தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன்

Go down

குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன் Empty குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன்

Post by இறையன் Sat Dec 17, 2011 10:28 pm

குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன் %E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
ஆன்மீகம், சித்தர்கள், யோகிகள்களின் அமானுஷ்ய அற்புதங்களை நாம் இன்று பரவலாக பார்க்கிறோம்,கேட்கிறோம், கேள்விபடுகிறோம். இதில் உண்மையானவர் சிலரே. அவர்களும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதே உண்மை. தன்னை மறைத்தே வாழவும்,தன் வாழ்க்கையின் குறிக்கோளிலும் திடமாக நிற்பர். அதே சமயம் போலிகளும், சில்லறைகளும் மலிந்துவிட்டனர். உண்மை எது போலி எதுவென அறியவியலாத அளவுக்கு பசும்பாலில் நீர் கலந்தார் போலாகிவிட்டது. நமது தொடரில் தேரையாரைப் பற்றி கண்டுள்ளோம். மன்னனின் தூக்கத்தில் போது ஒரு சிறு தேரை மூக்கின் வழியாக சென்று அவனை வாட்டியது.


அதேபோன்ற கதைதான் குருதேவ சித்தர். மனித குலத்திற்கு மிகப்பெரிய உதவியாய், மூலிகைகளின் மகத்துவத்தை உணர்த்திய அகத்தியர், போகர், கோரக்கர்,தேரையார்,சட்டைமுனி, போன்ற நாற்பத்து மூன்று சித்தர்களின் அற்புதங்களை மட்டுமல்லாது, எங்கோ சிற்றூரில், பைத்தியக்காரனைப் போல, சுயசித்தி இல்லாதவர்களைப் போல, பரதேசியை போல, இருப்பவர்கள் மூலிகைகளை அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.


தமிழகத்தில் கொல்லிமலையை அறியாதவர்கள் யாருமில்லை. செம்மொழி மாநாட்டின் போது, திரு,திருமதி.சிங்கை.பழனி, சிங்கை.மணீயம், பாரீஸ்சை சேர்ந்த திரு.திருமதி. லெபோ.பெஞ்சிமென், அமெரிக்காவிலிருந்து திரு, ஆல்பெட் ஆகியோர் நாமக்கல் கலெக்டெர் திரு,சகாயம் அவர்களின்வழிக்காட்டின் மூலம் கொல்லிமலை சென்றோம். அவர்களின் திசை நோக்கு ஒரு பக்கமிருக்க...என் திசை நோக்கு வேறாக இருந்தது. அதன் போது நான் கேட்டறிந்த சில சித்தர்கள் மற்றும்...., குருதேவ சித்தர் போன்றவர்களின் செவி வழி செய்தியும் அறிய வந்தேன். சிங்கை வந்தபின் அவர்களை பற்றிய மேல் விபரம் அறிய ஆய்ந்தபோது, அறிந்தது..., தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கொல்லிமலையில் வாழ்ந்த குருதேவ சித்தர் .


சித்தர்களுக்கே உரிய காவியுடையை கோவணமாகக் கட்டியிருப்பார். சடைமுடி,நெற்றியில் நிறையவிபூதிக் கீற்று, கழுத்தில் ருத்திராக்க மாலையென இருப்பார்.அவரை நெருங்கும் பக்தர்கள் அவரதுபார்வையின் தீட்சண்யத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லாமல் சட்டென்று கண் கலங்கி அவர் பாதத்தில் விழுவார்கள்.பில்லி,சூன்யம்,பேய் பிடித்தல் போன்ற எந்த பிரச்சனை இருந்தாலும் அவர் குடிலை நெருங்கிய

நொடியில் பறந்துவிடும். அவரை தேடிவரும் நோயாளிகள் சித்தருக்கு காணிக்கையாகப் பழவகைகளை மட்டுமே வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வருகிற பழங்களை சிலவற்றை சித்தர் கையிலெடுத்து விட்டாலே அந்த நோயாளியைக் குணமாக்கி விடுவார் என்று அர்த்தம். சித்தருக்கு தனது குடிலை நெருங்கும் போது ஒவ்வொரு நோயாளியின் நோயின் தன்மையும் அவருக்குப் புரிந்து விடும். இறைவன் மீது தீவிர பக்தி கொண்ட சித்தர், தான் வணங்கும் ஈசனின் இறையருளால் அமானுஷ்ய சிகிச்சையிலும், மூலிகை மகத்துவத்திலும் குணமாக்கிவிடுவார்கள்.


ஒருநாள் அதிகாலை…,அவரது குடிசையைத் தேடி சம்பூரணம் என்கிற பத்து வயது பெண்ணும், அவள் தாயும் வந்தனர்.குடிலுக்குள் கால் வைத்த நொடியில், உடல் ஒரு வெட்டு வெட்டியவாறே கீழே சரிந்தாள்சம்பூரணம்.சரிந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி, முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்காக வெளியேஓடினாள் தாய். உடனே சித்தர் தன் சீடனிடம் “அந்தப் பெண்ணின் முகத்தில் துளசித் தீர்த்தம்தெளித்து அழைத்து வா” என்றார்.சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த சம்பூரணம், சித்தரின் முன்பாக நிற்க, கண்களில்ஆக்ரோஷமான சிகப்புடன் அந்த பெண்ணின் கண்களைப் பார்த்தார்.சட்டென சிறுமியின்முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட, “ ஏன் ஐயா… நான் தான் இப்போது தெளிவாகிட்டேனே…?இன்னும் ஏன் முறைத்துப் பார்க்கிறீர்கள்?” என்றாள் பயத்துடன்.


” தெரியும், நீ தெளிவாயிட்டேன்னு தெரியும். அடுத்து உனக்குள்ள எந்தப் பிரச்சனையும் புகுந்திடக் கூடாதுன்னு உன் நெற்றிப் பொட்டுல சக்கர வியூகத்தைப் பதிக்கிறேன். என்றவர்,அவள் நெற்றிப் பொட்டில் ஆள்காட்டி விரலை வைத்து வலது பக்க சக்கர சுழற்சியாய்அழுத்த.. உடலுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வாய் அந்தப் பெண் கீழே சரிந்தாள். ’’ இந்தப் பெண்ணைக் கொண்டு போய் குடிலுக்கு வெளியே இருக்கிற வெள்ளைப் பாறையில்படுக்க வையுங்கள் ” என்று சொல்ல சீடர்கள் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வெளியே போயினர். நடந்த நிகழ்வுகளை ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தாய்… “ஐயா, என் புள்ளைக்கு குணமாகிடுங்களா/ நீங்கதான் ஐயா என் புள்ளையைக் காப்பாத்தணும்” என்றபடியே கண்ணீரோடு கரம் கூப்பினாள்.


அதை மறுப்பாகத் தடுத்த சித்தர், “ என்னை ஏன் வணங்குகிறீர்கள். எல்லாம் ஈசன் செயல்.அவன் சொல்படி நான் செய்கிறேன். அவ்வளவுதான்”, உங்கள் மகளுக்கு ஏற்பட்ட மாற்றம எப்படி நிகழ்ந்தது, உங்களுக்குத் தெரியுமா”?


“தெரியாதுங்க ஐயா, போனம் மாதம் நானும், என் வீட்டுக்காரரும்,மகளும் சேர்ந்து பக்கத்து ஊரிலே கூத்துப் பார்க்கப்போயிருந்தோம். கூத்து முடிந்து வீட்டு வந்து படுத்துட்டோம். ராத்திரிஇரண்டு மணி வாக்கிலே இவ மட்டும் தனியா எழுந்து வெளியே நடந்து போனாள்.காட்டுக்குள் நுழைஞ்சி ஒத்தை ஆளா அவ போறததைப் பார்த்துவிட்டு பறவை காவல்காரர் அவளைப் பின் தொடர்ந்து போயிருக்கார். இவ சுடுகாட்டுக்கு முன்னாடி போய் முறைக்க முறைக்க வானத்தியே பார்த்து சிரிச்சுக்கிட்டுஇருந்தாளாம். பறவை காவல்காரர், அவளை பிடிச்சி உலுக்கி “இங்க என்ன பண்ணிக்கிட்டுஇருக்கே? ன்னு கேட்டதற்கு “ என் ஃப்ரெண்டு ராணி கூட்டிக்கிட்டு வந்தாள்” னு சொன்னாளாம். அவளைக் கூட்டிக்கிட்டு வந்ததா சொன்ன ராணி, இரண்டு மாசத்துக்கு முன்னாடிதான் செத்துப் போயிட்டா. உடனே காவல்காரர் இது ஆவியோட சேஷ்டைன்னு புரிஞ்சிகிட்டு,அவர் போர்த்திருந்த கறுப்பு போர்வையை இவளுக்குப் போர்த்தி இரும்பு தடியை கையில் கொடுத்து கூட்டிக்கிட்டுவந்தார்.


அன்னையிலிருந்து இவ ஒரு மாதிரி இருக்கா.. ஒரு மாசமா காய்ச்சல் வேற. பெரிய பெரியஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட கூட்டிக்கிட்டு போனோம். அவளுக்கு காய்ச்சல் குணமாகலை.தானாகப் பேசறதும் சரியாகலை. நீங்கதான் ஐயா என் புள்ளையைக் காப்பாத்தணும்” என்று

கண்ணீரோடு சொல்லி முடிக்க, சித்தர் கண்மூடி சிறிது நேரம் தியானித்து விட்டு, மெல்லஎழுந்தார். ஒரு கூரிய கம்பியோடு, பாறையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் சம்பூரணத்தை நெருங்கினார்.சித்தர் தனது சீடரிடம் சைகை காட்டிவிட்டு, மெல்ல அந்தப் பெண்ணின் அருகே அமர்ந்து,

அவள் இடுப்புப் பகுதியிலிருந்து மெல்லத் தடவி விட்டுக்கொண்டே வந்தார். அந்த பெண்கூச்ச உணர்வோடு நெளிய, மெல்ல தோள் பட்டையைக் கடந்து, கழுத்துக்கும் முதுகுப்பகுதிக்கும் இடையிலான பகுதிக்கு வந்தார். சட்டென்று அவருக்குள் ஏதோ உணர்ந்த அவரிடமிருந்த கூரிய கம்பியை கழுத்துக்குக் கீழே இருந்து இடைவெளிப் பகுதியில் சூரீர் எனக் குத்தியெடுத்தார்.


பலமான வலி உணர்ந்து சம்பூரணம் அலறினாள். சித்தர் அவள் கழுத்தை மேல் நோக்கிப்பிடித்தவாறு இரத்தம் கசியும் இடத்தில் அழுத்தி வர உள்ளிருந்து மூன்று அங்குலப் புழுவொன்று வெளியே வந்து வீழந்தது. இரத்தம் கசிந்த இடத்தில் மூலிகைக் களிம்பைஅழுத்தியவாறு அந்தப் பெண்ணைப் படுக்க வைத்துவிட்டு குடிலுக்குள் நுழைந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில்,தெளிவான உணர்வோடு சித்தரின் அருகே வந்த தெளிந்தசம்பூரணம் நன்றியுணர்ச்சியுடன் வணங்கி, “ஐயா இத்தனை நாளா எனக்குள்ளிருந்த பாரமெல்லாம்இறங்கிவிட்டமாதிரி மனசு இருக்கிறது.. இனி எனக்கு இதுபோல் மீண்டும் ஏதாவது நிகழுமா?...என்றாள்.


“கண்டிப்பாக நிகழாது. இனி நீ தைரியமாக வாழலாம்” என்றவர், தாயைப்பார்த்து.” உன் மகளுக்கு இனி எந்தப்பிரச்சனையும் இல்லை..ஆனால், உங்கள் ஊர் ஆற்றில்மட்டும் அவளை இனிக் குளிக்க அனுப்பவேண்டாம்”... என்றார்.“ஐயா,ஆற்றில் குளிப்பது தீமை உண்டாகுமா” என்று கேட்டாள்.இனி தீமை உண்டாவது இருக்கட்டும். இப்போது உருவான தீமையே அந்த ஆற்றில்குளித்ததால்தான் ஏற்பட்டது” தாய் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். அவள் ஆற்றில் குளிக்கும் போது அவளின் மூக்கின் வழியாகவோ,வாயின் வழியாகவே,

மலத்துவாரத்தின் வழியாகவோ ஒரு ஊசிப் புழு ஒன்று மெல்ல மெல்ல உள்ளே சென்றுஇரத்த நாளங்களில் ஊர்ந்து அவள் பின்னங்கழுத்து பகுதி வரைக்கும் வந்துவிட்டது.இரத்த நாளத்தில் அடைப்பு உண்டாகி, அவளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் புழுவை அகற்றிவிட்டேன். இனி பிரச்சனை வராது இருக்க அந்த ஆற்றில்குளிக்காமல் இருக்க வேண்டும். புரிந்ததா?

இவைகளை கேட்டுக்கொண்டிருந்த சம்பூரணம் “ஐயா, இந்த மாதிரி எதுவும் நடக்காமலிருக்கஏதாவது மூலிகை கொடுங்கனேன்” என்றாள்.
உடனே, சித்தர் அருகிலிருந்த பூஜைத் தட்டிலிருந்து ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்துஅதன் மீது வேகமாக மஞ்சள் நூல் ஒன்றைச் சுற்ற ஆரம்பித்தார்.எலுமிச்சை பழத்தின்அடையாளம் தெரியாத அளவுக்கு நூல் சுற்றப்பட்டவுடன் சம்பூரணத்தின் கையில் கொடுத்து, “ இதை ஒரு மண் பானையில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டு மூடி விடு. விடியற்காலைநீ எழுந்திருக்கும் போது இந்த எலுமிச்சை பழம் மறைந்து நூல் மட்டும் தண்ணீருக்கு மேலேமிதந்தால் உன் ஆயுசுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.அந்த பானையைக் கொண்டு போய்ஒரு கிணற்றில் வீசி விடு” என்றார. மறுநாள் காலை ஆவலாய் சம்பூரணம் திறந்து பார்த்த போது கண்கள் படபடத்தன..எலுமிச்சை பழம் இப்போது மறைந்து நூல் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது.


” இனியும் ஆயுள் முழுவதும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ” என்று பூரிப்போடு அந்தமண் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றில் வீசி எறிந்தாள்.அதே சமயம் சீடன் ஒருவன் பவ்யமாக சித்தரிடம் கேட்டான். “குருவே, அந்த எலுமிச்சம் பழம்மறைந்திருக்குமா?”

கண்டிப்பாக மறைந்திருக்கும்.அதற்காக நான் எந்த சித்து வேலையும் செய்யவில்லை.சாதாரணமாக விளையாட்டுப் போல் ஒரு காரியம் செய்தேன். கடலில் கிடைக்கும் ஒரு பொருள் மூலம் அந்தஎலுமிச்சை பழத்தை மறையச் செய்தேன். குரு சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சீடன், “ ஐயா, மிகக் கொடூரமான பேய், பிசாசுகள் கூட உங்கள் குடிலை நெருங்கப் பயப்படும் அளவுக்கு அமானுஷ்ய சக்தியில் சிறந்தவர் நீங்கள். அந்தப் பெண்ணை நம்பவைப்பதற்காக சிறு விளையாட்டைச் செய்தீர்களா? என்றான் நெகிழ்ச்சியாக.


’’ஆமாம்.., அந்த சிறுமிக்கு தற்போது என் அமானுஷ்ய சக்தியின் மூலம் பூரண குணம் கிடைத்துவிட்டாலும், எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தது. அதற்காகத்தான் அந்தச் சிறு விளையாட்டு. இப்போது அந்தப் பெண்ணுக்கு, இனி ஆயுளுக்கும் நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை வந்திருக்கும். அந்த நம்பிக்கைதான் ஓவ்வொரு மனிதனையும் வாழ வைக்கும்உயிர்ச் சக்தி. அது மட்டுமில்லை.இந்தத் தகவல் ஏதாவது ஒரு காலத்தில் வெளிப்பட நேர்ந்து,அது என்ன பொருள் என யாராவது உணர்ந்து விட்டால் அடுத்தது அது போன்ற வேறு யாராவதுஏமாற்று ஆசாமிகளிடமிருந்து அவர்கள் தப்பிப்பதற்கும் இது ஒரு முன் உதாரணமாகும்’’


தட்டச்சித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum