தம்

உடல் தளர்ந்து விட்டது, பல் விழுந்து, முடி நரைத்து, கையில் கோலின் துணையின்றி இருக்கும் ஒருவனுக்கும் ஆசை விட்டபாடில்லை.

ஆண் / பெண், முதியவன் / இளையவன், சில சித்தர்கள் / சாமான்யர்கள் என பலரையும் ஆட்டுவிக்கிறது ஆசை!
ஆசைகளால் கட்டுப்படுத்தப் படாதவன் துறவி.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum