Latest topics
கடுவெளி சித்தர்-சிங்கை கிருஷ்ணன்
Page 1 of 1
கடுவெளி சித்தர்-சிங்கை கிருஷ்ணன்
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றைன மறையும் மறைந்தன் தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன் மறக்கும், மறந்தன் உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.
மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம். என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார்.“யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள்,மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள், பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள், உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள், உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள், மனைவியை பழிக்காதீரகள், மமதையுடன் தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள், அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கள், நூறு பேரின் நடுவே தன்னைப் போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள் ….
இந்த செயல்களைத் தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார். மதுரையை அடுத்துள்ள கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடலகளும் அற்புதங்களும் நிகழ்த்தியவர் முனியாண்டி.சாதாரண,மனிதரைப் போன்றே இயல்பான, அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் இவர் உடலில் காவி உடையை சுற்றியிருப்பார்.அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும் அவர்களின் ஆன்மாவிடம்
பேசி… அந்த அன்பர்களுக்கு தெரியாமலே அவர்களின் பிரச்சனைகலிருந்து அவர்களுக்கு விடுதலை வழங்கி விடுவார். அரிஜன வகுப்பைச் சார்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர் கடுவெளி சித்தர். தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார்.
அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அரச மரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார். அப்போது மனதை மயக்கும் இரம்மியமான மணமும், மெல்லிய மணியோசையும் கேட்க.,மெல்ல கண் திறந்தவர்…, சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம்
அவருக்கு எதிரே தீட்சணய பார்வையுடன் வாட்டசாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்றிருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர்,பயத்தில் ஓடிச் சென்று தனக்கு அருகே இருந்த அரசமரப் பிள்ளையாரை தழுவிக்கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த போல் உணர்வால் உடல் முழுவதும் சிலிர்ந்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண் விழித்த போது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்தது. சித்தரின் தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டு சொன்னது
இப்போது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன்.., இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதீட்சை செய்தது தாத்தா சித்தர் என்கிற மகான். அவர் வழியில் வந்தவன் நான். நீங்கள் எமது கையால் தீட்சைப் பெற்று சித்தராக வேண்டும் என்பது இறைகட்டளை.இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன்.உங்களுக்கு உபதேசம் தருவேன்.. என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்துவிட்டது.
சிறுவனான முனியாண்டி இந்த நிகழச்சியை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அதை யாரும் நமபவில்லை. ஆனால் தாத்தா சித்தர் தினமும் சிறுவன் முன்பு தோன்றி மறைந்துவிடுவார். மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் பகவானுக்குரிய எல்லா யோகங்களும் தவங்களும் செய்து முடித்து சித்தரானார். இந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சித்தர் வயல் வேலை செய்வாராம்.அங்கே தன்னோடு பணிபுரிகிற நண்பர்களுக்கு மதிய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்கள் பசியை போக்குவார்.அதே போல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப் போல் பறப்பாராம். இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாக சொல்கிறார்.இந்தச் சிறு வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம். சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும் போது சில தேவதைகள் தடுக்க முயலுமாம்.ஆனால் எந்த தடை தடங்களுக்கும் செவி சாய்க்காமல் சித்தர் முனியாண்டி தவத்தை மேற்கொள்வாராம்.அதேபோல் சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தியிருந்ததால் வடநாட்டிலுள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று முருகனை தரிசித்துவிட்டு திரும்புவாராம்.
சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது.ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்த போது ,ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்ய அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள். சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா…., முடியாது …? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார்.அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம்.அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள்.., அப்படியே விரட்டுவிடுங்கள்.. “ என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர்.ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது.அடுத்த நொடி அவர்கள் கண் திறந்த போது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர் முனியாண்டியை ஆச்சரியமாகப் பார்க்க அவர் “ என்ன பண்றது பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல் உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க,. மனசைப் பாருங்க..” என்று சொல்லிவிட்டு ஓட்டலுக்குச் செல்லாமலே நகர்ந்துவிட்டார்.
சித்தர் முனியாண்டி ஆத்ம சக்தியை, ஆன்ம சக்தியை உணரும் சக்தியோடு… தன்னை நாடிவரும் அன்பர்களின் வியாதிகளைத் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தியிருக்கிறார். அவர் நிகழ்த்திய அற்புதங்களை அவரது சீடர் ஓய்வு பெற்ற டெப்டி கலெக்டர் கொ.வே. விஸ்வநாதன் கூறுகிறார். ஸ்ரீ முனியாண்டி சித்தர் ஒரு மகான். அவரால் நல்ல வாழ்க்கையும், நோய்களிலிருந்து விடுதலை அடைந்தவர்களும் ஏராளம். அதில் நானும் ஒருவன்.ஒருமுறை நான் சேடப்பட்டி வட்டாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அது ஒரு பின் தங்கிய வட்டமாக இருந்தது. அந்த சூழலில் ஐந்து மைல் நீளமுள்ள குண்டும், குழியாகவும் சின்ன கட்டளை சாலை இருந்தது. இதனால் மக்கள் மறியலில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் அந்த சாலை சப்தல மான்ய திட்டத்தின் கீழ் எடுத்து உடனே சாலை சீர் செய்யும்படி சொன்னார். உடனே நான் பதிவு செய்ய ஒப்பந்தக்காரரிடம் அப்பணியையை ஒப்படைந்தேன். வேலையும் ஆரம்பித்தது. அந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் அங்கே வந்திருக்கிறார். நான் அங்கு இல்லை. முனியாண்டி சித்தர் சுவாமியை தரிசிக்கச் சென்றிருந்தேன். காலையில் ஜல்லி மட்டுமே போட்டப்பட்டு அப்போதுதான் வேலை ஆரம்பித்திருந்தது.அவசர கதியில் முடிக்க சொன்ன வேலையை மெத்தனமாக செய்கிறேன் என கலெக்டர் என் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். நான் அங்கு சென்ற போது ஒப்பந்தக்காரர் இந்த தகவலைச் சொல்லி விடிவதற்குள் வேலை முடிந்திருக்க வேண்டும், அப்போதுதான் மந்திரியை இந்த வழியாக அழைத்து செல்ல முடியும்… என்று கலெக்டர் சொன்னதாகக் கூறினார்.
அது ஒரு பொட்டல் வெளி, கும்மிருட்டு நேரம்.. எப்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை அமைக்க முடியும்? அந்த நேரத்தில் அங்கே வேலை பார்த்த ஒரு இளைஞனுக்கு அடிபட்டு அவனை மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டிய சூழ்நிலை… அவ்வளவு தான்
நாம் மெமோ வாங்க வேண்டியதுதான்…, மானம் போகப்போகிறது என்று வேதனைப்பட்ட போது என் காதில் முனியாண்டி சித்தர் “கவலைப்படாதே நான் பார்த்துக்கறேன்” என்று சொல்வது போல் கேட்க அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன். விடிந்த போது என் முன்னே கார் ஒன்று வந்து நின்றது.அதிலிருந்து இறங்கிய கலெக்டரும், மந்திரியும் பிரமாதமாக சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்து விட்டீர்கள் நன்றி எனப் பாராட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை! இது எப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நேர்த்தியாக தார் சாலை அமைந்தது எப்படி என வியந்தேன். எல்லாம் அந்த சித்தரின் மகிமை என்றறிந்து வரிடம் ஓடிச் சென்று நன்றி சொன்னேன்.அதேபோல் ஒருநாள் நான் முனியாண்டி சித்தரை தரிசிக்க சென்றிருந்த போது “சதுரகிரிக்கு போகலாமா? என்று கேட்டார். அதற்கு நான் “ சாமி இப்போழுதே இருட்டிவிட்டது.இங்கிருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மலையடிவாரம் சென்று அங்கிருந்து மலைக்கு செல்ல நேரமாகிவிடும். இங்கிருந்து எப்படியும் எழுபது கிலோ மீட்டர் தூரமிருக்கும். அங்கிருந்து நாலாயிரம் அடி உயரத்திற்கு மலை ஏறிச்செல்ல வேண்டும்? “ என்று நான் சொல்லிக்கொண்டே இருக்க.., சித்தர் என்னைப்பார்த்து அதற்கு நீங்களே ஏன் கவலைப்படுகிறீகள். நான் உங்களை உடனே அழைத்துச் செல்கிறேன் என்றார். கண்களை ஒரு
நொடி மூடித்திறங்கள் என்றார். நானும் கண்களை மூடித்திறந்தேன். நாங்கள் இருவரும் சதுரகிரி மலை மீது இருந்தோம்.ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் என் உடல் சிலிர்க்க.. நான் சித்தரை பார்த்தேன்.அவர் மெல்ல சிரித்துக்கொண்டே… “என்ன சதுரகிரியைப் பார்த்திட்டீர்களா” என்று கேட்டார். நான் அவர் கையைப் பற்றி என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். மறுவினாடி நாங்கள் அங்கிருந்து மீண்டும் கே.ரெங்கபாளையம் வந்தடைந்தோம்.இந்த அற்புதம் மட்டுமல்ல இதுபோல் நிறைய அனுபவம். ஒருநாள் சித்தர் என்னை ஒரு மயானத்திற்கு அழைத்துச் சென்றார்.அது இரவு வேளை. சித்தர் என்னைப் பார்த்து,” உங்களுக்கு பயமாக இருக்கிறதா?” என்று கேட்டார். உடனே நான் “நீங்கள் என்னுடன் இருக்கும் போது எனக்கென்ன பயம்?” என்றேன்.சித்தர் முனியாண்டி உடனே மயானத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தில்
அவரது உடலிருந்து கை,கால்,தலை எல்லாம் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் விழ.. எனக்குள் ஆச்சரியம் அதிகமானது. இது எப்படி? உயிருள்ள ஒரு மனிதரின் உடல் பாகங்கள் தானே உதிர்வது போல் கீழே பிரிந்து விழுமா? என்று யோசித்தேன்.அதற்குள் மீண்டும் அவரது
உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக ஒன்று சேர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் சித்தர் முழூ உருவமாகி தியான நிலையிருந்து கண் திறந்தார். என்னை பார்த்து புன்னகைத்தவாறு..., “ என்னை வேடிக்கை பார்த்தீர்களா? ’’ என்று கேட்டார்.
எவ்வளவு மனோ தைரியம் உள்ளவரென்றாலும் மயானத்தில் அதுவும் இரவு நேரத்தில் இப்படி ஒருகாட்சியை பார்த்தால் ஆடிப்போவார்கள். ஆனால் எனக்குள் எந்த பயமோ, அச்சமோ இல்லாமல் சித்தரின் சித்து வேலையை பார்க்க முடிந்தது.சித்தர் முனியாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவர்.அவர் உடல் பாகங்கள் பிரிந்து சேருவதைப் போலவே அவர் உடல் அமைப்பு மினுமினுப்பான நிலையில் இருக்கும். ஒரு சொட்டு தண்ணீர் கூட அவர் உடல் மீது நிற்காது.அவர் கிணற்று நீரில் குதித்து மேலே வந்தால் அவர் உடலில் ஒரு சிறு துளி நீரைக்கூட பார்க்க முடியாது. தலைமுடி உலர்ந்தது போலவே இருக்கும்.சித்தர் முனியாண்டிக்கு மூலிகைகளைப் பற்றி இரகசியமும் தெரியும். காசநோய், புற்றுநோய், தீராத வயிற்று வலி என பல நோயாளிகளுக்கு கண்ணில் படும் மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கியிருக்கிறார். மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமையை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார். இது போல் தன்னை நாடிவரும் அன்பர்களை எப்போதும் கைவிடாமல் காப்பாற்றுவார்.எனது வாழ்க்கையில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ”ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விழ… எங்களுக்கு ஒரு சிறு அடி,காயம் இல்லாமல் காப்பாற்றியது சித்தர் முனியாண்டிதான் “ என்று பெருமிதாய் கூறுகிறார் டெப்டி கலெக்டர் கொ.வெ. விஸ்வநாதன்.
சித்தர் முனியாண்டி இவரைப் போன்றே பலருக்கும் பலவித அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். 1989 –ம் ஆண்டு சமாதி நிலை அடைந்த சித்தரின் சமாதி கே. ரெங்கபாளைத்தில் அவரது நிலத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதிக்கு சென்று மனதார தொழுதால் நினைத்தது
நடக்கும் என்கிறார்கள் அவரின் பக்தர்கள்.
[நன்றி: உதவிக்குறிப்பு, சித்தர் பூமி,தமிழ்நாட்டு சித்தர்கள்]
தட்டச்சியது சிங்கை கிருஷ்ணன்
Similar topics
» குதம்பைச் சித்தர்-சிங்கை கிருஷ்ணன்
» கொங்கணச் சித்தர்-சிங்கை கிருஷ்ணன்.
» கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்
» குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன்
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
» கொங்கணச் சித்தர்-சிங்கை கிருஷ்ணன்.
» கருவூர்ச் சித்தர்!-சிங்கை கிருஷ்ணன்
» குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன்
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Thu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Thu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Thu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Thu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்
» பிரம்மராஜன் கவிதைகள்
Thu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்
» K Iniyavan
Thu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்
» K Iniyavan -karuththu
Thu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்