தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா

Go down

சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா Empty சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா

Post by இறையன் Thu Feb 02, 2012 11:13 pm

சிறுவனும் மரமும்…..! - தமிழண்ணா Boy-hugging-tree
அது ஒரு சின்ன கிராமம்; ஆற்றங்கரையோரம் இருந்தது நவீன் என்ற சிறுவனின் வீடு. அந்த வீட்டின் பின்புறம் ஓங்கி வளர்ந்த நாவற்பழ மரம். அது விரிந்து பரந்து உயர்ந்து நிழல் தரும் பெரும் மரம். அந்த மரத்தடியில்தான் நவீன் விளையாடுவான். காற்றில் உதிர்த்து விடும் பழங்களைச் சுவைத்துவிட்டு அதன் நிழலில் படுத்து உறங்குவான்;அந்த மரத்தோடு பேசுவான்;சிரிப்பான். நாவல் மரமும் தன் கிளைகளையும் இலைகளையும் ஆட்டிச் சிரிக்கும். நாள் தவறாமல் இது நடக்கும்.
ஒரு தந்தையின் தோளில் ஏறி விளையாடும் குழந்தையைப் போல மரத்தில் ஏறி அதன் கிளையில் மேலும் கீழும் ஆடுவான்;அதன் நுனிக் கிளைக்கு வந்து “தொப்” என்று குதிப்பான். தாழ்வான கிளையில் அமர்ந்து ஊஞ்சல் ஆடுவான். இதனைக் கண்டு அந்த மரமும் ஆனந்தப்பட்டுக்கொள்ளும். நவீன் வளர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக விளையாடுவதை நிறுத்திக்கொண்டான். அந்த மரத்துக்கு நவீனைக் காணாத ஏக்கம். இலைகள் எல்லாம் சோர்ந்து சோகமாகக் காட்சியளித்தது. ஒரு நாள் நவீன் அந்த மரத்தைத் தேடி வந்தான். சோகமாக இருந்த அவனைப் பார்த்து மரம் கேட்டது,”ஏன்? இப்போதெல்லாம் என்னோடு விளையாட வருவதில்லை. நீ, வராமல் நான் மிகுந்த கவலையோடு இருந்தேன். உன்னைப் பார்த்ததும்தான் எனக்கு நிம்மதி என்றது மரம்.
“நான் இன்னும் சின்னப் பிள்ளை அல்லவே, மரத்தைச் சுற்றி விளையாட. வளர்ந்து விட்டேன். இனிமேல் எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும்; எனக்குத்தான் வாங்கித் தருவார் யாருமில்லை,என்றான் நவீன். சரி, உனக்கு வேண்டிய பொம்மைகளை வாங்கிவந்து இங்கே என்னுடன் விளையாடு., என்றது மரம். ”பொம்மைகள் வாங்கக் காசு வேண்டுமே!எனக்கு யார் தருவார்,” என்றான் சோகமாக. ” என்னிடம் காசோ பணமோ இல்லை;ஆனால் சுவையான் நாவற் பழங்கள் இருக்கிறது. உனக்குத் தேவையான பழங்களை எடுத்துக்கொண்டு போய் விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு நீ விரும்பிய பொம்மைகளை வாங்கிக்கொள்” என்றது மரம்.
நவீனுக்கு உற்சாகம் பிறந்தது. நாவல் மரம் தன் கிளைகளை வேகமாக ஆட்டி நாவற்பழங்களை உதிர்த்தது. பழங்களை எல்லாம் சேகரித்துக்கொண்டு போய் சந்தையில் விற்று தனக்கு விருப்பமான பொம்மைகளை வாங்கிக்கொண்டான்,நவீன். ஆனால் நவீன், அந்த மரத்தைத் தேடிப் போகவில்லை. மரம் மீண்டும் கவலையோடு காணப்பட்டது. ஒருநாள், நவீன் அந்த மரத்தடியில் வந்து நின்றான். அவனைப் பார்த்த மரத்துக்கு அளவில்லாத சந்தோசம். கிளைகளையும் இலைகளையும் ஆட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
“வா, வந்து என்னோடு விளையாடு,என்று மரம் அழைத்தது,அவனை. ”எனக்கு இப்போது உன்னோடு விளையாட நேரமில்லை. நான் ஏன் குடும்பத்திற்காக ஒரு வீடு கட்ட வேண்டும். நீ அதற்கு உதவுவாயா? என்று நவீன் கேட்டான். உனக்கு உதவ என்னிடம் வீடு எதுவும் கிடையாது. ஆனால் நீ, வீடு கட்டத் தேவையான மரத்தை என்னால் தர இயலும். எனது கிளைகளில் பெரிய கிளைகளை வெட்டி எடுத்துப் போய் வீடு கட்டப் பயன்படுத்திக்கொள்.என்றது மரம். மரம் சொன்னபடியே அதன் கிளைகளை வெட்டி மகிழ்ச்சியோடு எடுத்துப் போனான்,நவீன். அதன் பிறகு நவீன் வராமல் போகவே மீண்டும் மரம் சோகத்தில் ஆழ்ந்தது. கொளுத்தும் கோடை வெயில் நாளில் சோகமே உருவாக நவீன் அந்த மரத்தருகே வந்தபோது மரம் மகிழ்ச்சி ததும்ப இலைகளை அசைத்து வரவேற்றது. வழக்கம் போல விளையாட வா என்று அழைத்துவிடாதே; எனக்கும் வயதாகிவிட்டது. மன அமைதிக்காக கடலில் பிரயாணம் செய்து திரும்ப ஆசைப்படுகிறேன். எனக்கு ஒரு படகு தந்து உதவ முடியுமா? உன்னால்,என்றான். எனது அடிமரத் தண்டுப்பகுதி உனக்குப் படகு செய்ய உதவும்;வெட்டி எடுத்துக்கொள் என்றது மரம். மரம் சொன்னபடியே உயரமான பெருத்த தண்டுப்பகுதியை வெட்டி எடுத்துப் ப‌ட‌கு செய்து கொண்டான். நேர்த்தியான‌ ப‌ட‌கில் சொகுசான‌ கட‌ற்ப‌ய‌ண‌த்தை மேற்கொண்டான். நீண்ட‌ நாளாகியும் இவ‌ன் வ‌ராத‌ ஏக்க‌த்தில் ம‌ர‌ம் சோக‌மாக‌ இருந்த‌து.
அதன் பிற்கு பலவருடங்கள் கடந்து ஒருநாள் அந்த மரத்தை நாடி வந்தான். அவனைப் பார்த்ததும் மரத்திற்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், அவன் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கவனித்தமரம்,”இந்தத் தடவை உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமே இல்லை. என்னிடம் பழங்கள் இருந்தபோது பழங்கள் கொடுத்து உதவினேன். உனக்கு வீடு கட்ட என் உடம்பில் இருந்த கைகள் போன்ற வாது, கிளைகள் என்றுஅனைத்தையும் நான் இழந்தாலும் பரவாயில்லை என்று உனக்காகக் கொடுத்தேன். இறுதியாக எனக்கு நம்பிக்கையும் தும்பிக்கையுமாக இருந்த பெருத்த தண்டுப்பகுதியை நீ,சொகுசாகக் கடற்பயணம் செல்லக் கொடுத்து உதவினேன்.
இப்போது உனக்குக் கொடுக்க ஒன்றுமில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. உன் வாட்டம் போக்க‌ என்னிடம் ஏதுமில்லையே; நீ,ஆசையாக உண்ணக் கொடுக்க பழங்கள் கூட இல்லையேஎன்று மரம் கண்ணீர் வடித்தது.
“நீ, க‌வ‌லைப்ப‌ட‌வேண்டிய‌தில்லை; க‌ண்ணீர் வ‌டிக்க‌ அவ‌சிய‌மும் இல்லை. ப்ழ‌ங்க‌ளைச் சுவைக்க‌ இப்போது என‌க்கு ப‌ற்க‌ள் கூட‌ இல்லை! நீ,கிளையோ தண்டுப்பகுதியோ கொடுத்தால் கூட அதைச் செதுக்கிச் செய்கின்ற தெம்பு துளியும் என்னிடம் இப்போது இல்லவே இல்லை. முன்பு போல உன் மீது ஏறி விளையாட என் முதுமை இடங்கொடுக்கப்போவதுமில்லை” என்றான். ”நீ வாடி வந்தபோதெல்லாம் வதங்கிய உன் முகம் சிரிப்பைச் சிந்தும் அளவுக்கு என்னால் இயன்றதைக் கொடுத்தனுப்பிய எனக்கு, இன்று வாடிப்போய் வந்துள்ள உனக்குக் கொடுக்க‌ ஒன்றுமில்லை என்பதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது,”என்று மரம் மீண்டும் கண்ணீர் வடித்தது.
“எனக்கு இப்போது அதிகமாக எதுவும் தேவையில்லை; இத்தனை வருடங்களாக ஓடியாடிக் களைத்துப்போயிருக்கிறேன். கொஞ்சம் ஓய்வு எடுக்க ஒரு இடம் தேவை. கவலை கவலை வேண்டாம், நீ,வெட்டி எடுத்தது போக என் அங்கத்துக்கு பங்கமானாலும் அடிமரம் வேர்ப் பிடிப்போடு இன்னும் உயிரோடு நானிருப்பதால் உன‌க்கு உத‌வ‌க் காத்திருக்கிறேன். நீ, என் மீது தாராள‌மாக‌ உட்கார்ந்து இளைப்பாற‌லாம்”என்று மர‌ம் சந்தோச‌மாக‌ அவனிடம் சொன்னது.
அவனும்,”அப்பாடா…என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த அடிமரத் துண்டின் மீது அமர்ந்தான். அவன் நிம்மதியாக, ஓய்வாக, எந்தவிதமான கவலையுமே இல்லாமல், சுமைகளை எல்லாம் இறக்கிவைத்தது போல கண்கள் மூடி இருக்க‌ அமைதியாக அவனிருந்ததைப் பார்த்து அந்த மரமும் ஆனந்தக் கண்ணீர் விட்டது!
எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அந்த மரம் தனக்குச் செய்த உதவிகளையும் அதன் ஒவ்வொரு பகுதியையும் வெட்டி தன் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொண்டபோதும்,இறுதியில் தன்னை வெறுக்காமல் வந்தமர இடமளித்ததை எண்ணி,ஆனந்தக் கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட உட்கார்ந்திருந்தான்!
.
(1964ல் “செல் சில்வர்ச்டெய்ன்” என்பாரால் எழுதி வெளியிடப்பட்ட இந்தக் கதை பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட சிறுவர் கதை. இதே கதையை இவ‌ர் பாட‌லாக‌வும் எழுதி “பாபி பேர்” என்பார் இனிய‌ குர‌லால் பாடிய‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.
இந்த‌க் க‌தையினை குறும்ப‌ட‌மாக‌ 2010ல் இசுபெக் ஜோன்சு “I’m here” என்ற‌ த‌லைப்பில் ஒரு குறும்ப‌ட‌மாக‌ எழுதித் தயாரித்து வெளியிட்டார். இந்த‌ச் சிறுக‌தை சிறுவர் படக்கதைப் புத்தகமாக,ஆல்ப‌மாக‌,பாட‌லாக‌,கவிதைத் தொகுப்பில் என்று ப‌ல்வேறு ப‌ரிமாண‌ங்க‌ளில் உல‌கை வ‌ல‌ம் வ‌ந்த‌ சிறுவ‌ர் க‌தையை த‌மிழில் த‌ர‌வேண்டும் என்ற‌ ஆவ‌லில்…!)
- தமிழண்ணா

source katturai
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum