தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன்

Go down

நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன் Empty நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - 2 -ஆனந்தமயன்

Post by இறையன் Mon Jan 02, 2012 10:21 pm

நான் பறவைகள் அருகில் செல்லும் போது...

மாணவர்: நாம் பறவைகள் அருகில் செல்லும் போது ஏன் பறக்கின்றன?

தத்துவ ஞானி ஜே.கிருஷ்ண மூர்த்தி: நீங்கள் பறவைகளின் அருகில் செல்லும் போது அவைகள் பறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நீங்கள் பறவைகளை தொட முடிந்தால் அவைகளுடன் நட்பாக இருக்க முடிந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! ஆனால் பாருங்கள் மனிதர்களாகிய நாம் கொடூரம் மிக்கவர்கள். நாம் பறவைகளை கொல்கிறோம், சித்திரவதை செய்கிறோம், அவைகளை வலையில் சிக்க வைக்கிறோம், கூண்டுக்குள் அடைக்கிறோம். அழகான கிளி, கூண்டில் அடைபட்டிருப்பதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்! ஒவ்வொரு மாலையும் அதன் ஜோடியை அழைக்கிறது. மற்ற பறவைகள் வானில் பறந்து செல்வதை பார்க்கிறது. இவை அனைத்தும் நாம் அப்பறவைகளுக்கு செய்யும் போது அவைகள் நாம் அருகில் செல்லும் போது அச்சமின்றி இருக்குமா?

ஆனால் தனிமையான ஒரு இடத்தில் நீங்கள் அமைதியாக, சலனமற்று உண்மையிலேயே மென்மையுடன் அமர்ந்திருக்கும் போது, பறவைகள் உங்கள் அருகில் வருவதைப் பார்ப்பீர்கள்; அவை உங்கள் அருகில் வட்டமிடும். நீங்கள் அவைகளுடைய கவனமான அசைவுகளை, மென்மையான அலகுகளை, அசாதாரமாண, மற்றும் அழகான இறகுகளையும் காண்பீர்கள். அன்புடனும், அச்சமற்றும் இருக்க வேண்டும். விலங்குகள் நம்முள் உள்ள பயத்தை உணரும் தன்மை உடையன. அவைகளும் பதிலுக்கு அச்சமுற்று பறந்து செல்கின்றன.

ஓரிரண்டு நிமிடங்கள் மட்டும் நீங்கள் ஓர் மரத்தடியில் அமைதியாக அமர்ந்து இருந்தால் இது ஏற்படாது. ஏனெனில் பறவைகள் குறுகிய காலத்தில் நம்முடன் பழகிவிடாது. ஒரே மரத்தடியில் தினமும் சென்றமர்ந்தால், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் உயிரோட்டமிக்கவை என்பதை உணர்வீர்கள்.

- மாணவர்களுடன் உரையாடல். ( வாட் டஸ் பியர் டு யூ? என்ற புத்தகத்திலிருந்து)

அமைதியான மனநிலையில் நடந்து செல்வது கூட தியானமாகி விடுகிறது என்று குறிப்பிட்டிருந்தோம். இயக்கச்செயல்களை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் ஒழுங்குபட்ட நிலையில் செய்யும் போது அது யோகாசனமாகிவிடுகிறது. யோகா என்பது ஒரு மதம் அல்ல. அது பெரிய தத்துவம், ஒரு கலை, விஞ்ஞானம் ஆகியவற்றுடன் கூடிய வாழ்வாங்கு வாழ ஒர் அமைப்பு. யோகாவின் நோக்கம் சரீரத்திற்கும் மனதிற்கும் இடையிலான, தனிப்பட்ட சக்திக்கும், பிரபஞ்ச சக்திக்கும் இடையிலான, பரிபூரண வியாபகத்தை விருத்தி செய்வதாகிறது. உலகில் தோன்றிய மிகச்சிறந்த ஞானிகளால் யோகா மக்களுக்கு தரப்பட்டது. சரீரத்தையும், மனத்தையும் முழுமையான ஆய்வு செய்வதற்கான முயற்சிக்கான விதையே யோகா.

யோகத்தில் இரண்டு அங்கங்கள் இருப்பதாக சொல்லலாம். அமைதியான மனநிலையுடன் கூடிய தியானம் இதை ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சுப்பயிற்சி அல்லது பிராணயாமம் என்று சொல்லலாம். மற்றொன்று உடலின் உறுப்புகளுக்கு வலிவு தரும் யோகப்பயிற்சிகள். யோகாசனம் உள் உறுப்புகளுக்கு நல்ல ஆக்கம் கொடுத்து, நல்ல பரிணாம விளைவுகளுக்கு உந்துதலை அளிக்கிறது. அது எழும்புகளை பலப்படுத்துவதுடன், உள்ளுறுப்புகளையும் பரிபூரண நலத்துடன் வாழ உருவாக்குகிறது. யோகாப்பயிற்சி, இருதயத்தை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக்குகிறது. சர்வாங்காசனம் என்னும் பயிற்சியால் உடல் தலைகீழான நிலையில் இரத்தம் பாய்ந்து, இருதயம் வலுவாகிது. மலச்சிக்கல் குணப்படுத்தப்படுகிறது. வெளித்தள்ளும் பானை வயிறு, சரிசமமாக பலப்படுகிறது. தைராய்டு கோளம் தூண்டப்பட்டு உடலின் செயல்கள் சரியாக அமைய செய்கிறது. உடலை சீர் செய்யும் யோகாசன பயிற்சிகள் உடலை ஆரோக்கிய நிலையில் வைக்கின்றன. மனமும், சிந்தனையும் சிறக்க தியானிப்பது அவசியமாகிறது.

நாம் பிறந்தது முதல் சுவாசிக்கின்றோம். யோகப்பயிற்சியில் இந்த சுவாசம் மிக முக்கிய அங்கமாக செயல்படுகிறது. தற்போது அறுவை சிகிச்சையில் மூச்சு முறை என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அகம் என்னும் அறிவு, மூச்சை பின்பற்றி வந்தே தெளிவு நிலையடைகிறது. பின்னர் அண்டவெளியுடன் கலக்கிறது என்கிறார் யோகா£ குரு யோகிதஸம். மூச்சை கட்டுப்படுத்தி சுவாசத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சில நோய்களை எளிதாக தீர்க்க முடியும் என்கிறார் அவர். நோயாளரை நேர்க்கோட்டில் படுக்க வைத்து படுத்திருப்பவரின் நாசி துவாரத்தின் மேல் புற எலும்பில் விரல் வைத்து அளவான, மென்மையான, அதிகம் பிரிவுடையதாக மாற்றி மாற்றி படிப்படியே நேரம் அதிகமுள்ளதாக மற்றவர் லேசாக அழுத்தினால் நோய்கள் தீருவதை கண்கூடாக காணலாம். மனித உடலில் சக்தி மைய உருவத்தில் மூக்கு தான் அமைந்திருக்கிறது என்று அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சை யோக மூச்சு என்கிறார் அவர்.

ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சால் உடல் நோய் அணுகாவண்ணம் காக்கப்படுகிறது. அதாவது இன்றைக்கு அறிவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 100 சதவீதம் நோய்த்தொற்று இல்லாத உணவு என்று சான்றிதழ் தரப்பட்ட உணவை கூட அது சுத்தமானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மனம் ஒன்றை ஏற்க இயலாத நிலையிலும், திருப்தியில்லாத நிலையிலும் உள்வாங்கப்படும் அந்த உணவு விஷமாகவே மாறும் என்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட இதை உறுதியாக சொல்லியிருக்கிறார்.

தற்போது இந்தியாவில் ஊழலை எதிர்த்து ஜன்லோக்பால் மசோதவை நிறைவேற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கும் அன்னாஹசாரேவை பார்க்க முடியும். முப்பது வயதிற்குள்ளாகவே புலன்களின் வலிமை குறைந்து உடல் சோர்வடைந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியிலே 74 வயதிலும் துள்ளல் ஓட்டத்துடனும், தொடர்ந்து உண்ணாநோன்பு இருந்தும் அவரது உடலில் சுறுசுறுப்புக்கு குறைவில்லை. இது போல் இந்த உலகின் சில பகுதிகளில் நூற்றி ஐம்பது வயதைக்கடந்தும் சிலர் புலன்களில் எந்த சோர்வும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை பார்க்கும் போதெல்லாம ஆச்சரியம் மேலிடுகிறது. உடலை இறுக்கும் காயகல்பம் தான் ஆயுளை நீட்டித்து வாழ செய்கிறது என்பதே இந்த ஆச்சரியத்திற்கான விடை. சித்தர்கள் காயகல்பத்தால் தான் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள்.

பறவைகளை போல் விண்ணில் மனிதர்களும் பறக்க முடியும் என்ற சாதனையை வெறும் இயந்திரத்தின் மூலம் நாம் சாதித்துக் கொண்டிருக்கும் போது, சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்கள் மனதை நிலைநிறுத்தி அந்தரத்தில் சில விநாடிகள் அப்படியே நிலைநிறுத்துவதை பார்க்க காணமுடிகிறது. மூச்சடக்கி பல மணி நேரங்கள் நீருக்குள் மூழ்கி இருப்பதை பார்க்க முடிகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

இதற்கு மட்டுமல்ல, உயிரையே எடுக்க வரும் எமனை கூட உதைத்து விரட்ட முடியுமாம் சுவாசிப்பது குறித்த ரகசியம் தெரிந்தால்!
இதை சொன்னவர் திருமூலம்.

" ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கு
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளரில்லை.
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளருக்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே!"

என்கிறார் திருமூலர். பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் ஏற்படும் பலனுக்கு திருமூலரின் இந்த பாடலை விட சான்று வேண்டுமா? திருமூலரின் மூச்சுபயிற்சி முறைகள், ஆயுளை நீட்டிக்கும் காயகல்ப முறைகள் தான் இன்றைக்கு பலன் நிறைந்த பயிற்சியாக உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு வாய்த்த திருமூலர் முதல் இந்தியாவின் மிகப்பெரிய தத்துவஞானியாக தோன்றிய ஜே.கிருஷ்ண மூர்த்தி வரையில் நமக்கு சில விடயங்களை போதித்திருப்பதன் ரகசியம் நம்மையும், நம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சத்தையும் உயிரோட்டமாக காண்பதற்கு மட்டுமே!

தியானத்திற்கும் மற்ற உயர்வான ஆன்மீக பயிற்சிகளுக்கும் ஒருவருடைய மனம் கவலைகளிலிருந்து விடுபட்டதாக , சலனமற்றதாக இருக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான, பிராகசிக்கின்ற மனம் மட்டும் தான், முடிவான ஆன்ம ஐக்கியத்தை பெற முடியும் என்பது உறுதி.

" நான் யார்" என்ற கேள்வியை பகவான் ரமணன் எழுப்பினார். அந்த உள்விசாரணை தான் ஒரு யோகியின் முடிவான லட்சியமாக இருக்க முடியும். இந்த நிலையை எய்துவதற்கு உடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உடல் என்ற கூட்டை வைத்து தான் இந்த உயர்வான ஆன்மீக நிலையை எட்ட முடியும். வயது முதிர்ந்தாலும் வளமுடன் வாழ, இளைஞனின் மிடுக்குடன் வாழ யோகாவில் திளைத்திட வேண்டும். யோகியாகி விட்டால், உடல் முதிர்ச்சியடையுமே தவிர, சரீரத்தின் வலிமையிலோ, மனோசக்தியையோ இழப்பதில்லை.

தியானத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சு அமைகிறது. நடக்கும் போது கூட சிலருக்கு பல ஆண்டுகள் தியானிக்கும் யோகிக்கு கூட கிடைக்காத சில உணர்வுகள் கிடைக்கிறது. இது பற்றி ஓஷோவின் வார்த்தைகளையும், சாதாரண நாசித்துவாரங்கள் மூலம் சுவாசிப்பதற்கும், உள் நாசியில் சுவாசிப்பது பற்றியும் அடுத்து பார்க்கலாம்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum