தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன்

Go down

ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன் Empty ஒரு டாக்ஸி ட்ரைவரின் பிரார்த்தனை-வெங்கட் சாமிநாதன்

Post by இறையன் Fri Mar 16, 2012 3:09 pm

1958 லிருந்து 1961 வரை மூன்று ஆண்டுகளாக, ஜம்மு வென்றும் ஸ்ரீநகர் என்றும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாறி மாறி மூட்டை கட்டுவதும் இருக்க இடம் தேடி மூட்டை அவிழ்ப்பதும் என்ற தொல்லை ஒரு வாறாக முடிந்து புது தில்லி வந்து ஆயிற்று. இப்போது தில்லித் தலைமையகச் சூழலுக்குப் பழகிக் கொள்ள வேண்டும். இப்போது நிம்மதியாக இங்கு வந்து உட்கார்ந்த பிறகு, ஜம்மு-ஸ்ரீநகர் என்ற அலைச்சலும் இப்போது நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு சின்ன சாகஸ வாழ்க்கையாகவும் ரம்மியமாகவும் தான் மனது அசை போட்டது. பஹால் காம் முகாமை விட்டு தூரத் தள்ளி ஒரு ஒடையின் கரையில் உட்கார்ந்து கொண்டால், பக்கத்து கிராமத்திலிருந்து குழந்தைகள் ஓடி வந்து விடும் கும்மாளமடித்துக் கொண்டு. அந்த மாதிரி சந்தோஷம் தில்லியில் கிடைக்குமா என்ன? ஆக, புதிதாகக் கிடைத்துள்ள இந்த நிம்மதி சுவாரஸ்யமற்ற சத்தற்றதாகத் தோன்றுமோ பின்னால் நினைத்துப் பார்ப்பதற்கு? சாத்தியமில்லை. சுவாரஸ்யமாக்கிக் கொள்வதற்கு தில்லியில் நாம் பிரயாசை செய்ய வேண்டியதில்லை. சுவாரஸ்யங்கள் தானாகத் தேடி வரும்.


அலுவலகச் சூழல் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. முன்னர் ஜம்மு கஷ்மீரில் ஒரு குடும்பமாக அலுவலக அதிகாரிகளோடும் சக பணியாளர்களோடும் இருந்தது போக (குடும்பத்துள்ளும் எரிச்சல், சண்டை, ஒத்துப் போகாமை எல்லாம் இருக்கும் தானே!) இங்கு நான் ஒரு சிறுபான்மையினனாகி விட்டேன். இங்கு பஞ்சாபிக் கூட்டம் அதிகம். எத்து வேலைகளில், கொஞ்சம் இளைத்தவன் மேலேறி சவாரி செய்வதில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் ஓரினமாகக் கூடி விடுவார்கள். ஏற்கனவே பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஒன்றாக இணைந்து விட்டால் கேட்கவா வேண்டும்.? தமிழர்கள் அப்படியில்லை. அவர்கள் நாமுண்டு நம் காரியமுண்டு என்ற தன்னையே சுற்றி உருவாக்கிக்கொண்ட உலகில் சுகம் காண்பவர்கள். முடிந்தால் யாராவது ஒண்றிரண்டு பஞ்சாபிகளுடன் ஒத்துழைத்துத் தன் பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள். இந்த 'ஒத்துழைப்பு' க்காகவும் 'கோழைத்தனத்துக்காகவும்" 'மதராஸிகள்" மிகவும் வேண்டப்பட்டவர்கள். " மதராஸி யார், படா ஷரீஃப் ஆத்மி யார், கோயி ஃபிகர் நஹி" ( இவன் மதராஸி அல்லவா. நல்ல மனிதன். நாம் கவலைப்படவே வேண்டாம்) என்று ஒரு பஞ்சாபி இன்னொரு பஞ்சாபியிடம் சொல்லி விட்டால் போதும் அது ஒரு நன்னடத்தைப் பத்திரம் என்று பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நிம்மதியடையும் வர்க்கம். இப்படி ஒரு நன்னடத்தை பெறாத மதராஸிகள் ' ஸாலா மதராஸி' ( ஸாலா ஒரு கெட்ட வார்த்தை) தான். இந்த பத்திரமும் பரவலாக பரப்பப்படும். ஆனால் வேலை என்று வந்து விட்டால், 'யார் ஜரா பதா தே யார்" ( மச்சி, சொல்லிக் கொடு மச்சி!) என்று இழைய ஆரம்பித்துவிடுவார்கள்.


இவர்களிடையே வாழ வேண்டும். இங்கும் கூட்டணிகள் அமையும், கலையும். எப்போது யார் எந்த கூட்டணியில் என்பது நிச்சயமில்லை. கிட்டத்தட்ட தமிழ் நாட்டுக் கூட்டணியை மாதிரியாகக் கொள்ளலாம். எப்போது யார் 'வேட்டியை உருவிக் கொள்கிறவர்" 'தலைவர்" ஆவார் என்பது தெரியாது.


நான் புதிய ஆள். யார் கூட்டணியிலும் இல்லை. 'ஸாலா பன்தா ஹை, டிக்கானே பே லானா படேகா' ('ரொம்பவும் தலைக் கிறுக்கு, வழிக்குக் கொண்டு வரணும்") என்று சொல்லிக்கொள்வதாகக் காதில் விழுந்தது. ஆனால் நான் என்பாட்டுக்கு கேன்டீன் என்றும் லைப்ரரி என்றும் சுற்றிக்கொண்டிருந்தேன். நிரந்தரமாக வேலை ஒன்றும் ஒதுக்கப்படவில்லை. தலைமையகத்தில் புது ஆட்களுக்கு அது ஒரு சௌகரியம். பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவனை யாரும் ஏதும் செய்துவிடமுடியாது. விலாங்கு மீன் அது. எப்படிப் பிடிப்பது? வலையில் விழுந்தாலும் பிடித்துக் கூடையில் போடுவதற்குள் நழுவி விடும்.


இன்னும் இரண்டு தமிழர்கள். அவர்கள் இருவரும் பெரிய அதிகாரிகளிடம் பொறுப்பாக இருப்பவர்கள். பெரிய அதிகாரி என்றால் இயக்குனருக்கு அடுத்த படியில் இருப்பவர். ஒரு வங்காளி. நச்சுப் பிடித்த மனிதன். கோபப்பட்டுப் பார்த்ததில்லை. மிக அமைதியாக, மெதுவாகத் தான் பேசுவான். "இரு உனக்கு வச்சிருக்கேன். உன்னைக் கொத்துக் கறியாக்கிட்டுத் தான் மறுவேலை" இதை மிக அமைதியாக சன்னக் குரலில் முகத்தில் புன்னகையுடன் சொல்லிப் பார்த்துக்கொள்ளணும். பயிற்சி செய்ய வேண்டும். அது தான் அந்த வங்காள அதிகாரி, பரிமள் கோஷ். மனுஷன் வாட்டி எடுப்பான்,. அவனிடம் வேலை செய்யும் இந்த இரு தமிழர்களும் ரொம்ப வருஷங்களாக இருப்பவர்கள். அதில் ஒருவன், கிருஷ்ணமூர்த்தி மிகவும் நல்ல உழைப்பாளி. எவ்வளவு வருத்தினாலும் தன் அறைக்கு வந்து தான் வேதனைப் பட்ட முகத்தைக் காட்டுவான். இதெல்லாம் நான் தில்லித் தலைமையகத்திற்கு வந்த போது இருந்த நிலை. சொல்ல வேண்டியதில்லை. எனக்கும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம். அவ்வப்போது கிருஷ்ணமூர்த்தி வேலை அதிகம் இருப்பதாகத் தெரிந்தால், நான் கேட்டு உதவி செய்வேன். சும்மா சுற்றிக் கொண்டிருந்தவன் தானே. வேண்டாம் சாமிநாதன், என் தலைவிதியை நான் தானே அனுபவிக்க வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி சொன்னாலும், 'பேசாம இருய்யா, உன் வேலையைப் பாரு" என்று நாம் பாட்டுக்கு நம்மை அவன் பேரில் சுமத்திக் கொண்டால் ஒன்றும் சொல்ல மாட்டான். "வேக் யார் மதராஸியானு" ( பாத்தியா, மதராசிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்வதை!) என்று பஞ்சாபிகளின் கேலிப் புன்னகை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கொண்டாலும், அவர்களிடமும் அவ்வப்போது 'ஸாலா ஹராம்ஜாதா" ( தேவடியாளுக்குப் பிறந்தவன்) என்று கோஷையும் திட்டுவார்கள்.


நான் தலைமையகத்தில் சேர்ந்த போது, கிருஷ்ணமூர்த்தி கிட்டத்தட்ட ஒரு வருஷ காலமாக சென்னைக்கு மாற்றலுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தியின் ஏழு வயதுப் பையனுக்குக் கால் சரியில்லை. போலியோ மாதிரி. டெல்லி ஹாஸ்பிடல் எல்லாவற்றிலும் போய்ப் பார்த்தாயிற்று. எங்கும் குணமடையவில்லை. தற்செயலாக பாண்டிச்சேரியிலிருந்து வந்த ஒரு உறவினர் பாண்டிச்சேரியில் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும் அவர் இது போன்ற கேஸ்களை குணப்படுத்தியிருப்பதாகவும் சொல்லி, கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை விடுமுறையில் சென்று அந்த மருத்துவரைப் பார்த்திருக்கிறான். அவர் தன்னிடம் இருந்து இருவருடங்கள் சிகித்சை செய்து கொண்டால் குணமாகி விடும் என்று சொல்லியிருக்கிறார். அவனுக்கு நம்பிக்கை தரும்படி ஏதோ நடந்தும் இருக்கிறது. அதிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிப் போனால் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கே மாற்றம் செய்து கொள்ளலாம். அதற்கும் அவன் சென்னைக் கிளையில் இருந்த அதிகாரியைப் பார்த்துப் பேசியிருக்கிறான். அவரும் உதவுவதாகச் சொல்லவே திரும்பி வந்ததிலிருந்து சென்னைக்குத் தன்னை மாற்றக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான். நடந்த பாடில்லை. கோஷ் ஒரு வார்த்தை சொன்னால் போதும். நடந்து விடும்.


ஆனால் கோஷுக்குக் கிருஷ்ணமூர்த்தி மாதிரி பணிவோடும் முகம் சுளிக்காமலும் வேலை செய்யும் ஆளை விட்டு விட இஷ்டமில்லை. என்னென்னவோ சாக்குகள் சொல்லிக் கொண்டு வந்தான். முதலில் 'பார்க்கலாம்" 'பார்க்கலாம்" பின்னர், இந்த 'க்ரைசிஸ்' முடியட்டும் என்பான். அந்த தேசீய பிரச்சினை என்னவோ கோஷும் கிருஷ்ணமூர்த்தியும் தான் தீர்ப்பவர்கள் போல. ஏதோ சொல்லிச் சமாளிப்பான். விஷயம் என்னவோ, கிருஷ்ணமூர்த்தி இல்லாமல் எந்த வேலையும் நிற்கப் போவதில்லை. ஆனால், கிருஷ்ணமூர்த்திக்கும் கோஷுக்கும் இடையே ஏதோ பந்தம் இருப்பது போலவும் அது அறுந்து விட்டால், இருவர் வாழ்க்கையும் சிதைந்து போய்விடும் போலவும் பாவனை செய்து கிருஷ்ணமூர்த்தியை, தன் அதிகார மூர்க்கத்தனத்திற்கு இரையாக்கி அவன் தவிப்பதைப் பார்த்து உள்ளூர ஏதோ அதில் மகிழ்ச்சி காண்பது போலவும் தான் தோன்றிற்று. "நான் வந்து கோஷிடம் சொல்லட்டுமா, கிருஷ்ணமூர்த்தி? நான் உன்னிடத்தில் வேலை செய்கிறேன். கிருஷ்ணமூர்த்தியை சென்னைக்கு அனுப்புங்கள் என்று? " என்று கேட்டேன். அதெல்லாம் ஒன்றும் நடக்காது சாமிநாதன். அனுபவம் போறாது என்பான். பெரிய இடம் என்பான். எத்தனையோ சொல்வான் அவ்வளவும் எடுபடும்". "அப்படியானால் டைரக்டரிடம் போய்ச் சொன்னால் என்ன? என்று கேட்டேன். "நீ கத்துக் குட்டிங்கிறது சரியாத்தான் இருக்கு. கோஷை மீறி டைரக்டரிடம் போனால், அது நடத்தை மீறலாகும். 'கோஷிடமிருந்து பேப்பர் வந்தால் உடனே நான் ஆர்டர் போட்டுடறேன்" என்பான். பிரச்சினையே கோஷ் தானே" என்றான். இதற்கு வேறே வழிதான் என்ன என்று தெரியவில்லை.


உன்னோட அப்பாவை டைரக்டருக்கு எழுதச் சொல். அவர் மேலே டிஸிப்ளினரி நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாது. என் பேரன் உயிர் உங்க கிட்டதான் இருக்கு. காப்பாற்றுங்கன்னு எழுதச் சொல்லு. என்று கடைசியில் நாங்கள் எல்லோரும் அவனிடம் சொன்னோம். அட்ரஸை அவரே எழுதட்டும். மொட்டையா டைரக்டர்......இலாக்கா, புது தில்லி ன்னு எழுதட்டும். எப்படியோ சுத்திச் சுத்தி வந்து சேர்ந்துடும். நீ சொல்லி எழுதலே, அப்பாவே எழுதினார்னு இருக்கும்" என்று என்றும் ஒரு வழி சொன்னோம்.


"என்ன கிருஷ்ணமூர்த்தி, அப்பாக்கு எழுதினியா, அவர் எழுதினாரா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் ஆனால், அவன் எதற்கோ பயப்பட்டுக் கொண்டிருந்தான் போலத் தோன்றிற்று. "அப்பா என்ன எழுதுவாரோ, டைரக்டர் அதப் பாத்துட்டு இதெல்லாம் என்ன வேலை, இதென்னா ஆபீஸா இல்லே... வேறே ஏதாவதா, என்ன நினைச்சிண்டிருக்கேன்னு" கத்தலாமில்லியா என்று சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் எங்களுக்கும் அலுத்துவிட்டது. என்ன சொன்னாலும், நடப்பது தான் நடக்கும் என்று இருந்தோம் என்று சொல்ல வேண்டும்.


ஒரு நாள் கோஷின் அறையிலிருந்து வந்தவன், சந்தோஷமாக, 'சாமிநாதன் என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டான். சத்தம் கேட்டு எல்லோருமே கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தார்கள். "லக்தா ஹை காம் ஹோகயா. ஹை நா மூர்த்தி? ( உன் காரியம் நடந்துவிட்டது போலிருக்கிறதே, அப்படித்தானா, மூர்த்தி?)என்று கேட்டார்கள். அவனும் சந்தோஷமாகத் தலையாட்டினான்.


நடந்த கதையைச் சொன்னான். சொல்லச் சொல்ல எங்களுக்குக் கோபம் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம். டைரக்டர் கோஷைக் கூப்பிட்டு 'இது ரொம்ப பரிதாபமான கேஸ் போல இருக்கே. உங்களுக்கு முழு விவரமும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நாம் உதவினால் என்ன?" என்று அப்பாவின் கடிதத்தில் டைரக்டரின் குறிப்போடு கோஷுக்குப் போயிருக்கிறது. கோஷ் கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு, " சமயம் வரும்போது உனக்கு உதவுகிறேன் என்று சொன்னேன் இல்லியா? நீ ரொம்பவும் அவசரப்பட்டாய். இப்போது தான் சமயம் வந்திருக்கிறது. அட்மினிஸ்ட்ரேஷனுக்கு எழுதிவிட்டேன். உன் மாற்றல் ஆர்டர் கிடைத்துவிடும். சந்தோஷம் தானே" என்று வசனம் பேசினானாம். நன்றி சொல்லிவிட்டு வந்தேன் என்று கிருஷ்ணமூர்த்தி சொன்னான். எல்லோருக்கும் சந்தோஷம். 'ஸாலா அப்னா ரங்க் திகா தியா நா? ("கடைசியில் அவன் சுய ரூபத்தைக் காட்டிவிட்டான் பார்") என்று அவர்கள் கூச்சல் போட்டார்கள்.


கொஞ்ச நாட்கள் சென்னை போகும் முஸ்தீபுகளில் கழிந்தன. சாமான்களைக் கட்டுவதற்கும், ரயில் ரிசர்வேஷனுக்கும் என்று அலைந்து கொண்டிருந்தான். இடையில் கோஷும் அவனை சுலபத்தில் விட்டு விடவில்லை. கடைசி நாள் வரைக்கும் ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருந்தான். பிரயாணத்தன்று மாலை நான்கு மணி வரை. என்ன மனுஷன்? இப்படியும் கடவுள் மனிதர்களைப் படைத்திருக்கிறானே என்று வெறுப்பாக இருந்தது. கிருஷ்ணமூர்த்தியை, " சம்ச்சா" என்று அவனைக் கேலி செய்த பஞ்சாபிகள் கூட, அவர்களுக்கு அவர்கள் கூட்டத்தில் இல்லாதவர்கள் எல்லோருமே 'சம்ச்சா" தான் இல்லாவிட்டால் வேறு ஏதாவது ஒன்று, இப்போது அவனை ஒன்றும் சொல்வதில்லை. இரக்கத்தோடேதான் பார்த்தார்கள். அன்று மாலை கிருஷ்ணமூர்த்தி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டான். 'பச்சா டீக் ஹோ ஜாயகா யார், து ஃபிகர் ந கர்" (கவலைப் படாதே. குழந்தை சரியாகி விடும்) என்று விடை கொடுத்தார்கள். நடேசன், கிருஷ்ணமூர்த்தியோடு கோஷிடம் வேலை பார்ப்பவன், எட்டு மணிக்குக் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்து ஸ்டேஷன் வரை வந்து வழியனுப்புவதாகச் சொன்னான். "இப்பவே வரலாம். ஆனா, கோஷ் விடமாட்டான்" என்றான்.


மறு நாள் காலையில் நடேசன் வந்ததும் தன் வேலையில் மும்முரமானான். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டு ஸ்டேஷனுக்குப் போனானா, மூர்த்தி சௌகரியமாகப்போய்ச்சேர்ந்தானா என்று விசாரித்தார்கள். "ஊம். ஒன்றும் கஷ்டமிருக்கவில்லை. எல்லாம் நல்லபடியாக நடந்தது" என்று தன் வேலையில் மும்முரமானான். அதிகம் ஒன்றும் பேசவில்லை. பிறகு மதியம் சாப்பாட்டு இடைவேளயின் போது, "இப்போ கேளுங்க சொல்றேன் என்று ஆரம்பித்தான்.


"ராத்திரி எட்டு மணிக்கு மூர்த்தி வீட்டுக்குப் போனேன். அவர்கள் படுக்கை பெட்டி எல்லாம் தயாராக ஒழுங்கு படுத்தி வைத்திருந்தார்கள். அதிகம் ஒன்றும் இல்லை. மற்றதெல்லாம் கூட்ஸ் வண்டியில் ஏற்கனவே அனுப்பி விட்டார்கள். அதனால் ஒன்றும் அதிகம் சாமான் இல்லை. இரண்டு பெட்டியும் ஒரு ஹோல்டாலும் தான். நான் டாக்சி எடுத்து வந்தேன். டிக்கியில் சாமான்களை வைத்து விட்டு மூர்த்தியும் நானும் அவன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூர்த்தியின் மனைவி மடியில் படுக்க வைத்தோம். பார்த்துக் கொண்டிருந்த டாக்சி டிரைவர் அதிர்ச்சி அடைந்தவன் போலத் தெரிந்தது. குழந்தை சௌகரியமாக இருந்து கொள்ளட்டும், நீங்க ரண்டு பேரும் முன்னாலே வந்து உட்காருங்கள் " என்றான்.


போகும் போது அந்த டாக்சி டிரைவர், அவன் ஒரு சர்தார்ஜி, குழந்தையைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்தான். மூர்த்தி அவனுக்கு எல்லா விஷயத்தையும் சொல்லிக்கொண்டு வந்தான். எவ்வளவு வருஷமாக இந்த மாதிரி குழந்தை அவஸ்தைப்பட்டுக்கொண்டு வருகிறது, தில்லியில் உள்ள ஆஸ்பத்திரிகள் எல்லாவற்றிலும் உள்ள ஸ்பெஷலிஸ்ட்களையெல்லாம் பார்த்தது, நிஜாமுதீனில் ஒரு முஸ்லீம் பாபாவைப் போய்ப் பார்த்து, அந்த பாபா பிரார்த்தனை செய்தது, எந்த ஜோஸ்யர் என்ன நிவர்த்திக்காக சொன்னதை யெல்லாம், எல்லாம் சொல்லிக்கொண்டு வந்தான். கடைசியில் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒருவர் சொன்னதன் பேரில் ஆயுர்வேத சிகிச்சையையும் பார்த்து விடுவதென்று செல்வதாகவும், அலுவலகத்தில் தன் அதிகாரி போட்டு வந்த முட்டுக்கட்டையெல்லாம் திடீரென்று அப்பா எழுதின ஒரு கடிதத்தில் நிவர்த்தியானதும் தனக்கு இப்போது எல்லாம் நல்ல படியாக நடக்கும், குழந்தை குணமாகும் என்ற நம்பிக்கை வந்திருப்பதாகவும் வழி நெடுக சொல்லிக்கொண்டு வந்தான். சர்தார்ஜி மௌனமாகக் கேட்பதும், வண்டி நிறுத்தம் வந்ததும் பின் சீட்டைத் திரும்பிப் பார்ப்பதுமாக இருந்தான். கடைசியாக "கவலைப் படாதீர்கள். குழந்தையை மேலே ஒருத்தன் இருக்கானே அவன் காப்பாற்றுவான்" என்று ஆறுதல் சொன்னான். ஸ்டேஷன் வந்ததும், சாமான்களை இறக்கி விட்டு குழந்தையை இறக்கும் போது "தள்ளுங்க நான் கை கொடுக்கிறேன் என்று பத்திரமாக தன் இரு கைகளாலும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.


சென்னை போகும் ரயில் அந்நாட்களில் முதல் ப்ளாட்ஃப்பார்மில் தான் நிற்கும். உள்ளே வந்து குழந்தையை அலுங்காமல் குலுங்காமல் மிக பதவிசுடன் ஒரு சீட்டில் படுக்க வைத்தான். மிகுந்த கனிவுடன் குழந்தையைப் பார்த்து விட்டு "டீக் ஹோ ஜாயகா பேட்டா, வாஹே குரு பலா கரேகா சப்கோ" (குழந்தைக்கு குணமாகிவிடும், பகவான் காப்பாற்றுவார், மகனே!) என்று சொன்னான். "அச்சா சாஹேப் மை சல்தா ஹும். குரு மஹராஜ் கா நாம் லோ. பகவான் ஆப்கோ சுக்கி ரகே" ( சாகேப் நான் வருகிறேன், பகவான் இருக்கிறார் அவர் காப்பாற்றுவார்)என்று சொல்லி விட்டு வண்டியை விட்டு இறங்கினான். டாக்சி வாடகைப் பணம் கொடுக்கலியே, இந்த என்று பர்ஸைத் திறந்து நோட்டுக்களை வெளியே எடுத்தான். ஆனால் சர்தார் ஜி" மாஃப் கரோ சாப், (மன்னிக்கவும்) நான் உங்க கிட்டே பைசா வாங்க மாட்டேன். குழந்தை குணமாகட்டும். அது போதும் எனக்கு. அது நல்ல படியாக குணமாக வேண்டுமென்று வாஹே குருவை நான் வேண்டிக்கொள்வேன்" என்று சொல்லிக் கைகள் கூப்பியபடியே வண்டியின் படி இறங்கி விட்டான். "குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக" என்று சொன்னவன், திரும்ப ஜன்னல் வழியாக மூர்த்தியின் மனைவியைப் பார்த்து, "து ஃபிகர் ந கர் பஹன்ஜி வாஹே குரு பே பரோசா கர். பச்சா டீக் ஹோ ஜாயகா"( நீ கவலைப்படாதே தங்கச்சி, பகவானிடம் நம்பிக்கை வை, குழந்தை குணமாகிவிடும்) என்று சொல்லிப் போய்விட்டான். கடைசி வரை எவ்வளவு நிர்ப்பந்தித்தும் அவன் டாக்சி வாடகை வாங்க மறுத்து விட்டான்."


எங்கள் எல்லோருக்கும் கண் கலங்கி விட்டது. "ஆக்கிர் வஹ் சர்தார் ஹை யார். சச்சா இன்சான்". (அவன் ஒரு சீக்கியன். உண்மையான மனிதன்) என்று என் பஞ்சாபி சகாக்களிடமிருந்து குரல் எழுந்தது.


இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum