தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அனுமனாக அவதரித்த சிவபெருமான்!-m.n.srinivasan

Go down

அனுமனாக அவதரித்த சிவபெருமான்!-m.n.srinivasan Empty அனுமனாக அவதரித்த சிவபெருமான்!-m.n.srinivasan

Post by இறையன் Wed Dec 21, 2011 1:10 pm

பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடமும் உடையவர் ஆஞ்சனேயர்.

இவர் சிறந்த கல்விமான்; ஆயினும் அடக்கம் உள்ளிட்ட பண்புகள் நிரம்பப் பெற்றவர். வெற்றி யிலும் இவருக்கு ஒப்பானவர் இவ்வுலகில் யாருமில்லை என்கின்றன புராணங்கள்.

ஆஞ்சனேயரின் அடக்க குணத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஆலயங்களில் உள்ள அவரது அர்ச்சாவதாரத் திருமேனி களில் பல விநய ஆஞ்சனேயராகக் காட்சியளிக்கின்றன.

இணையற்ற ராமபக்தரான அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின் பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே சூரியனைப் பிடிக்கப் பாய்ந்தவர்.

சத்குருவின் அனைத்து குணங்களையும் ஒருங்கே பெற்றவர் மாருதி. உலக மக்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசிக் கும் ஆசானாக இவர் விளங்குகிறார்.

அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன் களும் உண்டு. அதேசமயத்தில் ருத்ராம் சமாகவும் இவர் கருதப்படுகிறார். ராமன் எப்படி சிவ பக்தராய்த் திகழ்கிறாரோ அதுபோல சிவனும் சிறந்த விஷ்ணு பக்தராக விளங்குகின்றார். திருமாலுக்குத் தொண்டு செய்வதற்காகவே பரமேஸ்வரன் அனுமனாக வடிவெடுத்தார் என்று சில புராணங்கள் கூறுகின்றன.

அனுமன், பரமாத்மாவைப் போன்று என்றும் நிலையானவர்.. என்றும் நம்மு டன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராம நாமத்தின்மீது ருசியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வணங்கிய மாத்தி ரத்தில் தைரியமும் ஞானமும் நமக்கு வளரும்; காமம் நசிந்து விடும். தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வண்மை போன்றவற்றைத் தருபவர் அஞ்சனை மைந்தர்.

பாரதப் போரில் அர்ஜுன னின் தேர்க்கொடியில் அமர்ந்து, கிருஷ்ண பகவான் பார்த்தனுக்கு உபதேசித்த பகவத் கீதையை நேரில் கேட்டவர் ஆஞ்சனேயர். கீதைக்கு தத்துவமயமான ஒரு விளக்கத்தை அனுமன் அருளியி ருப்பதாகவும் சில பெரியோர்கள் கூறுவதுண்டு.

சுந்தரன் என்பது ஆஞ்சனேயரின் அன்னை அஞ்சனாதேவி அவருக்கு இட்ட பெயர். இந் நாமத்தை வைத்தே வால்மீகி சுந்தர காண்டத்தை எழுதினார். சுந்தரகாண்ட பாராயணம் நமக்கு எல்லா நற்பலன்களையும் அளித்து, ஸ்ரீ சீதா, லஷ்மண, பரத, சத்ருக்கன, ஹனுமத் சமேத ஸ்ரீராமபிரானின் திருவருளைப் பெற்றுத் தரும்.

அனுமனின் பிரபாவம் சொல்லப்பட்டதால்தான் சுந்தர காண்டத்துக்கு ராமாயணத்தில் உள்ள மற்ற காண்டங்களைவிட அதிகமான பெருமை வந்தது.


எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரின் சாந்நித்யம் நிறைந்தி ருக்கும். எங்கெங்கு அனும னின் திருவருள் பாய்கின் றதோ அங்கெல்லாம் துக்க கரமான சம்பவங்கள் நடை பெறாது.

தமிழகத்தின் கடற் கரையோரப் பகுதிகளை யெல்லாம் ஆழிப் பேரலைகள் கடுமையாகச் சாடியுள் ளன. இனி மேற்கொண்டு பேரழிவுகள் நடைபெறாத வண்ணம் தடுக்க, ஆஞ்சனேயரின் அருளை வேண்டி அனைவரும் "ராம ராம' கீர்த்தனம் செய்வோம்.


பாரதத்தின் தென்முனை யிலிருந்து இலங்கைக்கு கடலைத் தாண்டிப் பாய்ந்து சென்றவர் ஆஞ்சனேயர்.

அப்போது கடலிலிருந்து புறப்பட்ட பல ஆபத்து களைத் தனது ராம பக்தி யால் வென்று காட்டியவர் அவர்.

இந்தக் கலியுகத்தில் உலகை அழிக்கத் கிளம்பி யுள்ள எல்லா சுனாமிகளிலிருந்தும் ரட்சிக்கப்பட ஆஞ் சனேயரின் திருவடிகளில் அடைக்கலம் புகுவோம். ராம நாமம் சொல்லி அவரை ஆனந்தப்படுத்து வோருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!


ஹனுமான் பதினோராவது ருத்ரன். ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர். இப்போதும் கதலீவனத்தில் யோகத்தில் இருப்பவர். சூரியன் குரு. அடுத்த ப்ரம்மாவாகப் போகிறவர். ஆனாலும் அவரிடம் ஒரு குறை உண்டு. தன்னுடைய பலம் அவருக்கு தெரியாது... அடிக்கடி மறந்து போய் விடுவார். யாராவது அவரிடம் அவரது பலத்தை சொன்னால் மட்டுமே அவருக்கு தெரியும். இது ஹனுமான் குழந்தையாக இருந்தபோது முனிவர்கள் கொடுத்த சாபம். சிறு வயதிலேயே அவருக்கு தேவர்கள் சகல சக்திகளையும் வரமாக கொடுத்துவிட்டார்கள். ஹனுமான் குழப்படி.!! காட்டிலே முனிவர்களுக்கு குறும்பு செய்வார். தொல்லை தாங்க முடியாமல் முனிவர்கள் அவருக்கு இட்ட சாபம். அதனால் ஹனுமனை தியானம் செய்து வழிபடுபவர்கள் அவரது பெருமையையும், பலத்தையும், அவரால் எங்களை துன்பத்திலிருந்து காப்பாத்த முடியும் என்கிற விஷயத்தையும் ஞாபகப் படுத்தவேண்டும்.இல்லையேல் அவருக்கு தெரியாது. காயத்ரி மந்திரம்: ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே, வாயு புத்ராய தீமஹீ, தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்:" இதே தினமும் காலையிலும் மாலையிலும் 108 தடவை அவரை நினைத்து ஜெபித்து வர சகல துன்பங்களும் விலகி மனம் விரும்பியது போல் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்..!!
-----------------------------------------------------------------------------------------------------
source om magazine

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum