தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்!

Go down

முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்! Empty முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்!

Post by இறையன் Sat Dec 17, 2011 12:19 pm

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர்.

அக்டோபர் 11ம் திகதி நள்ளிரவு இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த பரசூட் தரையிறக்கத் தாக்குதல் நடவடிக்கை மட்டும் இந்தியப் படையினர் நினைத்தபடி வெற்றிகரமாக நடைபெற்றிருந்தால், அவர்களது எண்ணம் நிச்சயம் ஈடேறியிருக்கும். ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதலும், அதில் புலிகள் அடைந்திருந்த வெற்றியும் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தமது யாழ் முற்றுகையின் இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு முற்பட்ட போதிலும், அதுவும் அவர்களுக்கு ஈடேறவில்லை. யாழ் கோட்டையில் இருந்து நகர்வினை மேற்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றுவதும் அவர்களுக்கு முடியாது போயிருந்தது. யாழ் கோட்டை வாயில்களை அடுத்து புலிகள் அமைத்திருந்த பலமான கட்அவுட் நிலைகள் இந்தியப் படையினரின் எந்தவொரு நகர்வினையும் சாத்தியமற்றதாக்கியிருந்தது.

யாழ் கோட்டைக்குள்ளிருந்த இந்தியப் படையினர் வெளியே நகரமுடியாது தவித்ததானது, அவர்கள் ஒரு முற்றுகைக்குள் உள்ளானது போன்ற ஒரு பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. யாழ் கோட்டைக்குள் அடைபட்ட நிலையில் இருந்த இந்தியப்படையினரைப் பொறுத்தவரையில் இதுபோன்ற ஒரு அனுபவம் அவர்களுக்கு முன்னெப்போதுமே ஏற்பட்டதில்லை.

அதுவும் வேற்று நாடொன்றில் இவ்வாறு அநாதரவாக விடப்பட்டது போன்றதொரு நிலை அவர்களைக் கதிகலங்க வைத்தது. போதாததற்கு கோட்டையில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் புலிகள் பற்றியும், தமிழ் மக்கள் பற்றியும் இந்தியப் படையினரின் பயத்தை அதிகரிப்பது போன்ற கதைகளை அவிழ்த்துவிட்டிருந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் இருந்து ஒரு காரியத்தை மட்டும் ஒழுங்காகச் செய்தார்கள். யாழ் நகரிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் அதற்கு உச்சாகம் வழங்கினார்கள்.

விளைவு: பல தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

படுகொலைகளின் அத்தியாயங்கள்:
யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கும், யாழ் கோட்டையினுள் அடைபட்ட நிலையில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த இந்தியப் படையினரை மீட்பதற்கும், புலிகளை ஒழிப்பதற்கும் என்று இந்தியப் படையினர் பாலாலியில் இருந்து பல முனைகளிலும் நகர்வுகளை ஆரம்பித்திருந்தார்கள்;.

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப் படைப்பிரிவை தலைமை தாங்கி வழி நடாத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் படைப்பிரிவு உரும்பிராய் பிரதேசத்தை வந்தடைந்தபோது மற்றொரு அனர்த்தம் நிகழ்ந்தது.

பாதையூடாக நகர்வினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் படுகொலைகளின் அத்தியாயமொன்று தமிழ் மக்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டது.

கன்னிவெடிச் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவத்தினர் கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொண்றார்கள். பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பலவும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டிவிட்டு வீட்டினுள்யே மறைந்திருந்தவர்களை, கதவுகளை உடைத்துக்கொண்டு உட்சென்ற இந்;தியப்படையினர் சுட்டுக்கொன்றார்கள்.

உரும்பிராய்; பிரதேசத்தில் 93 வயது மூதாட்டி உட்பட நான்கு பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டினுள் புகுந்த இந்தியப் படையினர் அங்கிருந்த நான்கு பெண்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொண்றார்கள். நோய் காரணமாக படுக்கையில் இருந்த மூதாட்டி கட்டிலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மற்றய இளம் பெண்களின் சடலங்கள் வீட்டின் பின்பகுதியில் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டன.

உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கை திருச்சபைக்கு எதிரே இருந்த பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றினுள் அயலில் வசித்த சிலர் அடைக்கலம் தேடிச் சென்றிருந்தார்கள். ஆசிரியரான பஞ்சாட்சரம் என்பவருடைய குடும்பம், வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான பிரேமா, அவரது தாயான திருமதி சின்னத்துரை போன்றவர்களும் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்திருந்தார்கள்.

பொன்னம்பலத்தின் குடும்பத்தினர், மற்றும் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்று மொத்தம் 11 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். அந்த வீட்டை சூழ்ந்துகொண்ட இந்தியப் படையினர், வீட்டில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உத்தரவு பிறப்பித்தார்கள். வெளியே வராவிட்டால் வீட்டையே குண்டுவீசித் தகர்த்துவிடப் போவதாகவும் எச்சரித்தார்கள்.

வேட்டி ஒன்றைக் கிழித்து வெள்ளைக் கொடி தயார் செய்த பொன்னம்பலம், அந்தக் கொடியை கையில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மற்றவர்களும் வெளியே வந்தார்கள்.

பையர் என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. திருமதி சின்னத்துரை, பொன்னம்பலம் தவிர மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

திருமதி சின்னத்துரையின் கணவர் தனது மனைவியையும், மகள் பிரேமாவையும் பாதுகாப்பாக பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, உரும்பிராய் சந்தியிலிருந்த தனது வீட்டியேயே தங்கியிருந்தார். ஷஷகவலைப்படாதேயும்ளூ அவையள் சண்டை பிடிக்கவந்த இராணுவத்தினர் இல்லை. அவையள் அமைதிகாக்கும் இராணுவத்தினர். நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துவேன்|| என்று மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டார்.
அவரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமே இப்பிரதேசத்தில் அனேமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள். இளைஞர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்ததால், இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் குறைவு என்றே கூறவேண்டும்.

தொடர்ந்த கொலைகள்:
அப்பிரதேசத்தில் இருந்த வீடொன்றில், யாழ் பல்கலைக்கழக மாணவியான அம்பிகா என்ற பெண்ணின் தாயாரும், பாட்டியும், மலையகத்தைச் சேர்ந்த வயதான வேலைக்காரர் ஒருவரும், மற்றொரு முதியவரும் வசித்து வந்தார்கள். அப்பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டிவிட்டு கட்டில்களின் கீழேயும், மேசைகளின் கீழேயும் மறைந்திருந்த அந்த முதியவர்கள், தங்களது வீட்டைக் கடந்து யுத்த தாங்கியும், இந்தியப் படையினரும் செல்வதை இரைச்சலின் மூலமும், பேச்சொலிகள் மூலமும் அறிந்துகொண்டார்கள். இந்த அரவங்கள் ஓய்ந்து சிறிது நேரத்தின் பின்னர், அந்த வீட்டில் இருந்த முதியவர் மெதுவாக எழுந்து வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று நிலமையை அவதானிப்பதற்கு எத்தனித்தார்.

அங்கிருந்த எவருமே இந்தியப் படையினருக்கு கொஞ்சமும் பயப்படவில்லை. சண்டைகளின் இடைநடுவில் சிக்குண்டுவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, ஸ்ரீலங்கா இராணுவம் போன்று இந்தியப் படையினர் அப்பாவி மக்களை கொலைசெய்துவிடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த முதியவர்களுக்குச் சிறிதும் கிடையாது.

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் எட்டிப் பார்த்த முதியவரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சன்னம் சீறிக்கொண்டு புறப்பட்டது. இந்திய யுத்த தாங்கியின் பின்னால் மறைந்தபடி வந்திருந்த படை வீரர்களில் சிலர் அப்பிரதேசத்தில் ஏற்கனவே பதுங்கி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒருவனே முதியவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தான். எந்தவித சத்தமும் இடாது அந்த முதியவர் சரிந்து கீழே வீழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில இந்தியப் படை வீரர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக்கொன்றார்கள்.
முதலாவது வெடிச் சத்தம் கேட்டதுமே நிலமையைப் புரிந்துகொண்டு மறைவிடம் ஒன்றினுள் பதுங்கிக்கொண்ட அந்த மலையக வேலையாள் மட்டும் உயிர் தப்பியிருந்தார்.

இந்தியக் கொலைகாரர்கள்:
இந்தியப் படையினர் அப்பிரதேசத்தில் அந்த இரண்டு நாட்களிலும் மேற்கொண்ட கொலைகள் எண்ணில் அடங்காதவை. பல படுகொலைச் சம்பவங்கள் அங்கு இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனேகமான சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியே தெரிவிப்பதற்குக் கூட எவருமே மிஞ்சாத வகையில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன.

அப்பிரதேச மக்கள் என்றுமே கண்டும், கேட்டும் அறிந்திராத அவலங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது.

அப்பிரதேசத்தில் வசித்து வந்த சிவப்பிரகாசம் என்ற நபர், முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களிடம் கூறும்போது, ஷஷஎனது வீடு அமைந்திருந்த அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மாத்திரம் 18 பொதுமக்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்கள். இவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள், அவர்களும் 60 வயதைக் கடந்திருந்தவர்கள்|| என்று தெரிவித்திருந்தார்.

நாற்பத்தேழு வயது வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரம், முப்பது வயதான அவரது மனைவி டொரத்தி, மூன்று வயது மகள் ஷெரீன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அதிர்ச்சியுற்ற அவர்கள், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் தங்குவது நல்லது என்று நினைத்து வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தார்கள். அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஏகாம்பரத்தின் வீட்டுக்கு அடுத்ததாக டொரத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாயார், அவரது சகோதரன், ஏழு வயதுக் குழந்தை ஒன்று என்று பலர் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்தியப்படையினர் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்றார்கள். அவர்களது உடல்களையும், ஏற்கனவே கொல்லப்பட்டிருந்த ஏகாம்பரம் தம்பதிகளின் உடல்களையும், அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் போட்டு கிறவல் கற்களினால் மூடியிருந்தார்கள்.

சிறிது காலத்தின் பின்னர் அந்த குழியைத் தோண்டிய போது, ஏகாம்பரம் தனது குழந்தையை அணைத்தபடி எலும்புக்கூடாக காட்சியளித்ததாக ஊர்மக்கள் தெரிவித்தார்கள்.

இதேபோன்று அப்பிரதேசத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தங்களது இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக ஏற்கனவே வெளியே அனுப்பிவிட்டு வீடுகளில் தங்கியிருந்த வயது முதிந்தவர்களே அனேகமாக கொல்லப்பட்டிருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இந்தியப்படை வீரர்கள் அங்கு தங்கியிருந்த முதியவர்களை இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றிருந்தார்கள். அப்பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 இற்கும் அதிகம் என்று உத்தியோகப்பற்றற்ற கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காப் படைகளும் களத்தில்?
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, இந்தியப் படையினரின் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினரும் துணைபோயிருந்தது பற்றிய பல செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்தன.
இந்தியப் படையினர் யாழ்நகரை நோக்கி நகர்வதற்கு ஸ்ரீலங்காப் படையினரின் உதவிகளையும் பெற்றிருந்த விடயம் அப்பொழுது மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் எதிர்ப்புக்கள உருவாகிவிடும் என்பதால் இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் உதவிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

ஆனாலும், இந்தியப் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்காப் படையினர் பல சந்தர்ப்பங்களில் தம்மை மறந்த நிலையில் சிங்களத்தில் பேசிய தம்மை வெளிக்காண்பித்திருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்காப் படையினருக்கு ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது சிங்களம் மட்டுமே.

மற்றய ஸ்ரீலங்காப்படை வீரர்களுடன் அவர்கள் சிங்களத்தில் பேசியதை, வீடுகளில் மறைந்திருந்த பல தமிழ் மக்கள் கேட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்டிருந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு, தமிழ் மக்களின் ஜென்ம விரோதிகளான சிங்களப் படையினரையும் துணைக்கழைத்துச் சென்றதானது, ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய துரோகங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடரும்…

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்டார் ரஜீவ்காந்தி-(அவலங்கள்-8) –நிராஜ் டேவிட்
» இந்தியப் படையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய உதவிகள் – (அவலங்கள் 5) –நிராஜ் டேவிட்
» அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-1) –நிராஜ் டேவிட்!
» பொட்டம்மான் படுகாயம்..(அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-6) –நிராஜ் டேவிட்
» ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை (அவலங்களின் அத்தியாயங்கள்- 4) நிராஜ் டேவிட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum