தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3-

Go down

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3- Empty ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3-

Post by இறையன் Mon Jan 02, 2012 10:22 pm

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓஷோ

கடந்த பகுதியில் தியானத்தில் இறங்க விரும்புபவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை பூரணமாக தொடர்ந்து நினைத்து அதை தியானமாக செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். இந்தியாவில் பிறப்பெடுத்த தத்துவஞானியான ஓஷோ அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். மனதை தன்போக்கில் இலகுவாக விட்டுவிட்டு இயற்கையாகவே எண்ணங்களை கடந்து போவது தான் தியானம் என்கிறார். குறிப்பாக பல காலம் தவம் இருந்து ஒரு யோகி அடையும் உணர்வை சாதாரணமாக அன்றாடம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஒரு நபர் எதேச்சையாக அடையக்கூடும் என்கிறார். அவர் சொல்வதை சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்.

"மனம் அற்ற நிலையே யோகம் எனப்படும். எந்த விஷய ஞானமும் இல்லாமல், பூரண உணர்வுநிலையே யோகம் ஆகும். ஓர் கண்ணாடியில் படிந்து கிடக்கும் தூசு போல மனதில் விஷய ஞானங்கள் படிந்து கிடக்கின்றன. அவைகள் பகல் பூராவும், ஏன் இரவிலும் கூட, உங்களின் கனவு வாயிலாக உங்களை சுற்றி வருகின்றன. உங்கள் மனம் எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டும், எதைப்பற்றியாவது கவலையும், துக்கமும் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்த நாளைப்பற்றி இன்றைக்கே அது தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. இது தன் இயல்பாக, சுயநினைவின்றி, சதா அடிமனத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இது தான் யோகம் அற்ற நிலையின் இயக்கமாகும்.

இதன் எதிர்ச்செயல்பாடே யோகநிலையாகும். அதாவது, எப்போது எண்ணக்குறுக்கீடுகள் நின்று விடுகின்றனவோ, இறந்த கால எண்ணங்கள் செயலற்றுப் போகின்றனவோ, எவ்வித ஆசையின் தூண்டுதல் இல்லாமல், மனம் சஞ்சலமின்றி நிசப்தமாக ஒடுங்கி நிற்கின்றதோ, அந்த நிலையே யோகமாகும். அந்த அமைதி நிலையில் தான் " உண்மை" வெளிப்படும். வேறு எந்த நிலையிலும் அது தன்னைக்காட்டிக் கொள்ளாது. ஆகவே, யோகம் என்பது மனம் அற்ற நிலையே.

நீங்கள் மனதுடன் யோகத்தை அடையவே முடியாது. ஏனெனில் மனம் ஒரு போதும் தானாக நின்று விடாது. அதன் செயல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் மனதுடன் போராடாமல், அதே சமயம் அதை சிறிது ஒதுக்கி வைத்து அது கொடுக்கும் விஷயத்துடன் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பார்த்து " நான், மனம் இல்லை" என்ற உணர்வுடன் செயல்படுங்கள்.
" நான், மனம் இல்லை" என்ற விழிப்புணர்வு நிலையே யோகமாகும். இந்த விழிப்புணர்வு உங்களிடத்தில் ஆழமாக, ஆழமாக பதிய பதிய அமைதியான எண்ணமற்ற நிலை, வெறும் வெட்டவெளியாக படிகம் போன்ற சுத்தமாக சில கணங்கள் தோன்றலாம். அந்த இயக்கமற்ற நிலையில் நீங்கள் உண்மையிலேயே "யார்" என்று அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது உங்களுக்கு இந்த உலக இயக்க ரகசியங்கள் அனைத்தும் புரியும். இப்படி ஒரு காலததில் நீங்கள் பூர்ண யோகத்தில் எப்போதும் இருந்து விடுவீர்கள். அந்த காலமே இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட காலமாகும்.

ஒன்றையே நினைப்பது என்பது தியானமோ அல்லது யோகமோ அல்ல. ஒன்றையே நினைப்பதில் நீங்களே வலிய ஒரு முயற்சியை மேற்கொள்கிறீர்கள். ஏதோ ஒரு பொருளைச்சுற்றி மனத்தை நிலைப்படுத்த விரும்புகிறீர்கள். இந்த முயற்சியில் இரு வேறு நிலைகள் ஏற்படுகின்றன. உண்மையான தியானத்தில் உங்கள் உள்ளேயும், வெளியேயும் உள்ளவைகள் எந்த வித தடங்கல் இன்றி, வெளியே செல்ல முடியும். அதே போல வெளியே உள்ளவைகள் அனைத்தும் உங்கள் உள்ளே செல்ல முடியும். இரண்டுக்கும் எந்த வரம்போ, எந்த வேலியோ கிடையாது. உள்ளே உள்ளது இயங்குகிறது. இரண்டு மாறுபட்ட விழிப்புணர்வு கிடையாது. இது தான் உண்மையான தியானத்தின் நிலையாகும்.

ஆனால் ஒன்றையே நினைத்தல் என்பது இரு வேறான விழிப்புணர்வு ஆகும். அதனால் தான் ஒன்றையே நினைத்தால் களைப்பையே உண்டு பண்ணுகிறது. நீங்கள் எளிதில் களைப்படைவதற்கு, ஒன்றையே நினைத்துக் கொண்டிருத்தலே காரணமாகிறது. உங்களால் இருபத்து நான்குமணி நேரமும் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தல் என்பது முடியாத காரியம். ஒன்றையே நினைத்தல் என்பது இயற்கையான செயல் அல்ல. உண்மையான தியானம் என்பது உங்களுக்கு களைப்பையே உண்டாக்காது. நாள் பூராவும், ஏன் ஆண்டு முழுவதும் தியானம் தொடர்ந்து செயல்படுவதாகும். அது பேரின்பமாக மாற முடியும். அது ஒரு குறிக்கோள் இல்லாத பரிபூரண ஓய்வாகும்.

ஒன்றையே நினைப்பதன் மூலம் உங்கள் மனம் ஒரு முடிவுக்கு, ஒரு குறிக்கோளுக்கு முன்பே வந்து அதற்காக செயல்படுகிறது. ஆகவே நீங்கள் அதற்காக ஏதோ செயல்படுகிறீர்கள். உண்மையான தியான முறையில் எந்த குறிக்கோளும் தொக்கி நிற்கவில்லை. நீங்கள் குறிப்பாக எதுவும் அதற்காக செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் "நீங்களாகவே" இருக்கிறீர்கள். மனதாலும், உடலாலும் எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து, தங்கள் உள்மனம் சுரக்கும் ஊற்றையும், தானே முளைக்கும் அந்த அரிய பூக்களையும் உணர்ந்தார்கள். நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் "தானாகவே செயல்படுதல்" என்பதை. அந்த ஊற்று தானாகவே சுரக்கிறது. அந்த பூச்செடிகள் தானாகவே மேல் நோக்கி வளர்கின்றன.

இந்த நிலை, அதாவது எப்பொழுது நீங்கள் வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதன் போக்கிலேயே விட்டு விடுகிறீர்களோ, எப்பொழுது உங்கள் விருப்பப்படி அமைய அதற்கு கட்டளை எதும் பிறப்பிக்கமால் இருக்கிறீர்களோ, அதே போல் அதை உங்கள் நோக்கப்படி நடத்த ஆசைப்படாமல் இருக்கிறீர்களோ, உங்கள் மூளைத்திறனைக்கொண்டு அதை மாற்றி போதனைகளை அதன் மேல் திணிக்கமால் இருக்கிறீர்களோ, அந்த இயற்கையான கோட்பாடுகளற்ற, அந்த நேர வாழ்க்கைத்தன்மையை தியானம் என்று அழைக்கலாம்.

யோகம் என்பது "இப்பொழுது, இங்கே, இதோ நிகழ்வது தான். " அது ஒரு முழுமையான நிகழ்கால நிகழ்ச்சி. நீ தியானம் என்று ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் தியானத்தில் எப்பொழுதும் இருக்கலாம். ஆனால் ஒன்றையே நினைத்துக் கொண்டு உன்னால் எப்பொழுதும் இருக்க முடியாது. ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பது மனித இயல்பு தான். ஆனால் யோகம் என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது. புனிதத்தன்மை உடையது. அதற்கும், ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் அவ்வளவாக தொடர்பு கிடையாது. தியானம் என்பது எதையும் வலுக்கட்டாயமாக உங்கள் மேல் திணித்துக் கொள்வதல்ல".

தியானம் அல்லது யோகம் என்பது விளையாட்டான விடயம் அல்ல. சில சமயம் அவை உங்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும். ஏனெனில், தியானத்தால் நீங்கள் உங்கள் மனதின் ஆழமான இடத்தில் விளையாட ஆரம்பிக்கிறீர்கள். உங்களை அறியாமலே செய்யும் தவறு ஒரு பெரிய ஆபத்தை உண்டு பண்ணிவிடும். ஆகவே, இதில் எதையும் புதிதாக கண்டு பிடிக்க முயலாதீர்கள். உங்களால் முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க முடிகிற இரண்டு வகை தியான முறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு தியான முறை மகிழ்ச்சியை கொடுத்தால், அதில் ஆழ்ந்து முழு ஈடுபாட்டுடன் செல்லுங்கள். ஆனால் அதை ஒரு பழக்கமாக்கி, மனதை அடிமையாக்கி விடாதீர்கள். ஏனெனில் ஒரு நாள் அந்த முறையை விட்டு விடும்படி நேரிடும். நீங்கள் உங்கள் மனதை அதனுடன் நெருங்கி சம்பந்தப்படுத்தி விட்டால் அது போதை மருந்து போல் வேலை செய்து, உங்கள் மனதை அடிமைப்படுத்தி விடும். பிறகு அந்த முறையை உங்கள் இஷ்டப்படி விடுவது கஷ்டம். எனவே இரண்டு முறைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் முழுமையாக செல்லுங்கள். பிறகு அதை கைவிடுங்கள். மற்றொரு முறையை பின்பற்றுங்கள். இப்படி மாறி மாறி தொடருங்கள். ஆத்மீகப்பயணத்தில் ஒரே தியான முறையை மட்டும் கடைப்பிடித்து கடைசி எல்லையை அடைவது என்பது மிக மிக அரிது.

மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது தியானம் அல்ல. முழுமையான விழிப்புணர்வு தான் தியானம். உங்கள் உடல் அசைந்து கொண்டு இருக்கும் போது, அதாவது ஓடும் பொழுது, குதிக்கும் பொழுது, உங்களுடைய எச்சரிக்கை உணர்வு இயல்பாகவும், அதிகமாகவும் இருக்கும். ஆனால் ஓய்வாக இருக்கும் பொழுது எச்சரிக்கை உணர்வு மிகவும் குறைந்து உங்களை தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் படுக்கையில் இருக்கும் பொழுது எச்சரிக்கை உணர்வு மிகமிக குறைவாக இருக்கும். ஆனால் உடல், மனம், உயிர் மூன்றும் ஒன்றாக எந்த நிலையிலும் ஒன்றாக செயல்படும்படி கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் ஒரு வழியை கண்டுபிடியுங்கள். ஓடும் பயிற்சி செய்பவர்கள், இந்த மூன்றும் ஒன்றாக இயங்குவதை உணர்ந்திருக்கிறார்கள். ஓடுவது ஒரு யோகம் என்று நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் பல பேர் யோகத்தின் அனுபவத்தை, ஓடும் போது அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது அவர்களை அறியாமலே கிடைக்கிறது. கடவுள் தன்மையை அடைய ஓடுதல் கூட ஒரு யோகம் தான்.

அதிகாலை வேளையில் காற்று மென்மையாகவும், தெளிவாகவும் இருக்கும் பொழுது, இந்த உலகம் தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வரும் பொழுது, நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது உங்கள் உடல் மிக அழகாக அசைந்து கொண்டு செல்கிறது. அந்த புதுமை நிறைந்த இளங்காற்றும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு இந்த உலகம் வரும் நேரமும், பறவைகள் பாட்டிசைக்கும் அற்புதமான வேளையும், உங்களை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கும். அப்பொழுது, ஒரு கட்டத்தில் ஓடுபவர் முற்றிலும் மறைந்து "ஓடுதல்" மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும். அங்கே மனம், உடல், உயிர் என்ற மூன்றும் ஒன்றாகி இயங்கிக் கொண்டிருக்கும். திடீரென்று உங்கள் உள்ளே ஒரும் பேரின்பம், அதிர்ச்சி அல்லது உச்சம் ஏற்படும். இந்த துரிய நிலைக்கு ஓடுபவர்கள் தற்செயலாக அவர்களே அறியாமல் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அனுபவம் தாங்கள் ஓடுவதால் வந்ததாக எண்ணி யோகநிலை உணர்வின் அனுபவத்தை தவறவிட்டிருக்கிறார்கள். ஆனால், அதை உணர்வுபூர்வமாக எதிர்கொண்டால், அந்த வேளை மிக அற்புதமாகவும், உங்கள் உடல் மிக ஆரோக்கியமாகவும், ஏன் இந்த உலகம் மிகமிக அழகானதாகவும் தோன்றும்.
நான் அறிந்தவரை மற்றவர்களை விட ஓடும்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்ற எவரைக்காட்டிலும் மிக எளிதாக யோக உச்சத்திற்கு வர முடியும்".

- ஓஷோவின் தியானமுறைகள்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum