தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்

Go down

நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்  Empty நிலம் உயர்ந்திருக்கும் மரம் -கனடா.திருமாவளவன்

Post by இறையன் Wed Feb 15, 2012 11:11 pm

பறவைகள் எல்லாம் போய்விட்டன
இலைகளை உதிர்த்துவிட்ட மரங்களில்
பூத்திருக்கிறது
வெறுங்கூடு
வெயில் முறுகித் திரைந்த காலத்தில்
கொட்டுகிறது
அடைமழை
கொம்பரிலிருந்து அவிழ்ந்து தொங்கும் நீளக்கூந்தல்
காற்றில் அலைய சதிராட்டம் போடுகிறது
வில்லோ மரம்
சிலிர்த்துக் கிடக்கின்றது மலைச்செவ்வந்தி
பூக்களை முகர்ந்து செல்ல
சிறு வண்ணத்து பூச்சி கூட
இல்லை
நாக்கைத் தொங்கவிட்டபடி
உலாவத் தொடங்கிவிட்டது
குளிர்
கதவை மூடி
கணப்பியை முடுக்கி
வெளியை வேடிக்கை பார்க்கிறேன்
பருவம் அறிந்து
முற்றத்துத் தோட்டத்தில்
டூலிப்ஸ் முகிழ்களை புதைக்கிறாள்
என் மகள்


இது அவளது நிலம்.



நிறைந்திருக்கும் பறவைகளால் உயிர்த்திருக்கிறது
மரம்
ஒவ்வொரு தடவையும் சிறகடித்து
எழுந்து
அவை மீளவந்து அமரும்போது
இலைகளை உதிர்த்து
புதுத்துளிர் எறிகின்ற உணர்வெழுகிறது.
கூடுமுடைந்து
இணைகூடி
கலவுங்காலத்தில்
பூத்துச் சிலிர்க்கின்ற உற்சாகம்
தொற்றிக் கொள்கிறது
குஞ்சுகளோடு
அவை குரலெடுத்துப்பாடும் காலை
மெய்கிறங்கிச் சுகிக்கிறது
கொடுங்கோடையிலே
குளம் வறள
அவை இரைதேடி அலைகையில்
மனம்சோம்பித் துவழ்கிறது
நிறைந்திருக்கும் பறவைகளால்
இன்றும்
உயிர்ப்போடிருக்கிறது
பட்டமரம்


நினைவுகள்
பெரும் சோலைக் காடு
ஞாபகக் கோடரியை தீட்டித் தோளில் சுமந்தபடி
இருள் வனத்தில் அலையும்
நினைவு வெட்டி
நான்


வனத்தின் அழகு
ஒலியின் மெல்லிய ரீங்காரம்
அதனைப் புறந்தள்ளி
மனதைச் சுண்டியிழக்கிறது
ஒரு தாய்க் குருவியின் துயர் நிறை பாடல்
குந்தியின் சரிதம்


அவளென் நினைவுக் கானகத்தின் முதுமரம்
வனநீலி


தன் ஐந்து குஞ்சுகளுக்கும் உணவு தேடி
அலைந்த கதையைச் சொல்லும் போதில்
நாடோடியின் புல்லாங்குழலின் பிரவாகம் எழுந்து
மனதைப் பிழிந்து செல்கிறது


கொடிய விலங்குகளிடமிருந்து தன் குஞ்சுகளை
பொத்திக்காத்த கதை பறைகையில்
எழுகிறது
காட்டுப்புயலின் பேரோசை
கானகம் நடுங்க


மௌனம் கனத்த நெடுநீளப் பொழுதுகளில்
அதை அழித்து
இளமை நினைவினை மீட்டுவாள்
சுண்டி இழுக்கும்
ஈர இரவின் ஒற்றைப் பறையொலியில்


வசமிழந்து போகிறேன்


எப்போதாகிலும் அருந்தலாய்
தன் மகிழ்வைப் பாடும் கணங்களில்
மோனக் கடலின் மெல்லிய அலையொலி
மனதை வருடும்

இன்று
பனிப்புலத்தில் உழலும் வனவாசி நான்
தினமும் அலைகிறேன் நினைவுக் கானகத்தில்
துயருறு கனங்களை மீட்டி
எழுகிறது
தாய்க்குருவியின் பாடல்


வாழ்நாள் முழுவதும்
தன் சந்ததிக்கென்றே உழன்றவள்
பொத்தி வைத்திருக்கமாட்டாளா ?


ஒரு துண்டு சேதி
சிறு பொறி ?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum