தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அறிவியலுடன் இணைந்து செல்லும் இந்து மதம்

Go down

அறிவியலுடன் இணைந்து செல்லும் இந்து மதம் Empty அறிவியலுடன் இணைந்து செல்லும் இந்து மதம்

Post by இறையன் Wed Dec 14, 2011 4:47 pm

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9.11.1934; மறைவு 20.12.1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது. இவரது தனிச் சிறப்பு!

பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் தொடக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார்.

உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிகாச புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை இந்து, நாகரிகத்தின் மீதும் இந்து இதிகாச புராணங்களின் மீதும் பதிந்தது. இந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கத்தில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் செளகரியத்தை ஏற்படுத்தியது.

ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகிவிடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை இந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!

இந்து இலக்கியத்தில் சங்கம், பத்மம் போன்ற மிகப்பெரும் இலக்கத்தைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகள் உள்ளன. மகாபாரதத்தில் பெரிய எண்களைக் குறிக்கும் சொற்கள் வரிசையாக உள்ளன.

அயுதம் என்றால் பதினாயிரத்தைக் குறிக்கும். ப்ரயுதம் என்றால் பத்து லட்சத்தைக் குறிக்கும் சங்கு என்றால் பத்து இலட்சம் கோடியைக் குறிக்கும். பத்மம் என்றால் நூறு கோடியைக் குறிக்கும். அற்புதம் என்றால் பத்துக் கோடியைக் குறிக்கும் கர்வம் என்றால் ஆயிரம் கோடியைக் குறிக்கும். சங்கம் என்றால் லட்சம் கோடியைக் குறிக்கும்.

நிகர்வம் என்றால் பதினாயிரம் கோடியைக் குறிக்கும். மஹாபத்மம் என்றால் நூறு இலட்சம் கோடியைக் குறிக்கும். மத்யம் என்றால் பதினாயிரம் இலட்சம் கோடியைக் குறிக்கும்

பரார்த்தம் என்றால் இலட்சம் இலட்சம் கோடியைக் குறிக்கும்!

இப்படி பிரமாண்டமான எண்கள் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இப்படிப்பட்ட பெரிய இலக்கங்கள் இந்து மத இலக்கியத்திலும் இந்து வாழ்க்கை முறையிலும் மட்டுமே உள்ளன.

கார்ல் சகன் அதிசயித்த விஷயம் இந்து புராணங்களில் உள்ள யுகம், கல்பம் ஆகியவற்றை பற்றிய தீர்மானமான கருத்துக்கள் பற்றியவை! முடிவில்லாது சுழற்சி முறையில் தோன்றி (பிரளய காலத்தில்) அழியும் பிரபஞ்சம் பற்றிய கருத்து அவரை வியக்க வைத்தது.

இதைக் கண்டு அதிசயித்து அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் கூறினார் :-

உலகின் பெரும் மதங்களில் இந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளய காலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இதுதான். நமது சாதாரண இரவு பகலில் ஆரம்பித்து பிரம்மாவின் இரவு பகல் பற்றி – 864 கோடி வருடங்களைப் பற்றி - அது பேசுகிறது.

பூமி, சூரியன் வயதையும் தாண்டி ‘பிக் பேங்’ தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது”

எல்லா பழைய நாகரிகங்களும் அழிந்து பட்டுள்ள நிலையில் இந்து நாகரிகம் மட்டும் ஜீவனுள்ளதாக இருப்பதை அறிந்த அவர் உடனே இந்தியா வர ஆசைப்பட்டார்! பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய அறிவியல் தொடருக்கு சரியான ஆரம்பம் இந்தியாவில் கிடைக்கும் என்று அவர் நம்பினார். உடனே இந்திய பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவில் அவர் அடைந்த ஆச்சரியங்கள் எத்தனையோ!

காஸ்மாஸ் தொடரில் இந்து மதத்தில் பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் (சிதம்பர) நடராஜரைக் 8!qபித்து பிரபஞ்சம் பற்றி அவர் விளக்கினார்.

கார்ல் சகன் அடிக்கடி பில்லியன் அண்ட் பில்லியன்ஸ் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் என்றால் (கோடானு கோடி) என்ற தொடரால் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் கூறுவார். ஆகவே அவரை பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் என்ற தொடரைச் சொல்லி கேலி செய்வார்கள்.

எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி அவர் குறிப்பிட்ட விஞ்ஞானக் கருத்துக்கள் இந்து மதக் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. பிரபஞ்சம் எல்லையற்றது. விரிந்து கொண்டே போகிறது.

பிரளய காலத்தில் சுருங்கும் கோடானு கோடி கிரகங்கள், நட்சத்திரங்களின் கணக்கிற்கு எல்லையே இல்லை - போன்ற பல கருத்துக்களில் ஒற்றுமை காணப்படுவது வியக்க வைக்கிறது.

நன்றி இணையம்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum