தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன்

Go down

மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன் Empty மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி -ஆனந்தமயன்

Post by இறையன் Mon Jan 02, 2012 10:08 pm

பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்பதாகவும்,

அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச்சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்டகாலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் ரிஷிகள்.

மனித ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்று வாசி எனப்படுகிறது. இந்த வாசியே பாற்கடல் புராணத்தில் வாசுகி என்னும் நாகமாக சித்தரிக்கப்படுகின்றது. பிராணன் எனப்படுவதும் வாசியையே குறிக்கிறது. இந்த பிராணன் எனப்படும் வாசியை இடம், வலமாக இழுத்து பல தொழில் செய்து கட்டுப்படுத்தும் முறைக்கு பிராணயாமம் என்று யோக ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, இந்த வாசியை கட்டுப்படுத்தி உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை வெளிக் கொண்டு வரும் முறையே பிராணயாமம். குண்டலினி சக்தியை எட்டும் போது ஒரு மனிதனுக்கு சகல வித சித்திகளும் கிட்டும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இது மிகப்பெரிய விஞ்ஞானம் என்பது இதனை உணர்ந்தால் புரியும்.

அதாவது ரத்தம் உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவை எடுத்து செல்கிறது. காற்றோடு கலக்கப்பட்ட அந்த ரத்தத்தில் மிகமிக நுண்ணிய சத்துக்கள் அடங்கியுள்ளன. ரத்தத்துடன் கலந்து செல்லும் காற்றானது தூய்மையாகவும், சரியான ஓட்டத்திலும் செல்லும் போது மனித உடலின் நுண்ணிய உயிர்க்கோளங்கள் அனைத்தும் சரியாகவும், ஆரோக்கியத்துடனும் இயங்குகின்றன.

மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் களையப்பட்டு விடுவதால் தூயரத்தம் மிகத்தூய்மையான உயிர்காற்றான பிராணவாயுவை சுமந்து சென்று உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவாக தருகிறது. மனிதனின் மூளை அதன் சக்தியில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

இது போன்ற பயிற்சிகளால் மனிதன் சித்தியை எட்டக்கூடும் என்று ரிஷிகள் சொல்வதை பார்த்தால், மூச்சு பயிற்சியின் மூலம் மூளை மட்டுமல்லாமல் உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்திறனையும் வியக்கத்தக்க அளவுக்கு உயர்த்த முடியும் என்கிறார்கள் தற்போதைய வாசியோக அப்பியாசிகள்.

பத்து வாயுக்கள்

மனித தேகத்தை பொருத்தமட்டில் பிராணன், அபானன், வியானன்,உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்று தசவாயுக்களாகிய பத்துவாயுக்கள் உள்ளன. இவற்றை விளக்கப்படுத்தி பார்த்தால், பிராணன் எனப்படுவது உடலுக்கு ஆதாரமான உயிர்காற்று, இது ரத்த ஓட்டத்தையும், சுவாசத்தையும் பலப்படுத்துகின்றது. அபானன் எனப்படுவது மலத்தில் தங்கும் மலக்காற்று, இது கீழ்நோக்கி பாய்வது. வியானன் எனப்படுவது மண்ணீரலில் இருந்து நரம்புகளையும், மூளையையும் பலப்படுத்துவது. இதனை தொழிற்காற்று என்றும் கூறுவர். உதானன் எனப்படுவது குரல், பேச்சை உருவாக்குகிறது. இதனை ஒளிக்காற்று என்பர்.

சமானன் எனப்படுவது உண்ட உணவை ஜீரணமாக்கி உடலை சமானப்படுத்துகின்றது. இதனை நிரவு காற்று என்பர். நாகன் எனப்படுவது தும்மல் காற்றாக நாசியிலிருந்து வெளிப்படுகின்றது. இதன் வேகம் எல்லா காற்றுகளையும் விட மிகவும் அதிகமானதாகும். கூர்மன் எனப்படுவது விழி காற்றாகும். விழியின் பார்வைக்கும், கண்ணீர் வரவைக்கும் குணமும் இதற்கு உண்டு. கிருகரன் எனப்படுவது கொட்டாவி விடும் காற்றாகும், தூக்கம் வருவதற்கான அறிகுறியையும், பிராணசக்தி குறைதலையும் சுட்டிக்காட்டும் காற்றாகும்.

தேவதத்தன், இதை இமைக்காற்று என்பர். கண்விழியை பாதுகாக்கும் பொருட்டு இமைத்துக் கொண்டேயிருக்கும். புராணங்களிலில் இதை நிமி என்றும் கூறுவர். தனஞ்செயன்,உடலை விட்டு ஒன்பது வாயுக்களும் வெளியேறிய பிறகு உடலினுள் நுண்கிருமிகளை தூண்டி உடலை வீங்க வைத்து கடைசியில் வெளியேறும் காற்றாகும். இதை வீங்கல் காற்று என்பர். இப்படி மனித தேகத்தில் பத்துவிதமான காற்றுகள் உயிர் வாழும் பொருட்டு தேகத்தை இயக்குகின்றன.

உயிராதார காற்று

பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.

இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள் ரிஷிகள்.

பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள்.

பிராணயமம் என்ற காற்றடக்கும் கலையானது, ப்ராக்ருதம், வைகிருதம் என்ற இரு வகைப்படும். இந்த இரண்டு மட்டுமல்லாமல் மத்திமமான கேவலகும்பகம் என்ற ஒரு வகையும் உண்டு. எல்லா உயிர்களும் இயற்கையாகவே மூச்சுவிடுதலுக்கு ப்ராக்ருதம் என்று பெயர். சாஸ்திரங்களில் கூறியபடி காற்றை கட்டுப்படுத்தி பயனடையும் முயற்சிக்கு வைகிருதம் என்று பெயர். எந்தவித முயற்சியும் இல்லாமல் காற்றடக்கலால் கிடைக்கும் பலன் ஒரு ஜீவனுக்கு கிடைத்தால் அதற்கு கேவல கும்பகம் என்று பெயர். ஆக மொத்தம் இயற்கை, செயற்கை, கேவலம் என்ற யதார்த்தம் ஆகிய மூன்று நிலைகளில் காற்றடக்கும் பிராணயாமதத்துவம் அமைகின்றது.

காற்று எண்ணிக்கை

காற்றை உடலுள்ளிழுத்து வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம். இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21,600 முறை நடக்கின்றது. இச்சுவாசத்தில் இயல்பாக உடலுக்குள் செயல்பாட்டிற்கு செல்லும் சுவாசம் அதிகபட்சம் 14,400 தான். மீதமுள்ள சுவாசங்கள் யாவும் வீணாகவே கழிகின்றன. சுவாசங்கள் வீணாவதால் ஆயுள்நிலையும் வீணாக கழிகின்றது. நோய்களும் உண்டாகிறது.

இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி மேம்படுத்தினால் சுவாசம் தங்குதடையின்றி எல்லா பகுதிகளுக்கும் சென்று பிராணசக்தியினால் தேகத்தை வலுப்படுத்துகின்றது. ஆயுளும் நீடிக்கிறது. நோய் அகலுகின்றது. பாபம் விலகுகின்றது. மூச்சை சரியாக இழுத்து விடுதலும் ஒரு வகையான பாப சம்ஹாரமே, புண்ணியத்தை எய்துகின்ற முயற்சியே என்கிறார்கள் சாதுக்கள்.

சுவாசத்தை இழுத்து விடும் கால அளவை மாத்திரை என்பார்கள். மாத்திரை என்பது விரல் சொடுக்கும் நேரமும், கண்ணை சிமிட்டும் நேரமும் ஆகும். சுவாசம் இழுக்கப்படும் போது 16 மாத்திரை காலம் இழுக்க வேண்டும். சுவாசம் இழுக்கப்படும் தத்துவத்திற்கு பூரகம் என்று பெயர். சுவாசத்தை உடல் பூரிப்பதால் அச்செயலுக்கு பூரகம் என்று பெயர் வந்தது. பயிற்சியின் துவக்க காலத்தில் 16 மாத்திரை காலம் சுவாசத்தை இழுப்பது கடினம். தகுந்த குருவின் பயிற்சியால் சுவாசத்தை இது போல் இழுக்கலாம்.

காற்றை இழுத்தல், அடக்கல், விடுதல்

தொடக்க காலத்தில் காற்றை இழுத்து அடக்கி செய்யும் பயிற்சிகளை குருவின் துணையில்லாமல் செய்தல் கூடாது. காற்றை உடலுக்குள் அடக்கி பயில்வது பிரச்சினைகளை உண்டாக்கும். போதிய பயிற்சிக்கு பின் இத்தகைய அடக்கல் பயிற்சியை செய்யலாம். பொதுவாக, இப்படி மூச்சை அடக்கி பயிலும் போது சேமிக்கப்படும் பிராணனால், உடலின் மூலை முடுக்கெல்லாம் பிராணன் ரத்த ஓட்டங்களில் கலந்து ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றும்.

இயல்பாக சாதாரண மானுட நிலையில் 64 மாத்திரை காலம் பிராணனை உடலில் தக்க வைக்க முடியாது. பயிற்சியால் மட்டுமே முடியும். பிராணனை சேமிக்கும் செயலுக்கு கும்பகம் என்று பெயர். கும்பகம் என்பதற்கு அமிர்தத்தால் நிரப்பப்பட்ட கலசம் என்று பொருள். உண்மையில் பிராணன் அமிர்தமே. அந்த அமிர்தமாகிய பிராணசக்தி இல்லாவிட்டால் உடல் நிலைக்காது.

16 மாத்திரை காலம் பிராணனை இழுத்து 64 மாத்திரை காலம் அதை உடலினுள் வைத்து 32 மாத்திரைகாலம் தக்க வைத்த பிராணனை வெளியிட வேண்டும் என்பது பொதுவிதி. இதுவும் சற்று கடுமையே. தொடக்கத்தில் பயிற்சியின் போது மூச்சு திணறலும், பயமும் வரலாம். நாளடைவில் பயிற்சியினால் சரியாகிவிடும். உடலில் பிராணனை தக்க வைத்து பின்பு வெளியிடும் செயலுக்கு இரேசகம் என்று பெயர். இரேசகம் என்றால் வெற்றிடமாக்குதல் என்று பொருள்.

பிராணன் என்ற அமிர்தம்

அமிர்தமான பிராணன் ரத்த ஓட்டத்தில் கலந்து தன்னுடைய பணிகளை செய்து மாசுக்களோடு வெளியாகிறது. அதாவது நாம் வெளிவிடும் மூச்சில் கரியமில வாயு இருக்கிறது என்பார்கள். இது தான் அந்த நச்சு. அதாவது உடலில் இருக்கும் கழிவுகள் எல்லாம் இந்த மூச்சுக்காற்றின் வழியாக கரியமில வாயுவாக வெளியேறுகிறது. மிகச்சரியான பிராணயாம பயிற்சி முறைகளால் உடலில் துளியளவு கூட நச்சுக்கள் இன்றி ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ள முடியும். உடல் முழுவதும் அமிர்தமாகிய தூய காற்றை நிரப்பி உடலை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி

ஆராய்ச்சி ரீதியாக ஒரு நிமிடத்திற்கு 18 முறையென ஒரு நாளைக்கு 25,920 சுவாசங்களை சுவாசிக்கின்றோம். அது இயற்கையிலான சுவாசம் என்றாலும், சுவாசத்தை பலப்படுத்த வைகிருதம் என்ற சுவாசப்பயிற்சியை சிறுக,சிறுக மேம்படுத்த வேண்டும். வைகிருதம் என்ற சுவாசப்பயிற்சியை சுகப்பிராணயாமம், சமவிருத்த பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யமபிராணயாமம், ஆத்யபிராணயாமம், மகத்யோக பிராணயாமம் என்று பலவகையாக பிரிக்கலாம்.

ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.

இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன. இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன என்கிறார்கள்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum