தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!!

Go down

Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! Empty Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!!

Post by இறையன் Mon Dec 12, 2011 11:28 pm

Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!! Brainwaves

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதற்கான வழிகள்:-

அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:

நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

நன்கு தூங்குங்கள்:

தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.

தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.

வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:

ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.http://www.kalvikalanjiam.com

எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:

பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:

குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள்.

எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.

நினைவூட்டும் தந்திரங்கள்:

ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum