தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்

Go down

கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  Empty கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்

Post by இறையன் Sat Dec 17, 2011 10:18 pm

கருவூரார் போகரின் சீடராவார். கருவூரைச் சேர்ந்தவர் என்பதால் கருவூரார் என்ற பெயர் இவருக்கு வந்தது. சைவ சமயத்தைக்
கடைபிடித்த இவர் ஞான நூல்களை ஆராய்ந்தவர். சிவ யோக சித்தி அடைந்தவர். இவரது காலம் கி.பி. 11 -ம் நூற்றாண்டு.கார்த்திகை திங்கள் மிருகசீரிடம் அன்று பூச நாளில் ஆரம்பித்து வேப்பமரக் கொழுந்தைக் கிள்ளி இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால்..,பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டால் குஷ்ட நோய் விலகும். கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்துமூன்று விரல்களால் எடுக்கும் அளவு பொடியை தேனில் குழைத்துத் சாப்பிட்டு வந்தால் நரை,திரை, மாறும் என்கிற வேம்பின் மகத்துவத்தை முதன் முதலாகச் சொன்னவர் இவர்,


வாத காவியம், வைத்தியம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், மெய்ச் சுருக்கம், சிவஞான போதம், கற்பவிதி, மூப்பு சூத்திரம், பூஜா விதி போன்ற பல தமிழ் நூல்களை நமக்கு வழங்கியுள்ளார். முனிவர்களால் ஞானப் பாலூட்டப்பட்டு வளர்ந்தவர் கருவூரார். தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர். கருவூராரின் தாய்-தந்தை ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோயில்களில் விக்கிரங்கள் செய்து கொடுத்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள் முனிவர்களுக்கும்,சித்தர்களுக்கும் வேண்டிய பொருட்களை கொடுப்பது வழக்கம்.


சிறு வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர். வசியம்,மோகனம், தம்பனம், உச்சாடனம் ஆகர்ஷணம், வித்து வேஷணம், பேதனம், மாரணம் எனும் அட்டகர்ம மந்திரங்கள் கருவூராருக்கு அத்துப்படியாகியது. தாமரைக்காய் மாலையணிந்து, புலித்தோலால் செய்யப்பட்ட ஆசனத்தினை ஆலமரப்பலகை மீது விரித்து தென் மேற்குச் திசையில் அமர்ந்து ‘நவசிவாயம்’ எனும் தம்பனத்துக்குரிய மந்திரம் அந்த வயதிலேயே அவருக்கு வசியமானது.அறிந்த மந்திரம் யாவற்றையும் ஏழை, எளிய மக்கள் குறை தீர்க்கவே கையாண்டு வந்தார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்குவதும் பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்து திரிந்தார். சாதி,குலம், நீத்துச் சிவத்தலயாத்திரை செய்து திருவிசைப்பா பதிகங்கள் பாடி வந்தார்.சாதி சம்பிரதாயங்களைப்
புறக்கணித்தார்.
கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  Indexsidhas

ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது. ஆச்சரியத்துடன் அந்த ஓலையை வாசித்தார். ‘ நீர் உடனே தஞ்சை வந்து சேரும்’ என்ற வாசகம் இருந்தது. அந்த ஓலை தன் குருவான போகரிடமிருந்து வந்திருந்தது. தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது. அதனைப் போக்கவே அவரை அழைத்திருந்தார்.தஞ்சையில் இராஜராஜ சோழ மன்னன் பிரம்மாண்டமான சிவாலயம் கட்டியிருந்தான். சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய அஷ்டபந்தனம் பலமுறை அவிழ்ந்து இளகி பந்தனம் ஆகாமல் போயிற்று. கோயிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கே அஷ்டபந்தனம் செய்ய
விடாமல் ஒரு பிரம்ம ராக்ஷஸி தடுத்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன்மீது காறி உமிழ்ந்தார்.கருவூராரின் வாய் எச்சில்பட்டு தீப்பொசுங்கி பிரம்ம ராக்ஷஸி கருகியது. அதன் பிறகு அவரே அஷ்டபந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகமும் செய்து வைத்தார்.


சிவபெருமானின் ஐந்து முகமாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம், சத்தியோசதம் அண்டரண்ட மந்திரம் உபதேசித்து நிறைவு செய்தார். அண்டரண்ட மந்திரம் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும். பிறகு, கருவூரார் அங்கிருந்து புறப்பட்டுத் திருவரங்கத்திற்குச் சென்றார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து
பெரிதும் உபசரித்தார். ’சித்தர் பெருமானே! இத்தகைய மோகன சிறையை நான் இதுவரை கண்டதில்லை. இதன் மர்மம் என்ன? நான் அறியலாமா’’? என்று கேட்டாள்.

’என் நெற்றியில் உள்ள மோகன மூலிகைத் திலகம்தான் உன்னை வயப்படுத்தி உள்ளது. மோகன மூலிகையை ‘ஐயும் கிலியும் சவ்வும்’ என்ற மந்திரத்தை தினமும் நன்கு உச்சரித்துத் திலகமாய் இட்டுக்கொண்டால் மோகனம் சாத்தியமாகும்’ என்றார். இதனைக் கேட்டு தாசி வியப்பால்.விதிர்த்து ,விக்கித்து போனாள்.அதனால் களைப்பும் அடைந்தாள். அவளின் களைப்பு நீங்க, அருகிலிருந்த தென்னை மரத்தினைப் பார்த்து, ‘’பிறங்பிறங் ஷங்ரங்சிங் சிவாய நம’’ என்று கருவூரார் மந்திரம் ஓத நிமிர்ந்து நின்ற தென்னை மரம் இளநீர் பறிக்க கைக்கெட்டும்
அளவுக்கு வளைந்து நின்றது. தாசி கோமளவல்லியின் புருவம் வில்லென வளைந்து நெளிந்தது. ‘தங்களைத் தொட்டது என் பூர்வபுண்ணியம்.இந்த இரவு விடியாது இப்படியே இருக்க வேண்டும்’ என வேண்டினாள்.
‘மற்றவர்களுக்கு விடியாமல் உனக்கு மட்டும் விடியல் காண்பாய்.இந்த நள்ளிரவில் உனக்கு மட்டும் ஒளிரும் சூரியனை காண்பாய்’ என்று கூறி ,... அதோ பார்! ’சூரியனின் இரதம் வருகிறது சூரிய மண்டலத்தைக் கண் கூசாது பார்’ எனக் கூறியபடி, ‘இரக்ஷ இரக்ஷ ஸ்ரீம் சிவாய நமோ’ எனும் மந்திரத்தை கருவூரார் உச்சரித்தார்.மறுநாள், கோமளவல்லியிடம் விடைபெற எழுந்தார். கருவூராரைப் பிரிய மனமின்றி வருந்தி நின்ற தாசியிடம் ‘நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன், என வாக்குறுதி தந்தார். அரங்கநாதப் பெருமானை தரிசித்து, பெருமாள் தனக்களித்த இரத்தினப் பதக்கத்தை அன்பளிப்பாய் கோமளவல்லிக்கே அன்புப் பரிசாக அளித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார். தாசி கோமளவல்லி ஒருநாள் அந்த இரத்தினப் பதக்கத்தைப் போட்டுக்கொண்டு வெளியே வர கோயில் அதிகாரிகள் அவளைக் கையும், களவுமாகப் பிடித்துக்கொண்டார்கள்.


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்  Empty Re: கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்

Post by இறையன் Sat Dec 17, 2011 10:21 pm

“ஏ… தாசிப்பெண்ணே… இந்த இரத்தினப் பதக்கம் உன்னிடம் எப்படி வந்தது?.

’’எனக்கு ஒருசித்தர் கொடுத்தார்”

’’இது முழுப்பொய். இது பெருமாளுடைய இரத்தினப் பதக்கம். யாரும் அறியா வண்ணம் நீ திருடிவிட்டு பொய்யான நாடகம் ஆடுகிறாய்?

’ சித்தர் பெருமானே! இதென்ன எனக்கு சோதனை.’’ என்று தாசி நினைத்த மாத்திரத்தில் கருவூர் சித்தர் அங்கு வந்தார்.

‘’ இதோ இவர்தான் எனக்கு இந்த இரத்தினப் பதக்கம் அளித்தார்.” என்று கருவூர்ச் சித்தரை அடையாளம் காண்பித்தாள் தாசி


கோயில் அதிகாரிகள் இப்போது கருவூரார் பக்கம் திரும்பி அவரை ஏற இறங்கப் பார்த்தனர். “ உனக்கு எப்படி இந்த இரத்தினப் பதக்கம் கிடைத்தது? என்று அவரைக் கடுமையாக விசாரித்தனர்.“ அதோ அந்தப் பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் “ என்று கருவூரார் ஆகாயத்தைக் காண்பிக்க ஆகாயத்தில் பெருமாள் தரிசனம் தந்து, “நாமே அந்த இரத்தினப் பதக்கத்தை அவருக்கு தந்தோம்” என்று கூறி மறைந்தார்


சிறந்த சிவ பக்தனாக இருந்த சோழ மன்னனுக்கு அப்போது ஒரு சங்கடம் ஏற்ப்படிருந்தது. அந்தச் சோழ மன்னன் கனவில் ஒருநாள் நடராஜ தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு சிலையைப் பொன்னால் செய்து தர
வேண்டும் என்று சிற்பிகளை வரவழைத்து ஒரு தூலம் பொன்னை நிறுத்திக் கொடுத்தான். ஏனோ தெரியவில்லை சிலை செய்யும் பணியில் சிக்கல் ஒன்று முளைத்துக் கொண்டே இருந்தது.பொன் வார்ப்பு நிலைத்து நிற்காது இருந்தது. அதனை கண்ட சிற்பி மனம் நொந்து
போய் இறைவனை வேண்டி நின்றனர். ”நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது நான் சொன்ன கெடு தேதிக்குள் நடராஜர் சிலை
தயாரித்திருக்க வேண்டும். இல்லை யெனில் எல்லோரையும் கழுவில் ஏற்றிவிடுவேன்’’ என்று மன்னன் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தான்.


அதன் காரணமாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே கருவூர் சித்தர் வந்து சேர்ந்தார். ”ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீர்கள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன். நீங்கள் எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.” என்று கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர். கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு அதனை அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக் கண்டு எல்லோரும் வியப்பெய்தினர்.சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர்
தரிசனத்தை அந்தச் சிலையின் ஒளியிலும் வார்ப்பிலும் கண்டு திகைத்துப் போனவன் முகம் கருத்துப் போனது.”நான் பத்தரை மாற்றுத் தங்கம் அல்லவா கொடுத்திருந்தேன். நீங்கள் அதனைத் திருடி எடுத்துக் கொண்டு செம்பால் சிலை செய்து விட்டிருக்கிறீகள்...., அப்படித்தானே?” என்று சிற்பிகளை சினம் கொண்டு பார்த்த போது அவர்கள் பயந்து நடுநடுங்கிப்போனார்கள்.


”அரசே! இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்தக் கருவூரார்தான் செய்தார்” என்று அவரை சுட்டிக்காட்டினர். ‘அப்படியானால் அந்தக் கருவூராரைச் சிறையில் தள்ளுங்கள்’என்று சோழ மன்னன் ஆணையிட்டு சிறையில் தள்ளினான். திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்டச் செயலினை கேள்வியுற்று அங்கு வந்து சேர்ந்தார். ” கருவூரார் பெருஞ்சித்தர். உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது வீண்பழி சுமத்தி விட்டாய். நீ கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக் கொண்டு வந்து உருக்கு’ என்று திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி செந்தூரத்தைத் தூவப் பத்தரை மாத்துத் தங்கமாக மாறியது. .‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து கொள்வாய். செல்வம் யோகியை வசப்படுத்த முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறது” என்று திருமூலர் உபசேதம் செய்தார்.


இதனால் கருவூரார் புகழ் பரவப் பரவ அவர் மீது பொறாமையும், பகைமையும் கொண்டோரின் எண்ணிக்கையும் ஏராளமாய் முளைத்தது. வேதியர்கள் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் மன்னனிடம் தொடர்ந்து உரைத்தனர். மன்னன் அறிவான் மகான் அவரென்று. எனவே புகார் பலன் தரவில்லை. மன்னன் அவரைத் தண்டிக்க எண்ணாததைப் புரிந்து கொண்ட வேதியர்கள் ஒருநாள் கருவூராரைக் கொல்வதற்கு ஆயுதங்களுடன் துரத்த,அவரோ ஓடிச்சென்று சிவலிங்கத்தைத் தழுவிக்கொள்ள சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தார். இவரின் கதை அபிதான சிந்தாமணி நூலில் காணப்படுகிறது.


இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தியை வாலைப் பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக் கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும்
விளையாட்டு வம்பியாகவும் சித்தரித்துக் காட்டி பூஜை செய்யும் விதியைப் பாடலாகப் பாடியுள்ளார். இவர் போகரிஷியின் மாணவர் என்றும் சொல்வர். பல வைத்திய நூல்களும் எழுதியுள்ளார்.


தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்
செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்
வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்
மகத்தான் வேதகாந்தம் சித்தி காட்டும்.


கருவூர்ச்சித்தர் பல தல தரிசனம் செய்துள்ளார். ஒரு சமயம் இவர் திருநெல்வேலி சென்று நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் தரிசித்துவிட்டு மானூரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு அப்பரும், அம்மையும் நடனக்காட்சியைக் காட்டி அருளியதாக நெல்லை தல புராணம் கூறுகிறது. அந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.கருவூரார் திருவிசைப்பா பாடிய ஒன்பது பேர்களுள் ஒருவர். திருக்கோயில் வழிபாட்டிற்கென தனி மதிப்பு கொடுக்கும் வகையில் பத்துத் தலங்களின் சிவ மூர்த்தங்களைத் துதிக்கும் 103 பாடல்கள் இயற்றியுள்ளார் அவற்றுள் இராஜராஜேச்வரம் குறிப்பிடத்தக்கது.


”உலகெலாந் தொழு வந்தெழு கதிர்பரிதி

ஒன்று நூறாயிரங் கோடி

அலகெலாம் பொதிந்த திருவிடம்பச்சோ

அங்ஙனே அழகிதோ வரணம்

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்

பருவரை ஞாங்கர் வெந்திங்கள்

இலைகுலாம் பதணத் திஞ்சி வழ் தஞ்சை

இராசராசேச் சரத்திர்க்கே”



இவர் சித்த மருத்துவத்திற்கென நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள்,

1. கருவூரார் வாதகாவியம்
2. கருவூரார் பலதிரட்டு
3. கருவூரார் அட்டகன்ம்ம் நூறு
4. கருவூரார் பூசா விதி

போன்றவை குறிப்பிடத்தக்கவை. கருவூர்த் தேவர்க்கெனத் தஞ்சைப் பெரிய கோயிலின் மேல் பிரகாரத்தில் மத்தியில் தனி கோயில் உள்ளது. வியாழன் தோறும் இவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அவரின் மகிமையை இன்றும் நமக்கு உணர்த்துகிறது



[துணை உதவிக் குறிப்பு:”இந்திய சித்தர்கள்’’ - சித்தர் பாடல்கள்,பதினென் சித்தர்கள்]


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum