தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட்

Go down

நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட் Empty நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்.. -இரஜகை ராபர்ட்

Post by இறையன் Thu Feb 02, 2012 10:27 pm

1. உலகில் போர், வன்முறை, தீவிரவாதம், இன, மத, சாதி, நாடுகளுக்கிடையேயான மோதல்கள் குறைந்து, பிறகு இல்லாமல் போய்விடும்.

2. மேற்கண்டது நடந்து விட்டால், பிறகு காவல் துறை, நீதி, சட்டத்துறைகளுக்கு தேவை இருக்காது. எந்த மிருகமும் சட்டம் போட்டு, சட்டப்படி வாழ்வதில்லை.

3. பெண் விடுதலை கிடைக்கும். ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மாறுதலால் அவர்கள் பெண்களை அடிமை என்று எண்ணாமல், அவர்களையும் ஒரு உயிராக கருதி மதிப்பு தருவர். இல்லறம் நல்லறம் ஆகிவடும். திருமண முறிவுகள் குறைந்து விடும். ஏன் விவாகரத்துகள் இல்லாமல் கூட போய்விடும். பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து அவர்களின் நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கும் சமையல் தொழிலிலிருந்து விடுதலை கிடைக்கும்.

4. உணவுப் பஞ்சம்: ஆப்பிரிக்க நாடுகள் உணவு பஞ்சத்தால் குழந்தைகள் கூட உயிரிழப்பதை காண்கிறோம். அதே சமயம் உலகில் உணவில்லாமல் இறப்பவர்களைவிட உணவுண்டு நோயால் இறப்பவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவால் ஒரு பக்கமும், உணவில்லாமல் ஒரு பக்கவும் மக்கள் அழிவது இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இயற்கை உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது, அதிக உணவு தேவையிருப்பது போல் தோன்றும். பிறகு நம் உடல் நலம் அடைந்த பிறகு உணவின் அளவு பெருமளவு குறைந்து விடுகிறது. சிறிது சிறிதாக குறையும் உணவின் அளவு, 3 (அ) 4 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 2 வேளை என்று வந்து விடும். இது நாம் எந்த அளவு மன வலிமையுடன் கடைபிடிக்கிறோம் என்பதை பொறுத்தது. நமது உணவின் அளவு குறையக் குறைய நம்முடைய உணவு மற்றவர்களுக்குப் போய்ச் சேரும். ஒருவர் உண்ணும் உணவை மூவர் உண்ணலாம். பிறகு உலகில் உணவுப்பஞ்சம் ஏது? அமெரிக்கா போன்ற நாடுகள், பிறர்க்கு கொடுக்க மனமில்லாது, உணவுப் பொருட்களை கடலில் கொட்டும் அவலம் இனி நடக்காது.

5. சுற்றுப்புற சீர்கேடு: நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறினால், சுற்றுப்புறத்தை பாதுகாக்க சங்கம் அமைத்துப் போராட வேண்டியதில்லை. சுற்றுச் சூழல் தானாகவே தூய்மை அடைந்து விடும்.

6. பிளாஸ்டிக்: பழங்களை பேக் செய்ய வேண்டியதில்லை. அப்படியே கடைகளிலிருந்து வாங்கி வந்து பயன்படுத்தலாம். எனவே கேரி பேக், டின் ஃபுட் போன்றவற்றால் உருவாகும் மக்காத குப்பைகள் முற்றிலும் ஒழிந்து விடும். எனவே மண்ணை விஷமாக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து உலகுக்கு விடுதலை அளிக்கலாம்.

7. மண் அரிப்பு, வெள்ளம்: நாம் காடுகளை அழிப்பதாலேயே மண் அரிப்பு ஏற்படுகிறது. மரங்கள் போதிய அளவு இல்லாததாலேயே வெள்ளத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. நாம் இயற்கை உணவுக்கு மாறினால், இயற்கை பழ உற்பத்திக்கு விவசாயிகளும் பொதுமக்களும் மாறிவிடுவர். பிறகு மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தானிய உற்பத்தி செய்யும் வயல்கள் கனிகள் தரும் சோலையாகிவிடும். மண் அரிப்பு, வெள்ளம் தடுக்கப்படும். பிராண வாயு, வளிமண்டலத்தில் அதிகரித்து நமக்கு சுவாசிக்க அதிகமான காற்று கிடைக்கும் சுவாசக் கோளாறுகள் நெருங்காது.

8. புவி வெப்பமடைதல்: இன்று வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் நச்சுக் காற்றினால் உலகம் வெப்பமடைந்து, துருவ பனிக்கட்டிகள் உருகி, உலகம் நீரில் மூழ்கி விடும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இயற்கை உணவினால் இயற்கையாகவே இதற்கு தீர்வு உண்டாகும். வீடுகளில் அடுப்பே தேவையில்லை எனும்போது எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும் என்பதை கற்பனை செய்யுங்கள்.உலகம் சோலைகளானால் வெப்பமாவது தவிர்க்கப்படும். மேலும் சமைக்காததால் பிராணவாயு காக்கப்படுகிறது.

9. நில நடுக்கம்: நிலநடுக்கங்கள், நாம் அணைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நாம் சோலைகளுக்கு மாறிவிட்டால், விவசாயத்திற்கு தண்ணீர் பெருமளவில் தேவைப்படாது. இலைகள் கீழே விழுந்து மக்குவதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். அதிக நீர் தேவைப்படாது. சிறிய தடுப்பணைகளே போதும். இதற்கு வழிகாட்ட இயற்கை விவசாயிகள் பெருகி வருகின்றனர்.

10. இயற்கை வேளாண்மை: தற்போது உரம், மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள்லல் மண் மலடாகி வருகிறது. நாம் உணவுடன் இராசாயனத்தையும் சேர்த்து உண்டு, நம் உடலையும் விஷமாக்கி வருகிறோம். கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட நோய் வரும் அளவுக்கு நாம் சுற்றுச் சூழல் கெட்டு விட்டது. ஆனால் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள், இயற்கை வித்தால் செலவில்லாமல் “லோ பட்ஜெட்” முறையில் விவசாயம் செய்யமுடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளனர்.

உலகிற்கு அவசர, அவசிய தேவைகள்

தற்போது உலகை அழிவிலிருந்து காக்க உலகிற்கு அவசர/அவசிய தேவைகள் மூன்று.

1) இயற்கை உணவை பின்பற்றி அறிந்து கொண்டு தானும் பின்பற்றி மற்றவர்களுக்கும் இதை கொண்டு செல்வது.

2) பழ மரங்கள் நட்டு வளர்ப்பது

3) சுற்றுச் சூழல் கெடாமல் இருக்க பெட்ரோல், டீசல், எல்.பிஜி போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைத்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவது. அதற்குரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இறங்குவது. மனிதனின் அத்தியாவசிய தேவையயகிய உணவு, உடை இருப்பிடத்துக்கு இவற்றைச் செய்தாலே போதும். மற்றவை எல்லாம் மனிதனின் பேராசைக்கானவை.
-இரஜகை ராபர்ட்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum