தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
நளனின் சமையல் கலை-shakthi praba EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


நளனின் சமையல் கலை-shakthi praba

Go down

நளனின் சமையல் கலை-shakthi praba Empty நளனின் சமையல் கலை-shakthi praba

Post by இறையன் Wed Dec 14, 2011 5:18 pm

(எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது )






உணவை பக்குவமாகத் தயாரித்து பரிசாரகம் செய்வது விருந்தோம்பலின் முக்கிய குணம். உபசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. விருந்தினர்களை தெய்வ அம்சமாகக் கருதி உணவளித்தல் அவசியம். சமையல் வல்லுனர்களை அக்காலத்தில் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்களும் மதாச்சார்யார்கள் பணப் பெற்ற ஏனைய பலரும் ஆதரித்துள்ளார்கள்.


நளனின் அமுதபாகத்திற்கு பின்னால் ஒரு கதை உண்டு. விதர்ப நாட்டு இளவரசி தமயந்தியின் அழகில் மானிடர் மட்டுமின்றி மற்ற லோகத்தவரும் மோகம் கொண்டனர். இந்திரன், அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்களும் அதில் அடக்கம். சுயம்வரத்தின் போது தம்மில் ஒருவரை தேர்ந்தெடுக்க நளனையே அவர்கள் தூது அனுப்ப, தமயந்தியோ நளனைத் தவிர வேறு யாரையும் மணக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறாள். நளனைப் போலவே வேடம் தரித்து நால்வரும் சுயம்வரத்தில்பங்கேற்க, தன் அன்புக்குறிய நளனை கண்டுணர்ந்து மாலையிடுகிறாள் தமயந்தி. தேவர்கள் நால்வரும் விட்டுக்கொடுத்து ஆளுக்கு இரு வரம் தருகின்றனர். அதில் ஒன்று யமதர்மன் கொடுத்த வரம். உணவு சமைப்பதில் வல்லுனர் மட்டுமன்றி, ஈடு இணையற்ற சுவைபெற்று திகழும்படி அருளிச் சென்றான்.


அந்த உணவே நளனுக்கு தன் வாழ்வை மீட்டுத்தந்தது என்றால் அது மிகையாகாது. கலிபுருஷனும் தமயந்தியின் பால் ஆசைப்படுகிறான். நளனுடன் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதைக் கேள்வியுற்றதும், அவன் நாடும் நகரமும் சூதாட்டத்தில் அழிந்து போக சாபமிடுகிறான். பனிரெண்டு வருடம் அவன் மாளிகையில் சேவகனாகப் பணியேற்று தக்க சமயம் பார்த்து அவனுள் புகுந்து அழிவை ஏற்படுத்த செயல்படுகிறான் கலிபுருஷன். அதன் பின் அவன் சூதாட்டில் தோற்பதும், தன் மனைவியை பிரியவும் நேருகிறது. வெகு சிரமங்களுக்கும் துன்பத்திற்கும் பிறகு நளனுக்கு தமயந்தி மீண்டும் கிடைக்கிறாள். நளனின் சமையல் பக்குவத்தை உண்ட உடனேயே உருமாறியிருப்பினும் நளனை தமயந்திக்கு அடையாளம் தெரிகிறது.


சமையல் கலை இரு அன்புள்ளங்களை ஒன்று சேர்த்துள்ளது என்பதற்கு இவர்களின் கதையே சிறந்த சாட்சி. The way to man's heart is through his stomach" இவர்கள் கதையைக் கேடு பின்னால் எழுதப்பட்டதோ?



பி.கு: சிங்காரவேலு முதலியார் என்பவர "அபிதான சிந்தாமணி" எனும் புத்தகத்தில் சமையல் உட்பட அறுபத்தி நான்கு கலைகளைப் பற்றி மட்டுமின்றி விஞ்ஞானம், புராணம், மதம், என அனைத்து துறைகளுக்கும் விளங்கங்கள் எழுதியிருக்கிறார். ஏறக்குறைய எந்க்ய்க்லொபெஅடிஅ விற்காக செய்யக்கூடிய வேலையை தனியொரு மனிதனாக பத்து வருடப் உழைப்பின் பலனாக புத்தகத்தைஎழுதி, மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு பிரசுரித்தார் என்று சோ கூறுகிறார்.


இதைப் பற்றிய விக்கிப்பீடியா குறிப்பு இதோ:
http://en.wikipedia.org/wiki/Abithana_Chintamani
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum