Latest topics
வேதகிரி -கிருஷ்ணன்
Page 1 of 1
வேதகிரி -கிருஷ்ணன்
வேதகிரியின் நெற்றியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நடைபாதை யின் வழியாக அவன் திரும்பி வந்தான். மணித்துளிகளும் நிமிடங்களும் கடந்துபோனதை அவன் அறியவில்லை. மணிகள் கடந்து சென்றதையும் அவன் அறியவில்லை. வேதகிரியின் கோட்பாடுகள் முட்டைகளாக கர்ப்பப்பைக்குள் பெருகிவிட்டிருந்தன.
அவற்றை பூமியின் ஆழங்களுக்குள் மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைக்கப்படும் முட்டைகள் அனைத்தும் ஒருநாள் திறக்கும். அப்போது வெளியே வருவது ஓராயிரம் குஞ்சுகளாக இருக்கும். அந்த ஓராயிரங்கள் இப்பூமி முழுவதும் நிறைந்து கிடக்கும் என்பதுதானே அவனுடைய பயணத்தின் உள்ளார்ந்த அர்த்தமே!
"ஆனந்தன்... நீ எங்கே போகிறாய்?'
யாரோ கேட்பதைப்போல இருந்தது. யார் கேட்கிறார்கள்?
வேறு யாருமல்ல... அவனுடைய மனசாட்சிதான்.
மனசாட்சியின் கேள்விக்கு பதில் கூறுவதற்கு அவன் கடமைப் பட்டிருக்கிறானே! காரணம்- அந்த மனசாட்சியிடம் கேள்விகேட்ட பிறகுதான் வேதகிரியின் பாறைகளையும் அருவிகளையும் காடுகளையும் உயர்ந்து நின்று கொண்டிருக்கும் குன்றுகளையும் மிதித்து ஏறிச் சென்றதும், அடர்ந்த காட்டின் ஆழமான குகைகளுக்குள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்ததும்...
மீண்டும் கேள்வி உரத்துக் கேட்கிறது.
"ஆனந்தன், நீ எங்கு போகிறாய்? பதில் கூறவில்லை?'
"புறப்பட்ட இடத்திற்குத்தான்...'
பதில் தெளிவாகப் புரிந்ததா என்று தெரியவில்லை.
"புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவது என்ற விஷயம் இந்த மிகப்பெரிய பயணத்திற்கு மத்தியில் உனக்கு சாத்தியமா ஆனந்தன்?'
மீண்டும் இதோ, மனசாட்சியின் இன்னொரு கடுமையான கேள்வி.
அந்த உண்மையின் அதிர்ச்சியிலிருந்து ஓடி மறைந்து கொள்ள முயற்சிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
இந்த நீண்ட பயணம் புறப்பட்ட இடத்தை நோக்கியா?
கருவிலிருந்து எப்போதோ விட்டெறியப்பட்ட உயிரின் பலமும், செயலின் நோக்கமும் நிறைந்த இந்த நீண்ட பயணத்தின் மூலமாகத்தான் புறப்பட்ட இடத்திற்குப் போய்ச்சேர முடியும்.
இயலாத விஷயம்...
பிரபஞ்சத்தைப் படைத்த சிற்பி அப்படிப்பட்ட ஒரு இறுதி முடிவுக்கான வழியை உருவாக்கி வைக்கவில்லையே! கர்ப்பப் பைக்குள்ளிருந்து உருவத்துடனும் அசைவுகளுடனும் பூமியில் வேகமாக குதித்து விழும் பிறப்பு என்ற மிகப்பெரிய ஆச்சரிய அம்சத்திற்கு, எந்தச் சமயத்திலும் கர்ப்பப் பைக்குள் திரும்பிச் செல்லும் செயல் சாத்தியமே இல்லை.
அவன் இந்த பிரபஞ்சத்தின் மண்ணுக்கு இருப்பவன்... காற்றுக்கு இருப்பவன்...
ஆனந்தனுக்கு சிரிப்பு வந்தது.
வேதகிரியின் நரம்புகளின் வழியாக ஓடி, பலம்பெற்று, ஏதோ திசையை நோக்கி வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஆற்றின் கரையில் ஆனந்தன் நின்றிருந்தான்.
இந்த ஆற்றைக் கடக்க வேண்டும்.
வேதகிரியின்மீது ஏற வேண்டும் என்றால், இந்த ஆற்றைக் கடந்தே ஆகவேண்டும்.
வேதகிரியிலிருந்து திரும்பி வருவதற்கும் இந்த ஆற்றைக் கடக்க வேண்டும்.
வேதகிரி ஆறு!
ஆயிரம் கைகளையும் ஆயிரம் நாக்குகளையும் கொண்டிருக்கும் ஆறு.
இந்த ஆற்றின் கைகள் எத்தனையெத்தனை வாழ்க்கைகளை கருணையே இல்லாமல் வாங்கிவிட்டிருக்கின்றன.
எத்தனையெத்தனை வாழ்க்கைகளை இந்த ஆற்றின் கைகள்
அந்தக் கரையிலிருந்து இந்தக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தி ருக்கிறது?
அவள் மிகவும் அமைதியாக, ஆழத்தை உள்ளுக்குள் மறைந்து வைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆனந்தன் ஒரு சிலையைப்போல சில நிமிடங்கள் அதே இடத்தில் நின்றிருந்தான்.
"என்ன ஆனந்தன், ஆற்றைக் கடக்கவில்லையா?'
எங்கிருந்தோ யாரோ கேட்கிறார்கள்.
"ஆமாம்... ஆற்றைக் கடக்க வேண்டும்... கடந்தே ஆகவேண்டும்...'
இப்படித்தான் பதில் வந்தது.
ஒரு நாள் அந்தக் கரையிலிருந்து ஆற்றைக் கடந்து வருவதற்காக இதே மாதிரி நின்றிருந்தான். இப்போது இதோ, அந்தக் கரைக்குச் செல்வதற்காக எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறான்.
முதலில் நடைபெற்றது லட்சியத்தை நோக்கிய பயணம்...
இது திரும்பி வரும் பயணம் என்ற வேறுபாடு மட்டுமே.
பயணம் இலக்கை அடைந்துவிட்டதா?
அந்தக் கரையிலிருந்து ஒன்றோ இரண்டோ ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு பரிசல் மெதுவாக ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருப்பதை ஆனந்தன் பார்த்தான்.
பரிசலை செலுத்தும் அதே பழைய மனிதன்தான். கறுத்து தடித்த ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த மனிதன்! பரிசல் நெருங்கி வந்து கொண்டிருந்தது. துறையில் மூன்று ஆட்கள் இறங்கினார்கள். இரண்டு ஆண்களும் ஒரு இளம்பெண்ணும்... வயதில் இளையவர்கள்... ரத்தம் துடித்துக் கொண்டிருக்கும் கண்களை விரித்து ஆனந்தனைப் பார்த்தார்கள்.
""வேறு யாரும் இல்லையா?'' பரிசல்காரன் கேட்டான்.
""இல்லை...'' ஆனந்தன் பதில் சொன்னான்.
பரிசல் சுழன்று சுழன்று வேதகிரியின் மார்பின் வழியாக அந்தக் கரையை நோக்கி நகர்ந்தது.
இரவு வெகுநேரம் ஆனபிறகுதான் ஃபெலிக்ஸின் வீட்டையே அடைந்தான்.
ஃபெலிக்ஸ் உறங்கிவிட்டிருக்கவில்லை. முன்கூட்டி தகவல் தெரிவிக்காமலே, ஃபெலிக்ஸின் வீட்டுக்கு அவன் வந்திருந்தான்.
கேட்டிற்கு அருகில் இருந்த அழைப்பு மணியில் விரலை அழுத்தினான். சிறிது நேரம் கடந்த பிறகு, முன்பக்க கதவைத் திறந்து ஃபெலிக்ஸ் வெளியே வந்தான்.
""ஆஹா! இது யார்? ஆனந்தனா? நீ திரும்பி வந்துவிட்டாயா?''
ஃபெலிக்ஸால் நம்பவே முடியவில்லை. காரணம்- அவன் திரும்பி வருவான் என்று நினைத்திருக்கவேயில்லை- பயணம் ஆரம்பித்தபோது.
""ம்... திரும்பி வந்துவிட்டேன்...'' ஆனந்தன் அவ்வளவுதான் சொன்னான்.
ஃபெலிக்ஸ் ஆனந்தனையே வெறித்துப் பார்த்தான். அவன் மிகவும் மெலிந்து விட்டிருந்தான். ஐந்தாறு மாத காட்டு வாழ்க்கை யின் ஒரு பாதிப்பாக கண்களுக்கு முன்னால் ஆனந்தன் இதோ நின்று கொண்டிருக்கிறான்.
பயணம் புறப்பட்டபோது எந்த அளவுக்கு உற்சாகம் நிறைந்த வனாக அவன் இருந்தான்!
சிவந்த வானத்தின் விளிம்பை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்ற வெறி?
அனைத்தும் அணைந்துபோய்விட்ட உயிரற்ற கண்களுடன் ஆனந்தன் நின்று கொண்டிருந்தான்.
""உள்ளே வா... சற்று குளித்து களைப்பை நீக்கு... இங்கு இன்னொரு விருந்தாளியும் இருக்கிறார்... அறிமுகமாகிக் கொள்ளலாம்.''
அறைக்குள் நுழைந்தபோதே தோன்றியது- விருந்தாளி ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஃபெலிக்ஸ் அவளை எங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்திருப்பான்? அப்படியே இல்லையென்றாலும், ஃபெலிக்ஸ் அந்த விஷயத்தில் படு கில்லாடி ஆயிற்றே!
ஃபெலிக்ஸ் உள்ளே பார்த்து அழைத்தான்.
சிவகாமி வந்தாள். உயர்ந்து, மெலிந்த, மாநிறத்திலிருந்த ஒரு சுத்த தமிழ்ப் பெண். பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தைக் கொண்டவளாக இருந்தாள். அழகான கண்கள்... உதடுகள்... சற்று பெரிய மார்பகங்கள்... அடர்த்தியான கூந்தல்... நைட்டி அணிந்திருந்தாள். ஆனந்தனின் கண்கள் சிவகாமியின்மீது பதிந்ததை ஃபெலிக்ஸ் தெரிந்துகொண்டான்.
"மீட் மிஸ்டர் ஆனந்தன். ஐ ஹேட் டோல்ட் எபௌட் ஹிம்...''
ஃபெலிக்ஸ் சிவகாமியிடம் கூறினான். சிவகாமியின் உதட்டில் ஒரு சிரிப்பு மலர்ந்தது.
""இதோ பார் ஆனந்தன்... இவளை ஷேர் பண்ணிக் கொள்ள மாட்டேன். இவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள். புதுச்சேரியிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு நிரந்தரமான ஏற்பாடு...
அதனால்தான் கூறுகிறேன்- நோ ஷேரிங். இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகக் கூறுவதாக இருந்தால்... இவள் என்னுடைய மனைவியாக ஆகப் போகிறாள்- மனதை சுத்தமாக வைத்துக்கொள்.''
மிகவும் தெளிவாக ஃபெலிக்ஸ் கூறினான்.
ஆனந்தன் மறுத்து எதுவும் கேட்கவில்லை. மனம் அப்படிப் பட்ட ஒரு நிலையில் இல்லை.
குளியலறைக்குள் நுழைந்தபோது நினைத்துப் பார்த்தான்.
ஃபெலிக்ஸிடம் ஒரு மாற்றம் உண்டாகி விட்டிருக்கிறதே!
அவனுக்கு என்ன ஆனது? முன்பெல்லாம் அவன் இப்படி இருந்த தில்லையே! வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பெண்களைத் தள்ளிக் கொண்டு வருவான். அதற்குப் பிறகு சில நாட்கள் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
ஃபெலிக்ஸ் சுயநலம் கொண்டவனாக எவ்வளவு சிக்கிரம் ஆகிவிட்டிருக்கிறான்.
ஏதாவதொரு பெண்ணிடம் விழுந்துவிடக்கூடிய மனிதன் இல்லையே ஃபெலிக்ஸ்? என்ன ஆனது என்று தெரியவில்லை.
அதற்குப் பிறகு அதைப் பற்றி கூறாமல் இருக்க மாட்டான்.
சாப்பாட்டு மேஜையில் சூடான சப்பாத்தியும் கோழிக் குழம்பும் இருந்தன.
""தினமும் ஒரு நேரத்திற்கான உணவைத் தயார் பண்ணி வைப்பேன். நீ இப்போது இங்கு வருவாய் என்ற விஷயம் தெரியாதே! அதனால்...''
ஃபெலிக்ஸ் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே சொன்னான்.
ஆனந்தன் மென்மையான ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினான். அவ்வளவுதான். நல்ல பசி இருந்தது. மெதுவாக சப்பாத்தியைச் சாப்பிட்டான்.
""இல்லை... உனக்கு என்ன ஆனது? கடமையில் தவறு நேர்ந்து விட்டதா?'' ஃபெலிக்ஸ் கேட்டான்.
""ம்... தவறு எதுவும் உண்டாகவில்லை. இந்த மூவ்மெண்ட் தோல்வியைத் தழுவிவிடும். இலக்கை அடையாது. காலம் மாறி விட்டிருக்கிறது.'' ஆனந்தன் சொன்னான்.
""எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியும். உன்னுடைய உற்சாகத் தைக் கெடுக்கக் கூடாது என்று நினைத்தேன். அவ்வளவுதான். கேம்ப் எப்படி?''
""மிகவும் கடுமையாக இருந்தது. சாதாரண பலவீனம் கொண்ட வர்களால் அங்கு இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு முரட்டுத்தனம் நிறைந்ததாகவும் மிருகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. மரணத்தை நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்த நிமிடங்கள்... ஹோ... பயங்கரம்! ஆனால் ஒன்று... அதைப் பின்பற்றுவதற்கு இப்போதும் இளைஞர்கள் தயாராக வந்து நிற்கிறார்களே!''
ஆனந்தன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கூடியவனாக ஆனான்.
""அறியாமை காரணமாக... அவ்வளவுதான். சரி... என்ன திட்டம்?'' ஃபெலிக்ஸ் கேட்டான்.
""தற்போதைக்கு எதையும் தீர்மானிக்கவில்லை. அந்தக் கொள்கையை விட்டு விலகிவிட வேண்டும் என்பதையும் முடிவு செய்யவில்லை. அதற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்க வேண்டும்.''
""ம்... அதற்கு இப்படியொரு கடுமையான முயற்சி தேவையா?''
""தேவைதான்... தெரிந்துகொள்வதற்கும் அதைப் பற்றிய
அனுபவங்களைப் பெறுவதற்கும்...''
ஆனந்தன் ஃபெலிக்ஸைப் பார்த்து, விஷயத்தை மாற்றிக் கேட்டான்:
""என்ன... இப்படி ஒரு புதிய அனுபவம்? இவள் எங்கேயிருந்து வந்தாள்?''
""சொல்கிறேன்... உன்னிடம் கூறாதது மாதிரி எதுவுமில்லையே! இவளுடைய தாய்- தந்தை இருவரும் ஃப்ரான்ஸில் இருக்கிறார்கள். கோடீஸ்வர குடும்பம். அரவிந்தர் ஆசிரமத்தில் நான் இவளைப் பார்த்து கொத்திக் கொண்டு வந்தேன். தனிமையில் வாடிக் கொண்டிருந்த இவளுக்கு ஒரு ஆதரவு தேவைப்பட்டது. நிரந்தரமான ஒன்று...
அதாவது- ஒரு வாழ்க்கை. நான் அதைத் தருகிறேன் என்று ஏற்றுக் கொண்டேன். அவளை இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். இதுதான் சுருக்கமான கதை...''
""பரவாயில்லை... நல்லது.'' ஆனந்தன் இவ்வளவுதான் சொன்னான்.
"நான் இப்படியெல்லாம் மாறிவிட்டிருக்க மாட்டேன் என்று நினைத்தாய்... இல்லையா ஆனந்தன்?''
""இல்லை... யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாருக்குத் தெரியும்? இதுதானே அதற்கு சரியான பதிலாக இருக்க முடியும்...''
""இல்லை ஆனந்தா... நாம் எவ்வளவோ எவ்வளவோ விஷயங்களைச் சுவைத்தோம். அனுபவித்தோம். ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு மனம் தூண்டிக் கொண்டே இருந்தது. அது நடந்துவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டால் போதும்...''
ஃபெலிக்ஸ் அழகாகக் கூறினான்.
""குட்... நான் எதையும் எதிர்க்கமாட்டேன் என்ற விஷயம்தான் உனக்குத் தெரியுமே? நடக்கக் கூடிய விஷயங்கள்... எது எப்படியோ... நல்ல சரக்கு... நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உனக்கு அவள் பொருத்தமானவள்தான்...''
""புத்திசாலி! மிகவும் அழகான தொழில்... நாம அவளை அனுமதித் தால் போதும்... ஹ...ஹ... முன் அனுபவம் இருக்க வேண்டும்... நாமும் அப்படிப்பட்டவர்கள்தானே?''
ஃபெலிக்ஸ் தேற்றுவதைப்போல சொன்னான்.
ஆனந்தன் லேசாக சிரித்தான்.
""ம்... உன் நேரம்... நடக்கட்டும்...''
தூங்குவதற்காக சென்றபோது ஆனந்தன் நினைத்தான்.
நட்பு என்பதற்கான அர்த்தம் முழுமை அடையக் கூடிய ஒரு உறவு- அதுதான் ஃபெலிக்ஸுடன் கடந்த ஒரு பத்தாண்டு காலமாக இருந்தது. உலகத்தில் மிகவும் அரிதாக பார்க்கக் கூடிய ஒரு நட்பு...
முழுமை அடைந்த நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அகராதி எழுதலாம்...
ஆனால், இனி ஃபெலிக்ஸ் தன்னிடமிருந்து விலகி நடந்து சென்றுவிட்டான் என்ற சூழ்நிலை உண்டாகி விட்டிருக்கலாம். அது தவிர்க்க முடியாத ஒன்றுதானே!
தனிமையில் இருக்கும் வாழ்க்கை... பிறகு இரண்டாக ஆகிறது. இரண்டிலிருந்து மூன்றுக்கும்... பிறகு நான்கிற்கும்... அதைத் தாண்டியும் அது போய்ச் சேரும். மீண்டும் தனிமை.. தன்னந்தனியாக... ஓடிக் களைத்து எதுவுமே செய்ய முடியாமல் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டு, தளர்ந்து போய் மரணத்தின் கைகளில் கண்களை மூடிச் சேரும்போது...
தனிமையில்தானே இருப்பார்கள்... எல்லாரும்!
கதவை அடைக்காமலே ஆனந்தன் படுக்கையில் சாய்ந்தான். எந்தச் சமயத்திலும் கதவை அடைத்து தூங்கிய பழக்கமே இல்லையே!
வாழ்க்கையும் அப்படித்தானே இருந்து வந்திருக்கிறது... இதுவரை.
பயங்கரமான காட்டின் குளிரிலும் மழையிலும் பனியிலும் வெயிலிலும் வாழ்ந்த இரவுகளிலிருந்து விடுதலை பெற்று பழைய இடத்திற்குத் தேடி வந்தபோது, மனதிற்கே தெரியாமல் அவன் தூக்கத்தின் கைகளில் விழுந்துவிட்டிருந்தான்.
காலையில் ஃபெலிக்ஸ்தான் ஆனந்தனை எழுப்பினான்.
""நல்ல... மிக அருமையான காபி... இவள் மிகவும் நன்றாக சமையல் செய்கிறாள். பருகிப் பார்...''
ஃபெலிக்ஸ் அழைத்தான். உண்மைதான்... காபி மிகவும் சுவையாக இருந்தது. ருசித்துப் பார்த்த முதல் மடக்கிலேயே தெரிந்துவிட்டது.
""இவள் ட்ரிங்க் விஷயத்தில் எப்படி!'' வெறுமனே கேட்டான்.
""ஒரே நேரத்தில் ஒரு பைன்ட் குடித்து முடித்தாலும், அதற்குப் பிறகும் குடிக்கலாம் என்று கூறுவாள். புதுச்சேரி சரக்கை அடித்து பழகிய நாக்கு ஆயிற்றே!'' ஃபெலிக்ஸ் சிரித்தான்.
""அப்படியென்றால் இரண்டு பேருக்கும் தினமும் ஒவ்வொரு புட்டி...''
""இல்லை... கட்டாயமில்லை... கடந்த ஒரு வாரமாக மது அருந்த வேண்டும் என்று தோன்றவே இல்லை... இருவருக்கும்.''
""அது சரி... வாழவேண்டும் என்பது மட்டுமே ஆசை...''
""அவளுக்கு என்னவோ கணக்கு கூட்டல்கள் இருக்கின்றன. ஃப்ரான்ஸுக்கு ஒரு பயணம்... ஏதோ பிஸினஸ்... பரவாயில்லை... நல்ல ஐடியா... வேண்டாம் என்று நான் கூறவும் இல்லை.''
""நல்லது.... வாழ்க்கை என்ற ஒன்று ஆரம்பமாவதே, ஒரு பெண் உரிய இடத்திற்கு வந்துசேரும் போதுதானே?''
""உண்மையாக இருக்கலாம்..'' ஃபெலிக்ஸ் சொன்னான்.
ஆனந்தன் மனதிற்குள் நினைத்தான்.
ஃபெலிக்ஸ் மிகவும் மாறிவிட்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. வாழ்க்கையை மென்மையாக அணுகியிராத மனிதன்... தீவிரமான சிந்தனைகள்... கரடுமுரடான அனுபவங்கள்... இவை எல்லாம்தான் உண்மை. எந்த விஷயத்தின்மீதும் பெரிய ஈடுபாடு இல்லை. கிறிஸ்துவையும் கிருஷ்ணனையும் விமர்சித்துக் கொண்டிருப்பான். ஒரே மாதிரி... மார்க்ஸை பல நேரங்களில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டிருக்கிறான். மார்க்ஸ் முடிவடைகிற இடத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடிய ஒரு தத்துவம்- அதுதான் ஃபெலிக்ஸின் மனதில் இருந்தது. அவனையும் அந்த வழியில் அவன் அழைத்துக் கொண்டு சென்றான். இறுதியில் வேதகிரியிலும் போய்ச் சேர்ந்தான். ஃபெலிக்ஸ் மாறிவிட்டானா?
அமைதிப் புரட்சி என்ற மடத்தனமான விஷயத்தைப் பற்றித்தான் அவனுடைய இறுதிப் புலம்பல் இருந்தது. அந்தப் புலம்பலும் இங்கு முடிந்துவிட்டதோ?
ஃபெலிக்ஸ் வாழ்க்கையின் இன்னொரு முனைக்குத் திரும்பிச் செல்கிறானோ?
தெரியவில்லை...

Re: வேதகிரி -கிருஷ்ணன்
ஏழு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
ஆட்டோவில் சென்றால் என்ன? நடப்பதற்கு ஒரு மனநிலை இல்லை.
ஆனந்தன் ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்து ஆட்டோவில் ஏறி, போகக்கூடிய இடத்தைச் சொன்னான். சாலை மிகவும் கூட்டமாக இருந்தது. சாயங்கால நேரம் ஆகிவிட்டிருந்தது காரணமாக இருக்க வேண்டும். அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் கூட்டம். வாகனங்கள், ஐ.டி. பார்க்குகளிலிருந்து வெளியேவரும் இளம் தலைமுறையினரை ஏற்றிக்கொண்டு வரும் பெரிய பேருந்துகள்... இப்படியும் அப்படியுமாக... நகரமும் நகரத்தின் எல்லைப் பகுதிகளும்... அனைத்தும் இப்போது ஐ.டி. பார்க்குகளின் பிடிகளுக்குள் சிக்கி விட்டிருக்கின்றன. கிராமப் பகுதிகள்கூட "ஸ்மார்ட் சிட்டிகள்' ஆகிவிட்டன. ஐ.டி. பார்க்குகள் தலையை உயர்த்திக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றன. அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மெதுவாக நுழைந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறை...
தாராளமான பணம்... சம்பளம்... ஹைடெக் உணவு... ஊர் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. புதிய புதிய துறைகள் திறந்து கொண்டிருக்கின்றன. நிலவிற்குச் செல்லக்கூடிய பயணத்திற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
பூமி வறண்டுபோகத் தொடங்கிவிட்டது.
மண்ணை நேசிப்பதற்கும் அதை கவனித்துப் பார்ப்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. பழைய விவசாயிகள் தங்களுடைய பிள்ளைகளை ஐ.டி. கல்வி கற்பதற்கு அனுப்பி விட்டார்கள். அவர்கள் ஐ.டி. யுகத்தின் பகுதியாக ஆகிவிட்டார்கள். கை நிறைய பணம். விவசாய நிலம் வறண்டு போய்க் கிடக்கிறது. விவசாயம் இல்லை. அதாவது- விவசாய வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள் இல்லை என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது. நாளை உணவுக்கு என்ன செய்வோம் என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஐ.டி. புரட்சிக்குப் பின்னாலும் அணுசக்திக்குப் பின்னாலும் புதிய தலைமுறை பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.
பூமி மெதுவான குரலில் மனிதனின் காதுகளுக்குள் இப்படிச் சொன்னது:
"இங்கே பார், மனிதா... நீ இருட்டை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறாய். நீ என்னை நோக்கித் திரும்பி வா... முன்னோர் கள் செய்தது அதுதான்...'
கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? ஐ.டி. யுகத்திற்குள் மனிதன் வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறான்.
ஏரியின் கரையை அடைந்ததும், ஆட்டோ நின்றது. மீட்டருக்கான கட்டணத்தையும், அதற்குமேல் டிப்ஸையும் கொடுத்துவிட்டு அவன் வெளியே இறங்கினான். அங்கு வந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. இந்த மிகப் பெரிய நகரத்தின் தாகத்தைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் ஏரி. நீர்ப்பரப்பு உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே நகரம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தது. குடிநீருக்காக மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள். மழை இரக்கம் காட்டியதன் காரணமாக, ஏரி நிறைந்து காணப்பட்டது. நீர் மட்டம் உயர்ந்துவிட்டது. இன்னும் சில நாட்களுக்கு நீருக்குப் பஞ்சம் இல்லை. இயற்கை இரக்கம் காட்டவில்லையென்றால், குடிக்கும் நீர்கூட இல்லாத சூழ்நிலை உண்டாகிவிடும். எந்தவொரு நானோ தொழில்நுட்பத்தாலும் அதைச் செய்ய முடியாதே! ஏரியின் மேற்குப் பகுதியிலிருந்த பாதையின் வழியாக ஆனந்தன் மெதுவாக நடந்தான்.
முன்பு அந்த இடம் சுத்தமான கிராமமாக இருந்தது.
கண்களுக்கு எட்டாத அளவுக்கு வயல்வெளிகள்...
இன்று வயலை இல்லாமல் செய்துவிட்டு, மக்கள் ஃப்ளாட்டுகளைக் கட்டிவிட்டிருக்கிறார்கள்.
டாக்டர் மாலதியின் விலை உயர்ந்த ஃப்ளாட்.
மாலதி- நடுத்தர வயதைக் கொண்ட டாக்டர். அழகான தோற்றத் தைக் கொண்டவள். இரண்டு குழந்தைகளுக்கு அன்னை. கணவர் கைவிட்டுப் போய்விட்டதாகக் கூறுகிறாள். நகரத்தின் மதிப்புமிக்க மருத்துவ மையத்தில் மருத்துவராக டாக்டர் மாலதி பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
தமிழ்ப் பெண்.
மொழி தடையாக இருக்கவில்லை.
முதலில் நட்பு.
அதைத் தொடர்ந்து அந்த நட்புக்கு வடிவ வேறுபாடுகள் உண்டாயின. அந்த நட்பு படுக்கையறைக்குள் நீண்டு செல்வதற்கு ஆனந்தனுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை.
மாலதிக்கு தன்மீது இருப்பது காதலா? வெறியா? தெரியவில்லை.
இந்த உறவு ஆரம்பமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.
வாழ்க்கைக்குள் அழைக்கும் டாக்டர் மாலதியை, ஒரு பதிலால் கூட ஆனந்தன் சந்தோஷத்திற்கு வழி உண்டாக்கித் தரவில்லை.
ஆனால், அந்த உறவு இதே மாதிரியே தொடர்ந்து கொண்டி ருக்கட்டும் என்று ஆனந்தன் விரும்பினான்.
டாக்டர் மாலதிக்கு ஒரு மனம் இருக்கிறது. ஆணை காதலிக்கக் கூடிய ஒரு இதயமும். மாலதியின் கணவருக்கு எங்கு தவறு நேர்ந்தது?
பல நேரங்களிலும் சிந்தித்துப் பார்த்திருக்கிறான். ஒருநாள் கேட்கவும் செய்திருக்கிறான்.
"உங்களுக்கு அது புரியவில்லையா என்ன?' மாலதியிடமிருந்து அந்தக் கேள்விதான் வந்தது.
தனக்குப் புரிந்ததா? இப்போதும் சந்தேகம் எஞ்சி இருக்கிறது.
உடலுறவு விஷயத்தில் ஆனந்தனுக்குப் புதிய ஒரு உலகத்தின் அனைத்து வாசல்களையும் திறந்துவிட்ட டாக்டர் மாலதி... இன்னும் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக மனதில் நிறைந்து நின்று கொண்டிருக்கிறாள். ஒரு மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டி ருக்கும் பெண்ணுக்கு ஆணின் உடல் விஞ்ஞானத்தைப் பற்றி நன்கு தெரியுமல்லவா? படுக்கையறையில் மாலதியின் மிகச் சிறந்த நடவடிக்கைகளில், தெரிந்து கொண்டிராத ஒரு உலகத்தின் எல்லையற்ற தன்மைக்குள் பறந்து உயர்ந்து செல்ல முடிவதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.
இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால், பெண் டாக்டர்களுடனும் நர்ஸுகளுடனும் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் புதிய புதிய இன்ப அனுபவங்களில் ஆனந்தன் மூழ்கிப் போய்விட்டிருக்கிறான். ஒருவேளை தன்னிடமிருந்து ஆனந்தன் விலகிச் சென்றுவிடக்கூடாது என்று மாலதி விருப்பப் பட்டிருக்கலாம்.
இப்போது மாலதி விருப்பப்படுவது ஆதைத்தான்.
நிரந்தரமான ஒரு உறவு.
இரண்டு பிள்ளைகளுக்கு ஒரு நிழலாக இருப்பது.
ஆனால், இன்று வரை ஆனந்தன் தன் மனதைத் திறந்து காட்டியதேயில்லை.
காரணம்- அவனுக்கு மாலதி வேண்டும் என்பதுதான்.
வாழ்க்கைத் தோழியாக அல்ல- சினேகிதியாக. எல்லா உறவு களையும் கொண்டிருக்கும் சினேகிதி... விருப்பம்போல மாலதியின் அக்கவுண்டில் பணம் இருக்கிறது.
நாள் வருமானத்திற்கு எல்லையே இல்லை.
தனக்கு ஆனந்தன் முழுமையான சொந்தமாக ஆகமாட்டான் என்ற விஷயம் மாலதிக்கு நன்றாகத் தெரியும்.
அவள் பலமுறை மனதைத் திறந்து கூறியிருக்கிறாள்.
"ஆனந்தன், இந்த வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்று தோன்றவே இல்லையா? இங்கே பாருங்க... இப்படி நாம் இரண்டு துருவங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக் கிறது? உங்களுக்கு எந்த முறை பிடித்திருக்கிறது? நான் அனுசரித்துச் செல்லத் தயார்...'
ஆனால், ஆனந்தனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
"ஆனந்தன், உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா?'
"அப்படியில்லை மாலதி. உங்களை எனக்கு எவ்வளவோ பிடித்தி ருக்கிறது. இந்த விருப்பத்திற்கு ஒரு நிறம் இருக்கிறது... ஒரு அழகு இருக்கிறது.... ஒரு இசை இருக்கிறது... அது இல்லாமல் போவதை நான் விருப்பவில்லை.'
ஆனந்தனின் பதில் மாலதியைக் கவலையில் கொண்டு போய் சேர்க்கும். காதலியாக இருக்கும் ஒரு பெண் தனக்கு மிகவும் அருகில் இருக்க வேண்டும் என்பதைத்தான் ஆனந்தன் எப்போதும் விரும்பி னான். கணவன் இல்லாத- சதைப் பிடிப்புடன் இருக்கும் ஒரு அழகான பெண்ணின் நடவடிக்கைகளில் கிடைக்கக்கூடிய எல்லை யற்ற ஆனந்தம், மனைவியாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலிலிருந்து கிடைக்காது என்ற விஷயம் ஆனந்தனுக்கு நன்கு தெரியும்.
அது ஒரு தத்துவ விஞ்ஞானமாக இருக்கலாம்.
தன்னுடைய நடைக்கு மேலும் சிறிது வேகத்தை ஆனந்தன் அதிகரிக்கச் செய்தானோ?
சாயங்கால காற்றுக்கு ஒரு தனிப்பட்ட சுகம் இருந்தது.
நீர்ப்பரப்பின்மீது வந்து விழுந்த காற்றுக்கு மெல்லிய குளிர்த் தன்மை இருந்தது.
ஆனந்தன் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான்.
கண்களுக்கு முன்னால் டாக்டர் மாலதி...
மெல்லிய இளம் ரோஸ் நிறத்தில் நைட்டி அணிந்து நின்றிருந்த மாலதியின் உதட்டில் ஒரு புன்னகை வெளிப்பட்டது. பல நாட்கள் மனதில் தயார் பண்ணி வைத்திருந்ததைப்போல... திடீரென்று கிடைத்த ஆனந்தனின் அண்மையால், மாலதியின் நரம்புகளில் ஒரு மின்னல் பாய்ந்தோடியதைப்போல இருந்தது.
""நான் வருவேன் என்று நினைத்திருக்கவில்லை. இல்லையா?'' சுத்தமான தமிழில் கேட்டான்.
ஆனந்தன் உள்ளே சென்றான்.
""மணிச் சத்தம் ஒலிக்கும்போதெல்லாம் மனதில் இருப்பது இந்த வருகைதானே? எங்கே இருந்தீர்கள்? இவ்வளவு அதிகமான நாட்கள் நீடித்த ஒரு பயணம்...?''
ஆனந்தனின் உடலோடு சேர்ந்து நின்று கொண்டு மாலதி கேட்டாள்.
""தெரியவில்லை... உண்மையிலேயே தெரியவில்லை. பயணம் என்பதென்னவோ உண்மை... எங்கு? எதற்கு? தெரியவில்லை.''
ஆனந்தன் அவளுடைய தோளில் மெதுவாகக் கையை வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் நின்றான்.
தீபுவும் நீதுவும்.
மாலதியின் எட்டும் ஐந்தும் வயதுகளைக் கொண்ட மகனும் மகளும்.
அவர்களுக்கு ஆனந்தன் அங்கிளாக இருந்தான்.
ஏராளமான அன்பைப் பகிர்ந்து தரக்கூடிய அங்கிள்.
ஆனந்தனிடம் குழந்தைகளுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைப்பட்ட கதையைக் கூறும் அங்கிள்...
தந்தையின் பாசம் கிடைத்திராத குழந்தைகளுக்கு ஆனந்தனின் இருப்பு ஒரு அனுபவமாக இருந்தது.
குழந்தைகள் உறக்கத்திற்குள் மெதுவாக மூழ்கியபோது மாலதி யின் படுக்கையறை ஒரு கொண்டாட்டத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஐந்தாறு மாதங்கள் இடைவேளைக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் ஒரு வசந்தத்தை முழுமையாக அடைவதற்கு அவளுடைய உடலின் ஒவ்வொரு சிறிய சிறிய அணுவும் அப்போது கண்களைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தன.
""ஆனந்தன், ஏதாவது ட்ரிங்க்ஸ்...?''
""நான் வைத்திருக்கிறேன்.'' ஆனந்தன் தன் பையில் ஒரு புட்டி விஸ்கியை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
மதுவின் மெல்லிய வருடலில், மாலதியின் பேரழகு ஒரு மயக்க மருந்தைப் போல நரம்புகளில் படர்வதை அனுபவித்து உணர்வது என்பது...
அள்ளி அணைத்துக் கொள்வதற்கு மத்தியில் ஒரு விஷயம் ஆனந்தனுக்குப் புரிந்தது. மாலதி சற்று களைத்துப் போய்விட்டிருக்கி றாள். அதாவது- மெலிந்து போயிருக்கிறாள்.
""என்ன... என்ன ஆனது? உடலில் ஒரு களைப்பு இருப்பதைப்போல...''
""உணவு விஷயங்களைச் சிறிது கட்டுப்படுத்தினேன். அவ்வளவு தான். இந்த பருமன் எதற்கு? யாருக்காக? எப்போதாவது வரக்கூடிய உங்களுக்காகவா?''
பதில் கூற இயலவில்லை. உதடுகள் விடுதலை பெறாத சூழ்நிலையில் இருந்த நிமிடங்கள்.
மாலதி ஒரு புதிய அனுபவத்தின் படிகளில் ஆனந்தனைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். இதற்கு முன்பு எந்த இடத்திலும் கிடைத்திராத ஒரு இன்ப உணர்விற்குள் ஆழமாக இறங்கியபோது, மனதிற்குள் இப்படி நினைத்தான்- "எப்போது வந்து சேர்ந்தாலும், மாலதியின் கொடுத்து வைக்கப்பட்ட திறமையே தனிதான்... ஒருவேளை இன்னொரு பெண்ணிடமிருந்து எந்தச் சமயத்திலும் கிடைத்திராத உடலுறவு இன்பத்தின் பார்த்திராத பக்கங்களை வாசிப்பது என்ற விஷயம் மாலதிக்கு முடிகிறது என்றால், அவளிடமிருந்து ஆனந்தன் விலகிச் சென்று விடக்கூடாதே என்ற விருப்பம்தான் காரணமாக இருக்க வேண்டும்.'
பெண்ணின் ஆழமான தந்திரமே அதுதானே?
""நீ ஏன் அவளைத் திருமணம் செய்துகொள்ள கூடாது,
ஆனந்தன்?''
ஒரு மடக்கு விஸ்கியைப் பருகிவிட்டு, ஒரு சிகரெட்டிற்கு நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டே ஃபெலிக்ஸ் கேட்டான்.
""எதற்கு?'' ஆனந்தனின் இன்னொரு கேள்வி.
""வாழ்க்கையைச் சுவைப்பதற்கு... பிறகு வேறு எதற்கு?''
""இப்போதிருக்கும் இந்த சுகம் இருக்கிறதே? அவள் எனக்கு சொந்தமாகி விட்டால், அது கிடைக்கும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?''
""உன்னுடைய இந்த அலைச்சல் இல்லாமல் போகும். நிரந்தரமான ஒரு இடம்- ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை. அதுதானே நல்லது?''
ஃபெலிக்ஸ் ஆனந்தனை மடக்குவதைப்போல இருந்தது.
""அப்படியென்றால், ஒரு குடும்ப வாழ்க்கை... இரண்டு குழந்தை களின் அன்னையைச் சுமந்து கொண்டு... அப்படித்தானே?''
""அது ஒரு தவறான விஷயமில்லை. தேவையற்ற ஒன்றும் அல்ல. வாழ்க்கையில் அவை அனைத்தும் இயல்பான விஷயங்களே! நீ
அந்த குழந்தைகளின் தந்தையாக வாழவேண்டும்; அவ்வளவுதான். வேறு எங்கும் கிடைக்காத அன்பு உனக்கு மாலதியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் கிடைக்கும் என்ற விஷயத்தில் சந்தேகம் இருக்கிறதா?'' ஃபெலிக்ஸ் விடுவதாகத் தெரியவில்லை.
திடீரென்று ஆனந்தன் ஒரு எதிர் கேள்வியை விட்டெறிந்தான்.
""ஃபெலிக்ஸ், நீ ஒரு இடத்தில் போய் சேர்ந்து விட்டோம் என்றதால் உண்டான தன்னம்பிக்கையின் காரணமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறாயா?''
""ச்சே... அதெல்லாம் இல்லை. நீயும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் மட்டுமே... வற்புறுத்தவில்லை.''
""வேண்டாம் ஃபெலிக்ஸ். என்னுடைய வாழ்க்கையில் இவற்றையெல்லாம் நான் விரும்பியதேயில்லை. எல்லாம் அவ்வப்போது வந்து சேர்ந்து விட்டிருக்கின்றன. ஃபெலிக்ஸ், என்னுடைய கடமை வேறொன்று என்ற விஷயத்தை நீ மறந்து விட்டாயா?''
""காலம் விட்டெறிந்துவிட்ட ஒரு கடமைக்குப் பின்னால் பயணம் செய்வதில் அர்த்தமே இல்லை ஆனந்தன். நாம் ப்ராக்டிக்கலாக இருப்பதற்குப் பார்க்க வேண்டும். நடைமுறை அரசியல் என்பதைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? சமூகம் விரும்பு வதே அதைத்தான். நீ உன்னுடைய பாதையில் தனி மனிதனாகத் தானே சென்று கொண்டிருக்கிறாய்? வேதகிரியில் நீ தினமும் கற்றதும் அதுதானே?''
""ஆமாம்... உங்களால் புரிந்துகொள்ள முடியாது, ஃபெலிக்ஸ். இங்கே பார்... நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாத ஆதிவாசி கள்... பாதிப்பிற்கு ஆளானவர்கள்... வசதி படைத்தவர்களின் சுரண்ட லுக்கு இரையாகி வாழ்ந்து கொண்டிருக்கும் பத்து லட்சம் மக்கள்... கல்வி கற்காதவர்கள்... வெளிச்சத்தைப் பார்க்காதவர்கள்... அடிமைகள்... ஒரு நேரம் வயிற்றை நிறைப்பதற்கு இயலாதவர்கள்... நாம் அவர்களை மறந்துவிட்டோம்... அதாவது- நினைத்துப் பார்க்கவே இல்லை.''
ஆனந்தன் ஆழங்களுக்குள் நுழைந்து பேசுவதைப்போல இருந்தது.
""அவர்களுக்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கி றாய்?''
""எதுவுமே செய்வதற்கு என்னால் முடியாது என்ற விஷயம்
எனக்குத் தெரியும். ஆனால், ஒரு நெருப்புப் பந்தத்தை எரிய வைத்தால் போதாதா?''
ஃபெலிக்ஸ் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
""நீ உன்னுடைய வாழ்க்கையை எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறாயா ஆனந்தன்?''
ஃபெலிக்ஸ் ஒரு கேள்வியை விட்டெறிந்தான்.
""எப்போதோ மூடப்பட்டுவிட்ட ஒரு அத்தியாயமல்லவா அது?''
""நீதான் இழுத்து அடைத்தாய் என்பதுதானே உண்மை?''
""இருக்கலாம்...''
""இங்கே பார் ஆனந்தன். வேதகிரியின் கோட்பாடுகளைப் பின்பற்றிச் செல்வதற்கு உன்னால் முடியுமா?''
""முயற்சிக்கிறேன்... இயலும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும்...''
""இங்கே பார் ஆனந்தன். கடந்த நூற்றாண்டின் பாதிக்குப் பிறகு உயர்ந்து கேட்ட ஒரு கோஷம் இருந்தது. விவசாய நிலம் விவசாயிக்கு... பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டுவோம். சமத்துவ அழகான வாழ்க்கை... அது ஒரு வெற்று கோஷமாக இருந்தது என்பதே இந்த நூற்றாண் டின் ஆரம்பத்தில்தானே நமக்குத் தெரிந்தது? அடிமைத்தனத்தில் விழுந்துவிட்ட ஒரு இனத்தை ஒரே கொடிக்குக் கீழே அணி வகுத்து நிற்கச் செய்யக்கூடிய ஒரு கோஷம்... நாம் அதை ஏற்றுக்கொண்டு பாடிக்கொண்டிருக்கவில்லையா?''
""ஆமாம்... ஆனால், நாம் அடையாளம் தெரிந்துகொண்டு விட்டோமே!''
""எதை அடையாளம் தெரிந்துகொண்டோம்? தலைமை வரிசையில் இருந்தவர்கள் ஐந்து நட்சத்திர சுக வசதிகளுக்குள் நுழைந்துவிட்டார்கள். கொடி பிடித்தவனின் பிள்ளைகள் வெயிலில் வாடிக் கொண்டிருந்தபோது, தலைமை வரிசையில் இருந்தவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக பறந்து சென்று கொண்டிருந்தார்கள். இதுதானே நடந்தது?''
""ஒரு பலமான அடி விழாது என்று யார் கண்டார்கள்?''
""எதுவுமே உண்டாகாது என்ற விஷயம் தலைமை வரிசையில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். இப்போது உலகத்தில் உள்ள எந்த இடத்திலும் அந்த "இஸ'மே இல்லாத நிலை உண்டாகி இருக்கிறது. இங்கு நம்முடைய மாநிலத்தில் மட்டும் கொஞ்சம் பேர் அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரின் வளர்ச்சிக்கு குறுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள். ஊர் வளர்ச்சியடைந்து விட்டால் "இஸ'த்தை வைத்து வியாபாரம் பண்ணிக் கொண்டிருப் பவர்கள் இழக்கப்போவது ஒரு சாம்ராஜ்ஜியத்தை இல்லையா?''
""இங்குதான் வேதகிரியின் கோட்பாடுகளின் முக்கியத்துவம் வருகிறது... சுரண்டப்பட்ட அடிமைகளுக்கு நடுவில் நாம் நெருப்புப் பந்தத்துடன் இறங்கிச் செல்ல வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்.''
""யாரால் அதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? சாத்தியமே இல்லாத விஷயம். காலம் கடந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் ஆனந்தன்.''
ஃபெலிக்ஸ் குவளையை காலி செய்தான். மீண்டும் நிறைத்தான். குவளைகள் நிறைவதும் காலி ஆவதுமாக இருந்தன.
சுய உணர்வு கொண்ட மனதின் செயல்பாடு படிப்படியாக
அசைவே அற்ற ஒரு நிலையை அடைந்துவிட்டதைப்போல தோன்றியது... அவர்களுக்குடையே.
பகலின் வெளிறிப்போன முகத்தையே பார்த்துக்கொண்டு ஆனந்தன் நின்றிருந்தான்.
நேற்று மது அருந்திக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ஃபெலிக்ஸ் விட்டெறிந்த கேள்விகள் மீண்டும் மனதில் எழுந்து கொண்டிருந்தன.
ஃபெலிக்ஸ் முழுமையாக மாறிவிட்டிருந்தான். நல்லது... தனக்கு ஒரு வகையில் இயலாமல் போனது, ஃபெலிக்ஸுக்கு முடிந்திருக் கிறதே!
ஆனந்தன் நினைத்துப் பார்த்தான்.
பன்னிரண்டாவது வயதில் எப்போதோ வாழ்க்கையில் புரிந்து கொள்ளலின் முதல் வெளிச்சம் உண்டான ஒரு அனுபவம்...
சித்த குருகுல ஆசிரமத்தின் வாசற்படியில் ஆனந்தன் என்ற பன்னிரண்டு வயது சிறுவன் நடுங்கிக் கொண்டிருக்கும் கால்களுடன் நின்று கொண்டிருந்தான்.
அவன் பிறந்து விழுந்த மண் பிள்ளைப் பருவத்தில் எட்டு வைத்து எட்டு வைத்து நடந்த மண்... ஏழு வயது வரை துள்ளிக் குதித்து ஓடிய மண்... இலஞ்சி மரங்கள் வளர்ந்திருந்த இடமும் செண்பகத் தோட்டமும்...
பெரியப்பாவைப் பார்ப்பதற்குத்தான் ஆனந்தன் சித்த குருகுல ஆசிரமத்திற்கு வந்தான். தந்தையின் பாசமென்றால் என்னவென்று தெரிந்திராத ஆனந்தனுக்கு பாசத்தைக் கொடுத்து வளர்த்தது
அவனுடைய தந்தையின் அண்ணனான பெரியப்பாதான். சந்நியாசம் பூண்ட மனிதர்... ஏழாவது வயதில் ஒரு பறித்து நடுதல்... அனைத்தும் இழக்கப்பட்டு விட்டன. பன்னிரண்டாவது பெரியப்பாவைப் பற்றிய நினைவுகள் மனதை ஆக்கிரமித்து விட்டிருந்தன.
ஒரு பயணம்... கால்நடையாகத்தான். யாரிடமும் கூறவில்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், கூறுவதற்கு யார் இருக்கிறார்கள்? கையற்ற நிலையில் இருக்கும் தாய்...
ஆசிரமம் நிறைய மக்கள்.
தீராத நோய்களுக்கு வழி தேடி வந்திருப்பவர்கள்-
அறையும் நிறையும் உள்ள அந்தப் பழைய ஓலையாலான பாரம்பரிய வீடு அப்படியேதான் இருந்தது. நீளமான திண்ணையில் சிறிய சுவாமி தர்மானந்தா அமர்ந்திருந்தார். இளமை நிறைந்த அழகான தோற்றத்தைக் கொண்ட சுவாமிகள். நீண்டு வளர்ந்த, கறுத்து சுருண்ட அடர்த்தியான தலைமுடியும் தாடியும்... காவி ஆடை... மிதியடி... கழுத்தில் ருத்திராட்ச மாலை...
கலை வேலைப்பாடுகள் கொண்ட தூணுக்கு எதிரில் இருந்த சிறிய அறையில் பெரிய ஒரு படம் கண்ணாடி போட்டு மாட்டப் பட்டிருந்தது. குருவின் படம்... தாடியும் முடியும் வளர்ந்திருக்கும் கோபமான முகபாவம் கொண்ட அந்த பெரிய படம்... இரு பக்கங்க ளிலும் எரிந்து கொண்டிருக்கும் குத்து விளக்குகள்... குரு உயிருடன் இருக்கிறார் என்பது இன்னொரு உண்மை.
அந்த குரு ஆனந்தனின் பெரியப்பா...
அந்த மனிதரைப் பார்ப்பதற்குத்தான் ஆனந்தன் என்ற சிறுவன் வந்திருந்தான். பல வருடங்களுக்கு முன்னால் அவனுடைய பெரியப் பாவுடன் வந்துசேர்ந்து கொண்டவர்தான் சிறிய சுவாமியான தர்மானந்தா.
தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு தங்களுடைய சொந்த வீட்டை விட்டு மிகவும் தூரத்தில் வந்து வசித்த ஆனந்தன் என்ற சிறுவனுக்கு, குடும்ப உறவுகளின் சிதிலம் என்றால் என்னவென்று தெரியவில்லை. தன்னுடைய பெரியப்பா குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டில் இருக்கிறார் என்ற விஷயம் மட்டும் தெரியும்.
வளரும்போது ஒருநாள் போய் பார்க்க வேண்டும். அது ஒரு விருப்பமாக இருந்தது.
அப்படித்தான் தன்னுடைய பெரியப்பாவைப் பார்ப்பதற்காக ஆனந்தன் வந்தான். வீடு முற்றிலும் மாறிவிட்டிருந்தது. மிகப் பெரிய ஒரு ஆசிரமமாக சிகிச்சை மையமாக அதை மாற்றிவிட்டிருந்தார்கள்.
தன் பெரியப்பாவின் மார்பில் கிடந்து வளர்ந்ததும், தாடி ரோமங் களைக் கிள்ளி விட்டதும், அந்தக் கைகளில் அமர்ந்து கொண்டு கிராமத்தின் வயல் வரப்புகளின் வழியாக கோவில் குளத்திற்குச் சென்றதும், குளத்தில் நீந்துவதற்குக் கற்றதும், பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததும், சிலேட்டில் முதல் எழுத்து எழுதியதும் ஆனந்தனுக்கு தெளிவான நினைவுகளாக இருந்தன.
வறுமையின் பிடியில் பட்டு வீசி எறியப்பட்ட ஆனந்தன் என்ற சிறுவன் தன்னுடைய பெரியப்பாவின் கருணையை எதிர்பார்த்து சொந்த கிராமத்திற்கு வந்தான். என்னென்ன மாற்றங்களெல்லாம் உண்டாகி விட்டிருக்கின்றன. ஏராளமான நோயாளிகள்... குழந்தைத் துறவிகள்!
ஆயுர்வேத மருந்துகளின் கடுமையான வாசனை நிறைந்த சூழ்நிலை...
சுவாமி தர்மானந்தன் ஆனந்தனைப் பார்த்தார். ஒரே பார்வையில் அந்தச் சிறுவனை துறவிக்குப் பிடித்துவிட்டது.
""அருகில் வா...'' சுவாமி அழைத்தார்.
ஆனந்தன் அருகில் போய் நின்றான்.
""என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?''
துறவி கேட்டார்.
""பெரியப்பாவைப் பார்க்க வேண்டும்.'' நடுங்கிய குரலில் சொன்னான்.
சுவாமி எதுவும் கூறவில்லை. புகைப்படத்தை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னார்:
""அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு போ. இதற்குமேல் இங்கு வராதே.''
ஆனந்தனுக்கு வருத்தமாக இருந்தது. மிகுந்த ஏமாற்றமும்.
சீடர்கள் கண்களை உருட்டினார்கள்.
ஏமாற்றத்துடன் ஆனந்தன் படிகளில் இறங்கினான். தன்னுடைய பெரியப்பாவைப் பார்க்க முடியவில்லை. தேம்பிக் கொண்டிருக்கும் மனதுடன் ஆனந்தன் மெதுவாகத் திரும்பிச் சென்றான்.
அது ஒரு பயணமாக இருந்தது. அதாவது- முடிவற்ற ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருந்தது.
அதற்குப் பிறகு அவன் தன் பெரியப்பாவைப் பார்க்கவே இல்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் மரணத்தைத் தழுவி விட்டார். சொத்துகள் முழுவதையும் சீடரான தர்மானந்தன் தன் கையில் வைத்துக் கொண்டார். மரணத்திற்கு முந்தைய நாளன்று உதவி பதிவாளரை வீட்டுக்கு வரவழைத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பதிவு செய்து அவற்றைத் தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொண்டார்.
எல்லா சொத்துகளும் தர்மானந்த சுவாமி திருவடிகளுக்குச் சொந்தமானவையாக ஆயின.
தொடர்ந்து துறவியாகவும் சிஷ்யையாகவும் இருந்த இளம் பெண்ணை தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொண்டார். பொருட்கள் முழுவதையும் விற்றுப் பணமாக்கி அந்த ஊரை விட்டே போய்விட்டார் என்ற தகவலை அவன் தெரிந்து கொண்டான்.
துறவி என்றால் திருடன் என்ற தெளிவான உண்மை ஆனந்தனின் மனதில் ஒரு வெளிச்சத்தைப்போல நிறைந்திருந்தது.
""நீ என்ன தீவிரமான சிந்தனையில் இருப்பதைப்போல இருக்கிறதே?''
ஃபெலிக்ஸின் குரல், சிந்தனைகளிலிருந்து ஆனந்தனை சுய உணர்வுக்குக் கொண்டு வந்தது.
""அதெல்லாம் ஒண்ணுமில்லை... வெறுமனே...''
""உன்னைப் பற்றி சிவகாமி ஒரு கமெண்ட் சொன்னாள்.''
ஃபெலிக்ஸ் சிரித்தான்.
""என்ன அது?''
""உனக்கு பெண்கள் விரும்புகிற ஒரு தோற்றம் இருக்கிறது என்று சொன்னாள்.''
""ஓஹோ... அப்படியா?'' ஆனந்தன் மென்மையாக சிரித்தான்.
""இன்னொரு விஷயத்தையும் சொன்னாள். என்னைப் பார்ப்பதற்கு முன்னால் உன்னைப் பார்த்திருந்தால், அவள் உன்னுடன் சேர்ந்து வந்திருப்பாளாம்.''
அதைக் கேட்டு ஆனந்தன் சற்று அதிர்ச்சியடைந்து விட்டான்.
எதுவும் பதில் கூற முடியவில்லை.
""இந்த பெண்களின் மனதே... யாரால் வாசிக்க முடிகிறது?'' ஃபெக்லிக்ஸ் சிரித்தான். அவன் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், ஆனந்தனின் மனதில் ஒரு தர்மசங்கடமான நிலை உண்டானது.
மனதிற்குள்ளிருந்து யாரோ மெதுவான குரலில் முணுமுணுப்பதைப் போல இருந்தது.
இனிமேல் இங்கே தொடர்ந்து இருக்கக் கூடாது.
சிறிது நேரம் சென்றதும் சிவகாமியை அழைத்துக் கொண்டு ஃபெலிக்ஸ் வெளியேறினான்.
""நாங்கள் சிறிது சுற்றிவிட்டு வருகிறோம். இவள் என்னவோ பர்ச்சேஸ் பண்ணணுமாம்.''
ஃபெலிக்ஸ் சொன்னான்.
""நீங்களும் எங்களுடன் வரலாம். ஆட்சேபனை இல்லை.'' மணி ஒலிப்பதைப்போல இருந்தது சிவகாமியின் குரல்.
""நன்றி... நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்.''
ஆனந்தன் சொன்னான்.
அவர்கள் போய்விட்டார்கள்.
அவர்கள் ஒரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஃபெலிக்ஸைப் பொறுத்த வரையில், எந்தச் சமயத்திலும் இப்படியொரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கக்கூட முடிந்ததில்லை.
வேறொரு தளத்தில் வாழ்க்கை அவனை விசி எறிந்துவிட்டிருந்ததே! எவ்வளவு சீக்கிரமாக மாறுதல் உண்டாகிவிட்டிருக்கிறது.
தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற ஒரு மெல்லிய சிந்தனை ஆனந்தனின் மனதில் எங்கோ ஒரு நெருப்புப் பொறியைப் போல தோன்றிவிட்டிருந்தது. உண்மையிலேயே அதுதானே நடந்திருக்கிறது.
அறையைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.
ஃபெலிக்ஸ் திரும்பி வருவதற்கு நேரமாகும். பெரும்பாலும் அவர்கள் ஏதாவது உணவகத்திற்குள் நுழைந்து உணவு சாப்பிட்டு விட்டுத்தான் திருப்பி வருவார்கள். இரவில் தாமதமாகக்கூட வரலாம். எப்போதும் போகக் கூடிய மலபார் பகுதியைச் சேர்ந்த செய்து முஹம்மதின் தேநீர் கடையில் சூடான தேநீர் குடித்துவிட்டுத் திரும்பி வந்தபோது, மிகவும் வயதான ஒரு பெண் பிச்சைப் பாத்திரத்தை நீட்டிக் கொண்டு அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள்.
ஹோட்டலில் இருந்து வாங்கி விரல்களுக்கு மத்தியில் வைத்திருந்த ரூபாய் நோட்டை அந்தப் பாத்திரத்தில் போட்டான்.
முகத்தைப் பார்க்க முயற்சிக்கவில்லை.
வயதான கிழவி என்ற விஷயம் மட்டும் தெரியும். ஆதரவற்றவளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லா பிள்ளைகளும் கைகழுவி விட்டவளாக இருக்க வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு கடந்த காலம் என்ற ஒன்று இருந்திருக்கு மல்லவா?
இல்லாமல் இருக்க வாய்ப்பில்லையே! அழகும் உடல் ஆரோக்கி யமும் இருந்த ஒரு காலம்- திருமணமானவனாக இருந்திருப்பாள். சில பிள்ளைகளையும் பெற்றிருப்பாள். இப்போது அந்தப் பிள்ளை கள் பெரியவர்களாக ஆகியிருப்பார்கள். இப்போது அந்தப் பிள்ளை கள் இவளைத் தெருவில் விட்டெறிந்திருப்பார்கள்...
இன்று சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருப்பதும் அது தானே!
ஒரு மின்னலைப்போல தன் அன்னையின் உருவம் ஆனந்தனின் மனதில் வந்து நின்றது.
என்றோ... எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் தன் தாயிடம் ஒரு வார்த்தைகூட கூறாமல் வாழ்க்கையின் இருண்ட பாதையில் நடந்து சென்ற நாள்...
என்றாவதொரு நாள் திரும்பிவர இயலும் என்றும்; தன் அன்னையையும் வாழ்க்கையின் உயர்ந்த படிகளில் ஏற்றி அழைத்துக்கொண்டு செல்ல முடியும் என்றும் ஒரு மெல்லிய எண்ணம் மனதில் இருந்தது.
திரும்பி வரும் பயணத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பயணத்தைத் தொடர மட்டுமே முடிந்தது... எல்லையே இல்லாமல்.
ஒரு முறையாவது தன் தாயை நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
இல்லை... ஒருமுறைகூட அது நடக்கவில்லை என்பதே உண்மை.
அன்னை ஒரு கவலையை அளிக்கும் சிந்தனையாக மனதில் இருந்து கொண்டு நெருப்பென கனன்று கொண்டிருந்தாள்.
தன் தாய்மீது அன்பு செலுத்த ஆனந்தனால் முடிந்ததா?
இல்லை... அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தாயைப் பற்றி புரிந்துகொள்வதற்கும்...
ஒருவேளை தன்னுடைய ஒரே மகனின் அன்பு கலந்த செயல்களுக்காக அந்தத் தாய் ஆசைப்பட்டிருப்பாள். தன் மகன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அவள் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்திருப்பாள்.
ஆனந்தனின் இழப்பு தீர்த்து வைக்க முடியாத ஒன்று.
அவனுடைய அன்னை எத்தனையெத்தனை பகல்களிலும் இரவுகளிலும் காத்துக்கொண்டிருப்பாள்.
அவனுடைய அன்னை எவ்வளவோ கவலைப்பட்டிருப்பாள்! எவ்வளவோ நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள்?
மரணப் படுக்கையில் படுத்திருந்தபோது யாரையோ தேடினாள் என்று மற்றவர்கள் கூறி அவன் தெரிந்துகொண்டான். சுயஉணர்வை இழந்து பைத்தியம் பிடித்த நிலையை அவனுடைய தாய் அடைந்து விட்டிருக்கிறாள். ஒருவேளை, தன் மகன் பிரிந்து சென்ற விஷயம் தான், அவனுடைய அன்னையை அப்படிப்பட்ட ஒரு நிலையில் கொண்டு போய்விட்டிருக்க வேண்டும். ஆனந்தன் எவ்வளவோ கண்ணீரை விட்டான். அமைதியானவனாக ஆனான். கையற்ற நிலை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கொண்டுபோய் விடும் அல்லவா?
"அதை ஒரு தவிர்க்க முடியாத காரியம் என்பதாக மட்டும் நினைத்துக் கொள். அப்படி நினைக்காமல் வேறு வழி இல்லையே!' ஃபெலிக்ஸ் ஒரு நாள் சொன்னான்.
வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு நிலையை நோக்கி வீசி எறியப்பட்டது தவிர்க்க முடியாத ஒரு காரியமாக இருக்கலாம். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், இப்போது இருக்கக் கூடிய இந்த வாழ்க்கையும் அப்படித்தானே?
இந்தப் பிறவி முழுவதும் தன் அன்னையிடம் பட்ட அந்த கடனை மீட்க தன்னால் இயலவே இயலாது என்ற உண்மை ஆனந்தனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பயணத்திற்கு மத்தியில் எத்தனையெத்தனை அன்னைகளின் முகங்கள்- கனிவு நிறைந்த அமைதியான உருவங்கள் அவனு டைய கண்களுக்கு முன்னால் கடந்து சென்றிருக்கின்றன.
அவனும் ஒருநாள் இதே நிலையை அடைவான். அவன் மட்டுமல்ல- எல்லாருமே ஒருநாள் இந்த நிலைக்கு வந்து சேர்வார்கள்...
உடல ஆரோக்கியம் கெட்டு, வயது அதிகமானதன் காரணமாக உண்டான சிரமங்களால் கண் பார்வையை இழந்து, எழுந்து நடக்க இயலாத ஒரு நிலை...
உறவினரும் உடையவர்களும் இல்லாமல் போகும் ஒரு நிலை...
பைத்தியக்காரத்தனமான- பைத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை.
அந்தச் சமயத்தில் யாரை நினைத்துப் பார்ப்பது? நினைத்துப் பார்ப்பதற்கு யாராவது இருப்பார்கள

நினைத்துப் பார்க்கக் கூடிய சக்தியே இல்லாமல் போகும் ஒரு நிலை...
""ஆனந்தன், அப்படியென்றால் நீ மீண்டும் புறப்பட்டு விட்டாய்!'' ஃபெலிக்ஸின் கேள்விக்கு முன்னால் ஆனந்தன் ஒரு நிமிடம் நின்றான். பிறகு சொன்னான்:
""ஆமாம் ஃபெலிக்ஸ். ஆனால், இந்தப் பயணத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்ற நிலை இருக்கும். ஒரு திரும்பி வரும் பயணம்... அது இல்லாமல் இருக்க முடியாது...''
""அப்படியென்றால் நீ வேறு மாதிரியான ஒரு பயணத்தின் பாதையில் செல்கிறாய். அப்படித்தானே?''
""ஆமாம்... எனக்கு ஒரு திரும்பி வரும் பயணம் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விஷயம் என்று இருக்கக் கூடாதா என்ன? நான் சொல்வது சரிதானா?''
""குட்... அனைத்து சாத்தியங்களும் உனக்கு இருக்கிறது, போய் வா...''
ஆனந்தன் பயணம் புறப்பட்டான்.
அந்தப் பயணம் ஒரு புதிய உலகத்தில் போய் நின்றது. மனதில் ஒரே ஒரு உருவம்தான் இருந்தது. நிர்மலா.... நிர்மலாவை சற்று பார்க்க வேண்டும். நிர்மலா- டாக்டர் மாலதியைப்போல, ஸுஹரா என்ற முஸ்லிம் பெண்ணைப்போல உடலையும் மனதையும் அவனுக்காக சமர்ப்பணம் செய்யக் கூடியவள்தான்.
நிர்மலாவைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது!
அழகான தோற்றத்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொண்டிருக்கும் நிர்மலா! வாழ்க்கைக்குள் எவ்வளவோ முறை அவள் அழைத்துவிட்டாள்... அந்த நேரங்களில் சிறிதுகூட அவன் பிடிகொடுக்கவில்லை. ஒரு தற்காலிகமான உறவு! அவன் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததே அதை மட்டும்தானே?
இந்த முறை நிர்மலாவை சில எண்ணங்களுடன் பார்க்க வேண்டும்.
ஒருநாள் பயணத்தின் இறுதியில் நிர்மலா என்ற சதைப் பிடிப்பான அழகி இருக்கும் நகரத்தை ஆனந்தன் அடைந்தான்.
முன்கூட்டியே தெரிவிக்காமல் போய் நிற்பதுதானே அவன் எப்போதும் செய்யக்கூடிய விஷயம்!
முற்றிலும் வேறுபட்ட, ஆச்சரியத்தைத் தரக்கூடிய ஒரு நிலையில் போய் ஆனந்தன் நின்றான்.
நிர்மலாவிற்கு என்ன நடந்திருக்கும்?
வீட்டைச் சுற்றி ஏராளமான பெண்களும் ஆண்களும் நின்றிருந் தார்கள். வரிசை வரிசையாக வாகனங்கள் வெளியே நின்றிருந்தன. சிறிது சந்தேகத்துடன் அவன் நடந்து சென்றான்.
ஒரு ஆசிரமத்திற்கான அறிகுறி... அவர்களில் பெரும்பாலானவர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார்கள்.
மேலே இருந்த பெயர்ப் பலகையில் கண்களைப் பதித்தான்.
நிர்மலாபுரி ஆசிரமம்...
ஆனந்தன் அதிர்ச்சியடைந்து விட்டான்.
தன் பாதங்களைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டானோ? நிர்மலாபுரி ஆசிரமம் எப்படி வந்தது? இப்படியொரு மாற்றம் எப்போது உண்டானது?
முன்வாசலில் ஒரு ரிஸப்ஷனுக்கான அமைப்பு. எவ்வளவோ பேர் காத்திருந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் என்னவோ கூறிக் கொண்டி ருந்த மஞ்சள் நிற ஆடை அணிந்த மனிதரின் அருகில் சென்று நின்றான்.
""என்ன? அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறீர்களா?''
கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டான். அம்மாவா? எந்த அம்மா? மனதில் இருந்த சந்தேகம் இரண்டு மடங்கானது.
""நான்... ஆனந்தன். நான் பார்க்க வேண்டியது நிர்மலாவை.''
ஆனந்தனின் குரலைக் கேட்டு அந்த சீடர் சற்று அதிர்ச்சியடைந்த தைப் போல தோன்றியது.
அவர் தலையிலிருந்து கால் வரை பார்த்தார். பிறகு கேட்டார்:
""பூர்வாசிரமத்தில் ஏதாவது...''
ஆனந்தன் மனதிற்குள் சிரித்தான். பூர்வாசிரமம் என்றால் துறவிகளின் கடந்த கால வாழ்க்கை என்று அர்த்தம்.
திடீரென்று சொன்னான்:
""ஆமாம். மிகவும் வேண்டிய ஆள்... உள்ளே போய் இந்தப் பெயரைச் சொன்னால் போதும்- ஆனந்தன்... என்னை உள்ளே அழைப்பார்கள்...''
உள்ளே ஒரு பணியாளை அவர் அனுப்பி வைத்தார்.
ஆனந்தனின் மனதில் ஒரு இருட்டின் நிழல் வந்து விழுந்து கொண்டிருந்தது.
எதிர்பார்த்து வந்ததற்கு நேரெதிர் திசையில் செல்லக்கூடிய பயணம்...
என்னென்ன மாற்றங்களெல்லாம் உண்டாகி விட்டிருக்கின்றன.
நிர்மலா இப்போது "அம்மா'வாக ஆகிவிட்டிருக்கிறாள்.
தன்னைத் தெரிந்து கொண்டிருப்பாளா?
அறை முழுவதும் நிர்மலாவின் பெரிய, சிறிய அளவுகளில் இருந்த படங்கள்!
என்ன ஒரு மாறுதல்!
அவள் எப்படி இப்படி ஆனாள்?
பாம்பின் அழகின்... பளபளப்புகள் கொண்ட உடல் அழகையும், உடலுறவு விஷயத்தில் மேலான திறமையையும் கைக்குள்ளேயே வைத்திருக்கும் அபூர்வமான பெண்களில் ஒருத்தியாக நிர்மலா இருந்தாள். ஆணை உடலுறவுக் கலையின் உன்னத உச்ச நிலையில் கொண்டு போய்ச் சேர்த்து முழுமையான மனத்திருப்தியை அடையக் கூடிய நிபுணி...
"எனக்குத் தேவை உங்களுடைய முழுமையான திருப்தி அல்ல... எனக்கு... என்னுடைய முழுமையான திருப்தி. அதுதான் என்னுடைய லட்சியம். ஆனால், நீங்கள் வேறு யாரையும்விட அந்த விஷயத்தில் என்னை தளர்ச்சியடையச் செய்பவர்... ஆனந்தன், உங்களை எனக்கு எவ்வளவோ பிடித்திருக்கிறது! மிகவும் அபூர்வமாகக் காணக்கூடிய ஆண்மைத் தன்மை!'
ஒருமுறை நிர்மலா கூறியது ஞாபகத்தில் வந்தது.
அதற்குப் பிறகு அந்த உறவு அவளுடன் நீண்ட காலம் நிலை பெற்று நின்றுகொண்டிருந்தது.
ஒரு ஏற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் நிர்மலா நெருங்கி வந்த போது, அவன் அவளிடமிருந்து விலகிக் கொண்டான்.
இப்போது நிர்மலா அவன் கையைவிட்டு நழுவிப் போயிருக்கி றாள்.
சிந்தனைகள் மேலும் அதிகமாவதற்கு முன்பே அழைப்பு வந்தது.
""அம்மா அழைக்கிறாங்க...'' ஒரு மஞ்சள் நிற ஆடை அணிந்த மனிதன் உள்ளே அழைத்துச் சென்றான்.
மிகப் பெரிய ஒரு கூடத்தில் நடுமையத்தில் போடப்பட்டிருந்த பீடத்தில் நிர்மலாமயி அமர்ந்திருந்தாள். முன்பு இருந்ததைவிட கவர்ந்திழுக்கக் கூடிய அழகுடன்...
மஞ்சள் நிற பட்டாடை அணிந்திருந்தாள். மூக்கில் மின்னிக் கொண்டிருக்கும் மூக்குத்தி. காதுகளில் பளபளத்துக் கொண்டிருக்கும் கம்மல்... கூந்தலை விரித்துப் போட்டிருந்தாள்.
""வாங்க, ஆனந்தன்... தீர்த்தயாத்திரை எல்லாம் முடிந்ததா?''
நீண்ட காலம் பழகியவளைப்போல நிர்மலாமயி கேட்டாள்.
முதலில் ஒரே குழப்பமாக இருந்தது.
என்ன கூறுவது? சாதாரண வார்த்தைகளுக்கு அங்கு இட மில்லையே!
இப்போது நிர்மலா ஒரு துறவி... அம்மா!
""வாங்க... உட்காருங்க ஆனந்தன்.''
முன்னால் விரிக்கப்பட்டிருந்த பாயைச் சுட்டிக் காட்டியவாறு நிர்மலாமயி தேவி கூறினாள்.
ஆனந்தன் மெதுவாக தரையில் போய் உட்கார்ந்தான். தோள் பையை தன்னுடைய மடியில் வைத்தான். சுற்றிலும் பயபக்தியுடன் சிஷ்யைகளும் சிஷ்யர்களும். ஆனந்தன் அவர்களையே பார்த்தான்.
""நீங்க வெளியே போங்க...'' அம்மா கட்டளையிட்டாள். அங்கு நின்றிருந்தவர்கள் வெளியேறினார்கள். மாதா நிர்மலாவும் ஆனந் தனும் மட்டுமே அங்கு இருந்தார்கள்.
ஒரு நிமிட தயார் நிலைக்குப் பிறகு ஆனந்தன் கேட்டான்:
""நம்ப முடியவில்லை.... இவ்வளவு திடீரென்று... இப்படி...?''
""அப்படி நடந்துவிட்டது ஆனந்தன்... ஒரு நிரந்தர இடம் வேண்டு மல்லவா? அதனால் இப்படியொரு வேடத்தை அணிந்தேன். நீங்கள் என்னிடமிருந்து விலகிச் சென்றுவிட்டீர்கள். வேறு சிலரும்...
ஆனால், அவர்களைவிட நான் நம்பியது உங்களைத்தானே?''
பதில் கூற முடியவில்லை. அவள் கூறியதென்னவோ உண்மைதான்.
""ஆனந்தன், நீங்கள் என்னைத் தேடி வருவீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின் றன... கூறுவதற்கு மட்டும்...''
""விசேஷமான திறமைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நோய்களைக் குணப்படுத்துகிறீர்கள்... செல்வத்தைத் தருகிறீர்கள்... தேடி வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறீர்கள் என்றெல் லாம்... எப்படி இவ்வளவு திடீரென்று...?''
""எல்லாம் குருவின் அருள்... அவ்வளவுதான்...''
குரு!
நினைத்துப் பார்த்தான்- ஒருமுறை நிர்மலா கூறியதை...
"நான் சுவாமி ஞானேந்திராவைப் பார்த்தேன் ஆனந்தன். அவர் எந்த அளவிற்கு ஒளி படைத்த துறவி தெரியுமா? எழுபது வயதைத் தாண்டியிருப்பார். சுவாமிக்கு என்னை நன்கு புரியும்படி செய்தேன். ஆசீர்வாதம் பெறுவதற்காக அவருடைய பாதங்களில் தலையை வைத்தேன். திடீரென்று சுவாமி என்னைக் கட்டிப் பிடித்தார். தொடர்ந்து அறையின் கதவு அடைத்தது. எழுபது வயது மனிதரின் முரட்டுத்தனத்தைப் பார்த்து நான் திகைத்துப்போய்விட்டேன். மூன்று பகல்களும் இரவுகளும் சுவாமியின் உடலில் நான் படர்ந்து கிடந்தேன். கில்லாடி!'
அந்த மனிதர்தான் நிர்மலாவின் இந்த நிலைக்குக் காரணமாக இருக்க வேண்டும்.
""ஓ... சுவாமி ஞானேந்திரா... இல்லையா? அந்த ஆள் திருடனாச்சே!''
ஆனந்தனின் கேள்வியைக் கேட்டு நிர்மலா சிரித்தாள்.
""திருடனாக இல்லாதவர்கள் யார்?''
""அப்படியென்றால் அந்த வழியை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அப்படித்தானே? இந்த செப்படி வித்தைகள் எப்படி உங்களுக்கு வந்து சேர்ந்தன?''
""அனைத்துமே குரு சொல்லிக் கொடுத்த வித்தைகள்தான்... இப்போது நான் மிகவும் திடீரென்று ஒரு பெரிய நிலையை அடைந்து விட்டேன். இனி இதை வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு மிகப் பெரிய அமைப்பாக இதை மாற்ற வேண்டும். ஆனந்தன், நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களா? நம்பிக்கையுடன் யாரையும் உடனிருக்க வைக்க முடியவில்லை.''
உடனடியாக ஒரு பதிலைக் கூற ஆனந்தனால் முடியவில்லை.
துறவு என்ற போர்வையில் பண சம்பாத்தியம்...
மனிதர்கள் துறவிகளின் ஆச்சரியமான வித்தைகளில் மயங்கிவிடு கிறார்கள். தங்களுடைய சொத்துகள் அனைத்தையும் சித்து வேலை செய்பவர்களின் பெயர்களில் எழுதி வைக்கிறார்கள். சிஷ்யர்களாக அரை நிர்வாண கோலத்தில் நாமங்களைக் கூறிக்கொண்டு உடன் நிற்கிறார்கள்.
இந்த நூற்றாண்டிலேயே மிகவும் லாபம் அளிக்கக் கூடிய தொழில்...
துறவு பூண்ட ஆணின்- துறவு பூண்ட பெண்ணின் கடந்த கால- நிகழ்கால வாழ்க்கையைப் பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை.
""ஆனந்தன், என்ன பதிலே கூறாமல் இருக்கிறீர்கள்?''
ஆனந்தன் அமைதியாக இருந்தான்.
""ஆனந்தன், உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இங்கே இருக்கின் றன. நான் உடலளவில்தான் வேஷத்தை மாற்றியிருக்கிறேன். உங்களுக்கு முன்னால் இருப்பது அதே பழைய நிர்மலாதான்... இன்னும் சொல்லப்போனால், உங்களுடன் இன்பமாக இருப்பதற்கு எத்தனையெத்தனை அழகிகள் வேண்டுமானாலும் இங்கு இருக்கி றார்களே! சொல்லப் போனால்- ஆனந்தன், என்னைவிட உங்களுக்கு அந்த விஷயத்தில் திறமைசாலியாக யார் கிடைப்பார்கள்? ஆனந் தன், இப்போதும் நான் உங்கள்மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்ப வள் என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள்...''
நிர்மலாவின் கண்களில் தெரிந்த பிரகாசம் அதே பழைய நிர்மலாவை மீண்டுமொரு முறை மனதில் கொண்டு வந்து நிறுத்தியது.
""குளித்து ஓய்வு எடுங்க... நம்முடைய அந்த பழைய படுக்கையறை இப்போதும் இருக்கிறது. புதிய கட்டடங்கள் உண்டாக ஆரம்பித்திருக் கின்றன. அவ்வளவுதான். என்ன, சம்மதமா? ஏற்பாடு செய்யட்டுமா?''
""வேண்டாம்... நான் மீண்டுமொரு முறை சிந்தித்துப் பார்த்துவிட்டு கூறுகிறேன். அந்தச் சமயத்தில் போதும்...''
நிர்மலாவின் முகத்தில் தெரிந்த பிரகாசம் அணைந்தது.
ஒரு நிமிடம் தேவி தியானத்தில் மூழ்கிவிட்டதைப்போல இருந்தாள்.
எல்லாவிதமான சுக சௌகரியங்களும் இங்கு இருக்கின்றன...
வெறுமனே நீங்கள் இங்கு இருந்தால் போதும்...
மனம் பின்னோக்கி அழைப்பதைப்போல இருந்தது.
வேண்டாம்...
இவ்வளவு காலம் முழுவதும் வாழ்ந்ததும் பயணம் செய்ததும் இப்படிப்பட்ட ஒரு நிலையை அடைவதற்காக அல்லவே! தெளிவான ஒரு தீர்மானத்திலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை...
நிர்மலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டால், ஆனந்தனுக்கு ஒரு புதிய முகம்...
வேண்டாமென்று ஒதுக்கினால் இன்னொரு முகம்...
ஆனந்தன் அங்கிருந்து வெளியேறினான்.
நிர்மலா அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ஆனந்தன் வருவானா? வரலாம்... வராமல் இருக்கலாம்... ஆனந் தன் என்றென்றைக்குமாக தனக்கு இல்லாமல் போய் விடுவானோ? இன்னொரு ஆனந்தனைக் கண்டடைவதற்கு இன்றுவரை முடிய வில்லை.
தன்னை அறிந்திருப்பவன்...
தனக்குத் தெரிந்திருப்பவன்...
""ஆனந்தன்... நில்லுங்க...''
தன்னையும் அறியாமல் நிர்மலாவிற்குள்ளிருந்து அந்த சத்தம் வெளியே வந்துவிட்டது. ஆனந்தன் நின்றான். கவலை தோன்றியது. அப்படிப்பட்ட ஒரு பதிலைக் கூறியிருக்க வேண்டாம். மெதுவாக பின்னால் திரும்பி நிர்மலாவின் அருகில் வந்தான். நிர்மலா பீடத்தை விட்டு எழுந்து நின்றாள்.
ஆனந்தன் மெதுவான குரலில் சொன்னான்:
""நான் வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லும் ஒரு பயணத்தின் ஆரம்பத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இனி ஒரு தயார் நிலையை மட்டுமே நான் செய்ய வேண்டும். அங்கு தோல்வியைச் சந்தித்தால், நான் இங்கு இருப்பேன். வாக்குறுதி அளிக்கிறேன்.''
ஆனந்தன் நிர்மலாவின் கையைப் பிடித்துக் கொண்டே சொன்னான்.
மின்சாரம் பாய்ந்ததைப்போல நிர்மலாவின் நரம்புகளில் அணுக்கள் சற்று நெளிந்தன.
எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஆனந்தனின் விரல்கள் தொட்டன.
""ஒருவேளை... வெற்றி பெற்றுவிட்டால்...?''
நிர்மலாவின் அந்தக் கேள்விக்கு ஆனந்தன் பதில் கூறவில்லை.
""என்ன கூறுவது? தோல்விகள்தானே என்னை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியொரு நிலை வந்தால், எனக்காக ஒரு மஞ்சள் நிற ஆடையைத் தயார் பண்ணி வைத்தி ருங்கள்!''
ஆனந்தன் வேகமாக வெளியேறி நடந்தான்.
எதுவுமே கூற முடியாமல் நிர்மலா பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

தன்னுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இப்போது தன்னிடமிருந்து ஒவ்வொரு வழிகளில் பிரிந்து செல்வதைப்போல ஆனந்தன் மனதிற்குள் நினைத்தான்.
அவரவர்கள் அவரவர்களுடைய பாதைகளை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி நிர்மலாவும்.
நிர்மலாவின் வழி ஆன்மிகத்திற்கான வழி.
இனி... ஒரே ஒருத்தி இருக்கிறாள்... டாக்டர் மாலதி.
மாலதியும் ஒரு விடைபெற்றுக் கொள்ளும் எல்லையில் நின்று கொண்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. கூறவில்லை. அவ்வளவு தான்... கூறாமலே கூறினாளே! அன்று மாலதியின் குரல்- ஈரம் நிறைந்த குரல் இப்போதும் மனதில் பசுமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பராக்கிரமச் செயலின் இறுதியில் வியர்வையில் நனைந்து போய் விட்டிருந்த உடலுடன், மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டு தளர்ச்சியடைந்து களைப்பின் பாதிப்பில் அங்கு படுத்தி ருந்தபோது, மாலதியின் மெல்லிய குரல் செவியில் வந்து விழுந்து கொண்டிருந்தது- ஒரு குளிர்ச்சியைப்போல.
"முடியவில்லை... விட்டுப்போவதற்கு... ஆனால் போகாமல் இருக்க முடியாதே... காரணம்- நீங்கள் எந்தச் சமயத்திலும் எனக்கு மட்டுமே இருப்பீர்கள் என்று தோன்றவில்லை!'
யாரிடம் என்று இல்லாமல் கூறுவதைப்போல டாக்டர் மாலதி கூறிக்கொண்டிருந்தாள்.
அது ஒரு தீர்மானமாக இருந்திருக்க வேண்டும்.
மனதில் இருக்கும் ஆசைகள் நொறுங்கிப் போன காமவயப்பட்ட ஒரு பெண்ணின் இறுதியான முடிவின் ஒலி வடிவம்.
அதற்கு ஒரு பதிலைக் கூறவில்லை.
எப்போதும் அப்படித்தான்.
தெளிவான ஒரு பதிலை வார்த்தைகளால் கூறுவதில்லை. அது அவனுக்கு ஒரு குணமாகவே இருந்தது.
முழுமையற்ற நிலையில் நிறுத்திவிடுவது...
டாக்டர் மாலதி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
எந்தப் பெண்ணாக இருந்தாலும் அப்படித்தானே தீர்மானிப்பாள்!
மனதில் விருப்பப்படும் ஆண் பிடிகொடுக்காமல் நழுவிச் செல்லும்போது...
ஒருவேளை இனி பார்க்கும்போது டாக்டர் மாலதி வேறொரு பெண்ணாக மாறாமல் இருக்க வாய்ப்பில்லை.
நிர்மலாவைப்போலவேதான்...
இப்போது இதோ நிர்மலாவும் மாறிவிட்டிருக்கிறாள்.
ஆனால், நிர்மலா இப்போதும் அவன் தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். துறவியின் ஆடை அணிந் திருக்கும் இந்த வேளையில்கூட...
பெண்ணின் மனதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என்ற விஷயம் எவ்வளவு சரியானது! பார்ப்பதற்குத் துறவி!
ஆசீர்வாதம் வாங்குவதற்கு ஏராளமான ஆட்கள்- பாதங்களில் விழுந்து வணங்கி வழிபடக்கூடிய ஒரு பெண்... அவள் காமவயப் பட்டிருக்கும் நிகழ்காலத்திலேயே கடவுளின் வடிவம் என்ற வேடத்தை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறாள்.
எழுபது வயது கடந்துவிட்ட குருநாதரின் உடலில் சூறாவளியை எழச் செய்த சிஷ்யை, இப்போது இதோ புதிய வேடத்தில் மாதா நிர்மலா மயியாக மாறிவிட்டிருக்கிறாள்...
"சந்நியாசம்' என்ற வார்த்தைக்குப் பின்னால் பொய்மைகள், பித்தலாட்டங்கள், வஞ்சனைகள்! ஆனால், மக்கள் அதை நம்புகிறார்கள். உயர்வான ஒரு வட்டத்தை அவர்கள் இந்த சந்நியாசிகளுக்கு அளிக்கிறார்கள். சிஷ்யர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. பக்திவயப்பட்ட ஒரு வட்டத்தை அவர்கள் போலி சந்நியாசிகளைச் சுற்றிப் படைக்கிறார்கள்.
அவர்கள் கூறும் அனைத்தும் கடவுளின் வார்த்தைகளாக மாறு கின்றன.
அவர்களுடைய பார்வை "கடாட்ச'மாக ஆகிறது. தொடுவது, "ஆசீர்வாதம்' என்றாகிறது.
அவர்களுடைய கால் பாதங்களில் தங்களுடைய அனைத்து துன்பங்களையும் சமர்ப்பிக்கிறார்கள். நாட்டின் நாலா பக்கங்களிலும் ஆசிரமங்கள் உண்டாகின்றன.
ஆங்காங்கே ஒவ்வொரு கிளைகள்... ஆலயங்கள்... இனி நிர்மலாஜி உலக சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பாள்.
உலகம் முழுவதும் இருக்கும் வசதி படைத்த பக்தர்கள் நிர்மலா மாதாவிற்காக கிளைகள் ஆரம்பிப்பார்கள். மாதா உலக சுற்றுப் பயணம் செய்து முடித்து திரும்பி வரும்போது, க்ரீன் கார்ட் திறக் கப்படும்.
ஒரு சோதனையும் இல்லாமல் கோடிக்கணக்கில் வெளிநாட்டுப் பணம், தங்கம், ரத்தினங்கள்... பஜனை சத்தம் இங்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்.
நிர்மலா மிகப்பெரிய பணக்காரியாக ஆவாள்.
அதற்குப் பிறகு திருட்டுத்தனமாக சம்பாதித்த பணம் முழுவதையும் வெள்ளையாக ஆக்குவதற்கு மருத்துவமனைகளும் அனாதை இல்லங்களும் உருவாகும்.
தேவைப்பட்டால் தன்னுடைய சொந்தப் பெயரில் நாளிதழ், தொலைக்காட்சி ஆகியவற்றையும் தொடங்குவாள். ஆனந்தனுக்கு சிரிக்க வேண்டும்போல தோன்றியது.
ஆணின் உடலில் உள்ள பலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்று கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்ணுக்கு வந்து சேர்ந் திருக்கும் மாற்றத்தின் முப்பெருக்கி வடிவம்!
இன்னும் ஒரு மாற்றம்... அதாவது- புதிய ஒரு வழி- தனக்கு முன்னாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதைப்போல...
ஆனந்தனின் மனம் துடித்தது.
மிகவும் மெதுவாக ஒரு மாற்றம்...
யாருக்கும் தெரிவிக்காமல்... தெரிந்தால் அதிர்ச்சியடையும்
அளவிற்கு உள்ள ஒரு மாற்றம்... அதைத்தான்தான் செய்ய வேண்டும்.
மனதில் அது ஒரு தீவிரமான விஷயமாக வடிவமெடுத்துக் கொண்டிருந்தது. இந்த மாற்றம் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தத்தை உண்டாக்கக் கூடிய அம்சமாக இருக்கட்டும்.
ஆனந்தனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.
எங்கேயோ போய் அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் உண்டான ஒரு மனநிலை...
எல்லா மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்து சேருமோ? தெரியவில்லை...
வந்து சேரலாம். அமைதியான சூழ்நிலைக்காக வந்துசேரும் ஒரு வடிவம்... தான் இவ்வளவு காலமும் ஏவிவிடப்பட்ட ஒரு யாக குதிரையாகத்தானே இருந்தோம்? உடலுறவு இன்பமும், மதுவும் இரண்டறக் கலந்து உண்டாக்கிய வண்ணமயமான பயணம்.
ஃபெலிக்ஸ் என்ற அன்பு நண்பன்- பிறகு எவ்வளவோ பேர்! இந்த பயணம் எங்கு நோக்கிச் சென்றது என்று சரியாகவே தெரியவில் லையே! இலக்குகளுக்கு முக்கியத்துவம் உள்ளதாக அது இல்லை. கொண்டாடுவது என்பது மட்டுமே அங்கு இருந்தது. இதற்கிடையில் நேரெதிர் திசையில் ஒரு சிந்தனை- அதுதான் வேதகிரியின் அடிவாரத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டதும்...
இப்போது அங்கிருந்தும் ஒரு திரும்பிவரும் பயணம்-
இன்னொரு திசையை நோக்கி- வாழ்வின் பசுமையை நோக்கி ஒரு பயணம்... இந்தப் பயணத்தை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
திரும்பி வரும் பயணம் என்று வேண்டுமானால் கூறலாம்...
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு திரும்பி வரும் பயணம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்ற உண்மையின் முகம், கண்களுக்கு முன்னால் தெளிவாகத் தெரிவதைப்போல இருந்தது.
பல நேரங்களிலும் பலரும் அப்படிப்பட்ட ஒரு திரும்பி வரும் பயணத்திற்கு மனதாலும் உடலாலும் தயாராகவே இருப்பதில்லையே...!
ஒரு அர்த்தத்தில் பார்க்கப் போனால் ஃபெலிக்ஸ் செய்த காரியம்தான் தன்னை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கொண்டு வந்து விட்டிருப்பதற்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.
வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை...
அது ஒரு வெறியாகவே ஆகிவிட்டதைப்போல...
இவ்வளவு நாட்களாக வாழ்க்கையைச் சுவைக்கவில்லையா?
சுவைக்கவில்லை...
பெண்ணும் போதையும்... பிறகு... கொஞ்சம் வினோதமான சிந்தனைகளும் மட்டும்தானே இதுவரை இருந்து வந்த விஷயங்கள்!
அவை இல்லாத ஒரு வாழ்க்கையா?
ஆச்சரியம் உண்டாகக்கூடிய ஒரு நிலை...
"ஆனந்தன், நீ சரியான பாதையின் வழியாகத்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறாயா?' கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டான்.
இந்தக் கேள்வி எங்கிருந்து வருகிறது?
மனசாட்சிக்குள்ளிருந்து வரும் கேள்வியே அது.
பல நேரங்களிலும் இந்தக் கேள்விக்கு பதில் கூறியிருக்கிறானே!
""ஆமாம்... எனக்கு சரி என்று படக்கூடிய பாதையில்தான் நான் இருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்கு சந்தேகமே இல்லை!''
இந்த பதிலைத் தவிர வேறு என்ன பதிலை மனசாட்சியிடம் கூறுவது?
ஒரு சிறிய சிரிப்புச் சத்தம் கேட்பதைப்போல இருந்தது.
சிரித்தது யார்?
மனசாட்சியா? வேறு யார் சிரிப்பார்கள்? இந்த மனசாட்சி என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால்! இப்படிப்பட்ட கேள்விகளுக்கே இடமில்லாமல் போயிருக்கும். பதில் கூறவேண்டிய கடமையும் இருந்திருக்காது.
இனி யாரிடமாவது விடைபெற்றுக் கொள்ள வேண்டுமா?
ஓ... யாருமில்லை. யாரிடமும் இதுவரை ஒரு விடைபெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை தனக்கு உண்டானதில்லையே!
அதாவது-
விடைபெற்றுக் கொள்வதாக இருந்தால் அதை அமைதியாகவே கேட்டுக் கொள்வதுதான் நடந்திருக்கிறது.
தன்னையே அறியாமல் அவன் மது அருந்தும் பாருக்கு முன்னால் வந்து நின்றிருந்தான்.
எவ்வளவோ நாட்கள் பாதங்களுக்கே தெரியாமல் வந்து நின்ற நகரத்திலேயே புகழ்பெற்ற பார்!
எத்தனையோ நாட்கள் அந்த பாரின் வெளிச்சத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான்.
""மிஸ்டர் ஆனந்தன்...''
எதிர்பாராமல் வந்த அழைப்பைக் கேட்டு அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
அல்ஃபோன்ஸ்...
திடீரென்று அல்ஃபோன்ஸைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டே நடந்து திரியும் ஆங்கிலோ இந்திய நண்பன்...
""ஓ... அல்ஃபோன்ஸ்... என்ன? இங்கே...?''
ஒரு பாருக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் முழு குடிகார னான ஒரு மனிதனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டுமா என்று தோன்றியது- திடீரென்று அப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டான்.
""மை... ஃப்ரண்ட்... உங்களைப் பார்க்க நேர்ந்தது ஒரு அதிர்ஷ்டமான விஷயம். மொத்தத்தில்... ஒரு பெக் குடிப்பதற்கான பணம்தான் கையில் இருக்கிறது.''
அல்ஃபோன்ஸின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு படர்ந்தது.
""கவலைப்பட வேண்டாம்... நான் இல்லையா... என்ன வேண்டுமோ குடிங்க...''
அவனையும் அழைத்துக்கொண்டு பாருக்குள் நுழைந்தான்.
மெல்லிய வெளிச்சம் பரவிக் கொண்டிருந்த பாருக்குள் எப்போதும் உட்காரக் கூடிய மூலையில் போய் உட்கார்ந்தான்.
""மன்னிக்க வேண்டும் அல்ஃபோன்ஸ்... உங்களுக்கு ஒரு கம்பெனி தர என்னால் முடியவில்லை... காரணம்... நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டேன்....''
அதைக் கேட்டு அதிர்ந்துபோய் விட்டானோ? நம்ப இயலாத தைப் போல அவனுடைய முகம் ஆனந்தனை நோக்கி உயர்ந்தது.
""நம்புங்க... இது உண்மை...'' ஆனந்தன் சொன்னான்.
"லாரா உங்களை விசாரித்தாள். உங்களைப் பார்க்காததில் அவளுக்கு மிகவும் கவலை...''
திடீரென்று லாராவைப் பற்றி நினைத்துப் பார்த்ததும், ஆனந் தனின் மனம் லேசாகத் துடித்தது.
லாரா... அல்ஃபோன்ஸின் மனைவி.
அழகான தோற்றத்தைக் கொண்ட ஆங்கிலோ இந்தியப் பெண். நிறைய மது அருந்துவாள். நன்றாகப் பழகுவாள். எந்தவொரு கபட மும் இல்லாமல்... கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் பழகுவாள்.
தன்னுடைய சொந்த கணவனிடமிருந்து கிடைக்காத சுகம், கணவனின் நண்பர்களிடமிருந்து சரியாகக் கிடைக்கும்படி செய்திருக்கும் பெண்!
ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் இருக்கும் லாராவுடன் கொண்டிருந்த உறவை, ஒருநாள் மனப்பூர்வமாக அவன் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தான்.
முதலில் வேதனை தோன்றியது.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்று மனம் கூறியது. காரணம்- முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், அது நடந்தது. லாராவைத் தன்னிடமிருந்து பிரிக்கவில்லையென் றால், வேறு பல விஷயங்களுக்கும் தான் சாட்சியாக இருக்க வேண்டியது இருக்கும் என்று அவன் மனம் சொன்னது.
அப்பாவி மனிதனான அல்ஃபோன்ஸின் பரிதாபமான நிலையைப் பார்த்து இரக்கம் உண்டானது. உடல் ஆரோக்கியமாக இருந்த காலத்தில் அவன் லாராவை விரல் நுனியில் கட்டி வைத்திருந்தான்.
அதிக நாட்கள் அதை அவனால் தொடர்ந்து கொண்டிருக்க முடியவில்லை. அவனுடைய வீழ்ச்சி திடீரென்று உண்டானது. பிசின ஸில் வீழ்ச்சி... உடல் தளர்ந்தது... இளம் வயதைக் கொண்டவளாகவும் சதைப் பிடிப்புடன் இருந்தவளுமான அவனுடைய மனைவிக்கு அந்த விஷயம் தாங்கிக் கொள்வதைவிட மிகவும் பயங்கரமானதாக இருந்தது.
முன்பே வழி தவறிவிட்டிருந்த லாராவிற்கு தன் கணவனின் வீழ்ச்சி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை...
ஆனால், மிகவும் சீக்கிரமே ஆனந்தன் அந்த உறவிலிருந்து விடுதலை பெற்றுவிட்டான். ஒரு தவிர்க்க முடியாத விஷயத்தைப்போல...
லாராவிற்கு மிகவும் வேதனை உண்டாகியிருக்க வேண்டும் என்று அப்போதே அவனுக்குத் தெரியும்.
இதோ, தன் மனைவியின் கவலையைப் பற்றி அவளுடைய கணவனே கூறுகிறான்...
அந்த விஷயத்திற்குள் மனம் செல்லாமல் இருக்க அவன் மிகவும் கவனமாக இருந்தான்.
அல்ஃபோன்ஸ் அதிகமாக மது அருந்தி, முழு போதையில் இருந்தான்.
இன்னொரு நாளிலும் அவன் தப்பித்து விட்டிருக்கிறான்.
ஒரு ஆட்டோவை அழைத்து அல்ஃபோன்ஸை ஏற்றி, ஆட்டோ கட்டணத்தையும் கொடுத்து அனுப்பிவிட்டு, ஆனந்தன் இன்னொரு திசையை நோக்கித் திரும்பினான்.

பனி விலகியிருக்கவில்லை.
புலர்காலைப்பொழுதின் குளிர்ச்சியான விரல் நுனியில் ஆற்றின் நீர் வளையங்கள் மெதுவாக முத்தமிட்டுக் கொண்டிருந்தன. விட்டுச் செல்ல இயலாததைப்போல...
ஆறு மெதுவாக கண்களைச் சிமிட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
சிவன் ஆலயத்தின் அருகில் கரையைத் தழுவி ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் படிகளில் ஏராளமான ஆட்கள் குளிப்பதற்காக வந்திருந் தார்கள்...
சூரிய உதயத்திற்கு முந்தைய குளியலும் ஆலய தரிசனமும் புண்ணியத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு குளியலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
உடல் சுத்தம், மன சுத்தம், செயல் சுத்தம்... இப்படி இப்படி...
ஆனந்தன் கல் படிகளில் இறங்கி ஆற்றில் மூழ்கி நிமிர்ந்தான்.
ஒருமுறை அல்ல... பலமுறை. ஒவ்வொரு முறை மூழ்கும்போதும் ஒவ்வொரு லட்சியம்!
உள்ளுக்குள் எங்கோ ஒரு திரை விலகல்...
கடந்து சென்றவை அனைத்தையும் பூர்வாசிரமம் என்று எழுதிக் கொள்ள வேண்டியதுதான். புதிய ஒரு புண்ணிய ஆசிரமத்திற்கான பாதையில் செல்லும் புதிய பயணம். ஒருவேளை இங்கிருந்துதான் பயணம் ஆரம்பமாக வேண்டும் என்ற கட்டாயம் காரணமாக இருக்கலாம்- இவ்வளவு தூரம் பயணம் செய்து அவன் இங்கே வந்து சேர்ந்ததற்கு.
அதிகாலை பூஜைக்காக நடையைத் திறந்தபோது ஆனந்தனும் அந்த இடத்தில் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான்.
மனதில் ஒரேயொரு சிந்தனை. இந்த திரும்பிவரும் பயணம் ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டுமே! கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டு எவ்வளவு நேரம் அவன் நின்றிருந்தான் என்று தெரியவில்லை. மனம் முணுமுணுத்தது- "நட...'
நடந்தான். சிவன் ஆலயம் முழுவதும் சுற்றி வந்தான்.
தொழக்கூடிய எல்லா இடங்களிலும் தொழுதான்.
திரும்பி வந்தான்.
மனதிலிருந்து ஒரு சுமை இறங்கியதைப்போல இருந்தது.
ஆலயத்திற்கு வழிபாடு நடத்த வரும் அனைவரும் ஒருவேளை இப்படி மனதிலிருக்கும் சுமையை இறக்கி வைப்பதுதான் வழக்கமான ஒரு செயலாக இருக்கும்.
மிகவும் இறுதியில் மனிதன் வந்து நிற்பது இங்கேதான்.
பாவத்திலிருந்து விடுதலை பெற...
துயரங்களிலிருந்து விடுபட...
பாவத்திலிருந்து மனிதன் விடுதலை செய்யப்படுகிறானா?
துயரங்களிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கிறதா?
தெரியவில்லை...
அனைத்தும் ஒரு கற்பனை...
ஆலயங்கள் நிறைந்த நகரத்தின் ஒரு லாட்ஜில் அறை எடுத்தான். இன்று அங்கு தங்க வேண்டும் என்று தோன்றியது. நாளை பொழுது புலரும் நேரத்தில் புறப்படும் புகை வண்டியில் வடக்கு திசை நோக்கிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தனிமை நிறைந்த ஒருநாள்...
நடுத்தர மனிதர்கள் வந்து செல்லும் ஒரு இடம் என்பது முதலில் பார்த்தபோதே தெரிந்தது. தாங்கக்கூடிய அளவுக்கு அறையின் வாடகை இருந்தது.
மிக அருமையான காற்றும் வெளிச்சமும் உள்ள, சுத்தமும் சுகாதாரமும் உள்ள அறை... பேக்கை அறையில் வைத்தான். ஆடை மாறியது. சிறிது நேரம் சாளரத்திற்குப் பின்னால் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அங்கு அமர்ந்திருந்தால் அந்த சிறிய நகரத்தின் ஒரு பகுதியை நன்றாகப் பார்க்க முடியும். மேற்கு திசையிலிருந்து குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது.
திரும்பி வரும் வழியின் முதல் படியில் கால் வைத்ததைப்போல ஒரு தோணல்.
மீண்டுமொரு முறை ஃபெலிக்ஸ், மாலதி ஆகியோரின் முகங்கள் மனதில் தோன்றி மறைந்தன.
ஒருவேளை ஃபெலிக்ஸ் நம்பாமல் இருக்கலாம்.
காரணம் இருக்கிறது. அவன் பலமுறை ஆனந்தனுக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறான். அப்போதெல்லாம் அவன் விலகியே சென்றிருக்கிறான்.
மாற்றம் என்பதே திடீரென்றுதான் நடக்கும் என்ற விஷயமே இப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது.
கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு வளர்ச்சி நிலைக்கு ஒருவேளை இது இயலாத ஒன்றாக இருக்கலாம். சொல்லப் போனால், இது தன்மீது சுமத்தப்பட்ட கடமையின் முடிவாகக்கூட இருக்கலாம். இல்லையென்றால் இப்படித் தோன்றுவதற்கு வாய்ப்பில்லையே!
மனம் வெறுமையில் இருக்கும் ஒரு இரவு...
மது இல்லை... போதை தரும் மாது இல்லை...
உறக்கம் தழுவியது எப்போது என்று தெரியவில்லை...
பொழுது புலர்ந்தவுடனே பயணத்திற்குத் தயாரானான். புகைவண்டி நிலையத்தை அடைந்தான். வடக்குப் பக்கம் செல்லும் புகைவண்டி வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. காலை பத்திரிகையை வாங்கி லேசாக கண்களை ஓட்டினான்.
கூட்டம் அதிகமாக இருந்தாலும், ஆனந்தனுக்கு அமர்வதற்கு இடம் கிடைத்தது.
மனதை அலட்சியமாக உலாவ விட்டு ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தான். ஓடி மறைந்துகொண்டிருந்த காட்சியைப் பார்க்கும்போது என்னவோ ஒரு சுவாரசியம் தோன்றியது.
அவ்வப்போது நிற்கும் நிலையங்களில் மக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள்.
வண்டி அந்த சிறிய ஸ்டேஷனில் நின்றபோது, நேரம் சாயங்காலத்தை நெருங்கி விட்டிருந்தது.
புகைவண்டி நிலையத்தை விட்டு அவன் வெளியே வந்தான்.
ஆட்டோ நிறுத்தத்திற்குச் சென்று ஆட்டோவில் ஏறி போகக் கூடிய இடத்தைக்கூறினான். ஓட்டுனர் நன்கு தெரிந்தவனைப்போல ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான். சிறிது நேர ஓட்டத்திற்குப் பிறகு, ஒரு சிறிய சந்திப்பைத் தாண்டியவுடன் ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து ஒரு பெரிய கேட்டுக்கு முன்னால் நிறுத்தினான்.
ஆனந்தன் இறங்கி ஆட்டோவிற்கான கட்டணத்தைக் கொடுத்தான். ஆட்டோ சிறிய சத்தமொன்றை உண்டாக்கியவாறு திரும்பி ஓடி மறைந்தது.
கண்களுக்கு முன்னாலிருந்த கேட்டுக்கு மேலே இருந்த பெயர்ப் பலகையில் கண்களைப் பதித்தான்.
"மேரி மாதா பார்வையற்றோர் பள்ளி!'
"நாம் சரியான இடத்திற்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம்!'
அவன் நினைத்தான்.
கேட்டுக்கு அருகில் ஒரு சிறிய டைம் ஆபீஸ். செக்யூரிட்டியாக நின்றிருந்த மனிதன் தலையை உயர்த்தினான்.
""சிஸ்டர் ரோஸ் மேரியைப் பார்க்க வேண்டும்.''
செக்யூரிட்டி கேட்டான்:
""பெயர் என்ன?''
""ஆனந்தன்... கூறினால் தெரியும்!''
செக்யூரிட்டி உள்ளே ஃபோனை கனெக்ட் செய்து பேசிவிட்டுத் திரும்பி ஆனந்தனைப் பார்த்து பணிவான குரலில் சொன்னான்:
""சார்... உள்ளே போங்க. இடது பக்கம் இருக்கும் கட்டடத்தில் முதலில் இருக்கும் அறைதான் அலுவலகம்.''
அவன் கேட்டைத் திறந்துவிட்டான்.
ஆனந்தன் மெதுவாக உள்ளே நுழைந்தான்.
சிறிய- அகலம் குறைவான சிமெண்ட் சாலை. இருபக்கங்களிலும் உயரமாக வளர்ந்திருக்கும் பூஞ்செடிகள்... கேட்டைத் தாண்டியவுடன் ஒரு சிறிய சிலுவை... சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் வடிவம் கண்ணாடிக் கூட்டிற்குள்... அதற்கடுத்து மாதாவின் சிலை... எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி... சுற்றிலும் செடிகள்... மெதுவாக நடந்தான்.
முதலில் பார்த்த கட்டடத்தில் இருந்த அலுவலக அறையின் வாசலின் அருகில் நின்றான்.
ஒரு ப்யூன் நெருங்கி வந்தான்.
""ஆனந்தன் சார்... அப்படித்தானே? உட்காருங்க. சிஸ்டர் இதோ வந்திடுவாங்க...''
ஆனந்தன் உள்ளே நுழைந்து உட்கார்ந்தான்.
ஆனந்தன் என்ற பெயர் அந்த அனாதை இல்லத்தில் நன்கு தெரிந்த ஒரு பெயராயிற்றே! ஆளை நேரில் பார்க்கவில்லையென்றா லும், பல வருடங்களாகக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெயர்... எல்லா மாதங்களிலும் அனாதை இல்லத்தில் சுக விவரங் களை விசாரிக்கும் குரல்... சிறிது நேரம் தாண்டியவுடன் சிஸ்டர் ரோஸ்மேரி அலுவலக அறைக்குள் வந்தாள்.
ஆனந்தன் எழுந்து கைகளைக் கூப்பி வணங்கினான்.
""வணக்கம் சிஸ்டர்...'' அந்த குரலைக் கேட்டதும் சிஸ்டரின் முகம் மலர்ந்தது. அதே ஆனந்தன்.
""வணக்கம்... இயேசு மிசையாவுக்கு வணக்கம், ஆனந்தன். குரலை மட்டுமே கேட்டு அறிமுகமான மனிதர் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி... இந்த அனாதை இல்லம் முழுவதும் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறது. உட்காருங்கள் மிஸ்டர் ஆனந்தன்.''
ஆனந்தன் உட்கார்ந்தான்.
எதிரில் சிஸ்டர் உட்கார்ந்தாள்.
ஒரு நிமிடம் அமைதியாகக் கடந்து சென்றது.
""உங்களுடைய கடிதம் கிடைத்தது. பதில் அனுப்பியிருந்தேன். கிடைத்ததல்லவா?''
""கிடைத்தது... மகிழ்ச்சி!''
ஐம்பது வயதைத் தாண்டியிருந்த சிஸ்டர் ரோஸ்மேரியின் முகத்தில் இளமை விலகிச் செல்ல முடியாததைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
""ஸோ... நீங்கள் அதை முடிவு செய்து விட்டீர்கள்... அப்படித் தானே?''
""ஆமாம்... சிஸ்டர்... அப்படி முடிவு செய்ய வேண்டுமென்று ஒரு நிர்பந்தம் உண்டானது!''
""அதற்குக் காரணம் என்ன?''
""என்னுடைய நம்பிக்கைகளுக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றா கத் தோன்றியது. அவ்வளவுதான்...''
""இங்கே பாருங்க, ஆனந்தன்... இந்தக் காலத்தில் பார்வை சக்தியும் நல்ல உடல் ஆரோக்கியமும் அழகும் உள்ள ஒரு பெண்ணைக்கூட வாழ்க்கைக்குள் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லாத மனிதர்களுக்கு மத்தியில் கண்பார்வை இல்லாத ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தருவதற்கு உங்களால் முடிகிறது என்றால், அது புண்ணியச் செயலே! ஜெய்ஷா... அவள் கண் பார்வை இல்லாத பெண்ணாக இருந்தாலும், நல்ல அழகி! அவள் இந்த அனாதை இல்லத்தின் தேவதை! கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் அவளுக்கான செலவுகளைச் செய்து வருகிறீர்கள் என்ற விஷயம் மட்டுமே எங்களுக்குத் தெரியும். மாதம் தவறாமல் வந்துசேரும் அவளுடைய பெயருக்கான தொகையில்
அவளுடைய தேவைக்குமேல் அதிகமாக உள்ள தொகை அவளு டைய அக்கவுண்ட்டில் இப்போதும் இருக்கிறது... ஒரு நல்ல தொகை வரும்.''
""நான் இதுவரை ஜெய்ஷாவைப் பார்த்தது இல்லையே, சிஸ்டர்!'' ஆனந்தன் மெதுவான குரலில் சொன்னான்.
""பார்க்கலாமே! ஜெய்ஷாவின் பாதுகாப்பாளர்... இன்னும் சொல்லப்போனால் இப்போது அவளுக்கு வாழ்க்கையைத் தரப் போகும் மனிதர்! நான் அவளை அழைக்கிறேன்.''
""அவசரமில்லை சிஸ்டர்... இப்போதுகூட என் மனதிற்குள் ஜெய் ஷாவைப் பற்றிய ஒரு வடிவம் இருக்கிறது. பார்வை இல்லாத, வெளுத்த, உயரமான மெலிந்த அழகி என்ற ஒரு தோற்றம்...''
""அனைத்தும் உண்மைதான்... ஆனால், அவள் இப்போது கொஞ்சம் தடிமனாக ஆகியிருக்கிறாள். வயது இருபத்து நான்கு ஆகிறது அவளுக்கு.''
""தெரியும்... எல்லா விஷயங்களையும் நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்...''
""இங்கு சில நடைமுறைச் செயல்கள் இருக்கின்றன. தெரியுமல்லவா?''
""ம்... நான் அதற்குத் தயாராக இருக்கிறேனே! என்னுடைய ஒப்புதல் பத்திரத்தில் அவற்றையெல்லாம் நான் குறிப்பிட்டிருந்தேனே!''
""உங்களுடைய விஷயத்தில் எங்களுக்கு கவலை எதுவுமில்லை. அனைத்தும் தெளிவாக இருக்கின்றனவே! நீங்கள் அவளுடைய ஸ்பான்சர் மட்டுமல்ல; பாதுகாப்பாளரும்கூட அல்லவா? எந்த நிமிடமும் இங்கிருந்து அவளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். எனினும், நான் கூறவேண்டியதைக் கூறினேன். அவ்வளவுதான்...''
""நான் வரும் விஷயம் ஜெய்ஷாவுக்குத் தெரியுமா, சிஸ்டர்?''
""தெரியுமா என்றா கேட்கிறீர்கள்? சரிதான்... நன்றாகக் கேட்டீர் கள்... ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா விஷயங்களையும் நாங்கள் அவளிடம் கூறிவிட்டோமே! அவள் இப்போது ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பீர்மேட்டிலிருந்து கார்த்திகா மேடம் அழைத்து குறிப்பாக பாராட்டினார்கள். ஆனந் தன், உட்காருங்கள். நான் இதோ வந்து விடுகிறேன்...''
சிஸ்டர் உள்ளே சென்றாள்.
பீர்மேட்டிலிருந்து கார்த்திகா மேடம்!
செல்வச் செழிப்பில் மிதந்து கொண்டிருக்கும் கார்த்திகாவை எப்போது பார்த்தோம்? நினைவுகளில் கார்த்திகா இப்போதும் பசுமையாக நின்று கொண்டிருக்கிறாள். தன்னுடன் அறிமுகமான பெண்களில் உடல்ரீதியான உறவு கொண்டிராத கார்த்திகா சசிதரன்... சசிதரன் என்ற நண்பனின் மனைவி. வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிய சசிதரனின் உயிரற்ற உடலைப் பெற்றுக் கொண்டதும், ஈமச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்ததும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றன.
ஒரு நண்பனின்... வசதி படைத்த நண்பனின் விதவையான கார்த்திகா...
ஒருநாள் ஒரு பனிக் காலத்தில் பீர்மேட்டில் அவர்களுடைய விருந்தினர் இல்லத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது கார்த்திகாவிடம் அவன் மனம் திறந்து பேசினான்.
பொதுவாக முதல் முறை பார்த்த பிறகு, ஒரு பெண்ணைப் பார்ப்பது என்பது படுக்கையறையிலாகத்தான் இருக்கும் என்ற ஆனந்தனின் தத்துவ விஞ்ஞானத்தைத் திருத்தி எழுதிய நிமிடம்...
""மிஸ்டர் ஆனந்தன்... எனக்கு சசிதரன் இல்லாமல் போய்விட்டார். ஏராளமான சொத்து- இந்தத் தனிமை என்னை பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும்போல இருக்கிறது. என்னுடைய குழந்தைக்கும் எனக் கும் நிழலாக என்னால் உங்களைப் பார்க்க முடியுமா, ஆனந்தன்?''
அந்த கேள்வி அதிர்ச்சியடையச் செய்வதாக இருந்தது.
திடீரென்று ஒரு பதில் கூற முடியாமல் தடுமாறிப் போய் இருந்தபோது, கார்த்திகா தொடர்ந்து சொன்னாள்:
""ஆனந்தன், உங்களைப் பற்றி சசிதரன் எல்லா விஷயங்களையும் கூறியிருக்கிறார். சுகவாசி என்ற விஷயம் எனக்குத் தெரியும். பொது வாகவே உங்களுக்கு என்மீது ஒரு கண் இருக்கிறது என்ற விஷயமும் எனக்குத் தெரியும். ஆட்சேபனை எதுவும் இல்லை. சந்தோஷம்தான்... ஆனால், ஒரு விஷயம்- அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே...''
இந்த அளவுக்கு தைரியத்துடன் ஒரு பெண் தானே வலிய வந்து கூறுகிறாள் என்றால், அவளுடைய மனதின் துணிச்சல் பலமானதாக இருக்க வேண்டும்.
உடனடியாக பதில் சொன்னான்:
""எந்த சமயத்திலும் நடக்காத விஷயம், கார்த்திகா. நான் என்னுடைய சசிதரனின் ஆன்மாவிடம் நன்றியுடன் இருக்க வேண்டும். அது இல்லாத ஒரு நல்ல உறவு... என்னிடமிருந்து அதை மட்டும் எதிர்பார்த்தால் போதும்...''
தன்னையும் அறியாமல் கூறிவிட்டோமோ என்பது தெரியவில்லை.
அதற்குப் பிறகு இன்றுவரை கார்த்திகா அப்படிப்பட்ட ஒரு வேண்டுகோளை வைத்ததேயில்லை.
இப்போதும் கார்த்திகா விதவையாகத்தான் வாழ்ந்து கொண்டி ருக்கிறாள். தொலைபேசியிலும் கடிதத்திலும் நட்பு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கார்த்திகாதான் ஜெய்ஷாவை அவனுடைய கையில் பிடித்துத் தந்தாள். நேரில் அல்ல- தொலைபேசியின் மூலமாக...
ஒருநாள் கார்த்திகாவின் ஃபோன்...
""மிஸ்டர் ஆனந்தன்... நீங்கள் ஒரு அனாதையான கண்பார்வை தெரியாத பெண்ணுக்கு ஸ்பான்ஸராக வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதில் தவறு எதுவும் உண்டாகாது. உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும். பார்வை இல்லாவிட்டாலும் அவள் நல்ல திறமையான பெண்...''
""கார்த்திகா, உங்களின் கோரிக்கையை நூறு மடங்கு ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளுங்கள்.''
அந்தச் சமயத்திலேயே அவன் பதில் சொன்னான்.
ஜெய்ஷா என்ற பார்வை தெரியாத பெண் அனாதை இல்லத்திற்கு வந்தாள். அன்றிலிருந்து பாதுகாப்பாளர் என்ற பதவியை அவன் ஏற்றெடுத்துக் கொண்டான். மாதம் தவறாமல் நல்ல ஒரு தொகையை அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைத்தான்.
இங்கிருந்து ஜெய்ஷாவை வாழ்க்கைத் தோழியாக்கிக் கொண்டு, நேராக பீர்மேட்டுக்கு...
கார்த்திகாவைத் தேடி-
அதற்குப் பிறகு இருப்பது எதைப் பற்றியும் தீர்மானிக்கவில்லை.
இப்படி ஒரு தீர்மானத்தை திடீரென்று அவன் எடுத்தான்.
ஒரு மனதின் குரலைப்போல...
வாழ்க்கையை நோக்கி ஒரு திரும்பிச் செல்லும் பயணம்...
மிகவும் சந்தோஷப்படப் போகிறவள் கார்த்திகாவாகத்தான் இருக்கும்!
பல வருடங்களாக மாதத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் பார்க்கும் ஜெய்ஷா என்ற கண்பார்வை தெரியாத பெண்ணின் உருவம் மனதில் நிறைந்து நின்றிருந்தது. அதற்கொரு அர்த்தத்தை இன்றுவரை அவன் தந்ததில்லை.
தன்னுடைய வாழ்க்கையுடன், வாழ்க்கையின் ஒரு கண்ணியைக் கோர்ப்பதற்கு விரும்பிய கார்த்திகாதான் ஜெய்ஷா என்ற கன்னியை இப்போது இணைத்து வைக்கிறாள் என்ற விஷயம், நியதியின் அற்புதச் செயல்களில் ஒன்றாக இருக்கலாம்.
""ஆனந்தன்....'' திடீரென்று வந்த குரல் நினைவுகளிலிருந்து
மனதை விடுதலை செய்தது.
முன்னால் சிஸ்டர் ரோஸ்மேரி.
""வாங்க...''
பின்பற்றினான்.
அலுவலக அறையைத் தாண்டி வெளியே வந்த சிஸ்டர்
முன்னால் நடந்தாள்.
சிறிய ஒரு பிரார்த்தனை செய்யும் ஆலயத்திற்குள் சிஸ்டர் நுழைந்தாள். தரையும் மற்ற பகுதிகளும் மிகவும் நன்றாக அமைக்கப் பட்டிருந்த- அதிகம் பெரிய அளவில் இல்லாத ஒரு ஹால்...
""மதரீதியான நம்பிக்கை எதுவும் உங்களுக்கு இல்லையென்றா லும், நாங்கள் புனிதமாகக் காணும் இந்த இடத்தில் வைத்தே நீங்கள் ஜெய்ஷாவைப் பார்க்க வேண்டும். இரண்டு பேருக்கும் மனங்களைத் திறக்கக்கூடிய சந்தர்ப்பம்... கர்த்தாவை சாட்சியாக நிறுத்தி...''
ஆனந்தன் அதற்கு பதில் கூறவில்லை.
மனம் அமைதி நிலவும் ஒரு கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைப்போல தோன்றியது.
சிஸ்டர் சென்ற அடுத்த நிமிடத்தில் ஜெய்ஷா ஆனந்தனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
கருப்பு நிறக் கண்ணாடி அணிந்த, அமைதியான, விரிந்த சிரிப்பையும் கொண்ட ஒரு அழகான முகம்... உடல் அப்படியொன்றும் அதிகமாக மெலிந்திருக்கவில்லை. வெளுத்த நிறம்... நல்ல வளர்ச்சி... பெரிய மார்பகங்கள்... தெய்வம் ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, வேறு எல்லாவற்றையும் வாரி வழங்கிவிட்டிருந்தது.
ஒரு அற்புதக் காட்சியைப் பார்த்து அனுபவிக்கும் மிக அருமை யான ஒரு நிமிடம்...
""ஹாய்... ஜெய்ஷா...'' ஆனந்தனின் குரல் அவளுக்கும் புரிந்தது.
""ஹாய்... ஆனந்தன்...'' பதில் வந்தது. மணி முழக்கத்தைப் போன்ற குரல்.
""நாம் முதல் முறையாகப் பார்க்கிறோம்.'' ஆனந்தன் சொன்னான்.
""இல்லை... எவ்வளவோ நாட்களாக நான் பார்த்துக் கொண்டிருக் கிறேன்... கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். என்னை இங்கு ஒப்படைத்த நாளிலிருந்து...''
""ஆனால், நான் உன்னை இப்போதுதானே பார்க்கிறேன்! ஹொ... மிகப் பெரிய இழப்புதான்!''
""என்னுடைய பிரார்த்தனையை தெய்வம் இப்போதுதான் கேட்டிருக்க வேண்டும். ஆனந்தன், இப்படிச் செய்ய வேண்டும் என்று உங்களை எது தூண்டியது? இதுவரை வெறும் ஒரு ஸ்பான்ஸராக மட்டும்தானே நீங்கள் இருந்து வந்தீர்கள்.''
ஜெய்ஷா புத்திசாலித்தனமான பெண் என்பது புரிந்தது. நன்றா கப் பேசுகிறாள்.
""ஜெய்ஷா, நீதான் சொன்னாய் அல்லவா? உன்னுடைய பிரார்த்தனையை இப்போதுதான் தெய்வம் காதில் வாங்கியிருக்கிறது என்று. அதுதான் காரணமாக இருக்க வேண்டும். என்னைப் பற்றி...''
""தெரியும்... எவ்வளவோ தெரியும்... கார்த்திகா அக்கா உங்களை என்னுடைய மனதிற்குள் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார்களே! அப்போதிருந்தே நான் ஒவ்வொரு விநாடியும் நிமிடமும் உங்களுடன் இரண்டறக் கலந்துவிட்டேன். ஒருநாள் என்னை ஏற்றுக் கொள்வதற் காக வருவீர்கள் என்று என் மனம் கூறிக் கொண்டிருந்தது.''
ஓ... இனி கூறுவதற்கு என்ன இருக்கிறது? விளக்குவதற்கு என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் அவளே தீர்மானித்து விட்டாளே!
சிறிது நேர அமைதி நகர்ந்து கொண்டிருப்பதைப்போல இருந்தது.
""எனக்கு வெளியே பார்க்கும் சக்தி இல்லை... அந்த ஒரே ஒரு குறை...''
""எனக்கு வெளியே பார்க்கும் சக்தி இருக்கிறது. உள்ளே பார்க்கும் சக்தியும்... இங்கு அந்த ஒரு குறை பிரச்சினையே இல்லை. உன்னை வழி நடத்திச் செல்ல என்னால் முடியும். உனக்கு அன்பைத் தரவும்... வாழ்க்கையைத் தரவும்...'' ஆனந்தனின் வார்த்தைகள் அவளை உணர்ச்சிவசப்படச் செய்தன.
ஆனந்தனின் மனதில் வேதனை கலந்த ஒரு எண்ணம் வந்து விழுந்தது.
தாமதமாவிட்டதைப்போல அவன் உணர்ந்தான்.
தன்னுடைய பாதையிலிருந்து எப்போதோ விலகி வந்திருக்க வேண்டும்!
எதற்காக இப்படி எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்?
இனி என்ன கூறுவது என்பதைப் பற்றி ஜெய்ஷா சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆனந்தனும் அதே நிலையில் இருந்தான்.
ஒருவரோடொருவர் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டது நடந்துவிட்டது...
நீண்டகாலமாக பழக்கம் கொண்டவர்களைவிட இப்போது ஒரு படி முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.
உள்மனதில் முன்பே ஜெய்ஷா தன்னைப் பார்க்கவும் பேசவும் செய்திருக்கிறாள் என்ற விஷயம் ஆனந்தனின் மனதை மிகவும் சந்தோஷப்படச் செய்தது.
இனி என்ன செய்வது? அந்த புண்ணியச் செயலைச் செய்வதற்கு இனியும் ஏன் தாமதிக்க வேண்டும்?
சில நடைமுறைச் செயல்கள் இருக்கின்றன என்று சிஸ்டர் சொன்னாளே!
""ஜெய்ஷா, கூறுவதற்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா?'' ஆனந் தன் கேட்டான்.
""இனி கூறுவதற்கு என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே கூறி முடித்துவிட்டேன் அல்லவா? எவ்வளவோ காலமாக... அந்தக் குரலை நேரில் கேட்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்த எண்ணமாக இருந்தது. இங்கு எல்லாம் முழுமை அடைந்து விட்டதே!''
ஜெய்ஷாவின் குரலில் சந்தோஷத்தின் துடிப்பு!
சிஸ்டர் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாள். அவளுடன் வேறு இரண்டு மூன்று கன்னியாஸ்திரீகளும், அங்குள்ள வேறு சில ஆட்களும்.
""பேச வேண்டியவற்றையெல்லாம் பேசியாகிவிட்டதா, குழந்தைகளே?''
சிஸ்டர் கேட்டாள்.
""மிகவும் முன்பே பேசியாகிவிட்டதே, மதர்!'' ஜெய்ஷா மகிழ்ச்சியுடன் சொன்னாள். சிஸ்டர் அவளைப் பிடித்து அருகில் நிறுத்திக் கொண்டாள்.
""ஜெய்ஷா, நீ மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாயே!'' சிஸ்டர் மற்றவர்களுக்கு ஆனந்தனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
""இவர்தான் ஆனந்தன்... பார்த்துக் கொள்ளுங்கள்... நமக்கு குரல் மூலம் மட்டுமே பழக்கமாகியிருக்கும் மனிதர். நம்முடைய நிறுவனத் திலேயே மிகவும் நல்ல ஒரு ஸ்பான்ஸர்...''
ஆனந்தன் அவர்களைப் பார்த்து கைகளைக் குவித்தான்.
அந்தக் கூட்டத்தில் சற்று வயதான ஒரு சிஸ்டர் இப்படி சொன்னாள்:
""கர்த்தரின் தீர்மானம் இது. உங்களுடன் கருணைமயமான கர்த்தர் எப்போதும் இருப்பார்- உங்களை வழி நடத்துவதற்கு...''
ஆனந்தன் தலையைக் குனிந்தான்.
அவள் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தாள்.
""எங்களுடைய இந்த அழகுப் பெண்ணை இங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாலும், வருடத்திற்கு ஒருமுறையாவது இரண்டு பேரும் இங்கு கொஞ்சம் வந்துவிட்டுப் போக வேண்டும். மறந்து விடக் கூடாது...''
சிஸ்டர் ரோஸ்லின்தான் இப்படிச் சொன்னாள்.
""வருடத்திற்கு ஒருமுறை என்ற கணக்கு வேண்டாம்... வசதி உள்ளபோதெல்லாம் நாங்கள் இங்கு வருவோம். ஜெய்ஷாவின் சொந்த வீடாயிற்றே இது! என்னுடைய வீடும்... எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்?'' ஆனந்தன் சொன்னான்.
""மகிழ்ச்சி. கர்த்தர் அருளட்டும்.''
அவர்கள் பிரிந்து சென்றார்கள். ஜெய்ஷா அவர்களுடன் சேர்ந்து நடந்தாள்.
ஆனந்தனும் சிஸ்டர் ரோஸ்லினும் மட்டும் இருந்தார்கள்.
""இங்கே பாருங்க, ஆனந்தன்... அனாதை இல்லத்தில் ஒரு திருமணம் நடக்கப் போகிறது. பெரிய கொண்டாட்டம் எதுவும் வேண்டாம். எனினும், இங்கு இருப்பவர்களும் எங்களுக்குத் தெரிந்த நல்ல மனம் கொண்டவர்களும் இதில் பங்குபெற வேண்டும் என்பது கட்டாயம். வரும் ஞாயிற்றுக்கிழமையைத்தான் அதற்காக நாங்கள் முடிவு செய்து வைத்திருக்கிறோம். காலையில் "ப்ரேயர்' முடிந்ததும், பெரிய பாதிரியார் வருவார். அனாதை இல்லத்தின் காப்பாளர்
அவர்தான். நாங்கள் எல்லா விஷயங்களையும் ஏற்கெனவே பேசி விட்டோம்.''
""சிஸ்டர், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நான் சந்தோஷத்துடன் நடக்கிறேன். உங்களுடைய மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சியும்.'' ஆனந்தன் சொன்னான்.
ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருந்தன.
""இனி நான் என்ன செய்ய வேண்டும், சிஸ்டர்? சொல்லுங்க...''
""ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய திருமணமாயிற்றே. அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டாமா? சடங்குகளில் நம்பிக்கையில்லை யென்றாலும், தாலிகட்டுதல் என்ற சடங்கு இருக்கிறதே! மணமக்களுக்கு புத்தாடை... நகைகள்... இதெல்லாம்...''
சிஸ்டரின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
""எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக் கொண்டால் போதும், சிஸ்டர். இங்குதான் தொகை இருக்கிறதே!''
""ஆனந்தன், அதற்காக நீங்கள் எதுவும் சிரமப்பட வேண்டியதில்லை. நாங்கள் எல்லா காரியங்களையும் இங்கு செய்து முடித்துவிட்டோம். வெறுமனே சொன்னேன்... அவ்வளவுதான்... அவளுக்கு நகைகள் எடுத்தாகிவிட்டன. ஆடைகள் எடுத்தாகி விட்டன. அனைத்தும் முடிந்து விட்டன. தற்போதைக்கு நீங்கள் இரண்டு நாட்களுக்கு எங்கே தங்கப்போகிறீர்கள்?''
""புகைவண்டி நிலையத்திற்கு அருகில் ஒரு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்காக கூறுவதற்கும் உடன் இருப்பதற்கும் யாருமே இல்லை என்பது உங்களுக்கே தெரியுமில்லையா சிஸ்டர்?''
""எல்லாம் தெரியும்... நாங்கள் எல்லாரும் இருக்கிறோமே! உங்களுடனும் ஜெய்ஷாவுடனும் கார்த்திகா மேடம் வர வாய்ப்பு இருக்கிறதா?''
""வேண்டாம்... நாங்கள் அங்குதானே பயணம் போகப் போகிறோம்!''
ஆனந்தன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
இன்னும் இரண்டு நாட்கள்...
மனதில் நினைத்தான்... அந்த இரண்டு நாட்களை எதற்காக இனியும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்? இந்த நிமிடமே ஜெய்ஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு இந்த அனாதை இல்லத்தின் படிகளில் இறங்கிச் செல்வதற்கு தான் தயார்தானே?
புகைவண்டி நிலையத்திற்கு அருகில் இருந்த நல்ல ஒரு ஹோட்டலில் ஆனந்தன் அறை எடுத்தான்.
மதுவிற்கு விடை...
புகை பிடித்தலுக்கு விடை...
போதைப் பொருட்களிடமிருந்து ஒரு விடைபெற்றுத் திரும்பும் பயணம்... புதிய ஒரு மனிதன்!
ஃபெலிக்ஸையும் டாக்டர் மாலதியையும் அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும். ஒருவேளை, மாதா நிர்மலா ஆச்சரியப்படலாம். காரணம்- ஆனந்தனின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால், தன்மீது அவன் படர வேண்டும் என்று இப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் புதிய துறவி அவள்!
ஒருவேளை, ஃபெலிக்ஸ் கேட்பான்:
"நீ ஒரு வார்த்தை கூறியிருக்கக் கூடாதா?'
அவர்கள் ஆனந்தனைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் ஆயிற்றே! ஆனால், இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை அவர்கள் சிறிதும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் தனி மனிதனாக பூக்களிலிருந்து பூக்களுக்கு தேனைக் குடித்துக் கொண்டு தாவிக் கொண்டி ருக்கும் ஒரு அசாதாரண பிறவி என்பதுதானே ஆனந்தனின் இயற்கை குணமாக இருந்து வந்திருக்கிறது!
ஒரு திருத்தி எழுதும் செயல் இங்கு ஆரம்பிக்கிறது...
இனி ஒரு இடத்தில் நங்கூரத்தை இட வேண்டும்.
புகழ் பெற்ற பிஸினஸ் கன்சல்டன்ட் என்ற நிலையில் மிகப்பெரிய நிறுவனங்கள்... ஒவ்வொரு புதிய உற்பத்திப் பொருட்களின் மார்க்கெட்டிங் உத்தி... வடிவமைப்பு... கூறும் சம்பளம்... எல்லாவற்றையும் வீணடித்துக் கொண்டிருந்தானே!
இனி அது நடக்காது.
ஒரு மையப்படுத்தும் குணம் வேண்டும். மிகப்பெரிய ஒரு அலுவலகம்... பல பணிசெய்யும் ஆட்கள். எல்லாரையும் ஒழுங்குபடுத்த வேண்டும். கடந்து சென்ற நாட்களில் நடந்த வழிகள் பலவற்றிடமும் விடைபெற்றுக் கொள்வது என்பதுதான் முதல் காரியமாக இருக்கும்.
தேவைப்பட்ட பலவும் தேவையற்றவையாக இருந்தன.
இன்றுவரை ஏதோ ஒரு உலகத்தை நோக்கிச் செல்லும் பயணமாக இருந்தது. அந்தப் பயணத்தை இதோ இன்னொரு உலகத்தை நோக்கித் திருப்பி விடுகிறான். மனசாட்சிக்கு முன்னால் தோல்வியை ஒப்புக் கொள்கிறானோ?
ஆனந்தனின் உள் மனதில் ஒரே தடுமாற்றம்!
அந்தச் சிறிய நகரத்தின் நல்ல ஒரு துணிக்கடைக்குள் நுழைந்து சில ஆடைகளை வாங்கினான். தொடர்ந்து நகைக் கடைக்குள் நுழைந்தான். சில தங்க நகைகளை வாங்கினான். தான் கை பிடிக்கும் பெண்ணின் உடலில் எதையாவது அணிவிக்கவில்லையென்றால் அது ஒரு குறையாக இருக்காதா?

ஆனந்தா, நீ எங்கே போகிறாய்?'
ஒரு கேள்வி எழுந்தது.
முன்பொருமுறை இந்த கேள்விக்கு அவன் பதில் அளித்தான்: "புறப்பட்ட இடத்துக்கு...'
ஆனால், இப்போது அந்த பதிலை மாற்றினான்.
"வாழ்க்கைக்கு... வாழ்க்கைக்கு...'
மிகவும் தெளிவாகவே பதிலைச் சொன்னான்.
மனம் விடுவதாகவே இல்லை. மீண்டுமொருமுறை கேள்வி!
"இந்த வாழ்க்கைக்காகத்தான் நீ காத்திருந்தாயா?'
"அப்படி இல்லை... ஆனால், இப்போது இப்படி மாறியிருக்கிறேன்!'
குரல் கம்பீரமாக இருந்தது. பதில் தெளிவாக இருந்தது.
அதற்குப் பிறகு கேள்வி வரவில்லை.
அறையில் இப்போது ஆனந்தன் மட்டுமே...
ஒரு மிக அருமையான நறுமணம் அறைக்குள் பரவுவதைப் போல இருந்தது.
ஒரு வளையல் சத்தம் ஒலிப்பதைப்போல இருந்தது.
ஒரு குலுங்கல் சிரிப்பு கேட்கிறதே! மணியோசையைப்போல...
ஆமாம்... அது ஜெய்ஷாவின் குரல்தான்... ஜெய்ஷாவிடமிருந்து வந்த நறுமணம்தான் அறையில் பரவி இருந்தது.
அவளுடைய வளையல் சத்தமே அது.
ஆனந்தன் பரவச நிலைக்குள் சிக்கிக் கொண்டதைப்போல உணர்ந்தான்.
இப்படிப்பட்ட ஒரு சஞ்சலநிலை இதற்கு முன்பு மனதிற்கு உண்டானதில்லை.
மனம் லேசானதைப் போல இருந்தது.
ஆன்மாவில் மென்மையான விரல்கள் தொட்டன.
ஜெய்ஷா இங்கு எங்கோ நிறைந்து நின்று கொண்டிருப்பதைப் போல இருந்தது. சிந்தனையிலும் கனவிலும் மூச்சிலும் அமைதி யிலும் ஜெய்ஷா...
கண்களை மூடினாலும் கண்களைத் திறந்தாலும் ஜெய்ஷா மட்டும்...
ஆனந்தனுக்கு சிரிக்க வேண்டும்போல இருந்தது.
கண்களுக்குப் பார்வை இல்லாவிட்டாலும் அவள் தன்னைப் பார்த்திருக்கிறாள். நீண்ட நாட்களுக்கு முன்பே...
பிறப்பின் பார்க்காத பக்கங்களை நோக்கி தனக்கே தெரியாமல் வெளிச்சத்தைப் பரவவிடுகிறாளே!
எங்கு... யார் இந்த உறவை எழுதி வைத்தது?
இப்போதும் அதற்கு ஒரு பதிலை ஆனந்தனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அனாதை இல்லத்திற்கு ஃபோன் செய்தான்.
சிஸ்டர் ரோஸ்மேரிதான் ஃபோனை எடுத்தாள்.
""என்ன ஆனந்தன்? உங்களுக்கு தூக்கம் வரவில்லையா?''
சிஸ்டரின் சிரிப்புச் சத்தம் உரத்துக் கேட்டது.
""இல்லை... வெறுமனே... கொஞ்சம்...''
""ஜெய்ஷாவுடன் பேசவேண்டும்.. அப்படித்தானே? நான் கொடுக்கிறேன்.''
சிறிது நேரம் கழித்து ஜெய்ஷா லைனில் வந்தாள்.
""ஹலோ ஆனந்தன்... நான் இந்த அழைப்பை இப்போது எதிர்பார்த்தேன்.''
""ஜெய்ஷா...? எப்படி? சந்தோஷமா?''
""உண்மையாகவே... சொல்லப்போனால்- இந்த பூமியிலேயே மிகவும் அதிகமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தானே?''
""ஜெய்ஷா, உண்மையாகவே நீ என்னுடைய மனதிற்குள் நுழைந்த பிறகு எனக்கு தூக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது!''
""அப்படியென்றால் நான் எந்த அளவிற்கு உறங்காமல் இருந்திருக்கிறேன் என்ற விஷயம் இப்போது புரிகிறதா?''
""எனக்கு அந்த விஷயத்தை ஏன் தெரிவிக்கவில்லை?''
""நீங்கள் மிகப்பெரிய மனிதர்... என்னைவிட எவ்வளவோ தூரத்தில்... உயரத்தில்... ஒரு சிறிய கண் பார்வை இல்லாத பெண் ஆசைப்படுவதற்கு எவ்வளவோ வரையறைகள் இருக்கின்றன... இல்லையா ஆனந்தன்?''
""இப்போது எனக்கு குற்றவுணர்வு உண்டாகிறது, ஜெய்ஷா. இந்த அளவிற்கு தாமதமானதற்கு...''
""அது தேவையில்வலை... இங்கே பாருங்க... எல்லாம் அதற்கென்று இருக்கக்கூடிய நேரத்தில்தான் நடக்கும் என்பது தெரிகிறதா?''
""இப்போது அது புரிகிறது. என் சிந்தனைகள் அப்படிப் பட்ட தில்லை, ஜெய்ஷா. நான் மாறிவிட்டேன்... எவ்வளவோ மாறி விட்டேன்...''
""அந்த மாற்றம் என் வாழ்க்கைக்கு வெளிச்சமாக ஆகியிருக்கிறது. உணவு சாப்பிட்டு விட்டீர்களா?''
""இல்லை...''
""ஏன்?''
""தோன்றவில்லை...''
""சாப்பிடுங்க... இனி அருகில் அமர்ந்து ஊட்டுவதற்கு நான் இருக்கிறேன் அல்லவா ஆனந்தன்?''
""சரி... ஜெய்ஷா, நான் மீண்டும் அழைக்கிறேன்.''
""ஆனந்தன் உங்களின் அந்த அழைப்பிற்காகத்தானே நான் காத்திருக்கிறேன்?''
""பை... பை... '' ஃபோன் "கட்' ஆனபோது மனதில் ஒரு வெறுமை யின் வருடல் உண்டானது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ஆனந்தன் தயாராகி விட்டான். புத்தாடை அணிந்தபோது இனம் புரியாத ஒரு சந்தோஷம்... ஒரு புத்துணர்வு... அறையைப் பூட்டினான். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாடகைக் கார் லாட்ஜுக்கு முன்னால் தயாராக நின்று கொண்டிருந்தது.
மெதுவாக ஓடிக் கொண்டிருந்த காரின் பின்னிருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தபோது, மனதில் சில முகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
எந்தச் சமயத்திலும் பார்த்தே இராத தன் தந்தையைப் பற்றிய நினைப்பு...
எப்போதும் அன்பைப் பொழிந்த தாயின் முகம்.
"அம்மா, இந்த மகன் வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறான்... ஆசீர்வதிக்கணும்.'
அவனையே அறியாமல் மனதிற்குள் எழுந்த உள் மனதின்
அழுகை...
கார் அனாதை இல்லத்தை அடைந்தபோது, அங்கு ஆட்கள் கூடியிருந்தார்கள்.
மிகவும் அருமையாக அலங்கரித்திருந்தார்கள்.
வெளியே தன்னை எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பதைப்போல சிஸ்டர் ரோஸ்மேரியும் மற்றவர்களும்... உற்சாகமான வரவேற்பு...
அவர்களுடன் சேர்ந்து உள்ளே நடந்தான்...
கடவுளின் பீடத்திற்கு முன்னால் நின்றிருந்த பெரிய பாதிரியாருக்கு முன்னால் போய் நின்று, தன்னை அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பாதிரியார் தன் இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார்.
""தேவதைகளும் கருணை வடிவமான கர்த்தரும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்...'' அவர் ஆசீர்வதித்தார்.
ஆனந்தனின் கண்கள் தேடின.
ஜெய்ஷாவை சற்று பார்க்க வேண்டும். அவள் புதுமணப்பெண்ணின் கோலத்தில் எப்படி இருப்பாள்?
அடுத்த நிமிடம் ஜெய்ஷா வந்தாள். அவளை சிஸ்டர்களின் ஒரு கூட்டம் சூழ்ந்து வந்து கொண்டிருந்தது.
அவன் அவளைப் பார்த்தான்.
கண்களுக்கு முன்னால் தூய வெள்ளை நிற சிறகுகளைக் கொண்ட ஒரு தேவதை... மணமகளின் கோலத்தில் ஜெய்ஷா பிரகாசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனந்தனின் மனதில் ஒரே மலர்ச்சி...
கடவுளின் பீடத்திற்கு முன்னால் ஆனந்தனும் ஜெய்ஷாவும் அருகருகே நின்றிருந்தார்கள்.
சடங்குகள் ஆரம்பமாயின.
மணிச்சத்தம் உரத்து ஒலித்தது.
புன்னகை படர்ந்த முகத்துடன் ஜெய்ஷா ஆனந்தனுக்கு முன்னால் நின்றிருந்தாள்- ஒரு பெண்ணின் வாழ்க்கை வளமாகிற அபூர்வ நிமிடம்...
""ஆனந்தன்... நில்...''
ஒரு உரத்த சத்தத்தைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
ஆட்களின் கூட்டத்திலிருந்து கருப்பு நிற உடை அணிந்த இரண்டு பேர் கடவுளின் பீடத்தை நோக்கி பாய்ந்து வந்தார்கள்.
ஆனந்தன் ஒரு அதிர்ச்சியுடன் தன் முகத்தை உயர்த்திப் பார்த்தான்.
நடுங்கி விட்டான் ஆனந்தன்.
அதோ நின்று கொண்டிருக்கிறார்கள்- கருப்பு ஆடைகள் அணிந்த இரண்டு பேர்...
அவர்கள்... அவர்கள்...
வேதகிரியில் தினமும் பார்த்துப் பழகியவர்கள்...
ஆனந்தனின் சப்தநாடிகளும் நின்றுவிட்டன.
""ஆனந்தன்... நீ... வார்த்தை தவறிவிட்டாய். சொன்ன வாக்குறுதி மீறியிருக்கிறாய். ஆனால், நாங்கள் அதை ஒப்புக் கொள்ள முடியாதே! வா... நாம் புறப்படலாம்... வேதகிரிக்கு... ஒரு நிமிடம் தாமதமானா லும், இந்த பூமியில் ஒரு விதவை உண்டாகிவிடுவாள். சரியான நேரத்தில் நாங்கள் வந்துவிட்டோம்... இவளை வாழவிடு... உன் வழி இது அல்ல...''
எல்லாரும் செயலற்று நின்று விட்டார்கள்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை.
கருப்பு ஆடை அணிந்த மனிதனின் குரல்- அதிர்ச்சியடைந்து நின்றிருந்த ஆனந்தனின் இதயத்திற்குள் ஒரு இடியைப்போல நுழைந்து கொண்டிருந்தது.
""வேதகிரியின் கோட்பாடுகளிலிருந்து உனக்கு விடுதலை கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறு. அந்த கோட்பாடுகளிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது...''
அவர்கள் இருவரும் ஆனந்தனை ஆட்களின் கூட்டத்திற்கு நடுவில் இறுகப் பிடித்துக் கொண்டு நடத்திச் சென்றார்கள்.
ஆனந்தன் நடந்தான்- உணர்ச்சியே இல்லாமல்...
ஜெய்ஷாவின் கட்டுப்பாட்டை விட்டு விலகி ஒலித்த அழுகைச் சத்தத்தை வெளியே ஜீப்பில் ஏற்றப்பட்ட ஆனந்தன் கேட்கவேயில்லை.
source:nakkeeran.com

Similar topics
» அருணகிரிநாதர்-சிங்கை கிருஷ்ணன்
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
» இடைக்காடர்- சிங்கை கிருஷ்ணன்
» குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன்
» திருமூல நாயனார்-சிங்கை கிருஷ்ணன்
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
» இடைக்காடர்- சிங்கை கிருஷ்ணன்
» குருதேவ சித்தர்- சிங்கை கிருஷ்ணன்
» திருமூல நாயனார்-சிங்கை கிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Thu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Thu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Thu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Thu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்
» பிரம்மராஜன் கவிதைகள்
Thu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்
» K Iniyavan
Thu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்
» K Iniyavan -karuththu
Thu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்