தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கைமேல் பலன் தரும் மாவிலங்கம்...-மருத்துவர்.அருண் சின்னையா

Go down

கைமேல் பலன் தரும் மாவிலங்கம்...-மருத்துவர்.அருண் சின்னையா  Empty கைமேல் பலன் தரும் மாவிலங்கம்...-மருத்துவர்.அருண் சின்னையா

Post by இறையன் Mon Feb 20, 2012 4:02 pm

பாவனை செய்யுங் கள். நல்ல எண்ணங் களைக் கொண்டிராவிட் டாலும், நல்லெண்ணங் களின் அடிப்படை யிலேயே இருப்பதாய் பாவனை செய்தால், கடைசியில் பாவனை நம்மிடையே பதிவுகளை உண்டாக்கி நல்லவர் களாக்கிவிடும். பேச்சிலும், வேண்டாத விவாதங்களிலும், தேவையற்ற பொழுது போக்கிலும் நமது ஜீவனைக் கரையவிடக் கூடாது. நாம் சேர்க்க வேண்டியது நமது ஜீவனை மட்டும்தான்.

பல்லாயிரம் கோடி அணுக்களால்- பஞ்சபூதக் கூட்டுறவால் அமையப் பெற்ற இந்த ஸ்தூல உடம்பு, பிறந்த அன்றே அழிவின் ஆரம்பத்தைத் தொட்டுப் பயணிக்க ஆரம்பிப்பதை நாம் உணரவேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் நடிக்க வந்திருக்கிறோம். நமது பாத்திரத்தின் வேலை முடிந்துவிட்டால் அப்புறம் நமக்கு இந்த உலகம் சொந்தமில்லை.

இங்கே இருக்கும் வரை உயிர்ப்புடன் வாழ பழகிக் கொள்வோம். நமது அன்றாட வாழ்க்கையில் ஓரிடத்தில் அமர்ந்து ஒருசில மணித்துளிகள் உள்முகமாய் பயணிப்போம்; தியானிப்போம். அகமுக யாத்திரையே நம் நுண்ணுணர்வை மேம்படுத்தும் வழியாகும்.

நுண்ணுணர்வு மட்டுமே நம்மை இவ்வுலகில் நிலைநிறுத்தும். நம்மிடையே நுண்ணுணர்வு நிரம்பி வழிந்தால்தான் பிறருக்கு பயனுள்ளவர்களாய் இருப்போம். இயற்கையும் இறையும் நுண்ணுணர்வுகளால் ஆக்கப்பட்டது. இயற்கையில் விளையும் உணவுப்பொருட்களில் உள்ள திறனே நுண்ணுணர்வாகும். அதுவே இறையாகும்.

மானுடன் நுண்ணுணர்வைப் பெற்று, இறையின் தன்மையை உணரும் பொருட்டே தாவரங்களும் மூலிகைகளும் நம்மிடையே பயணித்துக் கொண்டிருக்கின்றன. நடமாடும் இறையே மூலிகையென்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் சிவனின் அருள் பெற்ற மாவிலங்கம், நம் உடலின் ஊடே ஒவ்வொரு அணுக்களிலும் திறனை விரவி, நுண்ணுணர்வை விதைக்க வந்துள்ள அற்புத மூலிகையாகும். மாவிலங்கத்தை நாம் அந்த மகாலிங்கமாகவே பாவனை செய்வோம்; சரணடைவோம்; பலன் பெற முனைவோம்.

கைமேல் பலன் தரும் மாவிலங்கம்...மாவிலங்க இலைகளை அரைத்துப் பற்றுப்போட வீக்கங்கள் கரையும்.

மாவிலங்கச்சாறு, தேங்காய்ப்பால் வகைக்கு 30 மி.லி. கலந்து கொடுத்தால் மூட்டுவலி உடனே தீரும்.

மாவிலங்க இலைகளை வாழைத்தண்டு சேர்த்தரைத்து கொப்புளங்களில் பற்றுப்போட்டால் கொப்புளங்கள் குணமாகும்.

மாவிலங்க இலைகளை உலர்த்திப் பொடியாக்கி, அதை புகையச் செய்து, அப்புகையை நுகர்ந்தால் மூக்குப் பிணிகள் அனைத்தும் தீரும்.

மாவிலங்க இலைகளை அரைத்து பாதங்களில் பற்றிட்டால் பாத எரிச்சல், பாதவலி போன்றவை விலகும்.

மாவிலங்கப் பட்டையை சிதைத்து, அத்துடன் சிறிது பார்லி அரிசியையும் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாய்ப் பிரியும். சிறுநீர் வியாதிகள் அனைத்தும் தீரும்.

உடல் பருமனைக் குறைக்க...

மாவிளங்கப்பட்டை, அசோகம்பட்டை, கருஞ்சீரகம், தென்னம்பாளை, சோம்பு, ஆவாரம்பூ ஆகியவை வகைக்கு 100 கிராம்; சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை வகைக்கு 25 கிராம்; லவங்கப்பட்டை, கறிவேப்பிலை வகைக்கு 50 கிராம்- இவையனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் விரைவில் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடும். இம்மருந்து பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாய்ப் பயன்படும். முறையற்ற மாதவிடாய், தாமதித்த மாதவிடாய், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு போன்ற குறைபாடுகளை முற்றிலுமாய் குணப்படுத்தும்.

சகல வாதநோய்களும் விலக...

மாவிலங்கப்பட்டை, வாதநாராயணா இலை, முடக்கத்தான், நொச்சியிலை, சித்திரமூல வேர்ப்பட்டை, தனியா, சுக்கு, மோடிக்குச்சி, சித்தரத்தை ஆகியவை வகைக்கு 100 கிராம்; ஓமம், சதகுப்பை, தேற்றான் கொட்டை ஆகியவை வகைக்கு 50 கிராம்; மிளகு, திப்பிலி, ஏலக்காய், லவங்கப்பட்டை, பேரீச்சங்காய் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் உணவுக்குப்பின் இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு- நோய் மற்றும் வயதின் தன்மையறிந்து கொடுத்து வந்தால் முகவாதம், நடுக்கவாதம், பக்கவாதம், பாரிசவாதம், கழுத்து, இடுப்பு, முதுகுத்தண்டு ஆகியவற்றில் உண்டாகும் வலிகள், மூட்டு வீக்கம், மூட்டுவலி, பாதவலிகள் போன்ற அனைத்தும் முற்றிலுமாய் விலகும்.

சருமநோய்கள் விலக...

மாவிலங்கப்பட்டை, பறங்கிப்பட்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு, ஆவாரம்பூ வகைக்கு 100 கிராம் வாங்கி தனித்தனியே பசும்பால் விட்டவித்து, உலர வைத்து பிறகு ஒன்றாக்கித் தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை- மாலை இரு வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், சருமத்தைப் பற்றிய படை, நமைச்சல், சொறி, தவளைச்சொறி, சிறங்கு, ரத்தச் சீர்கேட்டால் வரும் அனைத்து சருமப் பிணிகளும் முறையே தீரும்.

மாவிலங்க இலையுடன் சமஅளவு கீழாநெல்லியும் சேர்த்து, சிறிது மஞ்சளும் கலந்தரைத்து உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், எப்பேர்ப்பட்ட தேக அரிப்பும் சரும நோய்களும் முற்றிலுமாய் குணமாகும்.

ஆஸ்துமா குணமாக...

மாவிலங்கப்பட்டை, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி ஆகியவை வகைக்கு 100 கிராம்; மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், சதகுப்பை ஆகியவை வகைக்கு 25 கிராம் எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டியளவு பொடியை எடுத்து, நான்கு டம்ளர் தண்ணீரிவிட்டு ùôகதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். பின்னர் வடிகட்டி, பனங் கற்கண்டு சேர்த்து, காலை- மாலை- இரவு மூன்று வேளையும் குடித்து வந்தால் சளி, இருமல், தும்மல், தலைவலி, தலைபாரம், முக்கடைப்பு, வறட்டு இருமல், மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு போன்ற கோளாறுகள் குணமாகும். ஆஸ்துமாவை முழுமையாக விரட்டும் அற்புத சிவமூலிகை மாவிலங்கம் என்றால் அது மிகையில்லை.

சிறுநீரகக் கற்கள் கரைய...

மாவிலங்கப்பட்டை, சிறுபீளை, நெருஞ்சில்முள், சீரகம், சோம்பு, நிலவேம்பு, நீர்முள்ளி, நன்னாரிவேர்ப்பட்டை, சாரணைவேர் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கி ஒன்றிரண்டாய் சிதைத்து வைத்துக் கொள்ளவும். இதில் 50 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். இதில் 60 மி.லி. அளவு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், சிறுநீரகக் கற்கள் அனைத்தும் 15 தினங்களில் முழுமையாய் கரைந்துவிடும். இம்மருந்தினை உட்கொள்ளும்போது, அசைவம் முற்றிலுமாய்த் தவிர்க்க வேண்டும். இரவு நெடுநேரம் கண்விழிக்கக் கூடாது. சிறுநீரகத்தை வலுப்படுத்தி நமது ஆயுளை வளப்படுத்தும் மாவிலங்கம் என்றென்றும் போற்றலுக்கு உரியது.

இதயநோய்கள் குணமாக...

மாவிலங்கப்பட்டை, மருதம்பட்டை, ஆவாரம்பட்டை, ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ ஆகியவை வகைக்கு 100 கிராம்; சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சதகுப்பை, லவங்கப்பட்டை ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்து, அனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனைக் கஷாயமிட்டு தினமும் காலை- இரவு இரண்டு வேளையும் குடித்துவந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படும். இதயம் சார்ந்த நோய்கள் அனைத்தும் கட்டுப்படும். ரத்த அழுத்தம் தீரும். நரம்பு மண்டலத்தை வலுவாக்கி, உடலுக்கு ஊட்டம் தரும். நற்சிந்தனை மேலோங்கும்.

நீங்கா உடல் நலம் என்றும் நல்கும் நடமாடும் சிவமூலிகையாம் மாவிலங்கம்- சிவனின் அம்சமாக நம்முடனே இருந்து நம்மை வழிநடத்தும்.

source:nakkeeran.in

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum