Latest topics
இடைக்காடர்- சிங்கை கிருஷ்ணன்
Page 1 of 1
இடைக்காடர்- சிங்கை கிருஷ்ணன்
பற்றே பிறப்புண்டாக்கும் தாண்வக்கோனே – அதைப்
பற்றாது அறுத்து விடு தாண்டவக்கோனே !
என்றும்,
ஆதி பகவனையே பசுவே
அன்பாய் நினைப்பாயே
சோதி பரகதிதான் பசுவே
சொந்தமது ஆகாதோ?
இவ்வாறு இனிய கருத்து நிறைந்த தத்துவப் பாடல்களைப் புனைந்த இந்தச் சித்தர், ஆனந்தக் கோனாரையும்`ஆட்டையும், பசு மாட்டையும், அன்னப் பறவையையும், புல்லாங்குழலையும்,அறிவையும், நெஞ்சையும்,மயிலையும்,குயிலையும் முன்னிலைப் பொருளாகக் கொண்டு,பல உலகியல்புகளையும் உண்மைகளையும் பாடி, கிடக்கட்டி, ஜீவன் என்னும் பசுவில் இருந்து அறிவுப்பால் கறக்கும்படி தூண்டுகிறார்.
இடைக்காரர் கொங்கணார் சித்தரின் சீடர். கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் இடையர்களையும் ஆடு மாடுகளையும் முன்னிருத்தி பாடியிருப்பதாலும், அன்றி மலையாள நாட்டில் உள்ள இடைக்காடு எனும் ஊரினைச் சேர்ந்தவராகிய காரணத்தினாலோ இடைக்காடர் என்னும் பெயர் பெற்றாரா என்பது தெரியவில்லை.இவரைப்பற்றிப் பல கதைகள் வழங்கி வருகின்றன. இவர் தொண்டை மண்டலத்தில் இடையில் திட்டில் ஓர் இடையராக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் இவர் பொதிகை மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால் கேட்டார். அச்சித்தருக்கு இவர் பால்கொடுத்து உபசரித்ததனால் இவருக்கு ஞானோபதேசம் செய்து விட்டுப் போனார். அதனால் இவர் சகல சித்திகளும்அடைந்து சித்தரானார்.
அருளில் சிறந்தவர்கள் நவநாத சித்தர்கள் வான மண்டலத்தில் எங்கும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சித்தர்கள் மண்ணில் கனிவானவர்கள் தென்பட்டால் அவர்கள் முன் திடீரென்று தோன்றுவார்கள். சரீரம் வேர்விட்டு மண்ணில் நிற்க, உயிரும் சிந்தையும் வான மண்டலமெங்கும் சஞ்சரித்தபடி இடைக்காடர் பல நாட்கணக்காய் நிற்கின்ற கோலத்தை போக முனிவர் என்பதை இடைக்காடர் அறியார். இருப்பினும், அவரை
வணங்கி எழுந்து தர்ப்பைப் புல்லைக் கீழே பரப்பி அதன்மீது போகரை அமர செய்தார். குட்டி ஈன்றஆட்டின் பாலைக் கறந்து சுடச் சுடக் கொண்டு வந்து சித்தரின் முன் வைத்தார். ’’ சுவாமி, தயைகூர்ந்து இந்தஏழையின் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் ’’ சிலீரென்று இடைக்காடரின் அந்த விருந்தோம்பும் பண்புபோகமுனிவரை சிலிர்க்கச் செய்தது. இடைக்காடர் தந்த பாலைப் பரிவுடன் ஏற்றுக் கொண்ட போகமுனிவர், இடைக்காடரை அருட்பார்வையால் நனைத்தார்.
‘’மைந்தா, உன் தேகம் இங்கிருக்க. உன் ஆத்மா வான மண்டலமெங்கும் சஞ்சரித்துத் திரிந்ததே, யாருடன் உறவாடிக் கொண்டு இருந்தாய்.?’’ எதனைக் கண்டு ஆராய்ந்து கொண்டுடிருந்தார்? என்று போக முனிவர் கேட்ட போது இடைக்காடரால் பதிலேதும் கூறமுடியவில்லை. ஆட்டுப்பால் கறந்து கொடுத்து, அன்பொழுக உபசரித்த இடைக்காடருக்கு ஞானப்பால் வழங்க திருவுள்ளம் கொண்டார் சித்தர்.போகரின் ஆகர்ஷணப் பார்வையால் தம்முள் ஞான ஒளிவெள்ளம் பாய்வதை உணர்ந்தார் இடைக்காடர். வைத்தியம், வாதம், போகம், ஞானம், வான சாஸ்திரம் யாவும் கைவரப்பெற்றார். ஏழையாக இருந்த போதிலும் எல்லோரையும் உபசரிப்பதில் வள்ளலாகத் திகழ்ந்த இடைக்காடரின் பண்பும் அறிவும் போக சித்தரை கவர்ந்தது.அவருடன் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இடைக்காடருக்குப் பல் வேறு உபதேசங்களை அருளினார்.
இடைக்காடா, நான் உன்னை விட்டுப்பிரியும் நேரம் வந்துவிட்டது. உன்னுள் வந்தடைந்த ஞானத்தைக்கொண்டு, உலகை உய்விக்கும் வழிகளைக் கண்டறிந்து அருள்வாயாக! என்று போகர் கூறியபடி மறைந்து விட்டார். குருநாதர் அருகில் இருப்பதைவிட அவர் உபதேசித்த நற்செயல்களை மக்களுக்குக் கொண்டு செல்வதுதான் அவருக்குச் செய்யும் நன்றிக் கடன் என்று கருதினார். ஞானச்சித்தர் தன்னுள் பாய்ச்சிய ஞானஒளியை அற்புதப் பாடல்களாகப் பாடித் திரிந்தார்.
சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே
யாவுஞ் சித்தீயென்றே நினையேயடா தாண்டவக் கோனே
என்று பாடிச் செல்லும் ஞானசித்தரானார்.
புவியிலுள்ள ஜீவராசிகட்கும் வெளிப்புறச் சக்திகட்கும் இடையே உள்ள தொடர்பினை அறுதியிட்டுக் கூறினார். 12 இராசிகளையும், அசுவதி முதலாகிய 27 நட்சத்திரங்களையும், சூரியன்,சந்திரன் முதலாகிய ஒன்பது கோள்களையும் அவற்றின் சாயைகளையும் அளவிட்டதுடன் அவற்றால் புவியிடத்துத் தோன்றி இயங்கும் ஜீவராசிகளுக்கும் பொருந்துகின்ற விளைவுகள் பற்றியும் அறிந்தார் இடைக்காடர். அறிந்தவற்றை சீடர்களுக்கும் உபதேசித்தார். “ ரிஷபம்,சிம்மம், விருச்சிகம், கும்பம், இவை நான்கும் நிற்பவை. கடகம், துலாம், மகரம், மேஷம் இவை நான்கும்சுழல்பவை. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை நான்கும் நிற்பனவற்றோடு சுழல்பவை.“ உதட்டளவில் உறவாடி உள்ளத்தால் தீங்கு எண்ணும் மனித குலத்தில் குற்றங்கள் எல்லையற்றுப் போய்விட்டது. ஏமாற்றும் எண்ணம் பல்கி பெருவிட்டது. கிரகங்கள் வக்கரித்துப் போய்விட்டன. இன்னும் சில காலத்தில்கொடிய பஞ்சம் வரப்போகிறது என்பதை சோதிட ஆராய்ச்சியின் மூலம் அறிந்துக்கொண்டார். இடைக்காடரின் மனம் கலங்கியது. இன்னும் 12 ஆண்டுகள் மழை பெய்யாது கடும் பஞ்சமும், பட்டினியும் பரவிக்கிடக்கும் என்பதை உணர்ந்தார்.
தனது ஆட்டு மந்தைகளைப் பார்த்தார். மறுபுறம் காடாக அடர்ந்து கிடந்த எருக்கம் செடிகளையும் பார்த்தார். எருக்கம் பக்கமே திரும்பாத ஆடுகளை இடைக்காடர் தினம் கொண்டு போய் நிறுத்தி அவற்றை உண்ணும்படிவற்புறுத்தினார். வேறு தாவரங்களை கண்ணில் காட்டாது எருக்கம் செடிகளைப் பிடுங்கி போட்டு ஆடுகளைத்தின்னும்படி ஒரு நிலையைத் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். பார்ப்பவர்கள் எல்லோரும் இடைக்காடருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று இகழ்ந்தார்கள். பசும் புல்லிருக்க விஷத்தன்மை வாய்ந்த எருக்கம் செடிகளைத்
தனது ஆட்டுக்கு உணவாக்கி ஏன் பழக்குகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.அதோடு மட்டுமல்ல;குறுந்தானியமான “குருவரகு” கொண்டு வந்து மண்ணில் சேற்றோடு பிசைந்து ஆங்காங்கே மண் சுவர்கள்எழுப்பினார். குடிசை கட்டினார்.-- இடைக்காரர் ஆருடம் கணித்தபடி இன்னல் தரும் கடும் பஞ்சகாலம் வந்தது. மழையின்றி மரம், செடி,கொடியாவும் கருகின.பறவைகளும், விலங்குகளும் மனித ஜீவராசிகளும் கூட்டம் கூட்டமாய் மடிந்தன.பாவங்கள் கணக்கின்றி விதைத்த மனித இனம் பாவத்தை அறுவடை செய்ய வேண்டிய தருணம். அழிவைத் தவிர வேறு
வழியில்லை. என்று கிரகாதிபதிகள் கருணையற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றையெல்லாம் தொலை நோக்குப் பார்வையில் கணித்த இடைக்காரர் அதன் பொருட்டே எருக்கிலையைஉண்பதற்கு தமது ஆடுகளைப் பழக்கி இருந்தார். எருக்கிலைக்கு மட்டும் எப்போதும் பஞ்சம் இருக்காதல்லவா? அவற்றைத் தின்று பழகுவதால் உணவாகி ஆடுகளும் பஞ்சகாலத்தில் உயிர் வாழும்.
ஆனால் எருக்கிலையைத் தின்னும் ஆடுகளின் உடலில் தினமும் அரிப்பு ஏற்படும். அவை தம் உடலில் தினவை நீக்கிக் கொள்வதற்குத் தினமும் அந்த மண் சுவர்களில் உடம்பைத் தேய்க்கும். அப்போது சுவரில் ஓட்டியிருக்கும்‘குருவரகு’ தானியம் உதிரும். பஞ்சகாலத்தில் அவற்றைக் கஞ்சியாக்கி உண்டு உயிர் பிழைக்கலாம். இதுவேஇடைக்காரரின் திட்டம்.
அதன்படியே இடைக்காரர் அவரது ஆடுகள் மட்டும் அந்தப் பஞ்சகாலத்தில் எவ்விதக் குறைவுமின்றி உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி நவக்கிரங்களுக்கும் செய்தி எட்டியது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகஇருந்தது. நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு உணவும் தண்ணீரும் இன்றி மக்களும் இதர ஜீவராசிகளும்இறந்து ஊரே பாழ்பட்டு ஜனசந்தடியின்றி பாலைவனம்போல காட்சியளித்த போதிலும், இடைக்காரர் மட்டும் எப்போதும் போல் தமது ஆடுகளுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து நவக்கிரக நாயகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இவரும் இவரது ஆடுகளும் மட்டும் பிழைக்க எப்படி சாத்தியம் என்பதை அறிய விரும்பி நவக்கிரகங்களின் நாயகர்கள் ஒன்பது பேர்களும் இடைக்காரரின் மண் குடிசைக்கு வந்து சேர்ந்தனர். பிரபஞ்சத்தையே ஆளுகைசெய்கின்ற நவக்கிரங்களும் தம் குடிசைக்கு வந்து நின்றதைப் பார்த்து மகிழ்ச்சியால் திகைத்துப் போன இடைக்காரர் அவர்களை சந்தோஷம் பொங்க வரவேற்றார்.
“இந்த ஏழையின் குடிலுக்குத் தாங்கள் அனைவரும் ஒரு சேர வந்தது நான் செய்த பாக்கியம். தங்களை உரிய முறையில் வரவேற்க எம்மால் இயலாமல் போனாலும், முடிந்த அளவில் உபசரிக்க வரகு ரொட்டியும், ஆட்டுப்பாலும் தவிர வேறு எதுவும் இல்லை. தயை கூர்ந்து இந்த அடியவன் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்”
ஞான அனுபவத்தில் தலை சிறந்த இடைக்காடரின் அன்பு வேண்டுகோளை மறுக்க நவகிரக நாயகர்களும் பயந்தனர். இடைக்காடரும் அவர்களை வற்புறுத்தி சாப்பிட செய்து செய்தார். எருக்கிலைச் சத்து மிகுந்த பாலாக இருந்ததால் அதனைக் குடித்த நவக்கிரக நாயகர்கள் படுத்த மாத்திரத்தில் தூங்கிவிட்டார்கள்.மனித குலத்தின் மீதான வெறுப்பில் 12 ஆண்டுகள் மழையை பொழிய விடாது கெடுத்த நவகிரக நாயகர்களை…,மழை பொழிவதற்கான கோள்களின் இருப்பிடக் கணக்கை மனக்கணக்காகப் போட்டு பார்த்த வானசாஸ்திர வல்லுநரான இடைக்காடர். அந்தக்கிரங்கள் எந்த அமைப்பில் இருந்தால் மழைபொழியும் எனப் பார்த்தறிந்து அதற்கேற்ப இடம் மாற்றிப் படுத்துக் கிடத்தினார்.
அந்தக்கண்மே ஆகாயத்தில் கருத்த மேகங்கள் கூடி மின்னலும் இடியுமாக மழை பொழிந்தது. குளங்களும்,ஆறுகளும் நிரம்பின. மயக்கம் தெளிந்த நாயகர் புவியெங்கும் பெரும் மழை பெய்து இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு இந்த மழைப் பொழிந்ததற்கான நுட்ப காரியத்தை செய்த இடைக்காரின் செயல் கண்டு வியந்தனர். இடைக்காரர் எங்கே என்று தேடிய போது இடைக்காடர் தவநிலையில் இருப்பதைப் பார்த்தனர். காலத்தின் தத்துவம் அறிந்த இடைக்காரரின் நுண்ணிறிவால் மாண்டவர் போக மீதயிருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். சீடர்கள் “ கோள்களின் வலிமை எதுவென்று கூறவேண்டு குருவே ‘’ என வேண்டவே, “புதனும் வியாழனும் உதயத்துப் பலமுடையவர். ஆதித்தனும் செவ்வாயும் பத்தாமிடத்தில் பலமுடையவர். சனியும்பாம்பும் ஏழாமிடத்தில் பலமுடைவர், சுக்ரனும் சந்திரனும் நாலாமிடத்துப் பலமுடையர் இப்படி
கிரகங்கள் யாவும் பலமுடையர்தான் ‘’ என்றார் இடைக்காரர்.
இவரை மகா விஷ்ணு அவதாரம் என்றும் கருதுகிறார்கள். ஒரு சமயம் இவரிடம் சித்தர்கள் சிலர் வந்து. மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று கேட்டபோது “ஏழை இடையன் இளிச்சவாயன்’’ என்று கூறிச் சிரித்தாராம். இவர் சாரீரம் என்னும் வைத்திய நூல் இயற்றினார் என்றும், போகரின் மாணவர் எனவும், மதுரைக்குக் கிழக்கிலுள்ள இடைக்காட்டில் பிறந்தவரெனவும் கூறுவர்.இடைக்காரர் என்னும் பெயரில் சங்க காலத்திலும் ஒரு புலவர் இருந்து அகநானூறு,குறுந்தொகை, திருவள்ளுவ மாலை முதலிய நூல்களில் சில பாடல்கள் இயற்றியிருக்கிறார்.
தொல்லப் பிறவியின் தொந்தமுற்று அறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பதம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே!
[ இந்த மானிடப் பிறவி என்பது தொல்லை நிறைந்தது. அன்றாட உணவுக்காவும், வேலைக்காவும், உடைகளுக்கும், இருப்பிடத்திற்காகவும் படும் துன்பங்களை காண்கிறோம். இந்த பிறவியை ஞானிகள் துன்பம் என்றும், நோய் என்றும் கூறுகிறார்கள். இடைக்காரர் தொல்லைறுரும் பிறவி என்கிறார். இந்த துன்பங்கள் தீங்க சோம்பலை தீக்கி தவம் செய்ய வேண்டும். தவத்தின் மூலம் இறைவனின் பதம் நமக்கு வாய்க்கும், நம்முடைய பிறவி நோயும் தீரும்.}
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்ற நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளூவீர் கோனாரே !
[ மெய்,வாய்,கண், செவி இவைகள் ஐந்தும் மனிதனை தீயவழியில் அழைத்துச்செல்கிறது. இந்தப் பொறிகளின் மூலம் எப்பொழுதும் சஞ்சலமே. இந்த சஞ்சலம் நீங்க இவ்வைந்துபாவங்களை போக்க இறைவன் பால் திரும்ப வேண்டும். பற்றற்றவன் இறைவன், உடலால்இறைவனை வணங்கவும், வாயால் திருமாம் கூறவும், கண்ணால் திருமேனியைக் காணவும், மூக்கால் வாசனை அறிந்து,செவியால் இறைவனின் நாமம்கேட்டு வந்தால் துன்பம் நீங்கும்.]
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்

Similar topics
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
» அருணகிரிநாதர்-சிங்கை கிருஷ்ணன்
» திருமூல நாயனார்-சிங்கை கிருஷ்ணன்
» குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன்
» குதம்பைச் சித்தர்-சிங்கை கிருஷ்ணன்
» அருணகிரிநாதர்-சிங்கை கிருஷ்ணன்
» திருமூல நாயனார்-சிங்கை கிருஷ்ணன்
» குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன்
» குதம்பைச் சித்தர்-சிங்கை கிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Thu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Thu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Thu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Thu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்
» பிரம்மராஜன் கவிதைகள்
Thu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்
» K Iniyavan
Thu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்
» K Iniyavan -karuththu
Thu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்