Latest topics
உடம்பைச் சுற்றி ஒரு கவசம் !
Page 1 of 1
உடம்பைச் சுற்றி ஒரு கவசம் !
உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் நடந்திருக்கும். மனது கனமாகிவிடும் நிமிடங்களில் எல்லாம் இந்தச் சந்தோஷ நிமிடங்களைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பாருங்கள் ! காயங்களை மறந்து, மகிழ்ச்சியான நினைவுகளில் நீந்த ஆரம்பிப்பீர்கள் ! இந்த யுக்திக்கு சூப்பர் இம்போஸிஸ் டெக்னிக் என்று பெயர்.
இது எப்படிச் சாத்தியம் .. ? என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும் !
எனக்குத் தெரிந்த செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் சொன்ன உண்மை நிகழ்ச்சி இது.
அன்று, அந்தப் பெண்ணுக்குப் பிறந்த நாள் ! காலையில் கண்விழித்த அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவளது அறை கலர் கலர் பலூன்களாலும் வண்ண வண்ண ஜிகினா காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது ! இரவோடு இரவாக, அந்தப் பெண்ணின் கணவன்தான் தன் மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இத்தனை விஷயங்களையும் சந்தடியே இல்லாமல் சிரத்தை எடுத்து செய்திருக்கிறான் ! இதை அறிந்தபோது அவளுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. கணவனை ஆரத்தழுவி, தனது அன்பைக் காட்டுகிறாள் !
பிறகு, தன் அறையைவிட்டு வெளியே வருகிறாள். பல நூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் இவளது பெற்றோர், தங்கள் மகளின் பிறந்த நாளன்று ஓர் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகத் திடுதிப்பென்று வந்திறங்கி, இவளைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கிறார்கள் ! இவளுடைய ஏழு வயதுக் குழந்தைகூடத் தன்னுடைய தந்தையின் உதவியோடு வாங்கிய ஒரு சின்னப் பரிசைக் கொடுத்து, இந்த பெண்ணை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்துவிடுகிறது !
குளித்து முடித்து, தன் கணவன் எடுத்துத் தந்த பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு, அவள் தன் குடும்பத்தோடு கோயிலுக்குப் போகிறாள். அங்கே விளக்கிலிருந்த எண்ணெய் கொஞ்சம் இவளுடைய பட்டுப்புடவையில் பட்டுக் கறை உண்டாக்கிவிடுகிறது.
அவ்வளவுதான். .. விடிந்ததிலிருந்து தனக்கு நேர்ந்த சந்தோஷமான நிகழ்ச்சிகளின் நினைவுகள் மொத்தமும் இந்தப் பெண்ணின் சிந்தனையிலிருந்த விலகிப் போய்ப் புடவையில் எண்ணெய்க் கறை படிந்ததால் உண்டாக துக்கம் மட்டுமே பூதாகாரமாக இவளின் சிந்தனையைச் சிறைப் பிடித்துக் கொள்கிறது ! பிறகு, இவளின் கணவன் இவளை ஓட்டலுக்கு அழைத்துப் போகிறான். சினிமாவுக்கு அழைத்துப் போகிறான். பரிசுப் பொருட்கள் வாங்கித் தருகிறான். ஆனால், அவள் பட்டுப்புடவையில் எண்ணெய் பட்டுவிட்டதை நினைத்தே, அன்று முழுதும் அவள் வேதனைப்படுகிறாள்.
இப்படிச் சந்தோஷமான நினைவுகள் மீது துயரம் தரும் சிந்தனைகளை சூப்பர் இம்போஸ் செய்ய முடிகிற நம்மால், இதைத் தலைகீழாகச் செய்ய முடியாதா என்ன ..? முடியும்.
வார்த்தைகளால் மனதைக் காணப்படுத்துபவர்கள் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அப்படிக் காயப்படுகிறவர்கள் யார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். Low Energy level உடையவர்கள்தான் அடுத்தவரின் வார்த்தைகளாலும் நடவடிக்கைகளாலும் சுலபத்தில் காயப்பட்டுப் போகிறார்கள் !
எந்த ஒருவரின் energy level உச்சத்தில் இருந்து அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் உங்களை நோக்கி யார் எத்தனை கூர்மையான வார்த்தைகளை வீசியிருந்தாலும், அவை உங்களைப் பாதித்தே இருக்காது. இதுதான் உண்மை !
ஆகவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையுமே காதலி நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்ன நிமிடங்களாக நினைத்து உற்சாகமாக அமைத்து கொண்டால், நம் உடம்பைச் சுற்றி உருவாகும் Energy field ஒரு கவசம் மாதிரி இருந்து, பிறரின் வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தாமல் காப்பாற்றும்.
சரி.. . உடம்பைச் சுற்றி Energy field என்று கூட ஒன்று உண்டா என்ன ? இதென்ன கலாட்டா.. .? என்று சிலர் சந்தேகப்படலாம். இந்தச் சந்தேகம், கிர்லான் என்ற ரஷ்யக் கலைஞர் கண்டுபிடித்த காமிராவின் மூலம் தீர்க்கப்பட்டுவிட்டது.
மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...
ஒரே சொடக்கில் உற்சாக ஊற்று !
எனர்ஜி ஃபீல்டைப் பலப்படுத்தி, எப்போதும் உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் வைத்திருப்பது எப்படி ?
திருஷ்டி - சிருஷ்டி வாதா என்று நமது வேதங்களில் சொல்லப்படுகிறது. திருஷ்டி என்றால் பார்வை. சிருஷ்டி என்றால் உருவாகுதல் அல்லது உருவாக்குதல் !
நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே நாம் உருவாகிறோம் என்பது இதற்கு அர்த்தம். குறிப்பாகச் சொல்வதானால், நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ, நாளடைவில் அப்படி ஆகிவிடுகிறோம்.
நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள். அந்த நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே இருப்பீர்கள். நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத தத்துவம் போலத் தோன்றுகிறதா ? சந்தேகம் இருந்தால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.
இரவு நன்கு தூங்கி, விடியற்காலையில் எழுந்த இளைஞன் ஒருவன், உடற்பயிற்சி செய்துவிட்டுப் பிறகு குளித்து டிரஸ் செய்து ஆபீஸ் கிளம்புகிறான்.
அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வந்து, என்ன தம்பி டல்லா இருக்கீங்க ? உடம்பு சுகம் இல்லையா ? என்று கரிசனத்தோடு கேட்கிறார். தெருமுனையில் அவன் நண்பன் எதிர்ப்படுகிறான். அவனும் என்னடா ஆச்சு உனக்கு ? முகம் இத்தனை சோர்வா இருக்கே ? உண்மையான அன்போடுதான் கேட்கிறான். ஆபீஸில் நுழைகிறான் இளைஞன். இவனைப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், என்ன சார் ஜுரமா ? கண் எல்லாம் உள்ளே அடங்கிப் போய்க் கிடக்குது. ஆபீஸுக்கு லீவினா போன் பண்ணியே சொல்லியிருக்கலாமே ? என்கிறாள் அக்கறையோடு !
வீட்டைவிட்டுக் கிளம்பும் போது இளைஞன் உடம்பிலிருந்த சக்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி, உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லை என்று நம்பி, ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலே போய்ப் படுத்துக் கொள்கிறான்.
இது கற்பனைக் கதை அல்ல ! ஒர் ஆராய்ச்சிக்காக, அந்த இளைஞனிடம் சொல்லாமல் நடத்திப் பார்க்கப்பட்ட உண்மைச் சம்பவம் !
நமது எண்ணம், நமது உடம்பை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கான உதாரணம் இது ! சில சமயம் நமது உடம்பே கூட எண்ணங்களைப் பாதிப்பது உண்டு.
டென்ஷனாக இருக்கும்போது, நகம் கடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, சாதாரணமான மனநிலையில் இருக்கும்போது நகம் கடித்தால்கூட, மனதில் டென்ஷன் வந்து புகுந்துவிடும். சோர்வாக இருக்கம்போதெல்லாம் கன்னத்திலோ நெற்றியிலோ கைவைத்து உட்காரும் மானரிசம் உடையவர்களுக்கு, எதேச்சையாகக் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தால்கூட சோர்வு தானாக வந்து ஆட்கொண்டு விடும். அவ்வளவு ஏன் ? சலவை செய்த சட்டை, பாண்ட் மாட்டிக் கொண்டாலே, வெளியில் கிளம்புகிற உற்சாகம் மனதுக்குள் வந்துவிடுகிறது இல்லையா ?
சொடக்குப் போடும் நேரத்தில் உற்சாகத்தை நம் மனதுக்குள் ஊற்றெடுக்க வைக்க முடியும்.
தீ மிதித் திருவிழாவை நீங்கள் அனைவருமே பார்த்திருக்கக் கூடும் !
தீ மிதிக்கும் பக்தர்கள் யாரும் அதில் முறையாகப் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இல்லை. என்றாலும், தீ மிதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் வந்தவுடன், அவர்களுக்குத் தேர்ந்த ஒரு வீரனின் உற்சாகமும் வேகமும் எப்படி வருகிறது ? மனதிலிருந்தான் !
நாம் இங்கே விவாதித்த கருத்துக்கள் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். இருந்தாலும், நம்மை நாமே தேற்றிக்கொள்ள முடியாமல் பல சமயங்களில் சோர்ந்துவிடுகிறோம். கவலையில் மூழ்கி விடுகிறோம். இது ஏன் ?
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட நம்முடைய கருத்து (point of view) ஜெயிக்க வேண்டும் என்பதில்தான் நம்மில் பலர் குறியாக இருக்கிறோம்.
பெங்களூரில் பெரிய பணக்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். அவருக்கு நகரின் மையப்பகுதியில் மாளிகை போல ஒரு பங்களா. அது அவரது பரம்பரைச் சொத்து ! பங்களாவை ஒட்டியிருக்கும் ஒரு சின்ன அவுட் ஹவுஸை விற்றால்கூட, ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். அதில் அவர் நிறைய வசதிகள் செய்துகொள்ள முடியும். ஆனால் அவருடைய point of view என்னவென்றால், பரம்பரைச் சொத்து எதையும் விற்கக்கூடாது.
சரி.. . அதனால் இப்போது என்ன ? கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் இருந்து வேறு வருமானம் இல்லாததால், சொத்து வரி கட்டவும், டெலிபோன் பில் கட்டவும், எலெக்ட்ரிக் பில் கட்டவுமே அவர் இன்று திண்டாடிக் கொண்டிருக்கிறார், பாவம் !
தனது point of view ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தற்கொலை வரை போகிறவர்கள்கூட இருக்கிறார்கள்.
நமது கருத்துகளைவிட, நமது சந்தோஷம்தான் முக்கியம் என்ற நினைப்பு நமக்கு வர வேண்டும். நியாயமான வழிமுறைகளில் சந்தோஷமும் நிம்மதியும் நம்மை எப்படித் தேடி வந்தால் என்ன ? என்று பழக்கிக் கொள்ள வேண்டும். இந்த மனநிலை கைவந்துவிட்டால், அப்புறம் பாருங்கள்.. . பஞ்சம் இல்லாமல் உற்சாகம் பீறிடம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Thu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Thu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Thu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Thu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்
» பிரம்மராஜன் கவிதைகள்
Thu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்
» K Iniyavan
Thu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்
» K Iniyavan -karuththu
Thu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்